பி.டி.எஃப் கியூப் (Pdfcube) – முப்பரிமாண பி.டி.எஃப் (PDF) தோற்றம்
பி.டி.எஃப் கியூப் அற்புதமான சிறப்பியல்புகள் கொண்ட, ஒரு வேகமான மற்றும் குறைந்த கோப்பு அளவு உள்ள பி.டி.எஃப் காண்பிப்பான் ஆகும்.
முப்பரிமாண சுழலும் கன சதுர தோற்றத்தை உருவாக்க இது பாப்ளர் (Poppler) மற்றும் ஓபன் ஜி.எல். (OpenGL) ஐ பயன்படுத்துகிறது.
இது பார்ப்பதர்க்கு அழகான தோற்றங்களுடன் பி.டி.எஃப் களை காண உதவுகிறது (சிறப்பாக லேடெக்ஸ், பீமர் மற்றும் பிரோஸ்பெர் காட்சியளிப்பு(presentation)).
முப்பரிமாண சுழலும் கன சதுர உருவகம் பெரிய திரையில் மிக அழகாய் தோற்றம் அளிக்கும். அடிக்கடி கன சதுர உருவகம் பயன் படுத்தினால் அது பார்ப்பதற்கு எருமையும் கழுதையும் ஜோடி சேர்ந்தார் போல் இருக்கும். ஆனால், காட்சி ஓட்டத்தின் அடுத்த பகுதிக்கு செல்லும் போது மட்டும் இதை பயன்படுத்தினால், பார்வையாளர்களுக்கு அடுத்த கட்டத்திற்கு செல்கிறோம் என்பது எளிதாய் புரியும்.
பிடிஎஃப் கியூபின் முக்கிய கவனம், அதன் அசைவூட்டம் (animation), வேகம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றில் தான் உள்ளது.(DRI வன்பொருள் கொடுக்கப்பட்டிருக்குமேயானால்).
உபுண்டுவில் நிறுவுதல்:
உபுண்டு முனையத்தில்,
sudo apt-get install pdfcube
என்ற கட்டளையை இயக்கவும்.
திரைப்பிடிப்பு:
jophine