துருவங்கள் – அத்தியாயம் 4 – ஹோம் ஸ்வீட் ஹோம்

ஹோம் ஸ்வீட் ஹோம்

‘மாப்ள அப்படியே எனக்கு ஒரு மசால் தோசை’, சுரேஷின் கதறல் ஆபீஸ் கேண்டீன் க்யூவில் இருந்த மதன் காதுகளில் ஒலித்தது. வாங்கிக்கொண்டு மதன் சுரேஷின் அருகில் அமர்ந்தான். ‘feminist misogynist அப்படி எல்லாம் டயலாக் போகுதாம்? உன் நல்லதுக்கு சொல்றேன் அட்மின் கல்யாணம் ஆனவங்க’, சுரேஷ் அறிவுறுத்த, ‘யாற்றா அந்த உளவாளி?’, மதன் கேட்க,’அதான் இருக்காளே கஞ்சா குடுக்கி, அவ கிட்ட சொல்லி உன் கேபின் கிட்ட காது வைக்க சொல்லியிருக்கேன், அப்பீஸ் முழுக்க ஸ்பைங்கல வச்சிருக்கா, என்ன பண்ணாலும் நியூஸ் வந்துரும்’, சுரேஷ் பெருமிதம் கொள்ள, ‘உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்லையா?’, மதன் குமுற, ‘என்டர்டெயின்மென்ட் வேனும்ல’, சுரேஷ் சொல்லிக்கொண்டிருக்கும்போதே தீப்தி வந்தாள். ‘வாடி கஞ்சா குடிக்கி’, சுரேஷ் தீப்தியை வரவேற்க, ‘போடா திக்குவாயா’, தீப்தி திருப்பி அடிக்க, ‘நான் ஒன்னும் திக்குவாய் இல்லடி, எப்பவாச்சும் திக்கும் அவ்லோதான்’, சுரேஷ் விலக்கி சொல்ல ‘அதுக்கு பேர்தான் திக்குவாய். என்ன கஞ்சாகுடுக்கின்னு சொல்லாத, நானும் உன்ன சொல்லமாட்டேன்’, தீப்தி மிரட்டினாள். அப்பேது மதன் குறுக்கிட்டு ‘தீப்தி, உன்ன ஏன் இப்படி கூப்பிடுறான்?’, மதன் கேட்க, ‘சின்னவயசுல ஒரு நாள் ஓவரா சுண்ணாம்பு வச்ச வெத்தலை சாப்பிட்டு வாய் செவந்துருச்சு, அத பாத்துட்டு அப்போ ஆரம்பிச்சான். மானத்த வாங்குறான்’, தீப்தி விலக்கினாள்.

‘நீயாவது சொல்லு, யாருமா அந்த ஸ்பை, உதய் அண்ணாவா?’, மதன் கேட்க, ‘அவன்தான் ஆல செட் பண்ணி வச்சிருக்கான், எனக்கு எதுவும் தெரியாது’, தீப்தி தப்பித்தாள். ‘ஸ்பை வைக்கிற அளவுக்கு வொற்து இல்லடா’, மதன் சொல்ல, ‘அத நாங்க சொல்லனும்டா, எனக்கு என்னமோ அட்மின் மேட்டற்ல இன்னமும் சந்தேகம் இருக்கு. உண்மைய சொல்லு, அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா இல்லையா?’, சுரேஷ் இடைமறித்தான். ‘நாட் மேரிட் பட் ஆல்ரெடி கமிட்டெட்’, மதன் சொன்னவுடனே சுரேஷ் மதனை பார்த்தான். இருவரும் சிறிது நொடிகள் பார்த்துக் கொண்டபின், ‘சோ பிரன்ஷிப் தான்டி பேகாதுங்கற?’, சுரேஷ் கேட்க, ‘ஒருத்தன அழ வச்சு நான் சந்தோஷப் படுறவன் இல்லடா’, மதன் திட்டவட்டமாக கூறினான்.

‘டேய் மொக்க உன் டெஸ்குக்கு கால் வந்தது’, கேபினுக்கு வந்து மதனிடம் உதய் கூறினார். யாராக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே மதன் கம்யூட்டரை அன்லாக் செய்ய சேட்டில் கார்த்திகா. ‘ப்ரதர் கேபின் வரலாமா, பிரியா இருக்கிங்களா?’, கார்த்திகா கேட்டிருந்தாள், ‘ஆல்வேஸ் வெல்கம்’, மதன் ரிப்ளை அனுப்பினான். அடுத்த பத்து நிமிடத்தில் மதன் கேபினில் கார்த்திகா தன் மடிக்கணினியுடன் வந்தாள்.

‘நீங்க சொன்ன மாதிரி மிண்ட் இண்ஸ்டால் பண்ணிட்டேன், கஷ்டம் ஒன்னும் தெரியல. சாதாரண விண்டோஸ் இண்ஸ்டால் மாதிரிதான் இருந்தது’, கார்த்திகா தன் மடிக்கணினியை காட்டினாள். ‘உங்களுக்கு இண்ட்ரோ ஆகணும்னுதான் நீங்களே இண்ஸ்டால் பண்ணுங்கன்னு சொன்னேன்’, மதன் கூறுகையில் ‘அது மட்டும் இல்ல, என்னோட எல்லா மிடியாக்களும் பக்காவா ப்ளே பண்ணுது, எந்த எக்‌ஸ்ட்ரா ஸாப்ட்வேரும் நான் இன்ஸ்டால் பண்ணல. ரொம்ப ஸ்மூத், நோ லேக், மாடர்ன் லினக்ஸ் இப்படி இருக்கும்னு நான் நினைக்கல. ஐ லைக் இட்’, கார்த்திகா கூறினாள். ‘வின்டோஸுக்கும் லினக்ஸுக்கும் யூஸ் பண்றதுல வித்யாசம் பெருசா இல்லைங்க, ஆனா இரண்டுமே அடிப்படையில வேர வேர, அதுல இருக்குற சாப்ட்வேரை இதுல எதிர்பார்க்கக்கூடாது, சரி நாம வந்த வேலைய பாப்போம், லாஸ்ட் டைம் மேன் கமாண்ட் பத்தி பார்த்தோம், இன்னைக்கு பைல் சிஸ்டத்தை பத்தி பார்ப்போம். பைல் சிஸ்டம்னா என்னன்னு தெரியும் இல்ல?’, மதன் கேட்க, ‘தெரியும் வின்டோஸ்ல fat, ntfs போல. ஒரு எம்டி டிஸ்க்க யூஸ் பண்ணனும்னா முதல்ல பண்ண வேண்டியது பைல் சிஸ்டம் ப்பார்மெட் பண்ணி நிறுவுவது அதானே?’, கார்த்திகா கேட்க, ‘நேரத்தை மிச்சம் பண்ணிட்டீங்க. எனிவே, வின்டோஸ்கு இருக்குற மாதிரி லினக்ஸுக்கும் ஏகப்பட்ட பைல் ஸிஸ்டம்ஸ் இருக்கு, ஆதுல முக்கியமானது ext4 இதுதான் டீப்பால்டா எல்லா டிஸ்ட்ரோவும் யூஸ் பண்றது. உங்கலோட மின்ட்டும் அதத்தான் ரூட் பார்டிஷனுக்கு யூஸ் பண்ணி இருக்கும். ரூட் பார்டிஷன்னு சொன்ன உடனே இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன், லினக்‌ஸ்ல எல்லாமே பைல்ஸ். உங்க லேப்டாப்ல இருக்கும் பிஸிக்கல் ஆர்டிஸ்ட் /dev/sda பைலா இருக்கும், சிடி ராம் /dev/sr0 பைலா இருக்கும். நீங்க டைரக்டா ரூட் பர்மிஷனோட ரா ரீட்ரைட் பண்ணலாம்.’, மதன் சொல்லி முடித்தான்.

‘அப்ப /dev/sda தான் வின்டோஸ்ல c: மாதிரியா?’, கார்த்திகா கேட்க, ‘இல்லைங்க, /dev/sda1 தான் c: மாதிரி. முதல் டிஸ்க்கின் முதல் பார்டிஷன். ஆனா விண்டோஸ் மாதிரி c:, d: எல்லாம் லினக்ஸில் கிடையாது. ஒவ்வொரு பார்டிஷனும் பைல் சிஸ்டத்துல ஒரு போல்டரில் மேப் அகி இருக்கும். இந்த பைல் சிஸ்டத்தோட பேரண்ட் போல்டர் பேரு “/” , இதுக்கு பேர்தான் ரூட் போல்டார் (root directory), இந்த போல்டரதான் மவுட்பாயின்டா வெச்சு /dev/sda1 பார்டிஷன் பைல் சிஸ்டத்தில் மேப் ஆகி இருக்கும்.’, மதன் விலக்கினான். ‘அப்படின்னா ஒரு டெக்ஸ்ட் எடிட்டர்ல /test.txt அப்படின்னு சேவ் பண்ணா அது c:/test.txt அப்படின்னு கிரியேட் பண்ற மாதிரி, கரெக்டா?’, கார்த்திகா கேட்க, ‘ஆமாம், எந்தெந்த பார்டிஷன் எந்த போல்டரில் மேப் ஆகி இருக்குன்னு /etc/fstab அப்படிங்கற பைல்ல குருப்பிட்டிருப்பாங்க. இந்த /etc/fstab பத்தின டீடெயில்ஸ் “man 5 fstab” மேன்பேகஜ்ல இருக்கு. கரண்டா மேப் ஆகி இருக்கும் எல்லா மவுட்பாயிட்ஸையும் “mount” கமாண்ட் முலமா பாக்கலாம்’, மதன் விலக்கினான்.

‘/test.txt சேவ் பண்றதுல ஒரு சிக்கல் இருக்கு. ஒரு சாதாரண யூசரா நீங்க /test.txt சேவ் பண்ண முடியாது, ஒவ்வொரு பைல் அல்லது போல்டருக்கும் பர்மிஷன் பிட்ஸ் அப்படின்னு ஒன்னு இருக்கு, உதாரணமா இந்த கமாண்ட் பாருங்க

$ ls -l /dev/video0
crw-rw-r-- 1 root video 81, 0 Apr  5 01:40 /dev/video0
$

இந்த அவுட்புட்ல முதல்ல இருக்குற c கேரக்டர் /dev/video0 பைல் ஒரு கேரக்டர் டிவைஸ் அப்படின்னு சொல்லுது, இந்த டிவைஸ் பைல் ஓனர் ‘root’, இந்த யூசருக்கு /dev/video0 கேமரா டிவைஸ்ல இருந்து டேட்டாவை படிக்கலாம் அல்லது எழுதலாம், அதத்தான் c கேரக்டருக்கு அடுத்து இருக்குற rw- குறிப்பிடுது. அது மட்டும் இல்லாம ‘root’ யூசர் தவிர்த்து ‘video’ குரூப்பில் இருக்குறவங்களும் இந்த கேமரா டிவைஸ் பைல்ல இருந்து டேட்டாவை படிக்கலாம் அல்லது எழுதலாம், அதத்தான் அடுத்து இருக்குற rw- குறிப்பிடுது. கடைசியாக இருக்குற r– பர்மிஷன் பிட்ஸ் ‘root’ யூசர் அல்லது ‘video’ குரூப் மெம்பர்ஸ் தவிர்த்து மத்தவங்களுக்கு கேமரா டிவைஸ் பைல்ல இருந்து டேட்டாவை படிக்க மட்டும் ரைட்ஸ் கொடுக்குது, அதுதான் அடுத்து இருக்குற r– குறிப்பிடுது. இப்ப இந்த கமாண்ட பாருங்க,

$ ls -ld /
drwxr-xr-x 17 root root 229 Dec 27 18:52 /
$

இங்க முதல் d கேரக்டர் / ஒரு போல்டர்னு சொல்லுது, அடுத்து இருக்குற rwx, ரூட் யூசருக்கு படிக்க (r), எழுத (w) மற்றும் பயன்படுத்த (x) பர்மிஷன் இருக்கு. அடுத்து ரூட் குரூப்புக்கு படிக்க (r) மற்றும் பயன்படுத்த (x) மட்டும் ரைட்ஸ் இருக்கு. இதே r-x ரைட்ஸ் தான் மத்த எல்லா யூசர்களுக்கும் இருக்கு. சோ, ஒரு சாதாரண யூசர் நீங்க / போல்டரில் பைல் கிரியேட் பண்ண முடியாது’ மதன் விலக்க ‘அப்ப ஒரு சாதாரண யூசர் எங்க சேவ் பண்றது’, கார்த்திகா கேட்க, ‘ஒவ்வொரு சாதாரண யூசருக்கும் ஒரு ஓம் போல்டர் இருக்கும் லைக் /home/karthika, நீங்க “ls -ld /home/karthika” கமாண்ட் எக்ஸிக்யூட் பண்ணிங்கனா “root root” க்கு பதிலா “karthika karthika” அப்படின்னு இருக்கும். சோ கார்த்திகா யூசர் /home/karthika/test.txt அப்படின்னு எடிட்டர்ல தாராளமா சேவ் பண்ணலாம்’, மதன் விலக்கினான்.
‘இந்த / போல்டர் உள்ள நிரைய போல்டர்ஸ் இருக்கும் அதுல முக்கியமானதுங்க /boot, /proc, /dev, /etc, /home, /usr, /var, /tmp போல்டர்ஸ். /boot போல்டர்லதான் லினக்ஸ் பூட் ஆக தேவையான லினக்ஸ் கர்னல், கிரப் செகண்ட் ஸ்டேஜ் பூட் லோடர் எல்லாம் இருக்கும். /proc ஒரு மவுண்ட் பாயின்ட், இந்த போல்டரில் proc பைல் சிஸ்டம் மேப் ஆகியிருக்கும். இந்த proc பைல் சிஸ்டம் லினக்ஸ்ல இருக்குற எல்லா ப்ராஸஸ் பத்தின டீட்டேயில்சும் கொடுக்கும். /dev இன்னொரு மவுன்ட் பாயின்ட், இந்த போல்டரில் devtmpfs பைல் சிஸ்டம் மேப் ஆகியிருக்கும். இந்த devtmpfs லினக்ஸ்ல இருக்குற எல்லா டிவைஸ்களும் பைலா இருக்கும். /etc போல்டரில் நிறைய கன்பிகுரேஷன் போல்டர்கள் இருக்கும். /usr/bin போல்டரில் எல்லா ப்ரோக்ராம்கள் இருக்கும், அதேபோல /usr/lib போல்டரில் எல்லா டைனமிக் லைப்ரெரிகளும் இருக்கும். /var போல்டரில் log மற்றும் cache பைல்கள் இருக்கும். /tmp போல்டரில் டெம்பரவரி பைல்கள் இருக்கும். இதுங்கல்ல முக்கியமானது /home போல்டர். இதுலதான் ஒவ்வொரு யூசருக்கும் தனித்தனி போல்டார் இருக்கும்’ விலக்கி முடித்தன் மதன்.

‘இப்பவே கண்ண கட்டுதே’, கார்த்திகா கூற, ‘அப்படித்தான் எனக்கும் இருந்தது முதல்ல, அப்புறம் லினக்ஸ் யூஸ் பண்ண பண்ண பழகிடுச்சு’, மதன் ஆறுதல் கூறினான்.’எனக்கும் லைட்டா கண்ண கட்டுது, வாட் அபவுட் டீ?’, மதன் கேட்க, ‘லெட்ஸ் கோ’, கார்த்திகாவும் மதனும் பேண்டிரிக்கு சென்றனர். ‘ஏன் முகத்துல இவ்வளவு பெரிய தாடி? அதுவும் டிரிம் கூட பண்ணாம? வேண்டுதலா?’ கார்த்திகா கேட்க, ‘ஆமாங்க, பொண்ணு பாத்துட்டு இருக்காங்க, பிக்ஸ் ஆயிடுச்சுன்னா ஷேவ் பண்ணிடுவேன்’, மதன் கூற, ‘இந்த கோலத்துல இருந்தா எவளும் கட்டிக்கமாட்டா, தெறிச்சி ஓடுவா’, கார்த்திகா கலாய்க்க ‘அப்படி ஓடாம இருக்குற பொண்ணுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்’, மதன் கூறினான். ‘இப்படி எடக்கு முடக்கா பேசிட்டு இருந்தீங்க, ஜென்மத்துக்கும் கல்யாணம் நடக்காது, ப்ரம்மச்சாரிதான்’, கார்த்திகா கூற ‘ஷேவ் பண்ணியிருந்தாத்தான் ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணுவாண்ணா அப்படிப்பட்ட கல்யானமே வேண்டாம்’, மதான் கூற ‘நீங்க பேசுறது பாத்தா ஆல்ரெடி கமிட்டெட் மாதிரி இருக்கு, யார் அந்த பொண்ணு? ப்ரப்போஸ் பண்ணிட்டிங்களா?’, கார்த்திகா கேட்க ‘எங்க பண்ண விடுறீங்க, அதன் இப்ப இருக்குறவங்க எல்லாம் பிளஸ் டூ முடிக்கிறதுக்குள்ள ரிசர்வ் ஆகிடுறீங்களே, அப்புறம் எங்க இருந்து ப்ரொபோஸ் பண்றது, உங்களையே எடுத்துக்கோங்க, எப்ப கமிட் ஆனிங்க? ஸ்கூல்லயா இல்ல காலேஜ்லையா? நீங்க இருக்கிற அழகுக்கு எனக்கு தெரிஞ்சு காலேஜ் வரைக்கும் விட்டிருக்க மாட்டானுங்க, மினிமம் டூ டு த்ரீ ப்ரபோசல் டெய்லி நீங்க கமிட்டெட்னு தெரிஞ்சும் வருமே?’, மதன் விரக்தியில் பேச ‘காம் டவுன் மிஸ்டர் மதன், சிங்கிளா இருக்குறது எவ்வளவு கஷ்டம்னு எனக்கும் தெரியும், அதுவும் உங்கலமாதிரி முரட்டு சிங்கிளா இருக்கிறது ரொம்ப கஷ்டம் தான், இருந்தாலும் யூ ஹவ் டு டேக் ஸ்டெப்ஸ் டு இம்ப்ரஸ் எ கேர்ள்’ கார்த்திகா விலக்க ‘ஆணியே புடுங்க வேணாம், போலாமா?’ மதனும் கார்த்திகாவும் மதனின் கேபினை நோக்கி நடக்க ஆரம்பித்தனர் ‘கேப்ல என்ன அழகுன்னு சொன்னதுக்கு தேங்க்ஸ், ஆல்சோ பொண்ணுங்க கமிட்டெட்னு சொன்னா உடனே நம்பாதீங்க, சில பேர் சேப்டிங்காக கமிட்டெட்னு சொல்றவங்களும் இருக்காங்க, ஒன்ஸ் தே ஸ்டார்ட் டிரஸ்ட் தட் பர்ஸன், தன் தே வில் ரிவீல் த ட்ருத்’ கார்த்திகா புன்னகையுடன் கூற ‘சுத்தி வளைக்காதிங்க, ஸ்ட்ரெயிட்டா சொல்லுங்க நானும் சிங்கிள்தான்னு’, மதனும் புன்னகைத்தான்.

‘உங்க நேட்டிவ் சென்னையா?’ கார்த்திகா கேட்க ‘இல்லைங்க, போதி தர்மர் பிறந்த ஊர், காஞ்சிபுரம், அப்பா மளிகை கடை, அம்மா சமையக்கட்டு, தங்கச்சி அவ ஹஸ்பண்ட் கூட வயல்ல வேலை பாத்துட்டு இருப்பா, நான் இங்க உங்க கூட பேசிட்டு இருக்கேன்’, மதன் கூற ‘என்னது வயல்ல வேலை பாத்துட்டு இருப்பாளா?’ கார்த்திகா ஆச்சரியத்துடன் கேட்க ‘ஏங்க எல்லாரும் இப்படி அதிர்ச்சி ஆவறீங்க, அவ ஹஸ்பண்ட் விவசாயம் பார்த்தா அவ வயல்ல தான வேல பாக்கணும்’, மதன் எதிர் கேள்வி கேட்க ‘எந்த பொண்ணும் போற வீட்ல கஷ்ட படனும்னு விரும்ப மாட்டா, நீங்களும் உங்க அப்பாவும் உங்க தங்கச்சிக்கு இஷ்டம் இல்லாமல் கட்டி வச்சிட்டீங்களா?’ கார்த்திகா கேட்க ‘“சோறு வேணும்னா யாராவது சேத்துல இறங்கி தான ஆகனும், அப்படி இறங்கி காஷ்டபட்ரவர கட்டிக்க இஷ்டம் தாம்பா” இது என் தங்கச்சியை பொண்ணு பாக்க வரும் போது அவ என் அப்பாகிட்ட சொன்னது, என் அப்பா அவருக்கு சீதனமாக எங்க கிட்ட இருந்த ஐந்து ஏக்கர் நிலத்தை அவ பேர்ல எழுதி கொடுத்துட்டாரு, இப்ப மாமா தான் அவரது பத்து ஏக்கர் மட்டும் இல்லாம எங்களோட ஐஞ்சி ஏக்கர்லயும் பயிர் பண்றாரு’, மதன் பெருமிதத்துடன் கூற ‘உங்க தங்கச்சி உண்மையிலேயே வித்யாசமானவங்க, இட் நீட் சம் கட்ஸ் யு நோ’ கார்த்திகா கூற ‘தட்ஸ் மை சிஸ்டர்’, மதன் தன் தங்கையை எண்ணி பெருமிதம் கொண்டான்.

‘எங்க அப்பாவுக்கு இதுல டபுள் சந்தோஷம், எப்படியும் நான் நெலத்துல இறங்க போறது இல்ல, அவருக்கும் வயசாயிடுச்சு, பேசாம நெலத்த வித்துடலாமான்னு யோசிச்சிட்டு இருந்தாரு, இப்ப மருமகனே பாத்துக்கறதால அவருக்கு ரொம்ப நிம்மதி’ மதன் கூறினான். ‘இதுல உங்களுக்கு வருத்தம் இல்லையா? என்ன இருந்தாலும் ஐந்து ஏக்கர் நிலம்’, கார்த்திகா கேட்க ‘என்னால அந்த நிலத்துக்கு எந்த பிரயோஜனமும் இல்லீங்க, அது மட்டும் இல்லாம காஞ்சிபுரத்தில் இருக்கும் வீடு, பெட்ரோல் பங்க், கல்யாண மண்டபம், அப்புறம் எங்க கடை எல்லாம் சேர்த்து பாத்தா நிலத்தை விட டபுள் மடங்கு வேல்யூ, சோ ஆல் ஆர் ஹப்பி’ மதன் கூற ‘எப்படியோ, செட்டில்மென்ட் ஆயிடுச்சு, பின்னாடி உங்களுக்கு வாக்கப்பட போறவளுக்கு சொத்து சண்ட போட வாய்ப்பு இல்ல’ கார்த்திகா கூற ‘வாய்ப்பே இல்ல’ மதன் புன்னகைத்தான்.

இருவரும் மதனின் இருக்கைக்கு வந்தனர். ‘உங்க கூட பேசிக்கிட்டு இருந்தா டைம் போரதே தெரியரதில்லைங்க. இட்ஸ் ஆல்ரெடி லன்ச் ப்ரேக். ஐ ஆவ் டு கோ.’ கார்த்திகா கூற, ‘நானும் வந்தவுடனே கேட்கனும்னு நினைச்சேன், இன்னைக்கு என்ன மார்னிக்கே வந்துட்டீங்க?’, மதன் கேட்க ‘ஓ அதுவா, ஆப்டர்ணுன் ஷிப்டுக்கு மாறிட்டேன், தேவையில்லாம உங்கல மிட்னைட் வரைக்கும் காக்க வெச்சு கன்ட கண்ட பிசாசுங்களுக்கு பலி கொடுக்க வேனாம் பாருக்க அதான்’ கார்த்திகா சிரித்துக்கொண்டே கூற ‘மொரட்டு சிங்கிள்ங்க, பேயே வந்தாலும் தில்லுக்கு துட்டு விளையாடலாமான்னு கேட்பேன்’ மதனும் கின்டலடித்தான்.

தொடரும்..

நக்கீரன்.ந [n.keeran.kpm at gmail dot com]

%d bloggers like this: