உத்தமம் என்ற அமைப்பு நடத்தும் 17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு ஜூலை 6,7,8, 2018 தேதிகளில் கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது.
இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், தமிழ்க்கணிமை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்கின்றனர்,
மேலும், மக்கள் அரங்கம் என்ற வகையில் கீழ்வரும் செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. (கட்டணம் உண்டு. 600ரூ அரைநாள் பயிற்சி, 900 ரூ முழு நாள் பயிற்சி)
- தமிழ் விக்கிமூலம்
- Git – ஒரு அறிமுகம்
- Python – நிரலாக்க மொழி
- எழில் – தமிழில் நிரலாக்க மொழி
- மின்னூல் உருவாக்கம்
- வலைப்பதிவு உருவாக்கம்
- மொபைல் செயலிகள் உருவாக்கம் (பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும்)
- Internet Of Things – IoT
- Virtual Reality
- Augmented Reality
- மோசில்லா – தமிழாக்கம்
- தமிழ் – இயல் மொழி ஆய்வு
இதனுடன் ஒரு நிரலாக்கத் திருவிழாவும் உள்ளது. (இலவசம்)
இதில் ஏதேனும் ஒரு கணினி மொழி நிரலாக்கம் தெரிந்தோர் கலந்து கொண்டு, தமிழுக்கான ஏதேனும் ஒரு மென்பொருளை உருவாக்கலாம். சிறந்த மென்பொருளுக்கு பரிசுகள் உண்டு.
இதன் விதிகள் –
நீங்களே மடிக்கணினி கொண்டுவர வேண்டும்
உருவாக்கும் மென்பொருளை கட்டற்ற மென்பொருளாக மூலநிரலுடன் வெளியிட வேண்டும்
இது தவிர, கண்காட்சி அரங்கில், பல்வேறு நிறுவனங்களின் மென்பொருள் அறிமுகம், தமிழ்க்கணினி தொடர்பான உரைகள் நடைபெற உள்ளன. இவற்றில் பொது மக்கள் யாவரும் இலவசமாகவே கலந்து கொள்ளலாம்.
கோவையைச் சுற்றி உள்ளோர், இந்த அரிய நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
மேலும் விவரங்களுக்கு –