‘நான் உபுண்டு பயன்படுத்துகிறேன்’- Stephen Fry

 

 

 

ஸ்டீபன் ப்ரை – Stephan Fry

 

ஸ்டீபன் ப்ரை அவர்கள் 1954 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி லண்டனில் பிறந்தார். நடிகர், திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், புத்தக எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மைக் கொண்டவர். மேலும் தெரிந்து கொள்ள en.wikipedia.org/wiki/Stephen_Fry பக்கம் போய்ப் பாருங்கள். இவர் ஒரு உபுண்டு பயனாளர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

இவ்வளவு சிறப்புமிக்க ஒரு நபர் உபுண்டு இயங்குதளத்தை விரும்பி பயன்படுத்துகிறார் என்பது நம்மைப் போன்ற ஓப்பன் சோர்ஸ் மற்றும் லினக்ஸ் காதலர்களுக்கு மனம் கொள்ளா மகிழ்வளிக்கிறது.

        கடந்த வாரம் Liverpool, UK -இல்  நடைப்பெற்ற OggCamp-12 நிகழ்விற்காக பதிவு செய்யப்பட்ட நேர்காணலில் தன்னுடைய லினக்ஸ் வழங்கல் தெரிவினைப் பற்றி  ஸ்டீபன் ப்ரை வெளிப்படுத்தினார்.

‘Free Software’ மற்றும் ‘Free Culture’ ஆகியவற்றை OggCamp-12 மாநாடு கொண்டாடியது.

‘உபுண்டு மிகவும் நட்பாக உள்ளது’

 

‘நீங்கள் பயன்படுத்தும் கருவிகளில் ஏதாவது ஒன்றில் லினக்ஸைப் பயன்படுத்துகிறீர்களா இல்லையா?’ எனக் கேட்ட பொழுது, “என்னுடைய கருவிகள் ஏதாவது ஒன்றில் லினக்ஸ் பயன்படுகின்றேனா என்று கேட்கிறீர்களா? ஆமாம்! உபுண்டு பயன்படுத்துகின்றேன். உபுண்டு எனக்கு மிகவும் நட்பாக உள்ளது.” என ஸ்டீபன் ப்ரை கூறினார்.

 ஸ்டீபன் ப்ரை அவர்கள் நீண்டகாலமாக OpenSource தத்துவத்தினுடைய வழக்குரைஞராக இருந்து வருகிறார்.தொழில்நுட்பம் என்று வரும்பொழுது லினக்ஸ் மட்டுமே அவரது தேர்வல்ல. அவர் ஒரு ஆப்பிள் இயங்குதள ரசிகரும் கூட.

 

“சில நேரங்களில் ஆப்பிள் கொடுமையாகவும், முட்டாள்தனமாகவும் இருக்கும். என்ன இப்படி இருக்கிறதே? என்று நான் கவலைப்பட்டது உண்டு.” என்றார்.

ஸ்டீபன் ப்ரை போன்றவர்கள் ஓப்பன் சோர்ஸ் சமுதாயத்திற்கு கிடைத்த சிறந்த தன்னார்வலர். அவர் மற்றவர்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகவும் விளங்குகிறார். ஓப்பன் சோர்ஸ் சமுதாயத்திற்கு மேலும் பலம் சேர்த்துக்கொண்டிருக்கிறார்.

 

ஸ்டீபன் ப்ரை போன்றவர்கள் ஓப்பன் சோர்ஸ் சமுதாயத்திற்கு கிடைத்த சிறந்த தன்னார்வலர். அவர் மற்றவர்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகவும் விளங்குகிறார். ஓப்பன் சோர்ஸ் சமுதாயத்திற்கு மேலும் பலம் சேர்த்துக்கொண்டிருக்கிறார்.

       இரா.கதிர்வேல்

லினக்ஸ் ஆர்வலன், லினக்ஸை கற்றுக்கொண்டிருக்கும் மாணவன்.

மின்னஞ்சல் : linuxkathirvel.info@gmail.com

வலை : gnutamil.blogspot.com
%d bloggers like this: