மைக்ரோசாப்ட்டின் NTFS எனும் கட்டற்ற கருவி ஒரு அறிமுகம்

ஒரேகணினியில் விண்டோ லினக்ஸ் ஆகிய இரு இயக்கமுறைமைகளையும் நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ள விழையும்போது கணினியின் நினைவகமானது இவ்விரண்டு இயக்கமுறைமைகளுக்கும் தேவையானஅளவு பாகப்பிரிவினை செய்யப்பட்டு இரண்டு இயக்கமுறைமைகளின்
கோப்புகளும் தனித்தனிபகுதியில் சேமிக்கப்படுமாறு செய்து பயன்படுத்தி கொள்வார்கள் இந்நிலையில் விண்டோ இயக்கமுறைமையை செயல்படுத்திடும்போது லினக்ஸ் இயக்கமுறைமை பகுதியில் உள்ள பயன்பாடுகளையோ கோப்புகளையோ நேரடியாக அனுகமுடியாதவாறு தடுக்கப்பட்டிருக்கும் அதனை தீர்வுசெய்வதற்காகவே இந்த NTFS எனும் கட்டற்ற கருவியை அறிமுகபடுத்தியுள்ளனர்.

மைக்ரோசாப்ட்டின் NTFS என்பது கோப்பஅமைவு இணைப்பு இயக்கக (File System Link (FSL) driver ) தொழில்நுட்பத்தின் ஒருபகுதியாக விளங்குகின்றது இது லினக்ஸ் சூழலில் இருந்து அணுகக்கூடிய NTFS , HFS + ஆகிய கோப்பு முறைமைகளுக்கான ஒரு தனிப்பட்ட கலவையான இயக்ககமாகும். நாம் விரும்பினால் மிகஎளிதாக install.sh என்ற கட்டளைவரிவாயிலாக இந்த கருவியை நிறுவுகை செய்து கொள்ளவும் இதனுடைய பயன்முடிந்தபின்னர் தேவையில்லை யெனில் uninstall.sh என்ற கட்டளைவரிவாயிலாக நாம் ஏற்கனவே நிறுவுகை செய்த இந்த கருவியைநீக்கம் செய்து கொள்ளவும் முடியும் லினக்ஸிற்காக பாகப்பிரிவினை செய்த நினைவக பகுதியில் உள்ள கோப்புகளுடனும் பயன்பாடுகளுடனும் நேரடியாக எளியமுறையில் அனுகுவதற்காக இந்த கருவி பேருதவியாய் விளங்குகின்றது இது லினக்ஸ் கெர்னல் பதிப்புஎண் 4.20.x வரை ஆதரிப்பதோடு DKMS எனும் நூலகத்தின் உதவியுடன் தானாகவே தேவையான இயக்ககங்களை கட்டமைத்து கொள்கின்றது சுருக்கி கட்டிடும் வழிமுறையில் Windows 10/Server 2016/Server 2019 ஆகிய விண்டோ இயக்கமுறைமை/யை ஆதரிக்கின்றது. மேலும் mk*fs ,chk*fs ஆகிய வசதிகளுக்கு பதிலாக ufsd எனும் ஒற்றையான வசதியை பயன்படுத்தி கொள்கின்றது மிக முக்கியமாக இது அவ்வப்போது நிகழ்நிலைபடுத்தி இயக்கமுறைமையின் பதிப்புகளுக்குஏற்ப அறிந்தேற்பு செய்து கொள்கின்றது

%d bloggers like this: