நரம்பியல்இணைப்புNeuralink என்றால் என்ன? மூளையின்நரம்பியல் பற்றி நாம் அறிந்த அனைத்தும்

AI ஆனதுமுன்னோடியில்லாத வேகத்தில் வளர்ந்து வரும் அதே வேளையில், புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களும் மருத்துவத் துறையில் நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்துகின்றன. எலோன் மஸ்க்கின் நரம்பியல் இணைப்பு (Neuralink) என்பது ஒரு நரம்பியல் தொழில்நுட்ப நிறுவனமாகும், இது பல்வேறு மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க மனிதமூளைக்கான சில்லுகளை உருவாக்குகிறது. நரம்பியல் கோளாறுகள் முதல் மனித அறிவாற்றல் நிலைகள் வரை, இந்த நியூராலிங்க் ஆனது மனிதமூளைக்கும்-கணினிக்குமான இடைமுகம் என்பதன் வாயிலாக அத்தகைய நோய்களுக்கு சிகிச்சையளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நரம்பியல் இணைப்பு (Neuralink) பற்றிய விவரங்களை இப்போது காண்போம்.
1.நரம்பியல் இணைப்பு (Neuralink) என்றால் என்ன?
நரம்பியல் இணைப்பு (Neuralink) என்பது 2016 ஆம் ஆண்டில் எலோன் மஸ்க் என்பவரால் நிறுவுகை செய்யப்பட்ட ஒரு நிறுவனமாகும், அதன் முக்கிய நோக்கம் மூளைக்கும் கணினிக்கும் இடையே நேரடித் தொடர்பை செயல்படுத்து வதாகும். இந்நிறுவனம் மூளைக்கும்-கணினிக்குமான இடைமுகம் (brain-computer interface (BCI)) என அழைக்கப்படும் மூளைக்கான சில்லுகளை உருவாக்குகிறது, இது மனித மூளையில் ஆக்கிரமிப்பு இல்லாத வழியில் அறுவை சிகிச்சை மூலம் உட்பொதிவுசெய்திடலாம்.
தற்போது, நரம்பியல் கோளாறுகள் , மனப்பிறழ்வு நிலைமைகள் உள்ளிட்ட சில கடுமையான மனித நோய்களைத் தீர்ப்பதை இந்த நியூராலிங்க் நோக்கமாகக் கொண்டுள்ளது. முதுகுத் தண்டு காயங்கள் அல்லது பார்கின்சன் நோய் போன்றவை நரம்புகளின் வழக்கமான செயல்பாட்டைச் சேதப்படுத்துகின்றன. அத்தகைய சூழ்நிலையில், மூளைக்கும்-கணினிக்குமான இடைமுகமானது பாதிப்பிற்கு முந்தைய நிலையில் இருந்ததை போன்ற நரம்பியல் செயலிகளை மீட்டெடுக்க அல்லது மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நியூராலிங்க் எனும் நிறுவனமானது அதன் BCI இன் உதவியுடன் மனித மனதில் எழும் கவலை , மனச்சோர்வு போன்ற மனநல நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க முடியும் என்றும் கூறுகிறது. இந்த தொழில்நுட்பம் அதன் துவக்கநிலையில் உள்ளது இருப்பினும் இறுதியில் மனித திறன்களை மேம்படுத்துவது, மனித மூளையுடன் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைப்பது ஆகியவற்றை அடைவதாகும்.

படம்.1
2.இந்த நியூராலிங்க்கின்தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது?
நரம்பியலில் உள்பொதிதல் – N1 – அல்லது மூளையின் சிப், என்பது உண்மையில் நாணய அளவேயான இணைப்பு(Link) எனப்படும் இது மின்கலணால் இயங்குகின்ற சாதனமாகும், இது மண்டை ஓட்டில் செருகப்படுகிறது, மேலும் அதனோடு 64 எண்ணிக்கையிலான மிக மெல்லிய இழைகள் மூளையில் உள்புதைக்கப் படுகின்றன. நெகிழ்வான நூலிழைகள் மண்டை ஓட்டில் உள்ள சாதனத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இழைகள் மூளையின் நியூரான்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டு, மூளையின் செயல்பாட்டைக் கண்காணிக்கவும் மூளையைத் தூண்டவும் அனுமதிக்கிறது.


படம்.2-
இந்நிலையில் நூலிழை(threads) என்றால் என்ன என்ற கேள்வி எழும் நிற்க, அது மனித உடலுடன் ஒத்துப்போகும் , மனிததிசுக்களை சேதப்படுத்தாத உயிரேட்டமுள்ள மூலப்பொருட்களால் ஆனது. நூலிழைகள் மிகவும் மெல்லியவை, மனித முடியை விட மிகவும் மெல்லியவை. ஒவ்வொரு நூலிழையிலும் கிட்டத்தட்ட 16 மின்முனைகள் உள்ளன – மொத்தம் 1024 மின்முனைகள் – அவை மூளையில் மின்னோட்ட செயல்பாட்டைப் பதிவு செய்கின்றன.
இவ்விழைகள் மூளையின் அனைத்து மின்னோட்ட செயலிகளையும் மண்டை ஓட்டில் உள்ள சிப்புக்கு அனுப்புகின்றன, இப்போது, இந்த இந்த இணைப்பு(Link) ஆனது அனைத்து தகவல்களையும் செயலாக்குகிறது , கணினிகள், திறன்பேசிகள் அல்லது ஒரு இயந்திரமனித(robotic)சாதனத்திற்கு கம்பிவழி இணைப்பில்லாமலேயே தகவல்களை அனுப்புகிறது. மூளையின் சமிக்ஞைகளை கண்காணிப்பதைத் தவிர, புதிய செயல்களைத் தூண்டுவதற்கு இந்தநியூராலிங்க் சிப்பைப் பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறான அறுவைசிகிச்சையைப் பொறுத்தவரை, நியூராலிங்க் ஒரு உயர்மட்ட-துல்லியமான அறுவை சிகிச்சைக்கான இயந்திர மனித அமைப்பை உருவாக்கியுள்ளது.
3.Neuralinkஆனது FDA ஏற்புகைசெய்யப்பட்டதா?
ஆம், அமெரிக்க உணவு , மருந்து நிர்வாகம் (Food and Drug Administration (FDA)) 2023 இல் மனித மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள நியூராலிங்கிற்கு ஒப்புதல் அளித்தது. முன்னதாக 2022 இல், பாதுகாப்புக் காரணங்களின் அடிப்படையில் நியூராலிங்கின் பயன்பாட்டினைநிராகரித்தது. மண்டை ஓட்டில் பொதியபட்டுள்ள சாதனத்தில் (Link) இணைக்கப்பட்ட மின்கலண் பாதுகாப்பு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று FDA கருத்து தெரிவித்தது. கூடுதலாக, மூளைக்குள் உள்பொதியப்பட்ட நூலிழைகள் மூளையின் மற்ற பகுதிகளுக்கு நகரலாம் என்ற கருத்தமைவும் உள்ளது.
4.நியூராலிங்கின் முதல் மனித உள்பொதிதல்(Implant)
ஜனவரி 2024 இல், நியூராலிங்க் அதன் BCI இன்இடைமுகப்பு இணைப்பினை வெற்றிகரமாக ஒரு மனிதனின் மண்டையோட்டில் பொருத்தியதாக அறிவித்தது. முதல் சோதனையில் (PRIME ஆய்வு), நீச்சல் விபத்திற்குப் பிறகு முடங்கிப் போயிருந்த (quadriplegia ஆல் பாதிக்கப்பட்ட) நோலண்ட் அர்பாக் என்ற பங்கேற்பாளரை நிறுவனம் பணிக்கு அமர்த்தியது. உள்பொதிதலிற்குப் பிறகு, அர்பாக் எண்ணிம சாதனங்களுடன் தொடர்பு கொள்ளும் திறனை மேம்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

படம்.3-
அறுவைசிகிச்சைக்குப் பிறகு பங்கேற்பாளர் சீராக குணமடைந்து வருவதாக நியூராலிங்க் எனும் நிறுவனம் மேலும் கூறுகிறது. கூடுதலாக, அவர் தற்போது தனது மூளாையின் சிந்தனைகளால் கணினியின் சுட்டியைக் கட்டுப்படுத்த முடிகிறது.என்றும் அது மட்டுமல்லாமல், பங்கேற்பாளர் மரியோ கார்டு போன்ற விளாயாட்டுகளை விளையாட முடியும் என்றும் விவரமளிக்கின்றது, இது மிகவும் குறிப்பிடத்தக்கது.
மேலும் 300 இற்குமேற்பட்ட மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருவதாக நியூராலிங்க் எனும் நிறுவனம் கூறுகிறது, இது முதுகுத்தண்டு காயங்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தக்கூடும்.
5. நியூராலிங்கை பற்றிய சர்ச்சைகள்
நியூராலிங்க் தனது மனித மருத்துவ பரிசோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், இந்நிறுவனம் பல விமர்சனங்களை எதிர்கொள்கிறது. கடுமையான பக்க விளைவுகள், மரணத்திற்கு வழிவகுத்த துவக்ககால பரிசோதனைகளுக்கு Musk-led தலைமையிலான நியூராலிங்க் குரங்குகளைப் பயன்படுத்தியதாக பல விலங்கு உரிமைகுழுக்கள் குற்றம் சாட்டின.
அது தவிர, பல விமர்சகர்கள் நியூராலிங்க் அதன் மனித பரிசோதனைகள் பற்றி வெளிப்படையாக இல்லை என்று சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிறுவனம் மிகவும் இரகசியமான ஆய்வுகளை செய்துகொண்டுள்ளது அதன் பங்கேற்பாளர்கள் அனைவரும் பரிசோதனையின் விளைவு விவரங்களை வெளியிடுவதில்லை. சமீபத்தில், முதல் நியூராலிங்க் மனித பங்கேற்பாளர் மூளையின் பிற பகுதிகளுக்கு நகரும் நூலிழைகளால் அவதிப்பட்டார். “மூளையிலிருந்து பல நூலிழைகள் பின்வாங்கின, இதன் விளைவாக பயனுள்ள மின்முனைகளின் எண்ணிக்கையில் நிகரசெயலில் தாக்கம் ஏற்படுகிறது” என்று நியூராலிங்க் எனும் நிறுவனத்தால் விளக்கமளிக்கப்பட்டது.
பதிவுசெய்திடும் தருக்கத்தை மாற்றியமைப்பதன் மூலம் சேதத்தை கட்டுப்படுத்த முடிந்ததுஎன்றும் , செயலி மீட்டமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்நிறுவனம் கூறுகிறது. ஆனால் மீண்டும், இது நேரடியாக மூளையில்உள்பொதிவுசெய்யப்பட்ட நூலிழைகளின் பாதுகாப்பு சுயவிவரத்தைப் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது.
ஒட்டுமொத்தமாக, நரம்பியல் தொழிநுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்தி பக்கவாத நோயாளிகள் அன்றாடப் பணிகளைச் செய்ய நரம்பியல் இணைப்பு வழி வகுக்கிறது. இருப்பினும், சிக்கலான தொழில்நுட்ப, பாதுகாப்பு நெறிமுறை ஆகிய சிக்கல்களும் உள்ளன, அவை இன்னும் கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து ஆய்வும் உறுதிப்பாடும் தேவைப்படுகின்றன.
இரத்தினசுருக்கமாக கூறுவதெனிில்:
நரம்பியல்இணைப்பு(Neuralink) என்பது 2016 இல் எலோன் மஸ்க் என்பவரால் நிறுவுகைசெய்யப்பட்ட ஒரு நரம்பியல் தொழில்நுட்ப நிறுவனமாகும். இது மனித மூளை , கணினி ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மனிதமூளையின் செயல்பாட்டை கண்காணிக்கவும் தூண்டவும் இது ஒரு சிப்பை மண்டை ஓட்டில் பொதிக்கிறது , அதனோடு பல இழைகளை நேரடியாக மூளைக்குள் பொதியப்படுகிறது.
முதல் மனித பங்கேற்பாளர் இப்போது குணமடைந்து வருகிறார், மேலும் அவர் தனது எண்ணங்களைப் பயன்படுத்தி கணினிகளில் விளையாட்டுகளை விளையாடுகின்ற திறன்கொண்டுள்ளார்.

%d bloggers like this: