எளிய தமிழில் WordPress- 9

ஊடக பயன்பாடுகள்:

Media library எனும் ஊடக தொகுப்பில் நாம் பதிவிற்காக பயன்படுத்த வேண்டிய ஊடகங்கள் சேகரிக்கப்படும் அவை யாவும் நம்மால் உள்ளிட்டு வைக்கப்பட்டவையே ஆகும். இங்கு ஊடகம் என குறிக்கப்பெறுவது படங்கள் (Images), ஆவணங்கள் (documents/PDF), முதலானவை; வீடியோ காட்சிகளையும் இணைக்கலாம். அவை மேம்படுத்தப்பட்ட premium கணக்குகளுக்கு மட்டுமே. (வீடியோக்களை embed செய்வது குறித்து முன்பே விளக்கப்பட்டுள்ளது) நமக்கு இவ்வாறாக ஊடகங்களை சேர்த்து வைக்க 3 ஜிபி (GB) இடம் தரப்படும். ஒரே முறையில் நம்மால் 1 GB அளவில் ஒற்றை ஊடகக் கோப்பினை (Single media file) இணைக்க இயலும்.

uploadDashboard-ல் Media எனும் இணைப்பில் நாம் இதுவரை பதிவுகளில் சேர்த்த படங்கள், காணொளிகள் எல்லாவற்றையும் காண இயலும். படங்களின் பெயருக்கு அருகே சுட்டியைக் கொண்டு சென்றால், மூன்றுவிதமான தேர்வுகள் கிடைக்கும்.

Edit: ஊடக இணைப்புகளின் Properties-ஐ மாற்ற/திருத்த உதவும். அது தலைப்பாகவோ, உப தலைப்பாகவோ இருக்கலாம். அது தவிர படங்களின் அளவினைக் கூட திருத்த உதவும்.
Delete Permanently: நிரந்தரமாக இணைப்பை நீக்கிவிட உதவும்
View Attachment Page: இணைப்பைப் பார்வையிட உதவும். இவ்வசதி, ஒரு PDF, Text கோப்புகளைப் பார்வையிடுகையில் பயனுள்ளது.

ஊடகத் தொகுப்பில் கோப்புகளை சேர்க்க (Adding a File to the Media Library):

புதிதாக ஒரு கோப்பை (file)சேர்க்க, இடதுபுறம் உள்ள மெனுக்களில் Media எனும் மெனுவில் Add New எனும் தெரிவை தேர்வு செய்ய வேண்டும்.

அதன் பின்னர் வழக்கம்போல் Drag and Drop முறையிலோ, Select files எனும் தெரிவை தேர்வு செய்தோ நாம் பதிவிற்கான படங்களையோ, இதர கோப்புகளையோ பதிவேற்றம் (Upload) செய்யலாம்.

நீங்கள் பதிவேற்றம் செய்த படங்கள், கோப்புகளின் Properties-ஐ மாற்றியமைக்க வேண்டுமானால் edit எனும் இணைப்பை தேர்வு செய்யலாம். நீங்கள் பதிவேற்றம் செய்த எல்லா கோப்புகளுக்கும், படங்களுக்கும் edit எனும் இணைப்பு இருக்கும்.

கோப்புகளின் properties-ஐ மாற்ற (Editing the File Properties):attach

Edit இணைப்பை தேர்ந்தெடுத்த உடன், நீங்கள் படங்கள் அல்லது கோப்புகளின் கீழ்க்கண்ட Properties-ஐ மாற்றியமைக்கலாம்.

தலைப்பு (Title)
உரலி (URL)

கோப்பின் பெயர் (filename)

கோப்பின் வகை (file type)

படங்களின் பரிமாணத்தை (dimensions) மாற்ற முடியும். தவிர்த்து படங்களுக்கு மட்டும் மாற்று தலைப்பு (Alternative Text) எனும் தேர்வை மாற்றலாம்.

தலைப்பு என்பது mouse cursor மூலம் பதிவின் படங்களை நீங்கள் தொடும்போது (கிளிக் செய்யாமல், வெறுமனே தொடும்போது) தோன்றுவதே ஆகும்.

Caption எனும் உபதலைப்பு நாம் படத்தின் கீழே அது குறித்த குறிப்பை எழுத பயன்படும். இது உங்கள் WordPress theme ஐப் பொறுத்து மாறுபடும். தவிர்த்து எளிய HTML மொழியையும் இதில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Alternative text எனும் மாற்று தலைப்பு, பதிவேற்றப்பட்ட படம் உலவியில் எதிர்பாராத காரணங்களால் வராமல் போனால் பயன்படும். விளையாட்டுப் போட்டிகளில் மாற்று வீரர் (Substitute) போலவே.

Description எனும் தகவல் குறிப்பு கோப்பை இணைக்கும் இடத்தில் குறிப்பைக் காட்டும்.

எந்த properties –ஐ மாற்றினாலும் Update எனும் Button-ஐ அழுத்தினால் புதுப்பிக்கப்பட்டு விடும்.

தவிர்த்து, படங்களுக்கென்று உள்ள சிறப்பு வசதிகளான Crop, Rotate, Flip, Undo, Redo ஆகியவற்றுக்கான பட்டன்கள் படங்களை மேம்படுத்த உதவும்.

attach2

Scale image எனும் வசதி Resize. அதாவது படத்தின் அளவைக் குறைக்க/அதிகரிக்க பயன்படும். Height, width எனும் உயர – அகலங்களை நாமே உள்ளிட்டு அளவை மாற்றியமைக்கலாம். இல்லையேல் Aspect Ratio எனும் முறையில் விகிதாச்சார அடிப்படையிலும் மாற்றலாம்.

மாற்றங்கள் வேண்டாமெனில் Restore image எனும் பட்டனை அழுத்தலாம். இல்லையேல் Save செய்யலாம்.

படங்களை நீக்க (நிரந்தரமாக நீக்க) வலது பக்கம் சிவப்பு நிறத்தில் Delete Permanently எனும் வசதியை பயன்படுத்தலாம்.

%d bloggers like this: