தட்டச்சுக்கான கட்டற்ற மென்பொருள்

 

நாம் முன்னாட்களில் தட்டச்சுக் கலையை கற்க, தட்டச்சு பயிற்றுவிக்கும் நிறுவனங்களில் சேர்ந்து பயில வேண்டும். ஆனால் தற்போழுதோ ஒரு கணினியும் தட்டசுக்கான மென்பொருளும் இருந்தாலே போதும். தட்டச்சு கற்க பல மென்பொருட்கள் இருகின்றன. அவற்றுள் ஒன்றான

கட்டற்ற மென்பொருளான Klavaro  பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

 

முதலில் Klavaro  நிறுவுதல்

உபுண்டு சாப்ட்வேர் சென்டரை (Ubuntu Software Center)  திறந்து கொள்ளுங்கள் .

 Klavaro-வின் தோற்றம்

  . பிறகு மேல இருக்கும் தேடுபொறியில் klavaro  என்று தட்டச்சு  செய்து சொடுக்குங்கள்.

  . வந்திருக்கும் result இருந்து Klavaro-இ தேர்வு செயுங்கள்.

பிறகு வரும் window-வில்  Install now பொத்தனை சொடுக்குங்கள். root கடவுச்சொலை உள்ளிட்டு தொடருங்கள் .

 

இணைய அமைப்பின் வேகத்திற்கு ஏற்றவாறு சில நேரங்களில் install  ஆகிவிடும்.

 

 

Klavaro  பயன்பாடு

 

  0-Introduction நிலையில் எந்தந்த key-களுக்கு எந்த விரலை பயன்படுத்த வேண்டும் என்பனவற்றை கற்கலாம்.

1- Basic Course யில் குறிப்பிட்ட கீகளையும் அதன் அருகில் உள்ள கீகளையும் கற்கலாம்.

2-Adaptibility நிலையில் அனைத்து கீகளின் இடங்களையும் (பார்க்காமல்) அறிந்துகொள்ளலாம்.

3-Speed – இதில் வேகமாக தட்டச்சு செய்வதற்கான பயிற்சி கொடுக்கப்படும்.

4-Fluidity இது தட்டச்சில் நன்கு தேர்ச்சி பெறுவதற்கான நிலையாகும்.

 

பிற வசதிகள்:

நாம் பயிற்சி செய்யும் பொழுது நம்முடைய progress-ஐ தெரிந்துகொள்ளலாம்.

இதன் நினைவக அளவு ( ~ 2.5 MB ) மிகவும் குறைவானதே.

 

பிற கட்டற்ற தட்டச்சு மென்பொருட்கள் :

. K Touch

. Tipptrainer Typing Tutor

. Tux Typing 

 


ராஜேஷ் குமார் , கணிப்பொறி பொறியியல் மூன்றாம் ஆண்டு மாணவர். University College Of Engineering, விழுப்புரம் .

 

மின்னஞ்சல்  :  gprkumar@gmail.com

 

 

 

 

 

 

%d bloggers like this: