எளிய தமிழில் Computer Vision 27. பணியாளர் பாதுகாப்பும் உடல்நலனும்

கீழ்க்கண்ட வேலைகளுக்கு கணினிப் பார்வைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம்:

தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள்

தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள்

  • அபாயகரமான பணியிடங்களில் தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள் (PPE – Personal Protective Equipment) அணியவேண்டும் என்ற வழிமுறைகளைப் பின்பற்றுதல். 
  • அபாயகரமான வேதிப்பொருட்கள் (Chemicals) சரக்கு வைப்பு மற்றும் போக்குவரத்தைக் கண்காணித்தல். 
  • மீண்டும் மீண்டும் செய்யும் வேலைகளில் காயமடைவதைத் (repetitive injury) தடுக்க பணிச்சூழலியல் (Ergonomics) மதிப்பீடு.

கட்டுமான தளத்தில் ஆபத்தான சூழ்நிலைகளைத் தவிர்த்தல்

செய்யும் வேலையைப் பொருத்து பணியிடங்களில் தலைக்கவசம், பாதுகாப்புக் கண்ணாடி போன்ற சாதனங்களை அணிவது அவசியம். முக்கியமாக ஆழ்கிணறு துளையிடுதல் (deep well drilling), அகழ்தல் (excavation) மற்றும் சுரங்கம் (mining) போன்ற எந்திரங்களை இயக்குபவர்கள் மேலும் பாதுகாப்பாக வேலை செய்ய வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ வேலை அவசரத்தில் பணியாளர்கள் இவற்றை அணியாவிட்டால் விபத்துக்குள்ளாகி காயமடைய நேரிடலாம். இவற்றைத் தடுப்பது நிறுவனத்தின் கடமை. நிகழ்நேர படக்கருவிகள், காணொளி பகுப்பாய்வுகள் போன்ற கணினிப் பார்வைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நிறுவனங்கள் பணியாளர்கள் செயல்பாட்டைக் கண்காணிக்க இயலும்.

பழுதடைவதை முன்னறிந்து பராமரித்தல் (Predictive maintenance)

எந்திரங்களில் வேலை செய்யும்போது எதிர்பாராதவிதமாக சில பாகங்கள் செயலிழந்தாலோ அல்லது திடீரென எந்திரமே நின்றுவிட்டாலோ விபத்துகள் ஏற்படலாம். பொருட்களின் இணையம் (IoT) பயன்படுத்தி எந்திரங்களின் மின்னோட்டம் (current), அதிர்வு (vibration), இரைச்சல் (noise) ஆகியவற்றைக் கண்காணிப்பதன் மூலம் பழுதடைவதை ஓரளவு முன்னறிந்து பராமரிக்க முடியும். இத்துடன் சில முக்கிய பாகங்களின் படங்களை எடுத்து மதிப்பீடு செய்வதன் மூலம் மேலும் துல்லியமாகப் பழுதடைவதை முன்னறிய முடியும்.

நன்றி

  1. Personal Protective Equipment – Nist Institute, Chennai

இத்துடன் இக்கட்டுரைத் தொடர் முற்றும்!

ashokramach@gmail.com

%d bloggers like this: