Category Archives: ச.குப்பன்

குறைந்த-குறிமுறைவரிகள்/குறிமுறைவரிகள் இல்லாத (LCNC) இயங்கு தளங்களை பயன்படுத்திடுவதற்கேற்ப வருங்காலத்திற்காக தயாராகிடுக

LCNC எனசுருக்கமான பெயரால் அழைக்கப்பெறுகின்ற குறைந்த-குறிமுறைவரிகள்/ குறிமுறைவரிகள் இல்லாத (low-code/no-code (LCNC)) இயங்குதளங்கள் உருவானதன் மூலம் மென்பொருள் மேம்பாடு ஒருஅதிக ஊக்கத்தைப் பெற்றுள்ளது, இது குறிமுறைவரிகளின் வழிமுறையில் செயல்படத்தொடங்காதவர்கள் கூட விரைவாக குறைந்த நேரத்தில் பயன்பாடுகளை உருவாக்க அனுமதிக்கிறது. அதிலும் திறமூல களப்பெயர்களில் உள்ள சிறந்த LCNC இயங்குதளங்களை இப்போதுகாண்போம். தற்போதை சூழலில் திறமையான மென்பொருள் உருவாக்குநர்கள் போதுமான அளவு கிடைத்திடாமல் பற்றாக்குறையாக இருப்பதால், நிறுவனங்கள் தங்களுடைய பணியை விரைவாகச் செய்து முடிக்க செயற்கை நுண்ணறிவு (AI)… Read More »

நிரலாளர்களுக்கான குறிமுறைவரிகளின் முதன்மையான சவால்கள்

நிரலாளர்கள் தங்கள் வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும், குறிமுறைவரிகளில் எதிர்கொள்கின்ற சவால்கள் நிரலாக்கத்தின் சிக்கலைத் தீர்க்கும் திறன்களைக் கூர்மைப்படுத்தவும், புதிய வழிமுறைகளைக் கற்றுக் கொள்ளவும், தொழில்நுட்ப நேர்காணல்களுக்குத் தயாராகவும் ஒரு கட்டமைக்கப்பட்ட , ஈர்க்கக்கூடிய வழிமுறையை வழங்குகின்றன. தம்முடைய அடிப்படை திறன்களை வலுப்படுத்த விரும்பும் ஒரு தொடக்க நிலையாளராக இருந்தாலும் அல்லது கூர்மையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனுபவம் வாய்ந்த நிரலாளராக இருந்தாலும், குறிமுறைவரிகளின் சவால்களில் பங்கேற்பது ஒரு நிரலாளராக வளர உதவும். 2024 இல் நிரலாளர்களுக்கு… Read More »

ஏன் ஒவ்வொருவரும் கணினியை துவக்குவதற்கான தயார்நிலையிலுள்ள லினக்ஸ் USBஐ வைத்திருக்க வேண்டும்

மிகவும் அனுபவமுள்ள பயனாளர்களுக்குகூட இந்த சிக்கல்நிகழலாம். அதாவது ஏதேனும் முக்கியமான பணியில் ஆழ்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென கணினியின் இயக்கம் நின்றுவிடலாம் அதை மீண்டும் இயக்கி செயல்படுத்திடுவது முந்தைய நிலைக்கு கொண்டுவருவது எவ்வளவு வெறுப்பாகவும் எரிச்சலூட்டுவதாகவும் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தியே. இந்த மீட்பு இயக்கமானது மீண்டும் தொடங்குவதற்கான தூண்டுதலாக இருந்தாலும், இதுவரை பணிசெய்த நேரத்தை இந்த மீட்பு இயக்கத்தின் மூலம் சேமிக்க முடியும். லினக்ஸின் துவக்கக்கூடிய விரலியின்(USB) மீட்டெடுப்பு வட்டு என்பது லினக்ஸின்… Read More »

குறிமுறைவரிகளை எழுதிடாமலேயே நிரலாக்கம் செய்வதற்கான சிறந்த திறமூல தளங்கள்

நிரலாக்கத் திறன்கள் எதுவும் நம்மிடம் இல்லை, ஆனால் இணையப் பயன் பாட்டினை உருவாக்கிடுவதற்கான ஆர்வமும் சிறந்த கருத்தமைவுமட்டுமே உள்ளது என்னசெய்வது என தத்தளிக்கவேண்டாம் குறிமுறைவரிகளை எழுதிடும்திறன் இல்லாதவர்களும் மென்பொருள் உருவாக்கிடுவதற்கான உதவி தற்போது தயாராக உள்ளது. குறிமுறைவரிகளற்ற நிரலாக்கத்திற்கு(No-code Development) உதவியை, தேர்வு செய்யக்கூடிய ஏராளமான திறமூல தளங்களும் உள்ளன. அவைகளுள் சிறந்தவை பின்வருமாறு. குறிமுறைவரிகளற்ற நிரலாக்கம்(No-code Development) என்பது பொதுமக்கள் நிரலாளர்கள் போன்று எந்தவொரு குறிமுறைவரிகளையும் எழுதிடவேண்டியத் தேவையில்லாமல் மென்பொருளை தாமே சுயமாக உருவாக்குவதற்கான ஒரு… Read More »

தரவு அறிவியலுக்கான ஐந்து மறைக்கப்பட்ட இரத்தினம் போன்ற பைதானின் நூலகங்கள்

தரவு அறிவியல் மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது, பணிச்சுமையை குறைத்து செயல்திறனை மேம்படுத்த பைதான் சூழல் அமைப்பை நம்புவது கிட்டத்தட்ட அவசியமாகும். அதனால்தான் தரவு அறிவியல் பணிகளுக்கு இடமளிக்கின்ற வகையில் பல்வேறு பைதான் நூலகங்களும் உருவாக்கப்பட்டுவெளியிடுகின்றன. இருப்பினும், Pandas, Scikit-learn, Seaborn போன்ற பிற பிரபலமான நூலகங்களால் மறைக்கப்படும் போது பிரபலமாகாத வேறபல பெரிய நூலகங்கள் யாருக்கும் பயன்படமுடியாமல் தத்தளிக்கலாம். உண்மையில், பிரபலமான நூலகங்களை விட பல மறைக்கப்பட்ட நூலகங்கள் வேறுசில சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்படுகின்றன என்பதே உண்மையான களநிலவரமாகும்.… Read More »

செநு(AI) பயன்பாடுகளை உருவாக்க ஜாவாஸ்கிரிப்ட் நமக்கு உதவுமா?

சில மாதங்களுக்கு முன்பு, DeepLearning.AI இன் நிறுவனர் Andrew Ngஎன்பவர் , LangChAIn.js உடன் இணைந்து LLM பயன்பாடுகளை உருவாக்குவதற்கான ஒரு பாடத்திட்டத்தை கொண்டு வந்தார். இது LLM இல் சூழல்–விழிப்புணர்வு பயன் பாடுகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தியது, மேலும் இணைய அபிவிருத்தி சந்தையை ஆளும் திறன்மிக்க ஒருநிரலாக்க மொழி செநு(AI) பயன்பாடுகளை உருவாக்குகின்ற திறனையும் எவ்வாறு கொண்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியது. சில வாரங்களுக்கு முன்பு, இரண்டு மூத்த மேம்படுத்துநர்களான, தேஜஸ் குமார் , கெவின்… Read More »

நமக்கு இந்த ஆறு முக்கிய வேறுபாடுகள் மட்டும் தெரிந்தால் போதும் விண்டோவிற்கு பதிலாக லினக்ஸைப் பயன்படுத்துவது எளிதாகும்

எந்தவொரு இயக்க முறைமையையும் புதியதாக பயன்படுத்திட துவங்குவது என்றால் நமக்கு அதிகபயமாகவும் வெறுப்பாகவும் இருக்கும், ஏனென்றால் புதிய சூழலில் செயலிகளும், பயன்பாடுகளும் நாம் இதுவரை பழகிய விதத்தில் செயல்படா. அவ்வாறான நிலையில் விண்டோவிலிருந்து லினக்ஸிற்கு மாறவிரும்புவோர் விண்டோவிற்கும் லினக்ஸுக்கும் இடையிலுள்ள வேறுபாடுகளைக் கற்றுக்கொள்வது அவ்வாறான வெறுப்பை விருப்பமாக மாற்றிவிடும். பொதுவாக நாம் புதியதான ஒரு பகுதிக்கு செல்லும் போது, ​​தண்ணீரிலிருந்து தரையில் வீசிய மீன் போன்று மிகவும் போராட்டமாக இருக்குமோ என்ற கவலை எழுவது இயல்புதான். அவ்வாறு… Read More »

Perl , Python ஆகிய இவ்விரண்டு மொழிகளில் முக்கிய வேறுபாடுகளும் பயன்பாட்டு வழக்கங்களும்

Perl , Python ஆகிய இவ்விரண்டு மொழிகளில் எது சிறந்தது என்ற விவாதம் தற்போது அதிகஅளவில் நடைபெற்று வருகின்றன. பொதுவாக இவ்விரண்டும் மிகப்பழமையானவை, பல பத்தாண்டுகளாக அறியப்பட்டவை, மேலும்இவை தங்களுக்கே உரிய வசதி வாய்ப்புகளுடன் வெவ்வேறு பணிகளுக்காக சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதாவது, Perlஆனது பெரும்பாலும் கணினி நிர்வாகம், உரைநிரல், விரைவான முன்மாதிரி ஆகியவற்றில் பயன்படுத்தப் படுகிறது. அதே நேரத்தில், பைத்தானின் எளிய தொடரியல், விரிவான நிலையான நூலகங்கள் இணைய மேம்பாடு, தரவு ஆராய்ச்சி ,… Read More »

இணையபயன்பாடுகளை உருவாக்குவதற்கும் மேம்படுத்துதலுக்கும் ஜாவாஸ்கிரிப்ட் , டைப்ஸ்கிரிப்ட் இவ்விரண்டில் எதனைத் தேர்ந்தெடுப்பது?

இந்த கட்டுரையில், டைப்ஸ்கிரிப்ட் , ஜாவாஸ்கிரிப்ட் ஆகியஇரண்டின் வசதி வாய்ப்புகள், நன்மைகள் , தீமைகள் ஆகியவற்றினை நாம் விவாதிக்க விருக்கின்றோம், இதன் மூலம் புத்திசாலித்தனமாக இவ்விரண்டில் சிறந்தவொன்றைதேர்வு செய்யலாம். தற்போதைய சுறுசுறுப்புடன்,இணைய மேம்பாட்டிற்கு ஜாவாஸ்கிரிப்ட் அல்லது டைப்ஸ்கிரிப்ட் ஆகியவற்றில் எந்த நிரலாக்க மொழியைப் பயன்படுத்துவது என்பது தற்போது முடிவில்லாத விவாதங்களில் ஒன்றாகும்: . ஜாவாஸ்கிரிப்ட் , டைப்ஸ்கிரிப்ட் ஆகியன பற்றி தெரிந்து கொள்ளுதல் ஜாவாஸ்கிரிப்ட் என்பது பல்வேறு நிரலாக்க வழிகளை ஆதரிக்கின்ற பல்துறை கணினிமொழியாகும். இதன்மூலம் நிகழ்வுகளைக்… Read More »

இந்த AI ஆல் செயல்படுகின்ற லினக்ஸ் முனைம பயன்பாடானது, கட்டளைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிய உதவுகின்றது

தற்போது லினக்ஸின் சூழலிலும் வரைகலைபயனர்இடைமுகப்புகள்(GUI) அனைத்தும் நன்றாக மாறியிருப்பதால் வேறு எந்தவொரு கட்டளைவரியையும் இயக்காமல் செல்ல முடியும் பொதுவாக இதன்பயனாளர்களில்சிலர் செயல்களை விரைவாகச் செய்ய விரும்பும் போது முனைமத்தில் கட்டளைவரி இடைமுகப்பினை (command line interface (CLI)) சார்ந்து இருப்பார்கள். . தற்போது அனைவரும் வரைகலைபயனர்இடைமுகப்பினை(GUI) பயன்படுத்தி கொள்வதால் கட்டளை வரியை நன்கு அறிந்திருக்கவில்லை, ஆயினும் சிலர் கட்டளைவரியை அதிகமாக பயன்படுத்திகொள்கிறார்கள். ஒரே நேரத்தில் கற்றுக்கொள்வதையும் அதனை தம்முடைய அன்றாட பயன்பாட்டில்செயல்படுத்துவதையும் சாத்தியமாக்குகின்ற பல்வேறு புதிய பயன்பாடுகள்… Read More »