தமிழ்மண் பதிப்பகத்தின் 1000 மின்னூல்கள் – கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் அறிவிப்பு

தமிழ்மண் பதிப்பகம்

 

சென்னையில் உள்ள தமிழ்மண் பதிப்பகத்தார் 30 ஆண்டுகளாக, புழக்கத்தில் இல்லாத, அரிய பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், தமிழின மேன்மைக்கு வித்திட்ட சான்றோர் நூல்களையும், தேடி எடுத்து, பொருள் வழிப் பிரித்து, சீராக அச்சிட்டு வருகின்றனர்.

அவர்கள் வெளியிட்ட முக்கிய எழுத்தாளர்களின் முழுத் தொகுதிகள் குறிப்பிடத் தக்கவை. பாவாணர், சாமி சிதம்பரனார், நா.மு.வே நாட்டார், மயிலை.சீனி.வெங்கடசாமி, வெள்ளை வாரணர், இளங்குமரனார், திரு.வி.க, இராசமாணிக்கனார், சாமிநாத சர்மா, ஔவை துரைசாமி, முடியரசன், ந.சி. கந்தையா, மறைமலையடிகள், வ.சுப. மாணிக்கனார், அப்பாத்துரையார் ஆகியோரின் எல்லாப் படைப்புகளும்  வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பல்வேறு பழந்தமிழ் அகராதிகள், சொற்களஞ்சியங்கள், கருணாமிர்த சாகரம் போன்ற இசை நூல்கள், பண்டைய தமிழ் இலக்கிய நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

நூல் பட்டியல்

 

  •     பாவேந்தர் பாரதிதாசன் – 167 நூல்கள்
  •     கா. அப்பாத்துரையார் – 98 நூல்கள்
  •     முதுமுனைவர் இளங்குமரனார் தமிழ்வளம் – 80 நூல்கள்
  •     சாமிநாத சர்மா நூல்திரட்டு – 76 நூல்கள்
  •     ந.சி.க. நூல் திரட்டு – 65 நூல்கள்
  •     திரு.வி.க. தமிழ்க்கொடை – 54 நூல்கள்
  •     பாவாணர் தமிழ்க் களஞ்சியம் – 53 நூல்கள்
  •     மறைமலை அடிகள் – 52 நூல்கள்
  •     சாமி சிதம்பரனார் நூற்களஞ்சியம் – 37 நூல்கள்
  •     முனைவர் இராசமாணிக்கனார் நூல்கள் – 39 நூல்கள்
  •     மாணிக்க விழுமியங்கள் – 34 நூல்கள்
  •     நா.மு.வே.நாட்டார் தமிழ் உரைகள் – 32 நூல்கள்
  •     ஔவை துரைசாமி உரைவேந்தர் தமிழ்த்தொகை – 32 நூல்கள்
  •     புலவர் குழந்தை படைப்புகள் – 28 நூல்கள்
  •     சங்க இலக்கியக் களஞ்சியம் – 22 நூல்கள்
  •     கவியரசர் முடியரசன் படைப்புகள் – 22 நூல்கள்
  •     அறிஞர் க. வெள்ளை வாரணனார் நூல் வரிசை – 21 நூல்கள்
  •     மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் – 20 நூல்கள்
  •     தொல்காப்பிய உரைத்தொகை – 19
  •     பதினெண் கீழ்க்கணக்கு – 18 நூல்கள்
  •     தமிழ் இலக்கணப் பேரகராதி (கோபாலையர்) – 18 நூல்கள்
  •     இராகவன் நூற்களஞ்சியம் – 16 நூல்கள்
  •     சதாசிவப் பண்டாரத்தார் – 16 நூல்கள்
  •     தொல்காப்பியம் (உரைகளுடன்) – 15 நூல்கள்
  •     செவ்விலக்கிய கருவூலங்கள் -15 நூல்கள்
  •     தேவநேயப் பாவாணர் – 13 நூல்கள்
  •     தமிழக வரலாற்று வரிசை – 12 நூல்கள்
  •     நாவலர் சோமசுந்தர பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் – 10 நூல்கள்
  •     செம்மொழிச் செம்மல்கள் – 10 நூல்கள்
  •     பி. இராமநாதன் – 10 நூல்கள்
  •     செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் – 10 நூல்கள்
  •     கருணாமிர்த சாகரம் -7 நூல்கள்
  •     ஐம்பெருங் காப்பியங்கள் – 5 நூல்கள்
  •     முதுமொழிக் களஞ்சியம் – 5 நூல்கள்
  •     சுப்புரெட்டியார் – 3 நூல்கள்
  •     வெள்ளி விழாத் தமிழ்ப் பேரகராதி – 3 நூல்கள்
  •     உவமைவழி அறநெறி விளக்கம் – 3 நூல்கள்
  •     யாழ்ப்பாண அகராதி -2 நூல்கள்
  •     ந.சி. கந்தையா அகராதிகள் – 2 நூல்கள்
  •     நீதி நூல்கள் – 2 நூல்கள்
  •     குறுந்தொகை விளக்கம் (இராகவன் ஐயங்கார்) – 1 நூல்

மொத்த பக்கங்கள் – 2 இலட்சத்துக்கு மேல்

மொத்த நூல்கள் – 1,165

நாட்டுடைமை நூல்களை மின்னூல்களாக வெளியிடுதல்

 

தமிழ் இணையக் கல்விக் கழகம் நாட்டுடைமை நூல்களை PDF கோப்புகளாக வெளியிட்டுள்ளது. அவற்றை விக்கி மூலம் பங்களிப்பாளர்கள், OCR கருவி மூலம் எழுத்துகளாக மாற்றி, அதில் ஏற்பட்ட பிழைகளைக் களைந்து வருகின்றனர்.

கடும் மனித உழைப்பையும் நேரத்தையும் கோரும் பணி இது. இப்போதுள்ள சுமார் 2000 மின்னூல்களைப் பிழைத்திருத்தம் செய்து உரை வடிவில் வெளியிட சில பத்தாண்டுகள் ஆகலாம்.

இந்நிலையில், நாட்டுடைமை நூல்களை அச்சு நூல்களாக வெளியிடும் தமிழ்மண் பதிப்பகம், அவற்றை உரை வடிவிலும் வைத்திருக்கக் கூடும் என்றெண்ணி, அவர்களிடம் இது பற்றி உரையாடினோம். அவர்களது பதிப்புகள் அனைத்தும் ஒருங்குறி எழுத்துருவில் வேர்ட் ஆவணங்களாகவே இருப்பது அறிந்து மிகவும் மகிழ்ந்தோம்.

விக்கிமூலத்தில் proof read பணிகள் பற்றியும், கணியம் அறக்கட்டளை, FreeTamilEbooks.com வெளியீடுகள் பற்றியும் அவர்களுக்கு எடுத்துரைத்தோம். கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் அனைவருக்கும் இலவசமாகவே மின்னூல்களை தருவது அறிந்து மகிழ்ந்து வாழ்த்தினர்.

தம்மிடம் உள்ள 1000க்கும் மேற்பட்ட மின் நூல்களின் [2 இலட்சத்துக்கு மேல் பக்கங்கள்] ஒருங்குறியில் உள்ள வேர்டு ஆவணங்களை, கணியம் அறக்கட்டளை இலவசமாக வெளியிடுவதற்கு தருவதாக உறுதி கூறினர். அவையாவும் இலவச மின்னூலாக வெளிவரும்போது தமிழின் அரும்பெரும் படைப்புகள் அனைவரது கைகளிலும் தவழும் இனிய நிலை உருவாகும்.

தமிழ்மண் பதிப்பகத்தாரின் பெரும்பணிகளுக்கும், 1000 க்கும் மேற்பட்ட நூல்களை pdf ஆக அல்லாமல் ஒருங்குறி வடிவில் தருவதற்கும், அதற்கான தட்டச்சு செலவின் ஒரு பகுதியையாவது தருவதாக உறுதி கூறினோம்.

இதற்கான நன்கொடையாக ரூபாய் 5 லட்சம் அளிப்பதாக இசைந்தோம். நாம் ஒரு பக்கத்திற்கு எவ்வளவு நன்கொடையாக செய்கிறோம் என்று எண்ணினால், அது ஒரு மிகச் சிறிய தொகை [2.5 ரூபாய் /பக்கம்].

ஒரு இனிய செய்தி

 

கனடாவில் உள்ள டொரன்டோ பல்கலைக்கழகம் (UTSC) , மின்னூல்களுக்கான மொத்த தொகையையும் நன்கொடையாக அளித்துள்ளது. ஈடாக, தாம் அனைத்து நூல்களையும் குறுகிய காலத்தில், epub, mobi, PDF, HTML, txt, odt வடிவங்களில் மாற்றி,அட்டைப்படம் சேர்த்து, விரைவில் வெளியிட வேண்டும்.

தமிழ்மண் பதிப்பகத்தார் அளித்துள்ள MS Word ஆவணங்களை சோதித்து, தனி மின்னூல்களாகப் பிரிக்கும் பணிகளை தற்போது செய்து வருகிறோம்.

நன்கொடை வேண்டுதல்

 

ஆயிரம் மின்னூல்களும் அரும் பொக்கிசங்கள். அவற்றை தரமான மின்னூல்களாக வெளியிடுதல் மாபெரும் பணி. இதற்கான முழுநேரப் பணியாளர்கள் தேர்ந்தெடுத்தல், மின்னூலாக்கப் பயிற்சிகள், ஆவணங்கள், காணொளிகள், கணியம் – டொரன்டோ பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

3-4 முழுநேரப் பணியாளர்கள் நியமிக்க உள்ளதால், அவர்களுக்கான ஊதியம், இதர செலவுகளுக்கான நன்கொடைகளை வரவேற்கிறோம்.

இத்திட்டத்திற்கு தொடர்ந்து நன்கொடை அளித்து வரும் அனைவருக்கும் நன்றிகள்.

வங்கி விவரங்கள்

 

Kaniyam Foundation
Account Number : 606 1010 100 502 79
Union Bank Of India
West Tambaram, Chennai
IFSC – UBIN0560618
Account Type : Current Account

நன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

 

வெளிப்படைத்தன்மை

 

கிரியேட்டிவ் காமன்சு உரிமை அறிவிப்பு

 

தமிழ்மண் பதிப்பகத்தார், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் தமது நூல்களை வெளியிட்ட அறிவிப்பையும் நூல் பட்டியலையும் இங்கே காணலாம்.

 

தமிழில் – archive.org/download/thamizhmann-cc-declaration/Thamizhmann-cc-declaration-tamil.pdf

ஆங்கிலத்தில் – archive.org/download/thamizhmann-cc-declaration/Thamizhmann-cc-declaration-english.pdf

 

PDF வடிவில் பதிவிறக்க

 

இந்த இணைப்பில் PDF வடிவில் மின்னூல்களை பதிவிறக்கலாம்.

www.ulakaththamizh.in/uploads/book/pdf/

6 மாதத்தில் அவற்றை epub, mobi, PDF, HTML, txt, odt வடிவங்களில் மாற்றி,அட்டைப்படம் சேர்த்து வெளியிடுவோம்.

நன்றி

 

இந்த இனிய தருணத்தில், இத்திட்டம் நனவாக உறுதுணை புரிந்த தமிழ்மண் பதிப்பகத்தார், டொரன்டோ பல்கலைக்கழகம் (UTSC) கனடா, CIS-A2K பெங்களூரு, கணியம் பங்களிப்பாளர்கள், நன்கொடையாளர்கள், தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர்கள், தமிழ் விக்கிமூலம் பங்களிப்பாளர்கள் ஆகிய அனைவருக்கும் எங்கள் நன்றிகளை தெரிவிக்கிறோம்.