வாசகர் கருத்துகள்
இந்நூல் மிகவும் நன்றாக உள்ளது. மேலும் விருத்தியடைய எனது வாழ்த்துக்கள் – நந்தினி சிவசோதி
எங்கள் மனத்தை கவர்ந்தது. நன்றி. – Rajkumar Ravi
மிக சிறப்பாய் இருந்தது உங்கள் மின்னூல் . உங்கள் பணி சிறக்கவும் , தொய்வின்றி தொடரவும் என் நெஞ்சார்ந்த நல் வாழ்த்துகள் .
என்றென்றும் நீங்கள் ஒவ்வொரு நாளும் பொன் நாளாக இருக்கட்டும் .- கிரி குமார்
ஆங்கிலத்தில் வருவதுபோல் கட்டற்ற கணினி மென்பொருள் பற்றித் தமிழில் அறிந்துகொள்ள அதிக வாய்ப்பில்லை என்ற குறையைக் கணியம் இதழ் நிவர்த்தி செய்கிறது. புத்தாண்டு தொடக்கம் புதிய கணினித் தொழில் நுட்பங்களை கணியம் வழி காணும் போது பேருவகை அடைகிறோம். புத்தாக்கச் சிந்தனைகளைத் தமிழுலகம் என்றும் வரவேற்கும். -சிங்கப்பூர் சர்மா
மின்புத்தகம் பயனுள்ளதாக எளிமையாக உள்ளது. இம்முயற்சி தொடர வாழ்த்துக்கள். மின்புத்தகம் எல்லோருக்கும் பயன்படும். மிக்க நன்றி. – Thomas Ruban
தங்களின் மின் இதழை பிடிஎஃப் கோப்பாக மட்டுமல்லாமல் எச்டிஎம்எல் உரையாகவும் வெளியிட்டால் கைபேசியில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். நன்றி. – மகேந்திரன்.சு
பக்க வடிவமைப்புக்கும் சிறிது கவனம் செலுத்தலாம். புத்தக வடிவமைப்பு மென்பொருட்கள் (கட்டற்ற) ஏதேனும் இருப்பின் உபயோகப்படுத்தலாம். தேவையான இடங்களில் ஸ்க்ரீன் சாட்கள், புகைப்படங்களை அழகான முறையில் அமர்த்தி தேவைப்பட்டால் இரண்டு அல்லது அதற்கு மேலும் columns உருவாக்கி இன்னும் சிறப்பாக செய்யலாம். தலைப்புகளும்மு colour background கொடுக்கலாம்.
தமிழ் நாட்டில் மட்டுமே 7 கோடிபேர். நம்மை ஆண்ட இங்கிலாந்துகாரர்களை விட அதிகமான மக்கள் தொகை. ஆனால் தொழில்நுட்பத்தில் வெளிவரும் வார, மாத பத்திரிகைகள் தமிழ் பேசும் நல்லுலகுக்கு தற்போது மிக மிக சொற்பம்.
உங்கள் முயற்சி சிறப்பான தொடக்கம்.. எஸ்ஸார்
இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் கணினிச் சஞ்சிகையான ‘கம்ப்யூட்டர் ருடே’ சஞ்சிகையில் இருந்து இந்த மடலினை வரைகிறேன்.
தங்களது கணியம் மின்சஞ்சிகை பார்த்தேன். மிக சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்!
இலங்கையில் இருந்து தமிழில் வெளிவரும் ஒரெஒரு கணினிச் சஞ்சிகை என்றவகையில் இங்குள்ள தமிழர்களின் தகவல் தொழில்நுட்ப விளிப்புணர்விற்கு பெரும்பங்காற்றிவருகிறோம்.
அத்தகைய எமது சஞ்சிகையில் சிறப்புமிக்க உங்களின் சில ஆக்கங்கள் வெளிவருவது இங்குள்ள தமிழ் வாசகர்களுக்கு பயனுள்ளதாய் அமையும் என நம்புகிறேன்.
எனவே, உங்களின் ‘கணியம்’ மின்சஞ்சிகையில் வெளிவந்த ஆக்கங்களில் பயனுள்ளதை எமது சஞ்சிகையில் பிரசுரிக்கலாமா?
– அனுராஜ்