திறமூல சமூகத்திற்கானChatGPT என்றால் என்ன?எனும் கேள்வி

இயந்திர கற்றல், “செயற்கை நுண்ணறிவு” ஆகியவை பற்றிய கருத்தாக்கம் தற்போது பலரின் மனதிலும் பரவிவருகின்றது, இதற்கு முக்கிய காரணம். தற்போது திறந்த செயற்கை நுன்னறிவு குழுமம் எனப் பெயரிடப்படாத பொது விளக்கத்துடன் பரவலாகபொது மக்களுக்குக் கிடைக்கக்கூடிய ChatGPT ( ChatGPT என்பது திறமூலம் அன்று), என்பதாகும், இது கணினியுடன் முழுமையான மேககணினியையும் இணையத்தில் கொண்டுவருவதால் இதற்கான பொதுமக்களின் கருத்தாக்கம் உருவானது, இதன்மூலம் நம்மால் கிட்டத்தட்ட நம்பக்கூடிய எந்தவொரு பொருள் குறித்தும் அதற்கான உரையை எளிதாக உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை உருவாகின்றது. . ஆயினும் இவ்வாறு உருவாக்குகின்ற உரையானது பலர் சுட்டிக்காட்டியுள்ளபடி, நிச்சயமாக “நம்பக்கூடியதா” , “சரியானதா” என்பதற்கு இடையே ஒரு பெரிய வேறுபாடு உள்ளது, ஆனால் மேலோட்டமான அளவில் பார்த்தால், சுருக்கமான உரைவெளியீட்டின் சரியான ஆதாரமாக ChatGPT இருப்பது போன்று தெரியவரலாம்.
மிகமுக்கியமாக நாமனைவரும் கவணத்தில் கொள்வது யாது எனில் இந்தChatGPT ஆனது திறமூலம் அன்று என்பதேயாகும், ஆனால் இது வெளியிடுபவை அனைத்தும் திறமூல அறிவை அடிப்படையாகக் கொண்டது என்ற செய்தியை மட்டும் மனதில் கொள்க. நம்மில்பலர் மற்றவர்களுக்காக இணையத்தில் அரும்பாடுபட்டு சேர்த்து வைத்திருக்கின்ற உள்ளடக்கத்தின் அடிப்படையில் இது செயல்படுகின்றது. இதன் பொருள் ChatGPT ஏதேனுமொரு சமூககுழுவை சேர்ந்ததா? பகிர்ந்துகொள்ளப்படுமாறான அறிவை மேம்படுத்த ChatGPT பங்களிக்கிறதா? அல்லது இவ்வாறான நம்முடைய கேள்விகளுக்கான பதில் என்னவாக இருக்கும் என்ற பொதுவான கருத்திற்கு நாம்வருவதற்கு முன்பு இது இணையத் தேடல்களைக் குறைக்குமா? என்ற கூடுதலான கேள்வியும் நமக்கும் எழும். நிற்க

நாம் திறமூல செயல்திட்டம் அல்லது நமது உள்ளூர் குழுஆகியவற்றுள் ஏதேனும் ஒரு சமூககுழுவில் உறுப்பினராக இருக்கலாம். எப்படியிருந்தாலும், சில நேரங்களில் பொதுமக்களில் சிலர் நமக்குஎரிச்சலூட்டுவதை போன்ற உரையாடலை கடந்து வந்திருக்கலாம். பொதுமக்களுக்கு அவர்களுக்கான கருத்துக்கள் இருப்பதும், அந்த கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதும் நம்முடைய வாழ்க்கையின் எதார்த்தமான உண்மையாகும். எதையாவது செய்யவேண்டும் ஆனால் அதை எவ்வாறுச் செய்ய வேண்டும் என்பதில் நமக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அது பொதுவாக பலரின் நேரத்தை வீணடிப்பதாகும். இந்நிலையில் எல்லாவற்றிற்கும் மேலாக, அதற்கான சிறந்த தீர்வை நாம் அறிந்திருப்போம், ஆனால் அதைச் செயல் படுத்துவதற்குப் பதிலாக, அதன் தகுதியை மற்ற அனைவரையும் நம்ப வைப்பதற்காக நாள் முழுவதும் நம்முடைய நேரத்தை வீணடிக்க வேண்டியுள்ளது. இவ்வாறான சூழலில் எல்லோரும் அந்த கருத்துடன் உடன்பட்டால் அதுமிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும், அல்லவா?
இவ்வாறான கருத்து வேறுபாடு நமக்கு மிகவும் சங்கடமானதுதான. ஆயினும் இது கடினமான மிகநீண்ட உரையாடல்களுக்கு வழிவகுக்கிறது. அவ்வாறான சூழலில் அதற்கு ஒரு சமரசத்தைக் கண்டுபிடிக்க வேண்டும், இல்லையெனில் நம்முடைய வழியில் செய்திகளை காணுமாறு யாரையாவது நம்ப வைக்க முயற்ச்சிக்கவேண்டும், பொதுவாக நாமெல்லோரும் செய்திகளை அவரவர்களின் கண்ணோட்டத்தில் நம்ப வைக்க முயற்சிக்கின்றோம். இது எளிதானது அன்று, பெரும்பாலும் எந்த நேரத்திலும் நாம் செய்ய விரும்புவது இதுவன்று.
நிச்சயமாக, பெரும்பாலான பெரியோர்கள் அதற்கு மாறாக மீப்பெரும்சக்தி இருப்பதை புரிந்துகொள்கிறார்கள். ஆனால் எந்தவொரு கருத்திற்கும் பிடிவாதமும் அல்லது பிடிவாதத்திற்கான மாறுபட்டகருத்தம் உள்ளது. நிபுணத்திலிருந்தும் அனுபவத்திலிருந்து உருவாக்கப்பட்ட மாறுபட்ட கருத்துக்களானவை வெற்றிகரமான பயனுள்ள ஒத்துழைப்புக்கு இன்றியமை யாதவைகளாகும். அவர்கள் எவ்வளவு அசௌகரியமாக இருந்தாலும், எதையாவது செய்வதற்கு “சரியான” வழியில் கருத்து வேறுபாடுகள் இருப்பது நம்முடைய கருத்துகளை வலியுறுத்துவதற்கான சிறந்த வழியாகும். இதற்கு நேர்மாறாக காண்பதன் மூலம், நம்முடைய முன்முடிவுகள், சார்புகள் அனுமானங்கள் ஆகியவற்றினை நாம் அடையாளம் காணமுடியும். மாறுபட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்வதன் மூலம், நம்முடைய சொந்தகருத்தை செம்மைப்படுத்தலாம்.
இயந்திர கற்றலுடன் ஒரு botஐ கொண்டு ஏற்கனவே உள்ள கருத்துகளில் இருந்து ஏதேனும் ஒரு கருத்தினை மட்டுமே கண்டுபிடிக்க முடியும். ஏராளமான கருத்துகளை ஒன்றாக இணைத்துவடிவமைப்பதில் உறுதியாக இருக்கலாம் என்றாலும், இது இன்னும் முன் வந்த கருத்துகளின் சுருக்கம் மட்டுமே. உரையாடல், மறுமொழி, உடன்பாடு, கருத்து வேறுபாடு , அனுபவங்கள் , பின்னணிகளின் பன்முகத்தன்மை ஆகியவற்றிலிருந்து உருவாகும் பொருத்தமற்ற எதிர்பாராத கருத்துகளின் காரணமாக உண்மையான மனித மனங்களின் கருத்துசேகரிப்பு ஆனது மிகவும்சக்தி வாய்ந்தது. நம்முடைய குழந்தையுடன் தையல்கலை அல்லது தோட்டக்கலை அல்லது சமைத்தல் அல்லது LEGOதொகுப்புகளை உருவாக்குவது போன்ற அனுபவத்தின் மூலம் உலகிற்கு விளக்கமளிப்பதில் பகுத்தறிவற்ற தன்மை உள்ளது, ஆனால் அது செல்லாது. உண்மையில், உத்வேகத்தை செயலுடன் இணைக்கும் திறன்தான் புதிய கண்டுபிடிப்பு உருவாவதற்கு காரணமாகும். இவ்வாறான சூழலில் ChatGPT ஐ கொண்டு இணையத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடியது எதுவும் இல்லை என்பதே உண்மையான நிலவரமாகும்.

ChatGPT போன்ற AI கருவிகள் நம்மால் மீண்டும் மீண்டும் செய்யும் பணிகளைக் குறைப்பதில் அல்லது சாத்தியமான பிழைகளைப் பிடிப்பதில் அவற்றின் பயன்பாட்டைக் கொண்டிருக்கலாம். ஆனால் இங்கே மறைக்கப்பட்ட செய்திகள் பலவாகும்உண்மையில் : நமக்கு ஏன் ChatGPT தேவை? இந்த செயல் முறைகளை கொண்டு நம்மை மேம்படுத்திக்கொள்ள முடியுமா? ஆகிய கேள்விகள் நம்மனதில் எழும்நிற்க. பிழைகளை கண்டுபிடிப்பதற்கு தேவைப்படும் செயற்கை நுண்ணறிவு மிகவும் சிக்கலான மொழி வடிவமைப்பின் அறிகுறி அல்லது குறியீட்டை கற்பிப்பதில் தோல்வி அல்லது நிரலாக்கத்தில் எளிதாக உள்ளீடுகளை உருவாக்குவதற்கான வாய்ப்பை விட குறைவான தோல்வியாக இருக்கலாம்.
வேறு சொற்களில் கூறுவதானால், இயந்திர கற்றலின் bot ஆனவை எதற்கும் தீர்வாக இருக்காது, ஆனால் இதன்வாயிலாக நமக்கு நாமே தீங்கிழைக்கிறோம் என்பதற்கான அறிகுறியாககூட இருக்கலாம். திறமூலத்தில், நாம் தொடர்பு கொள்ளும் அமைப்புகளை வடிவமைக்கிறோம். குறியீடு எப்படி செயல்படுகிறது அல்லது எப்படி நிரலாக்கம் செய்வது என்பதைப் புரிந்து கொள்வதற்காகவென, ஒரு அரட்டைஅறைகளுக்கான bot ஐ வடிவமைக்க வேண்டியதில்லை, ஏனென்றால் நாம் கண்டுபிடிப்பாளர்கள். பிரச்சனைகளை தீர்வுசெய்வதற்கான வழியை எளிதாக மறுவடிவமைப்பு செய்திடுவோம். உலகளாவிய சமூககுழுவின் குழப்பத்தை மேலும் அதிகமாக்கவும் ஒன்றிணைக்கவும் நமக்கு அரட்டைஅறைக்கான bot நமக்குதேவையில்லை, ஏனென்றால் எந்தவொரு பிரச்சினைக்கும் தேவையான சாத்தியமான சிறந்த தீர்வை நம்மால் எளிதாக உருவாக்க முடியும்.

சமூககுழு என்பது பொதுமக்களைப் பற்றியது. கருத்துகளை பகிர்ந்து கொள்ளப்படும் ஆர்வத்துடனும் மற்றவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதே சமூககுழுக்களை மிகவும் நிறைவாக ஆக்குகிறது. கருத்து வேறுபாடுகள் பகிர்ந்துகொள்ளப்பட்ட உத்வேகத்தின் தருணங்கள் இரண்டும் மனிதர்களாகிய நாம் நமது மன்றங்கள், அரட்டை அறைகள், பிழை அறிக்கைகள், ஆகியவற்றில் ஒருவருக்கொருவர் கொண்டு வரும் ஆழ்ந்த அனுபவங்களை கொண்டு. திறமூல சமூககுழுவாகிய , நாம் சிறந்த தொழில்நுட்பத்தை உருவாக்குகிறோம். நாம் அதை வெளிப்படையாகவும், ஒன்றிணைந்து நம்முடைய, அனுபவ அறிவைப் பகிர்ந்து கொள்வதில் உண்மையான ஆர்வத்துடன் உருவாக்குகிறோம். நாம் பன்முகத்தன்மையை மதிக்கிறோம், மேலும் புதியவர்களுக்கு நிபுணர்களின் கண்ணோட்டத்தினை கொண்டுவரச்செய்து அதன் மதிப்பைக் காணச்செய்கிறோம். இயந்திரகற்றலின் அரட்டைஅறை திறமூலமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் (ChatGPT அன்று) திறமூல சமூகமானது தொழில்நுட்ப கருத்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதின்வாயிலாக உண்மையான ஆர்வத்தில் வளர்ந்துவருகிறது. இது ChatGPTஆல் பின்பற்ற முடியாத ஒன்று என்ற செய்தியை மட்டும் மனதில் கொண்டால் போதுமானதாகும்..

%d bloggers like this: