நடப்பு2021 ஆண்டில் ஜாவா எனும் கணினிமொழியை கற்பதற்கான காரணங்கள்
காரணம்.1.குறிமுறைவரிகளை ஒரு முறை மட்டும்எழுதுக, எல்லா இடங்களிலும் செயல்படுத்தி பயன்பெறுக பொதுவாக கணினிமொழிகளில் எழுதப்படுகின்ற குறிமுறைவரிகள் ஆச்சரியப்படத்தக்கதாக அமைந்திருக்கின்றன, ஆயினும் அவை குறிப்பிட்ட இயக்கமுறைமைக்கும்(OS) , கட்டமைப்பிற்கும் ஏற்றவாறு பொருத்தமாக இல்லையெனில் நமக்கு ஏமாற்றமளிக்ககூடியதாக மாறிவிடுகின்றன .மேலும் அவ்வாறான குறிமுறைவரிகள் ஒரு மனிதனால் படிக்ககூடிய நிரலாக்க மொழியிலிருந்து இயந்திர மொழியாக மொழிமாற்றம் செய்யப்பட்டு தொகுக்கப்படுகின்றன, இவை ஒரு CPU க்கு பதிலளிக்ககூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு பெறப்பட்ட இருமநிலை அறிவுறுத்தல்களின் தொடர்களாகஇருக்கின்றன. மேம்பட்ட கணினிகளின் உலகில் இது கமுக்கமானதாக… Read More »