இந்தியாவில் மிகப்பெரிய வாய்ப்பு
“உபுண்டுவை பயன்படுத்துவதில் இந்தியாவில் நாங்கள் குறிப்பிடத்தக்க வளச்சியினை காண்கிறோம். அது கடந்த ஆண்டில் 160% ஆக வளர்ச்சியடைந்திருக்கிறது.” என சில்பர் மேலும் கூறுகிறார். “இந்த எண்ணிக்கையிலான வளச்சியினை நீங்கள் பார்க்கும் போது, எதிர்காலத்தில் இதன்போக்கு மற்றும் தொடர்புடைய வளர்ச்சியினை நீங்கள் பெறமுடியும் , இந்த எண்ணிக்கை இந்தவகையிலேயே முறையில் பெறப்பட்டது”
இந்தியாவில் உபுண்டுவினுடைய இந்த ‘மிகப்பெரிய வாய்ப்பு மற்றும் வளர்ச்சி’ க்கு காரணம் கனோனிகல் நிறுவனத்தினுடைய விற்பனையை டெல் நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொண்டதே என சில்பர் சுட்டிக்காட்டுகிறார். டெல் நிறுவனத்தினுடைய மடிக்கணினிகளில் உபுண்டு முன்னிருப்பாகவே நிறுவப்பட்டு பயனாளர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் டெல் நிறுவனத்திற்கு 850 விற்பனைக் கடைகள் உள்ளது. இந்த டெல் நிறுவனத்தின் ‘உபுண்டு முன்னிருப்பாகவே நிறுவிக்கொடுத்தல்’ மூலம் அடுத்த ஆண்டில் இந்த வளர்ச்சி மேலும் உயருவதை நாம் பார்க்கலாம்.
மூலம் : bit.ly/160ubuntu
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர். லினக்ஸ் ஆர்வலன், லினக்ஸை கற்றுக்கொண்டிருக்கும் மாணவன்.
வலை : gnutamil.blogspot.com