Category Archives: Serials

எளிய தமிழில் WordPress- 17

அமைப்புகள் Settings எனும் அமைப்புகள் மூலம் நமது WordPress வலைப்பக்கத்தில் சில கட்டுப்பாடுகளை மாற்றியமைப்பது குறித்து இனி பார்க்கலாம். முதலாவது General Settings: தளத்தின் தலைப்பு, Tagline, தளம் இயங்கும் தேதி, நேர வரைவுகள் உள்பட சில அடிப்படையான பொதுவான திருத்தங்கள் செய்யலாம். Writing Settings: இதில் இயல்பாக வரவேண்டிய வகையை (அதாவது இயல்பாக uncategoried இருக்கும். மாற்ற வேண்டுமெனில்) மாற்றலாம். தவிர சில எழுதும் வரைவுகளை (Post Standards) மாற்ற இயலும். Reading Settings: இதில்… Read More »

எளிய தமிழில் WordPress- 14

பயனர்கள் (Users) Users எனும் மெனு உங்கள் தளத்தில் உள்ள பயனர்களைக் காட்டும். குழுவாக இயங்கும் தளத்தில் பல்வேறு பயனர்கள் இருப்பின் அவர்கள் வெவ்வேறு விதமான பொறுப்புகளில் இயங்குவர். அவை குறித்து, Administrator (நிர்வாகி): அனைத்துவிதமான கட்டுப்பாட்டு முறைகளையும் கொண்ட பயனர். தளத்தை தொடங்கியவரே admin அதிகாரம் பெறுவார். வேறு பயனர்களுக்கும் இதே அதிகாரத்தை அளிக்கலாம். பொதுவாக ஒரு தளத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட adminகள் இருப்பதை wordpress ஆதரிக்கவில்லை என்றபோதிலும், நமக்குத் தேவையாயிருப்பின் ஏற்படுத்திக் கொள்ளலாம். Editor… Read More »

எளிய தமிழில் WordPress- 13

தலைப்பு (Header)  சில தீம்களில் இவ்வசதி இருக்காது. இவ்வசதி உங்கள் தீமில் இருந்தால், உங்கள் தளத்தின் தலைப்பு குறித்த அமைப்புகளை (settings) மாற்றலாம். அதாவது தலைப்புப் படங்கள் (Header Images), தலைப்பு, tagline ஆகியவற்றை மாற்றலாம். பின்புலம் (Background) தளத்தின் பின்புலத்தை மாற்றியமைக்க (பின்னணி நிறம் / படம்) இவ்வசதி உதவும். எடிட்டர் (Editor): எடிட்டர் என்பது நாம் CSS PHP முதலான கணினி மொழிகளைப் பயன்படுத்தி தளத்தின் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகளை மாற்றியமைக்கலாம். அதற்கு அம்மொழிகள்… Read More »

எளிய தமிழில் WordPress- 12

Widgets: கூடுதலாக விஷயங்கள் சேர்ப்பதற்காக ஒரு தளத்தில் இடம்பெறும் பிரிவுகளே widgets. பெரும்பாலான தீம்களில் பக்கவாட்டில் அமைந்த sidebarகளே widgets. அதே நேரம், சில தீம்களில் widgets என்பன தளத்தின் கீழேயோ, அல்லது இல்லாமலோ இருக்கும். என்ன மாதிரியான widgets இருக்கின்றன? சமீபத்திய பின்னூட்டங்கள், தேடல், தொகுப்புகள், பதிவின் வகைகள் முதலானவற்றை துவக்க நிலை widgets ஆக சொல்லலாம். மின்னஞ்சல் சந்தா, ட்விட்டர் பேட்ஜ்களைக் கூட widgets ஆக பயன்படுத்தலாம். Widgets மெனுவில் Available Widgets எனும்… Read More »

எளிய தமிழில் WordPress- 11

வெளித்தோற்றம் (Appearance): உங்கள் தளம் பிறருக்கு எப்படி காட்சியளிக்க வேண்டும் என்பதை இந்த மெனுவின் மூலம் தீர்மானிக்கலாம். ஆள் பாதி ஆடை பாதி எனும் பழமொழி போல உங்கள் தளத்தின் வெளித்தோற்றமும் உங்கள் தளத்தை தொடர்ந்து படிக்க உந்தும். தீம்கள்: தீம்கள் விலைக்கும் உண்டு இலவசமாக பலரும் தீம்களை வெளியிடுவதும் உண்டு. வேர்ட்ப்ரஸ் நிறுவனம் கூட ஆண்டுக்கு ஒரு தீம் வெளியிடும். இப்போது twenty fifteen (2015). அவற்றை பயன்படுத்தலாம். தவிர்த்து third party தீம்களை upload… Read More »

எளிய தமிழில் WordPress- 10

கருத்துக்கள் (Comments): எழுதுவதன் நோக்கம் அதன் பரவலான விவாதத்தில் இன்னும் சிறப்புறும். அவ்வகையில் WordPress-ல் பதிவுகளில் கமெண்ட் செய்வதும் எளிதான ஒன்றுதான். அவ்வாறு வாசகர்கள் பதிவிட்ட கருத்துக்களை நிர்வகிக்கும் மெனுவே Comments menu. இந்த கமெண்ட் நல்ல விதமாக பாராட்டாகவும் இருக்கலாம். மாறாக (அல்ல விதமாக!)வும் இருக்கலாம். அதை அனுமதிப்பது குறித்து இப்பக்கத்தில் முடிவெடுக்கலாம். இப்பக்கத்தில்  Pending, Approved, Spam ,Trash எனும் நான்கு இணைப்புகள் இருக்கும். WordPress இலவசமாக அளிக்கும் Akismet எனும் செருகுநிரல் (Plugin)… Read More »

எளிய தமிழில் WordPress- 9

ஊடக பயன்பாடுகள்: Media library எனும் ஊடக தொகுப்பில் நாம் பதிவிற்காக பயன்படுத்த வேண்டிய ஊடகங்கள் சேகரிக்கப்படும் அவை யாவும் நம்மால் உள்ளிட்டு வைக்கப்பட்டவையே ஆகும். இங்கு ஊடகம் என குறிக்கப்பெறுவது படங்கள் (Images), ஆவணங்கள் (documents/PDF), முதலானவை; வீடியோ காட்சிகளையும் இணைக்கலாம். அவை மேம்படுத்தப்பட்ட premium கணக்குகளுக்கு மட்டுமே. (வீடியோக்களை embed செய்வது குறித்து முன்பே விளக்கப்பட்டுள்ளது) நமக்கு இவ்வாறாக ஊடகங்களை சேர்த்து வைக்க 3 ஜிபி (GB) இடம் தரப்படும். ஒரே முறையில் நம்மால்… Read More »

எளிய தமிழில் WordPress-8

Categories எனப்படும் (பதிவின்) வகைகளைப் பற்றிய எளிய அறிமுகம் ஏற்கனவே நமக்கு உண்டு. ஆதலால், இன்னும் கொஞ்சம் விரிவாக அதைப் பார்ப்பதில் சிரமம் ஏதுமில்லை. பதிவின் வகையைத் தீர்மானிப்பது பதிவின் உள்ளடக்கம் தான் என்றாலும், தளத்தில் அதை நேர்த்தியாக தொகுக்க categories பக்கம் உதவும். அப்பக்கத்திற்குச் செல்ல your_blog.wordpress.com//wp-admin/edit-tags.php?taxonomy=category என்ற முகவரியை உள்ளிட வேண்டும். your_blog எனுமிடத்தில் உங்கள் தளத்தின் பெயரை கொடுக்க வேண்டும். இந்த உரலி நீங்கள் log in செய்திருந்தால் மட்டுமே செயல்படும். இந்த… Read More »

எளிய தமிழில் WordPress-7

HTML இணைப்புகள் (links) கொடுக்க: பதிவெழுதும் பக்கத்தில் உள்ள Insert/edit link button எனும் பட்டனை அழுத்தினால் கீழ்காணுமாறு விண்டோ கிடைக்கும். அதில் தேவையான இணைப்பைக் கொடுக்கலாம். அதை மற்றொரு tab-ல் திறப்பதற்கான தேர்வும் அதிலேயே இருக்கிறது. இணைப்பிற்கு அருகே சுட்டியைக் கொண்டு சென்றால், அதில் ஏதும் தலைப்பு வருமாறும் செய்யலாம். ஏன் இணைப்பு கொடுக்க வேண்டும்? நீங்கள் படித்த, அறிந்த தகவல்கள் வேறொரு தளத்தில் இருக்கலாம். அது ஒரு பதிவிறக்கக்கூடிய pdf கோப்பாக இருக்கலாம். அதையெல்லாம் நம்… Read More »

எளிய தமிழில் WordPress-6

நம்முடைய பதிவுகளை எழுதுவதில் சில வரைவுகளையும் (formats) நம்மால் மாற்றமுடியும். சாதாரணமான   Aside– தலைப்பில்லாமல் பதிவுகள் எழுத உதவும் வரைவு இது. ஃபேஸ்புக்கில் குறிப்பு எழுதுவது போன்றது. Gallery– பதிவில் படங்களை கேலரி வடிவில் காண்பிக்க உதவும். Link– இன்னொரு தளத்திற்கு இணைப்பு(கள்) கொடுக்க உதவும் வரைவு. Image– ஒரே ஒரு படத்தை மட்டும் பதிவாக்க உதவும் வரைவு இது. Quote– அதிகமான ‘மேற்கோள்கள்’ பதிவிட உதவும் வரைவு. Status– சின்னச் சின்ன பதிவுகள் இட… Read More »