வாருங்கள்மீப்பெரும்தரவகத்தின்(Metaverse): மெய்நிகர் உலகில் மூழ்கிடலாம்

மீப்பெரும்தரவகம் ஆனது தற்போது சில காலமாக அதிகஅளவிலானபயன்பாட்டில் இருந்து வருகின்றது, மேலும் அடுத்த சில ஆண்டுகளில் இது ஒரு முக்கிய தொழில்நுட்பமாக மாறவிருப்பதாக உறுதியளிக்கிறது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களும் ஏற்கனவே மீப்பெரும்தரவகத்தில் முன்னிலையில் உள்ளன, ஆனாலும் இன்னும் இது சில சவால்களை கடக்க வேண்டியுள்ளது.
மீப்பெரும்தரவகம் ஆனது தன்னை இன்னும் மேம்படுத்தி கொண்டே வருகிறது.அதாவது மெய்நிகர் பயிற்சி, மெய்நிகர் சேவை முகவர்கள், மெய்நிகர் சுற்றுலா , மெய்நிகர் தொழில்துறை வருகைகள் உள்ளிட்ட புதிய வணிக மாதிரிகளை பல பெரிய நிறுவனங்கள் இதுகுறித்து ஆராய்ந்து வருகின்றன. அடுத்த 7-8 ஆண்டுகளில் கிரிப்டோ நாணய பொருளாதாரம் , இடஞ்சார்ந்த தொழில்நுட்பம் அதன் வளர்ச்சியை உந்துவதன் மூலம் மீப்பெரும்தரவகத்தின் முழு அளவிலான செயல்படுத்தலை எதிர்பார்க்கலாம்.
மீப்பெரும்தரவகத்தின் தீர்வினை உருவாக்குவதில் மூன்று ஒருங்கிணைந்த கூறுகள் உள்ளன.
மெய்நிகர் உண்மைநிலை(Virtual reality (VR)): இது 360 பாகைகோணத்தில் மூழ்கிய எண்ணிம சூழலாகும், இது உண்மையான உலகநிகழ்வுகளை உருவக ப்படுத்து கிறது. இதற்கு VRதலையணி, தலைக்கவசசாதணங்கள் (HMD) போன்ற சிறப்பு சாதனங்கள் தேவை. எடுத்துக்காட்டுகள் PS4 விளையாட்டுகள், ஓட்டுநரின் போலிசெய்கைகள், இணைய அடிப்படையிலான முப்பரிமான (3D) விளையாட்டுகள்.
பெரியதாக்கப்பட்ட உண்மைநிலை(Augmented reality (AR)): AR இல், நடப்பு உலகப் பொருட்கள் எண்ணிம உள்ளடக்கத்தால் மேம்படுத்தப்படுகின்றன , தொழில்நுட்பம் வழக்கமான கைபேசி படபிடிப்பானுடன் செயல்பட முடியும். இருப்பினும், இதற்கு சிறப்பு மென்பொருள் தேவை. எடுத்துக்காட்டுகளில் Google ARCore/Sky Map, HoloLens , Snapchat ஆகியவை அடங்கும்.
கலந்த உண்மைநிலை (MR): இங்கே, தொட்டுணர்க்கூடியபொருட்களும் எண்ணிம பொருட்கள் இணைந்து உள்ளன. உண்மையான உலகமும் எண்ணிம உலகமும் ஒன்றிணைந்து ஒரு ஊடாடும் அனுபவத்தை உருவாக்குகின்றன. MRக்கு சிறப்பு காட்சிகளும் சாதனங்களும் தேவையாகும். எடுத்துக்காட்டுகளில் மெய்நிகர் ஒப்பனை பயன்பாடுகள் , மெய்நிகர் தளவாடங்களின் பொருத்துதல்கள் ஆகியவை அடங்கும்.
சுருக்கமாக, மீப்பெரும்தரவகம்ஆனது VR , AR ஆகியவற்றை IoT, AI, மேககணினி, சங்கிலிதொகுப்பு ஆகியவற்றுடன் இணைத்து மேம்படுத்தப்பட்ட மெய்நிகர் உலகங்களை உருவாக்குகிறது, அதில் பயனர்கள் அவதாரங்களாக(avatars)மூழ்கி விடுகிறார்கள். இதற்காக உயர்தர கணினியும் சிறப்பு மென்பொருளும் தேவையாகும்.
மீப்பெரும்தரவகம்(Metaverse) , பல்செயலாக்கம்(multivers) ஆகியவற்றின் இடையிலான ஒப்பீடு
மீப்பெரும்தரவகத்தில், மனிதர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்து, அவதாரமாக பயணிக்கின்றனர். இணைய வர்த்தகம் போன்ற அனைத்து பரிமாற்றங்களும் சங்கிலிதொகுப்பில் உள்ள கிரிப்டோநாணயங்கள் மூலமாகவே நடைபெறுகின்றன, இது மெய்நிகர் கொள்முதல், வர்த்தகத்திற்கான மிகவும் பாதுகாப்பான தளமாகும். சுழற்சியான, உருவகப்படுத்தப்பட்ட, குவாண்டம், முழுமையான படிவியல் உலகங்கள் போன்ற பல எண்ணிம உலகங்களைக் கொண்டிருப்பதால், multivers பொதுவாக விளையாட்டு, மெய்நிகர் ஒத்துழைப்பிற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
Avatar Inception ஆகிய திரைப்படங்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தைப் பார்ப்பதன் மூலம் மீப்பெரும்தரவகம் ,பல்செயலாக்கம்(multivers) எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன என்பதை புரிந்து கொள்ளலாம். அவதாரம் ஆனது மீப்பெரும் தரவகத்தில் அமைக்கப்பட்டுள்ளது, அங்கு நாம் ஒரு மெய்நிகர் எண்ணிம உலகில் (Pandora) போன்று ஒரு அவதாரமாக மூழ்கி மீண்டும் நடப்பு உலகிற்கு வந்து சேருவோம். Inceptionஆனது பல்செயலாக்கத்தில் உள்ளது, அங்கு நாம் ஒரு எண்ணிம உலகில் (கனவு வரிசை) சென்ற, பிறகு வேறொரு உலகத்திற்குப் பயணமும், பல்வேறு விளையாட்டுகளையும் செயற்படுத்திடுவோம்.இது மெய்நிகர் ஒத்துழைப்பு தளங்களுக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் கருப்பொருளின் கருத்தமைவாகும், அதேசமயம் மீப்பெரும்தரவகத்தில் மெய்நிகர் உதவியாளர்கள், மெய்நிகர் வங்கி, மெய்நிகர் அங்காடிகள் போன்ற பல்வேறு துறைகளில் பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.
மீப்பெரும்தரவகத்தில் உள்ள சவால்கள்
மூடிய சுற்றுச்சூழல் அமைப்பு: மீப்பெரும்தரவகமானது கற்பனையாக மக்களை ஒன்றிணைத்திடுமாறு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் உருவாக்கிய உயர்நிலையானது( Meta) அதற்குள் ‘சுவற்றுக்குள்ளான பூந்தோட்டங்களை’ உருவாக்குகிறது, இதில் சில தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மட்டுமே அணுகுவதற்கான அனுமதி உள்ளது. மீப்பெரும்தரவகசூழலுக்காக வடிவமைக்கப் பட்ட ஒவ்வொரு நிறுவனமும் அதன் சொந்த வரம்புகள் , எல்லைகளைக் கொண்டுள்ளது, மேலும் பிற நிறுவனங்களுடன் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மீப்பெருதரவகத்தை இயங்கக்கூடியதாக மாற்றுவது ஒரு சவாலாக உள்ளது. மெய்நிகர்உலக வன்பொருள்: மீப்பெரும்தரவகத்தினை அணுகுவதற்கான ஒரே வழி VR/AR தலையணிகள் வழியாகும். இருப்பினும், சராசரி நுகர்வோருக்கு இவை மிகவும் விலை உயர்ந்தவைகளாகும். மேலும், இந்ததலையணிகளை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் அதை பயன்படுத்துபவர்களுக்கு குமட்டல், கண்வலி போன்ற உடல்ரீதியான பிரச்சனைகள் ஏற்படலாம். இதுவரை உருவாக்கப்பட்ட தலையணிகள் தலையில் அணிவதற்காக வசதியாக இல்லை.
அடிமையாதல்: மீப்பெருதரவக அனுபவம் நம்மைமிகவும் அடிமையாக ஆக்குகின்றன.
தனியுரிமை: தனியுரிமை என்பது மீபேபெரும்தரவகத்தில் ஒரு பெரிய சவலாகும். VR தலையணிகள் திறன்பேசிகள் அல்லது வேறு எந்த திறன்மிகு துணைப் பொறிகளையும் (gadget) ஒப்பிடும் போது அவை அதிக தகவல்களை சேகரிக்கின்றன எனத்தெரியவருகின்றன. எடுத்துக்காட்டாக, உயிரளவைகள், கண் அசைவுகள், உடலியல் பதில்கள் போன்ற பயனாளரைப் பற்றிய ஒவ்வொரு நிமிட விவரங்களையும் நிறுவனங்கள் பெறலாம். இந்தத் தகவல் தவறான கைகளுக்கு சென்றால் , அது பயனாளரின் தனியுரிமையை அழிக்கக்கூடும்.
பாதுகாப்பு: இணையத்தில் உள்ள ஒரு முக்கிய பிரச்சினை இணைய பாதுகாப்பாகும்
மீப்பெரும்தரவகத்தில், ஒரு நபர் மெய்நிகர் உலகில் முழுமையாக மூழ்கியிருப்பதால், இணையதள மிரட்டலின் விளைவுகள் இன்னும் மோசமாக சந்திக்கவேண்டியிருக்கும். இந்த நிலை குழந்தைகளுக்கு பேரழிவை ஏற்படுத்தும்.
மின் நுகர்வு: சங்கிலிதொகுப்பு மீப்பெரும்தரவகத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இருப்பினும், சஙகிலிதொகுப்புகள் அதிக மின்சக்தியைப் பயன்படுத்துகின்றன. மீப்பெரும்தரவகமானது மேலும் வளரும்போது, அதற்கு மேலும் மேலும் மின்சக்தி தேவைப்படும், அது ஒரு சவாலாக இருக்கலாம். மீப்பெரும்தரவகம் பல்வகை எண்ணிம சுற்றுச்சூழல் அமைப்பு பலஎண்ணிம சுற்றுச்சூழல் அமைப்புகளின் அனுமான அமைப்பின் வளங்கள், மனித தொடர்பு சாத்தியமான சொந்தமாக எந்த வளமும் இல்லாத கற்பனை உலகம் ஒரு கலவையான யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்ட உலகமாக இருக்கலாம் ஒரு சுழற்சியான, உருவகப்படுத்தப்பட்ட, குவாண்டம் அல்லது முழுமையானபடிம சேமிப்பு உலகமாக இருக்கலாம் மனிதர்கள் அவதாரங்களாக அங்கீகரிக்கப் படுகிறார்கள் அதனால் மனிதர்கள் ஒரு பாத்திரத்தை வகிக்கிறார்கள் மெய்நிகர் உலக பயன்பாட்டு நிகழ்வுகளுக்கு உடல்நலம், வங்கி , சில்லறை விற்பனை போன்ற பல துறைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது பொதுவாக விளையாட்டு மெய்நிகர் கூட்டுப்பணி ஆகியவவற்றிகு பயன்படுத்தப்படுகிறது 2023 இல் சிறந்த 10 திறமூல மீப்பெரும்தரவக செயல்திட்டங்கள் மேம்படுத்துநர்கள் மீப்பெரும்தரவகத்தில் செயல்திட்டங்களை உருவாக்க திறமூல பயன்பாட்டை மெதுவாக அதிகரித்து வருகின்றனர். இந்த ஆண்டு ஆய்வசெய்யக்கூடிய சிறந்த 10 திறனுடைய பல்வேறுமீப்பெரும்தரவக இயங்குதளங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
xWebaverse: இது திறமூலத்தை கற்பவர்களுக்கும் மீப்பெரும்தரவகம் மேம்படுத்து நர்களுக்கும் சிறந்த தளமாகும். இது ஒரு திறமூல இணையம், மீப்பெரும் தரவகவிளையாட்டு பொறிஆகும், இதனை எவரும் புரவலாராக செய்ய முடியும் ,இதுஎந்தவொரு இணைய உலாவியிலும் இயங்குவதற்கு முழுமையாக இணக்கமானது. இதுசெயல்படுவதற்காக three.js , Node போன்ற திறமூல கருவிகளைப் பயன்படுத்திகொள்கிறது.
இதனுடைய இணையதளமுகவரி: webaverse.com/ ஆகும்
இதற்கானGitHub இணைப்பு: github.com/webaverse-studios/webaverse ஆகும்
Hypercuber: இது சுய-புரவலராக செய்யப்பட்ட மீப்பெரும்தரவகபயன்பாடுகளை வடிவமைப்பதற்கான கட்டற்ற கட்டணமற்ற கட்டமைப்பாகும். இவைகளை வடிவமைக்கவும், AI/VR/AR நிரல்களை இயக்கவும் சக்திவாய்ந்த செயலாக்கத்தையும் சேமிப்பக வாய்ப்புகளையும் கொண்டுள்ளது.
இதற்கானGitHub இணைப்பு: github.com/hypercube-lab/hypercube ஆகும்
Somnium Space: இந்த திறமூல தளமானது விளையாட்டுதளம்போன்று தோன்றுகிறது. இறுதிப் பயனர்கள் மெய்நிகர் குடியிருப்பிற்கான வளத்தை வரிசைப்படுத்தலாம் அதை சக்திவாய்ந்த குடியிருப்புகளாகவும் வணிக நிறுவனங்களின் வளாகங்களாகவும் மாற்றலாம்.
இதனுடைய இணையதளமுகவரி: somniumspace.com/ ஆகும்
XREngine: இந்த திறமூல நிரலாக்கமானது மீப்பெரும்தரவகத்தின் மேம்படுத்துத லிற்கான வரைச்சட்டங்களை உருவாக்குவது, முப்பரிமான(3D) உலக உருவாக்கம், நிகழ்நேர அரட்டை, பயனர் மேலாண்மை போன்ற சக்திவாய்ந்த வசதிகளைக் கொண்டுள்ளது.
இணையதளமுகவரி: kandi.openweaver.com/typescript/XRFoundation/XREngineஆகும்
Amazon Sumerian: இது எந்தவொரு இணைய உலாவியிலும் VR/AR/3D பயன்பாடுகளை உருவாக்குவதற்கான திறமூல மேம்பாட்டு தளமாகும். இது முப்பரிமான(3D) காட்சிகளை உருவாக்க Babylon.js எனும் கட்டமைப்பைப் பயன்படுத்திகொள்கிறது. இது அமேசான் சேவைகளான லெக்ஸ், லாம்ப்டா , பல்வேறு உரையிலிருந்து பேச்சுவழக்கிற்கான தளம் ஆகியவற்றுடன் குறைபாடற்ற முறையில் செயல்படுகிறது.
இதனுடைய இணையதளமுகவரி: aws.amazon.com/sumerian/ஆகும்
JanusWeb: இந்த திறமூலவலை கட்டமைப்பானது பயனர்களுக்கு கூட்டு VR அனுபவத்தை உருவாக்க உதவுகிறது, மேலும் இருபரிமான(2D)இணையதளத்தை முப்பரிமான(3D) ஆக மாற்றுகிறது. இதுஜாவாஸ்கிரிப்ட் , HTML ஐப் பயன்படுத்தி இயக்கப்படுகிறது, இது கணினிகள்(PC), திறன்பேசிகள் VR தலையணிகளுக்கான முப்பரிமான(3D) ஊடாடும் உலகங்களை உருவாக்க மேம்படுத்துநர்களுக்கு உதவுகிறது.

இதற்கான GitHub இணைப்பு: github.com/jbaicoianu/janusweb ஆகும்
blender: இது முப்பரிமான(3D)காட்சிகளை உருவாக்குவதற்கான திறமூல முப்பரிமான(3D) மாதிரி நிரலாகும்

.இதனுடைய இணையதளமுகவரி: www.blender.org/ ஆகும்
WebXR எனும் சாதனுங்களுக்கான API: இந்த திறமூல செயல்திட்டமானது, VR/AR தலையணிகளுடன் ஊடாடும் பயன்பாடுகளை வடிவமைக்க, இணைய பயன்பாட்டு மேம்படுத்துநர்களுக்கு நிலையான APIகளை வழங்குகிறது.
இதனுடைய இணையதளமுகவரி: www.w3.org/TR/webxr/ஆகும்
bluejeans : இது VR, AR, மெய்நிகர் அவதாரங்கள் , AI அடிப்படையிலான அரட்டைகளுக்கான முப்பரிமான(3D) உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான வலுவான தளமாகும்.
இதனுடைய இணையதளமுகவரி: www.bluejeans.com/ ஆகும்
reydar: இது இணையம் முழுவதும் அதிவேக முப்பரிமான(3D), AR , மீப்பெரும்தரவக தீர்வுகளின் வடிவமைப்பை , மேம்பாட்டை ஆதரிக்கிறது.
இதனுடைய இணையதளமுகவரி: www.reydar.com/ஆகும்
ஒரே பார்வையில் வணிக மீப்பெரும்தரவக தளங்கள்
பல்வேறுவணிக மீப்பெரும்தரவக தளங்களானவை சமீபத்தில் துவங்கப் பட்டுள்ளன.
Tardi World என்பது மெய்நிகர் திருமண வரவேற்புகளை , பங்கேற்பாளர்களை (உலகம் முழுவதும் உள்ள நண்பர்கள் , உறவினர்கள்) வழிநடத்துவதற்கான பிரபலமான மெய்நிகர் நிகழ்வு தளமாகும். இங்கே, பரிசுகள் சியோன் வசனம் மூலம் கிரிப்டோநாணயங்களாக வைக்கபடுகின்றன.
ஜேபி மோர்கன் தனது ONYX மெய்நிகர் வங்கியை (சந்தைக்கூடம்) மையப்படுத்தப்படாதஇடமாக (Dessland) மெய்நிகர்தரவகத்தில் திறக்கப்பட்டமுதல் வங்கியாகும். மையபடுத்தபடாதஇடம்(Decentraland) என்பது சங்கிலிதொகுப்பு அடிப்படையிலான மெய்நிகர் உலகமாகும், அங்கு பயனாளர்கள் மெய்நிகர் மணையகங்களை (real estate) வாங்கலாம், விற்கலாம், மேம்படுத்தலாம், பிற பயனர்களுடன் தொடர்பு கொள்ளலாம், பரவலாக்கப்பட்ட பயன்பாடுகளை உருவாக்கலாம் , வரிசைப்படுத்தலாம்.
தென் கொரியாவின் Kookmin எனும்வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனையை நோக்கமாகக் கொண்டு மீப்பெரும்தரவகத்தில் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் திறந்துள்ளது.
Tintra ஆனதுமீப்பெரும்தரவகவங்கி எனப்படும் புதிய-யுக இணையம் 3.0 தீர்வை உருவாக்கி வருகிறது, இது இறுதிப் பயனர்களுக்கு அதிவேக சேவைகளுடன் முழுமையான செயல்பாட்டு தனியார் , முதலீட்டு தீர்வுகளை வழங்குகிறது.
NextMeet எனும் இயங்குதளம் அமெரிக்காவில் மிகவும் பிரபலமானது. இது உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் பங்கேற்கும் மெய்நிகர் (அதிவேக) கலைக் கண்காட்சிகளை நடத்துகிறது, மேலும் கிரிப்டோநாணயபங்களின் மூலம் கலைப் படைப்புகளை வாங்குகிறது.
Second Life ,ஆனது பொது மக்களுடன் தொடர்பு கொள்ளவும், புதிய நட்பு/உறவுகளை உருவாக்கவும் ஒரு மீப்பெரும்தரவகத்தின் சமூக தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மெய்நிகர் உலகில், பயனர்கள் தங்கள் அவதாரங்களை உருவாக்கலாம், பிற பயனர்களுடன் தொடர்பு கொள்ளலாம், பல்வேறு மெய்நிகர் சூழல்களை ஆய்வுசெய்யலாம், மேலும் மெய்நிகர் பொருட்களை சேவைகளை வாங்குதல் , விற்பதன் மூலம் மெய்நிகர் பொருளாதாரத்தில் பங்கேற்கலாம்.
LokaLocal, ஆனது பிரபலமான நகரங்கள்/இடங்களின் முப்பரிமான(3D) நடப்பு உலக வரைபடங்களைக் கொண்ட மீப்பெரும்தரவக உலகில் மெய்நிகர் சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
Roblox என்பது ஒரு விளையாட்டுகளை மேம்படுத்திடும் தளமாகும், இதில் பயனர்கள் இதனுடைய தனியுரிமை விளையாட்டுகளை மேம்படுத்திடும் பொறியை பயன்படுத்தி தங்கள் சொந்த விளையாட்டுகளை உருவாக்கலாம், பிற பயனர்கள் விளையாடுவதற்காக அவற்றை மேடையில் வெளியிடலாம். Gucciஆனது இந்ததளத்திமில் ஒரு மெய்நிகர் fashion houseஐ அமைத்துள்ளார். அதன் சில்லறைவிற்பணைகடை எண்ணிம முறையில் அணியக்கூடிய மெய்நிகர் ஆடைகளுக்கு அதிவிரைவுஅணியும் அனுபவத்தை வழங்குகிறது.
High Fidelity என்பது ஒரு மீப்பெரும்தரவகம் தளமாகும், இது பயனர்கள் தங்கள் அவதாரங்களை உருவாக்கவும், பிற பயனர்களுடன் தொடர்பு கொள்ளவும், மேலும் இதனுடைய தனியுரிம மேம்பாட்டுக் கருவிகளைப் பயன்படுத்தி தங்கள் சொந்த மெய்நிகர் சூழல்களை உருவாக்கவும் உதவுகிறது.
இந்த மீப்பெரும்தரவகம் இயங்குதளங்கள் ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான வசதிகளை பயன்பாட்டு நிகழ்வுகளைக் கொண்டுள்ளன, மேலும் அவை அனைத்தும் வணிகங்கள், தொழில்முனைவோருக்கு புதுமையான பயன்பாடுகளையும் சேவைகளை உருவாக்க வாய்ப்புகளை வழங்குகின்றன.
(கருப்பொருள் திருமண வரவேற்புகள்) போன்ற பல பிரபலமான தளங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் உருவாகியுள்ளன. Latus Health மருத்துவ ஆலோசனைக்காக எண்ணிம இரட்டையர்களை வழங்குகிறது, மேலும் Zippy மெய்நிகர் பயிற்சியாளரின் பயிற்சியுடன் ஓட்டப்பந்தய வீரர்களுக்கு மெய்நிகர் மராத்தான்களை அமைக்கிறது.
இந்த மீப்பெருதரவக வணிக தளத்தின் பட்டியல் மிகநீளமானது – தொழில்நுட்பம் இன்னும் பிரபலமடையும் போது அது மிகவும்நீளமாகிவிடும்

%d bloggers like this: