லினக்ஸ் கட்டளையுடன் படத்தின் பின்னணியை மாற்றியமைத்திடுக

நம்முடைய சிறந்தசுயவிவரப் படம் ஒன்று நம்மிடம் உள்ளது அதை சமூக குழுவின் ஊடக சுயவிவரத்திற்கு பயன்படுத்த விரும்புகின்றோம், ஆனால் இந்த படத்தின் பின்னணி கவனத்தை சிதறடிக்கிறது. இந்நிலையில் மற்றொரு படம் சுயவிவரப் படத்திற்கான சரியான பின்னணியைக் கொண்டுள்ளது. இரண்டையும் எவ்வாறு ஒன்றாக இணைப்பது? சில திறன்பேசி பயன்பாடுகள் இந்த வகைகளிலான உருவப்படங்களை எளிதாகக் கையாளுகின்றன, ஆனால் அவை மிகவும் விலை உயர்ந்தவை அல்லது விளம்பரப் பொருட்களால் சிக்கியுள்ளன. மேலும் அவை திறமூலம் அல்ல. Rembg என்பது இவ்வாறான சவால்களை சமாளிக்கின்ற திறன்மிக்கது! இந்த Rembg ஆனது பைத்தான் எனும் கணினி மொழியால் எழுதப் பட்டுள்ளது, எனவே பைதான் 3 ஐ கணினியில் நிறுவுகைசெய்திடுக என பரிந்துரைக்கப்படு கின்றது. பெரும்பாலான லினக்ஸ் விநியோகங்களில் இயல்பாக பைதான் 3 நிறுவுகைசெய்யப்பட்டிருக்கும். பின்வருமாறான எளிய கட்டளைவரியுடன் அதன் பதிப்பைச் சரிபார்க்கலாம்:
$ python3 –version
Rembg க்கு குறைந்தபட்சம் பைதான் 3.7பதிப்பு தேவைப்படுகிறது பைதான் 3.11 ஐ விட பிந்தைய பதிப்புத்தேவையில்லை,.
Linux இல் Rembg ஐ நிறுவுகைசெய்தல்
லினக்ஸ் மடிக்கணினியில் PythonCoding என்ற கோப்பகத்தை உருவாக்கிய, பின்னர் பைதான் மெய்நிகர் சூழலை உருவாக்கிடுக அதற்கான கட்டளைவரி:
$ python3 -m venv /home/don/PythonCoding
அடுத்து, pip ஐப் பயன்படுத்தி rembg ஐ நிறுவுகைசெய்திடுக அதற்கான கட்டளைவரி:
$ python3 -m pip install rembg
படங்களை ஒன்றிணைத்தல்
மந்திரங்கள்கூறுவதை போன்றுச் செயல்பட வேண்டிய நேரமாகும். முதலில், இதற்காக 2019 இல் All Things Open இல் எடுக்கப்பட்ட படம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கொள்க. வசதிக்காக குறுகிய கோப்புப் பெயருடன் மறுபெயரிட பின்வரும் rembg எனும் கட்டளைவரியை இயக்கிடுக:
$ rembg i dgw_ato.jpeg dgw_noback.jpg
முதல் முறையாக rembg ஐ இயக்கும் போது, அது ஒரு திறமூல வடிவ அங்கீகார மாதிரியைப் பதிவிறக்கம் செய்திடுகிறது. இது 100 MBக்கு மேல் இருக்கலாம் rembgஆனது பயனர் கோப்பகத்தில் ~/.u2net/u2net.onnx ஆக சேமிக்கிறது. U-2-Netஎனும் மாதிரியும் அப்பாச்சி 2.0 உரிமத்தைப் பயன்படுத்துகிறது. தோரணீ அங்கீகார மாதிரிகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு ( சொந்தமாக எவ்வாறு பயிற்சி செய்வது), இதற்கானRembgஇன் ஆவணத்தைப் படித்திடுமாறு பரிந்தரைக்கப்படுகின்றது.
இது புதிய புகைப்படத்தை பின்னணி இல்லாமல் சுமார் பத்து வினாடிகளில் உருவாக்கிடுகின்றது. 16 ஜிபி ரேம் கொண்ட Ryzen 7 உள்ளதாக கொள்க. அந்தந்த வன்பொருளைப் பொறுத்து இந்த அனுபவம் மாறுபடலாம்.
பின்னணியை அகற்ற GIMP ஐப் பயன்படுத்திகொள்ளப்படுகின்றது, ஆனால் GIMP விட rembg ஆனது அதை விரைவாகவும் முழுமையாகவும் செய்கிறது.இவ்வாறு ஒரு உருவப்படத்தின் பின்னணியை அகற்றுவது அவ்வளவுதான்.
புதிய பின்னணியைச் சேர்த்தல்
அடுத்து, அப்படத்தில் புதிய பின்னணியைச் சேர்க்க விரும்புவதாககொள்க. அதற்கு வெவ்வேறு வழிகள் உள்ளன. உதாரணமாக, ImageMagick உடன் படங்களை இணைக்கலாம், ஆனால் சட்டகத்தின் அளவை சரியாகப் பெறுவது சிக்கலானதாக இருக்கும். GIMP அல்லது Krita ஐப் பயன்படுத்துவது எளிதான வழி.
GIMPஐ பயன்படுத்திடுவதாக கொள்க அதற்காக முதலில், புதிதாக உருவாக்கப்பட்ட படத்தைத் திரையில் தோன்றிடுசெய்திடுக . பின்னர் திரையின் மேலேஇடதுபுறத்திலுள்ள File எனும் பட்டிக்குச் சென்று அதில் Open as layers என்பதைத் தேர்ந்தெடுத்திடுக. பின்னணிக்கு வேறு படத்தைத் தேர்ந்தெடுத்திடுக. இந்தப் படம் ஏற்கனவே இருக்கின்ற புகைப்படத்தின் மேல் மேலோட்டமாகத் திறக்கிறது.
உருவப்படத்திற்கு கீழே புதிய பின்னணியை நகர்த்த விரும்பினால். GIMP சாளரத்தின் வலதுபுறத்தில் ஒவ்வொரு பட அடுக்கிற்கும் ஒன்று என்றவாறு இரண்டு சிறுபடங்கள் உள்ளன, பின்னணி அடுக்கு மேலே உள்ளது. portrait படத்தின் கீழே பின்னணி அடுக்கினை இழுத்திடுக,
சுயவிவரப் படத்திற்கு இது மிகவும் இனிமையான அமைப்பு!
இந்த Rembg ஐ முயற்சித்திடுக. இந்த Rembg ஆனது மூன்று துணைக் கட்டளைகளைக் கொண்டுள்ளது, –help பட்டியில் மதிப்பாய்வு செய்யலாம்:
$ rembg –help
அவை:
rembg i for files
rembg p for folders
rembg s for HTTP server
Rembg ஆனது MIT உரிமத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த முறை ஒரு படத்திலிருந்து பின்னணி அகற்றப்படும்போது இதை முயற்சித்திடுக.

%d bloggers like this: