Category Archives: எளிய தமிழில் பைத்தான்

எளிய தமிழில் பைத்தான் – 4

சில அடிப்படைகள் hello world என்று அச்சிடுவது மட்டும் போதாது. அதற்கும் மேலே ஏதாவது செய்தால் நன்றாக இருக்குமே. பயனரிடம் ஏதாவது கேள்வி கேட்கலாம். பதில் வாங்கி, அதில் ஏதாவது மசாலா சேர்த்து, புது கலவையாக்கித் தரலாமா? அதற்கு, பைத்தானில் உள்ள Constant, Variable ஆகியவை உதவும். அவை பற்றி இங்கே காணலாம். அதற்குள்ளே புது வார்த்தைகளைக் கண்டு பயந்து விட வேண்டாம். நான் முதலில் இவற்றைக் கண்டு மிகவும் கலங்கிப் போன நாட்கள் பல. செந்தமிழும்… Read More »

எளிய தமிழில் பைத்தான் – 3

முதல் நிரல் கணினி நிரல் உலகில், காலம் காலமாக செய்யப்பட்டு வரும் ஒரு சடங்கு ஒன்று உள்ளது. எல்லா கணினி நிரல் நூல்களிலும் இதைக் காணலாம். என்ன? அறிவியலிலும் சடங்கா? ஏன் இப்படி? ஆம். ஆனால் இங்கு நாம் எந்தக் கடவுளையும் வணங்கத் தேவையில்லை. பூசைகள் ஏதுமில்லை. முதல் நிரலாக, ‘Hello World’ என்பதை திரையில் அச்சடிப்பதே முதல் நிரல். இதுதான் இத்துறையின் ஒரு சின்ன சடங்கு. சாதாரணமாகவே நாம், சடங்கு என்று வந்து விட்டால், எந்தக்… Read More »

எளிய தமிழில் பைத்தான் – 2

வீடியோ எப்போது? ‘உங்க பைத்தான் கட்டுரை அருமையாக இருக்காமே. வீடியோ ஏதாவது தறீங்களா? நித்யாவையும் GenAI வீடியோ போட சொல்றீங்களா?’ என்று நேற்று ஒருவர் கேட்டார். ‘ஏங்க. இப்போதான் முதல் கட்டுரையே எழுதியிருக்கேன். அதைப் படிச்சிட்டீங்களா?’ ‘இல்லீங்க. அதுக்கெல்லாம் நம்மால முடியாதுங்களே?’ ‘ஐயோ. உங்களுக்கு படிக்கத் தெரியாதா?’ ‘அட. காலேஜ் படிச்சிருக்கேன். ஆனா இதையெல்லாம் படிக்க எனக்கு வராதுங்க. தமிழ் படிப்பது கஸ்டம்.’ ‘ஓ. அப்படியா? இந்தாங்க. ஆங்கிலப் புத்தகம் . A byte of Python… Read More »

எளிய தமிழில் பைத்தான் – 1

அனைவரும் தாய் மொழி, ஆங்கிலம், கூடவே மூன்றாவது மொழியாக பைத்தான் ( லினக்சுடன் ) கற்றுக் கொண்டால், இந்த உலகம் இன்னும் இனிமையானதாகும். மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வழி ஏற்படும். அந்தப் பொற்காலம் விரைவில் வரட்டும்.

என்று கூறியபோது, மகன் வியன் வியந்து போனான்.

‘அம்மா உனது பிறந்தநாளுக்கு என்ன பரிசு தந்தார்?’
‘GenAI பற்றிய ஒரு தொடர் இன்று இணையத்தில் எழுதத் தொடங்கியுள்ளார். அதுவே சிறந்த பரிசு.’
‘அம்மா எழுத்தாளரா?’
‘ஆமா. திருமணமாகி 14 ஆண்டுகளில், 14 நூல்கள் எழுதியுள்ளார்.’
‘ஆ. நான் பெரியவனாகி அவற்றை எல்லாம் படிப்பேன்.’
‘நீயும் எழுத வேண்டும்’
‘எழுதுவேன் எழுதுவேன். நீங்கள் எத்தனை புத்தகம் எழுதியுள்ளீர்கள்?’