உபுண்டு நிறுவிய கதை

கணியம் இதழை வாசிக்கத் துவங்கின பின் மனதில் ஒரு குறுகுறுப்பு!Windows 2000, XP, Vista, 7 என்று பல இயங்கு தளங்களைப் பயன்படுத்தி இருந்தாலும் அவை அனைத்தும் பணம் செலுத்தி பெறப்பட்டவை என உறுதியில்லை. விண்டோசுக்கான மென்பொருள்களும் காசு செலுத்தவில்லை. லினக்ஸ் இயங்கு தளங்கள் இலவசமாக, முழு சுதந்திரத்துடான் கிடைக்கும் போது இன்னும் விண்டோசை பயன்படுத்துவதில் நியாயமில்லை. ஆதலால் லினக்சு இயங்கு தளத்தை பயன்படுத்துவது என்று உறுதி கொண்டு அதற்கான தேடலைத் துவங்கினேன். லினக்சு இயங்கு தளங்களில் ஏகப்பட்ட வகைகள் இருக்கின்றன எதை தேர்வு செய்வது? 

விண்டோஸ் போன்ற பயனர் இடைமுகப்பை நான் எதிர்பார்த்தேன். Text User Interface இல் எதையும் செய்ய விரும்பவில்லை. எனக்கு லினக்ஸ் மின்ட் பரிந்துரை செய்யப்பட்டது. அதன் படியே லினக்ஸ் மின்ட் தளத்தில் இருந்து விண்டோஸ்க்கான Installer ISO தனை பதிவிறக்கி குறுவட்டில் எழுதிக் கொண்டேன். விண்டோஸ் மட்டுமே பாவித்து வந்தமையால் எனது கணினியில் நினைவாக பிரிப்பு எதையும் செய்து இருக்கவில்லை. முழுமையாக விண்டோஸ் தனை நீக்கும் எண்ணத்தில் C: தனிலே நிறுவினேன். அதனால் ‘BootMGR missing’ என்ற பிழைச் செய்தி வந்து கொண்டே இருந்தது. என்னால் விண்டோஸ் இயங்கு தளத்திலும் நுழைய இயலவில்லை. இதற்கு முன் நான் Dual Boot செய்தது இல்லை.

 

முன்னமே நான் Puppy Linux பற்றி அறிந்திருந்தேன். எனது கணினி crash ஆகும் சமயமெல்லாம் அதைப் பயன்படுத்தி தகவல்களை பிரதிஎடுத்துக் கொள்வேன். எனது Lenovo மடிக்கணினியில் F12 தனை அழுத்தி cd/dvd drive வழியாக Puppy Linux தனை இயக்கி தகவல்கள் ஏதும் அழியவில்லை என உறுதி படுத்திக் கொண்டேன்.

இப்போது விண்டோஸ் தனை மீண்டும் நிறுவுவதிலும் சிரமம் ஏற்பட்டது. விண்டோஸ் குறுவட்டை உட்செலுத்தி F8 தனை தொடர்ந்து அழுத்துவதின் மூலம் இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைத்தது. இம்முறை நினைவகத்தைப் பிரித்து புதிய Partition ஒன்றை நிறுவிக் கொண்டேன். குறுவட்டின் வழியாக லினக்சை நிறுவ இயலாத போது, USB pen drive வழியாக நிறுவ UnetBootin தனை அறிந்து பதிவிறக்கி, அதன் மூலம் Inside Windows என தேர்வு செய்து D: தனில் லினக்ஸ் மின்ட் தனை நிறுவினேன்.

இப்போது கணினியை ReBoot செய்த உடன் விண்டோஸ்7, Linux Mint என இரு தேர்வுகளை தந்தது. ஆனாலும் LinuxMint தனில் நுழைய இயலவில்லை.

 

This kernel needs i86-64 cpu, but only have i386 cpu என்ற பிழைச் செய்தி தொடர்ந்து வந்தது. இது குறித்த விண்டோசின் forums களில் Virtualization Enable செய்ய வேண்டுமென கூறியிருந்தனர். இது வரை VMware போன்ற Virtualization மென்பொருள்களை பயன்படுத்தியதும் இல்லை. BIOS Settings தனில் Para Virtualization தனை Deselect செய்யக் கூறி இருந்தார்கள். BIOS இல் நுழைவது, மாற்றுவது பற்றி தெரிந்து கொண்டேன். List of keys to access BIOS for various systems : www.mydigitallife.info/comprehensive-list-of-how-key-to-press-to-access-bios-for-various-oem-and-computer-systems/.

 

மேலும் தொடர்ந்து லினக்ஸ் பயனர் குழுக்களின் forum களில் தேடினேன். அப்போது தான் i86-64 என்பவை 64bit கணினிகளை குறிக்கும் என தெரிந்து கொண்டேன். சரி, என் மடிக்கணினி என்ன வகை? அதற்கும் ஒரு தேடல். கூகுளாண்டவர் வசம் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது. XP , VISTA , WIN7 ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாக தெரிந்து கொள்ளும் வழிகள். Start-Run: winmsd.exe அல்லது sysdm.cpl அல்லது msinfo32.exe. Start-Run சென்று System என தட்டச்சி SystemType என்பதை தேர்வு செய்தேன். ia86 / x86 என்பது எனது கணினி 32bit என்பதைக் காட்டியது. இந்த சிறு தகவல் தெரியாததால், இரண்டு நாட்களாக மண்டையைப் பிய்த்துக் கொண்டு, 64bit Linux Mint தனை பதிவிறக்கி நேரத்தை வீணடித்துள்ளேன்!! ;(

 

பின்னர் நண்பர்களின் அறிவுரையின் பேரில் Ubuntu 10.4 LTS தனை தரவிறக்கினேன். அதனை UnetBootin மூலம் நிறுவ இயலவில்லை. USB களில் இடம் போதவில்லை என்ற பிழை வந்தது. பின்னர் 8GB USB ஒன்றில் பதிந்து Boot செய்து பார்த்தேன். Prefix Not Set Error என்ற பிழை செய்தி வந்தது. Forums களில் காத்திருக்கும்படி கூறியிருந்தார்கள். நெடு நேரம் ஆகியும் Ubuntu நிருவதர்கான முகப்பு வரவே இல்லை. பின்னர் DVD தனில் எழுதினேன். அதிலும் செய்த தவறு Nero கொண்டு வேகமாக எழுதியது. என்னவென்று அறியேன் முதலில் பதிந்த DVD வாசிக்கப்படவில்லை. பின்னர் மற்றுமொரு வட்டில் பதிந்து நிறுவி விட்டேன்.

 

கொஞ்சம் தேடல் இருந்தால் எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு கிடைத்து விடுகிறது. நமக்கான சரியான் Linux பதிப்பினை தேர்வு செய்வதும் அவசியம். Ubuntu தனை பயன்படுத்த துவங்கி விட்டேன். அனுபவங்களை தொடர்ந்து எழுதுகிறேன்.

 

 

மீரான். . செ
சுற்றுச் சூழல் ஆர்வலன்.
ட்விட்டர் வழி இணைய தமிழர் ஒன்றிணைப்புக்கான twitamils.com தள நிறுவனர்.

மின்னஞ்சல் : karaiyaan@gmail.com

%d bloggers like this: