துருவங்கள் – அத்தியாயம் 3 – மேன் கமாண்டால் வந்த சிக்கல்

மேன் கமாண்டால் வந்த சிக்கல்

வழக்கம் போல் வேலையில் மூழ்கியிருந்த மதனுக்கு அவன் அம்மா சொன்னது நினைவு வந்தது, ‘ஏன்டா மதன் உன் ஆபீஸ்ல எந்த பொண்ணையும் பார்க்க மாட்டியா? உன் அப்பா எவ்வளவு கஷ்டப்படுறாரு?’, என்று கேட்ட அம்மாவிடம், ‘மா! நீ கூட கலாய்க்கிற பாத்தியா?’ என்று கூறியிருந்தான். ஆனால் அவன் அம்மா கேட்டதோ உண்மையான ஆதங்கத்தில் என்று இவனுக்கு நன்றாக தெரியும். சிந்தனையில் இருந்தவன் ‘என்ன பிரதர் ரொம்ப தீவிரமா யோசிச்சிட்டு இருக்கீங்க போல?’ என்ற குரலை கேட்டு தலையை உயர்த்தி பார்க்க அவன் முன் கார்த்திகா நின்றிருந்தாள். அவளிடம் ‘ஆயுசு 100 ன்னு எப்ப சொல்லுவாங்க தெரியுமா உங்களுக்கு?’ என்று திடீரென ஒரு கேள்வியை கேட்டான், அதற்கு கார்த்திகா ‘நம்ம யாரையாச்சும் நினைச்சிட்டு இருக்கும்போது அவங்க நேர்ல வந்து நின்னா சொல்வதுதானே?’ என்று கேட்டாள், ‘இல்ல, யாருக்காவது ஆயுள் தண்டனை கொடுக்கணும்னா சொல்றது’ என்று கடித்தான். ‘ஜோக் ரொம்ப மொக்கையா இருக்கு’ என்று மூக்கை அறுத்தாள் கார்த்திகா.

‘அத விடுங்க, வந்த வேலைய பார்ப்போம். ஆமா, உங்க லேப்டாப்ல விண்டோஸ் தானே வச்சிருக்கீங்க?’ என்று கேட்டான், ‘ஆமாம்’ என்று சொன்னாள், ‘நான் உங்களுக்கு லேட்டஸ்ட் லினக்ஸ் மிண்ட் லைவ் சீடி கொடுக்குறேன், வீட்டுக்கு போய் நீங்களே இன்ஸ்டால் பண்ணுங்க. ஓகேவா?’ என்றான், அதற்கு ‘நானா? இன்ஸ்டாலேஷனா?’ என்று தயங்கினாள். ‘பயப்படாதீங்க, முதல்ல உங்ககிட்ட இருக்கும் பாட்டுங்க, படங்க, கேம்ஸ் செட்டப் பைல் அப்புறம் சாப்ட்வேர் செட்டப் பைல் எல்லாத்தையும் பேக்கப் எடுத்துக்கோங்க, அப்புறம் மிண்ட் இன்ஸ்டால் பண்ணுங்க, அப்படியே நீங்க விண்டோஸ தூக்கிட்டாலும், என்கிட்ட விண்டோஸ் டிவிடி இருக்கு ரீ இன்ஸ்டால், பண்ணிக்கலாம்’ என்றான். ‘ஓகே, நான் டிரை பண்றேன்’ என்றாள் சற்று தைரியமாக. உடனே ‘நீங்க விண்டோஸ் யூஸ் பண்றீங்களா?’ என்று ஆர்வத்துடன் கேட்டாள் கார்த்திகா, அதற்கு ‘எஸ், ஆனா kvm கெஸ்ட்டா’ என்று பதில் அளித்தான், ‘அப்படின்னா’ என்றவளை பார்த்து, ‘அது விஎம்வேர் இல்ல விர்சுவல் பாக்ஸ் மாதிரி’ என்றான். இப்பொழுதுதான் கார்த்திகாவுக்கு புரிந்தது மதன் விண்டோஸ்சை விர்ச்சுவலைசேக்ஷன் மூலம் லினக்ஸில் இயக்குகின்றான் என்று.

‘சரி, ஷெல் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்’ என்றான், ‘ஷெல் னா அது ஒரு ப்ரோக்ராம், அது மூலமா பல ப்ரோக்ராம்கள் ஸ்டார்ட் பண்ண முடியும் அதானே?’, என்றாள். ‘எக்ஸாக்லி, அதுமட்டுமில்லாம அதுல ஒரு ப்ரோக்ராமிங் லாங்வேஜ்ல இருக்குற எல்லா பரப்பர்டிசும் இருக்கு, அதனாலத்தான் நம்மால ஷெல் ஸ்க்ரிப்ட்ஸ் எழுத முடியுது. இன்னைக்கு லினக்ஸ் யூசர்ஸ் பல வகையான ஷெல் கல யூஸ் பண்றாங்க, ஆனா shell அப்படிங்கற கான்செப்ட் நான் முன்னால சொன்ன CTSS ல தான் உருவாச்சு. பெல் லேப்ஸ் வெளியிட்ட v7 யுனிக்ஸ்ல இருந்த shell க்கு பேரு sh, இத எழுதினவர் பேரு Stephen Bourne, இதுதான் பின்னால வந்த பல shell கலுக்கு அடித்தளமா அமைந்தது. அப்புறம் வந்த bsd யுனிக்ஸ்ல இருந்த shell க்கு பேரு csh, அப்புறம் வந்த sunos/solaris ல இருக்குற shell க்கு பேரு ksh, அப்புறம் வந்த லினக்ஸ்லயும் ஓஎஸ்எக்ஸ்லயும் இருக்குற shell க்கு பேரு bash, அப்புறம் tcsh, pdksh, dash, ash, zsh, fish ன்னு பல shells இருக்கு.’ என்றான். ‘இத்தனையும் நான் தெரிஞ்சிக்கனுமா?’ கவலைப்பட்டாள். ‘இத்தனையும் தெரிஞ்சுக்க வேணாம், sh முதல்ல தெரிஞ்சிக்கோங்க, அது மத்த எல்லாத்தையும் ஈஸியா கத்துக்க வழி காட்டும்’ என்றான்.

‘shell ஓட பிரைமரி ஒர்க் ஒரு command டை எக்ஸிக்யூட் பண்றதுதான், ஒவ்வொரு command க்கும் அத எப்படி எக்ஸிக்யூட் பண்ணனும்னு ஒரு syntex இருக்கும். ஒரு command டோட syntex தெரிஞ்சிக்க இருக்குற முதல் வழி, அதோட manual page ஐ படிக்கிறது தான்’ என்றான். ‘manual page படிக்க man கமாண்ட் யூஸ் பண்ணனும் கரெக்டா?’ என்றாள். ‘பரவால்ல, தெரிஞ்சு வச்சிருக்கீங்க’ என்றான். ‘ப்ராஜக்ட்ல அதுதான் முதல்ல சொல்லிக்கொடுத்தாங்க’ என்றாள். ‘அப்ப உங்களுக்கு syntex னா என்னனு புரியும்?’ இது மதன். ‘புரியும், இருந்தாலும் ஒருமுறை சொல்லுங்க’ இது கார்த்திகா. ‘ஓகே, ஒரு சின்ன எக்ஸாம்பிள்’

$ mycommand [-abcd] [--all|--big|--cracking|--doors] arg1 [arg2]..

‘மேல இருக்கும் mycommand அப்படிங்கற ஒரு command டொட syntex. இதுல [-abcd] ங்கறது mycommand டோட short options. இங்கே முக்கியமா கவனிக்கவேண்டியது [] ஸ்கொயர் ப்ராக்கெட்ஸ். இந்த ப்ராக்கெட்ஸ் என்ன சொல்லுதுன்னா, mycommand க்கு -a, -b, -c, -d இதுல எதாச்சும் ஒன்னு கொடுக்கலாம். அடுத்து இருக்குது [–all|–big|–cracking|–doors], இது mycommand டோட long options. முதல்ல பார்த்த short options களுக்கு ஈக்வலானவை, -a ஃபார் –all, -b ஃபார் –big, -c ஃபார் –cracking, -d ஃபார் –doors’, மதன் தொடர்ந்தான், ‘இந்த long option களும் ஸ்கொயர் ப்ராக்கட்டுக்குள்ள இருக்கு, அதனால கொடுக்கிறது, கொடுக்காதது, நம்ம இஷ்டம். அடுத்து இருக்கும் arg1, இது mycommand டோட first argument. அடுத்து இருக்கும் [arg2], இது mycommand டோட second argument, இங்க arg2 ஸ்கொயர் ப்ராக்கட்டால மூடப்பட்டிருக்கும், அதுக்கு அர்த்தம் mycommand டுக்கு arg2 வ கொடுக்கலாம், கொடுக்காட்டி விட்டுடலாம், ஆனா, arg1 கண்டிப்பாக கொடுத்தே ஆகணும்.’ மதன் முடித்தான்.

‘ஓகே, அப்ப [] உள்ள எது இருந்தாலும் அது ஆப்ஷனல், நாம கொடுக்கலாம், இல்லாட்டி விட்டுடலாம், [] இல்லாம இருந்தா, கண்டிப்பாக கொடுத்தே ஆகனும், ஸிங்கள் ‘-’ இருந்தா அதுக்கு பேரு short options, அதுவே ‘–’ இருந்தா, அதுக்கு பேரு long options. புரிஞ்சது, ஆனா ஒரு டவுட், கடைசியில் ‘..’ இருக்கு அதுக்கு என்ன அர்தம்?’ என்றாள் கார்த்திகா, ‘அப்படின்னா, [arg2] [arg3] [arg4] [arg5] [arg6] இப்படி எவ்வளவு argument வேணும்னாலும் நாம கொடுக்கலாம்’, மதன் விலக்கினான்.

‘இப்ப ஒரு ரியல் யுனிக்ஸ் கமாண்ட் பார்ப்போம்’

$ man ls

‘இந்த மேனுவல் நல்லா கவனிச்சிங்கன்னா, டாப் லெப்ட் கார்னர்ல LS(1) னு இருக்கும். யுனிக்ஸ்ல இருக்க எல்லா மேனுவல்களையும் 7 ழு பகுதிகளா பிரிச்சிருக்காங்க,

 1. General Commands (பொதுவான கமாண்ட்கள்)
 2. System Calls (கர்னல் பங்ஷன்கள், C language ல் பயன்படுத்தலாம்)
 3. Library Functions (கர்னல் அல்லாத மற்ற C பங்ஷன்கள்)
 4. Special Files (சிறப்பு கேப்புகள்)
 5. File formats and Conversions (கோப்பு வகைகள்)
 6. Games (மின் விளையாட்டுகள்)
 7. Miscellaneous (மற்றவை)
 8. System Administration Commands (அட்மின் கமாண்ட்கள்)

சோ, LS(1) அப்படின்னா, ls command, பகுதி 1, அதாவது, General Commands வகையான கமண்ட் அப்படின்னு அர்த்தம். இதுவே useradd கமாண்டோட மேனுவல் பேஜ் பார்த்தா அதுல USERADD(8) அப்படின்னு இருக்கும்,ஏன்னா, அது அட்மின் கமாண்ட் செக்க்ஷன்ல இருக்கும், இந்த வகையான அட்மின் கமாண்ட்களை root யூசரால மட்டும்தான் எக்ஸிக்யூட் பண்ண முடியும்’, மதனின் விலக்கம் சற்று நின்றது.

‘சரி, section(1) ல இருக்குற அத்தனை கமாண்ட்களையும் பார்கனும்னா என்ன பண்ணனும்?’, என்று கேட்டாள் கார்த்திகா, மதன் அதற்கு,

$ ls /usr/share/man/man1

‘இந்த கமாண்ட ரன் பண்ணா அது section(1) ல இருக்குற அத்தனை கமான்டுங்களையும் காட்டும். இதேபோல man2, man3 அப்படின்னு எட்டு செக்‌ஷன்கல்ல இருக்குற கமாண்டுங்களையும் பார்கலாம். அதுமட்டும் இல்லாமல் உங்களுக்கு ஏதாவது ஒரு கமாண்டோட ஒரு பகுதிதான் நியாபகம் இருக்கு, ஆனா அந்த கமாண்ட்டோட முழு மோனுவலையும் பாக்கணும்னா அந்த பாதி கமாண்ட man -k க்கு கொடுங்க, அது நீங்க கொடுத்த பாதி கமாண்ட்ல ஸ்டார்ட் ஆகுற எல்லா கமாண்ஸுகளையும் காட்டும்’ மதன் விலக்கினான்.

‘அப்ப man -k ls அடிச்சா ls இருக்குற அத்தன கமாண்டையும் காட்டும், கரைக்ட்டா?’ என்றாள் கார்த்திகா, அதற்கு மதன் ‘எக்ஸாக்ட்லி, சரி, இப்ப ls மேன் பேஜ பார்ப்போம், எந்த ஒரு ப்ராப்பர் மேன் பேஜ்லயும் கீழ இருக்குற sections கண்டிப்பாக இருக்கும்,

 1. NAME (கமாண்டோட பேர்)
 2. SYNOPSIS (கமாண்டோட syntex)
 3. DESCRIPTION (கமாண்ட் பத்தின விரிவான விலக்கம்)
 4. RETURN VALUE (கமாண்டோட ரிட்டர்ன் வேல்யூ)
 5. AUTHOR (கமாண்ட எழுதினவர் பேர்)
 6. SEE ALSO (கமாண்ட் சம்பந்தப்பட்ட மத்த கமாண்ட்கள்)

SYNPOSIS செக்ஷன்ல கமாண்டோட syntex கொடுத்திருப்பாங்க, அந்த syntex ல இருக்குற long & short options கல DESCRIPTION section ல விலக்கி இருப்பாங்க, RETURN VALUE செக்க்ஷன்ல அந்த கமாண்ட் shell க்கு என்ன ரிட்டர்ன் வேல்யூ அனுப்புதுன்னு சொல்லி இருப்பாங்க, AUTHOR செக்க்ஷன்ல அந்த கமாண்ட யார் எழுதினாங்கன்னு சொல்லி இருப்பாங்க’, என்று மதன் மேலும் விலக்கினான். ‘புரிஞ்சது, SEE ALSO செக்க்ஷன் பத்தி சொல்லல?’, கார்த்திகா கேட்டாள், ‘அதுக்குதான் வறேன். அது ரொம்ப முக்கியமான செக்க்ஷன், அதுல அந்த கமாண்ட் சம்பந்தப்பட்ட மத்த கமான்ட்கள் கொடுத்திருப்பாங்க’ என்றான் மதன்.

‘man பேஜ்ல இவ்வளவு இருக்கா?’ வியந்தாள் கார்த்திகா, ‘இதுக்கே அலுத்துக் கிட்டா எப்படி, இன்னும் நான் ஒரு கமாண்ட் கூட சொல்லி தரல’ என்றான் மதன். ‘அதான் முக்கியமான கமாண்ட சொல்லி கொடுத்துட்டீங்களே, man’ என்றாள் கார்த்திகா. ‘man கமாண்ட் நல்லா புரிஞ்சது, என்ன ஒன்னு, இந்த man கமாண்ட எழுதினவர் ஏன் அதுக்கு manual அப்படின்னு பேர் வைக்காம, man அப்படின்னு பேரு வெச்சாரு? உங்க ஆளுங்க ஏன் எல்லாரும் misogynist கலாவே இருக்காங்க? பொண்ணுங்கலுக்கு மூல இருக்கவே இருக்காதுன்னு ஏன் முடிவு பண்றீங்க?’ சிரிது கடுமையாக கேட்டாள் கார்த்திகா. ‘தாயே பத்ரகாலி, அந்த காலத்துல இருந்த டெலிப்போன் நெட்வர்க்ல டேட்டா ட்ரான்ஸ்பர் மெதுவா நடக்கும் அப்ப யுனிக்ஸ ஆக்ஸஸ் பண்ணவங்க ரொப்ப தூரத்ல இருக்குர சர்வர டெலிபோன் லைன் மூலமா ஆக்ஸஸ் பண்னாங்க, கமாண்டுங்க சின்னதா இருந்தா சீக்கிறமா ட்ரான்ஸ்பர் நடக்கும்னு எல்லா unix கமாண்ட்கலுக்கும் சின்னதா பேர் வெச்சாங்க’, விலக்கியவன், ‘அது ஏன் feminist ங்க சாதாரண மேட்டரகூட பொண்ணுங்களுக்கு அப்போசிட்டா இருக்குறதா நெனச்சுக்கறீங்க? உங்க பாயின்ட் ஆப் வியுக்கு ஆப்போசிட்டா யாராச்சும் கேள்வி கேட்டா உடனே அவன் misogynist, அப்டித்தானே? இருக்குற எல்லா விக்டம் கார்டையும் யூஸ் பண்ணி அவன பப்ளிக்ல கேவலப்படுத்த வேண்டியது?’ மதனும் சற்று சூடாக கேட்டான்.

‘நீங்க அப்படியே உத்தமங்க மாதிரி நடிக்காதீங்க, இன்னும் யுனிக்ஸ் கம்யூனிட்டில பொண்ணுங்கள மட்டமாத்தானே பார்க்கறீங்க? நீங்க எப்படியும் ஏதாவது ஒரு லினக்ஸ் க்ரூப்ல மெம்பரா இருப்பீங்க அங்க எத்தன பொண்ணுங்க மெம்பரா இருக்காங்க? என் கணக்குப்படி ஒருத்தி கூட இருக்க மாட்டா. அப்படியே இருந்தாலும் உங்க ஆளுங்க அவங்கள மதிக்க மாட்டாங்க’, என்று வாதாடினாள், ‘அப்படித்தான் நீங்களே முடிவு பண்ணிக்கறீங்க, எங்க ஆளுகளுக்கு பொண்ணுங்க கூட சேர்ந்து வேலை பாக்குற குடுப்பன இல்ல, அதனால அவங்க பொண்ணுங்க கிட்ட பேச கொஞ்சம் தயங்குவாங்க, அதுக்காக இந்த பீல்டுல பொண்ணுங்க இல்லாததற்கு காரணம் மிசோஜினிசம்தான், பசங்க பொண்ணுங்கள மதிக்கறதில்லன்னு சொல்றது டூமச்! எந்த பொண்ணு +2 ல புரிஞ்சி படிச்சி அதிகம் மார்க் வாங்குதுங்க, முக்கால்வாசி எக்ஸாம் ஹால்ல படிச்சத வாந்தி எடுக்குறவலுங்கதானே. அதுமாதிரி இருக்குறவங்களுக்கு யுனிக்ஸ் முதல்ல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். அதனாலத்தான் பொண்ணுங்க யுனிக்ஸ் பக்கம் அதிகம் வர்றதில்ல, இது பொண்ணுங்களுக்கு மட்டும் இல்ல மக்கப் அடிச்சு மார்க் வாங்குற பசங்களுக்கும் யுனிக்ஸ புரிஞ்சிக்க டைம் ஆகும்’ என்று கூறினான். ‘நீங்க சொல்றது முழு உண்மையில்ல, ப்ரூப் கொடுத்தாலும் உங்கள நீங்க மாத்திக்க போறதில்ல, உங்ககிட்ட எதுக்கு வீணா பேசிக்கிட்டு’ என்றாள் கார்த்திகா, ‘உண்மைய சொன்னா கசக்கத்தான் செய்யும்’ என்றான் மதன்.

‘பைதவே, நான் ஒன்னும் feminist இல்ல’ என்றாள் கார்த்திகா. ‘தெரியுங்க, feminist டா இருந்திருந்தா நான் பேசுனதுக்கு இன்னேரத்துக்கு எச்ஆர் கிட்ட என் மேல ஹராஸ்மண்ட் கம்ப்லைன்ட் போயிருக்கும், எச்ஆரும் ரெண்டு பேரையும் கூப்டு பேசி என் மேல எந்த தப்பும் இல்லைன்னு சொல்லி அனுப்புவாங்க, ஆனா நீங்க அத ஏத்துக்காம சோசியல் மீடியாவுல போடுவீங்க, அங்க உங்களுக்குன்னே சொம்பு தூக்குற கும்பல் ஒன்னு ஐய்யய்யோ ஓடியாங்க சிங்கப்பெண்ணுக்கு அநியாயாம் நடந்திருக்கு இத கேட்க யாருமே இல்லையான்னு கதறுவாங்க, நியூஸ் மீடியாக்களும் கம்பனிய கிழி கிழின்னு கிழிப்பாங்க, நம்ப கம்பனி மொதலாளி தப்பே செய்யலன்னாலும் என்ன வேலைய விட்டு தூக்குவான். இதெல்லாம் நடக்க தொடங்கி இருக்கும்’ என்றான் மதன். ‘அலோ, இப்ப ஏன் டென்ஷன் ஆகுறீங்க, எதுக்கு உங்களுக்கு feminist னா அவ்வலவு கோபம்?’ கார்த்திகா கேட்க, ‘எனக்கு feminist ங்க மேல கோபம் இல்லைங்க, fake feminist ங்க மேலத்தான் கோபம், இப்ப நான் சொன்னனே, அது உண்மையிலேயே நடந்துச்சு, என்னோட பழைய கம்பனில இருந்த என் மேனேஜர், அவர மாதிரி ஒரு நேர்மையானவர நான் பார்த்ததில்ல, அதனாலேயே அவர கட்டம் கட்டி ஒரு பொண்ண வெச்சு தூக்குனாங்க, இந்த IT ப்பீல்டே வேனாம்னு அவரோட கிராமத்துக்கு போய் விவசாயம் பார்க்க ஆரம்பிச்சிட்டாரு. அந்த பொம்பல ப்ரமோஷன் வாங்கிட்டு இன்னொருத்தன் குடிய கெடுத்துக்கிட்டு இருந்தது. ப்ராஜக்ட்ல அவர ரோல் மாடலா பார்த்த எல்லோரும் அந்த கம்பனிய விட்டு வெளிய போகனும்னு முடிவு பண்ணி அந்த கம்பனிய விட்டு வெளிய வந்தோம்’ மதன் கூற ‘ஐம் சாரி’ கார்த்திகா கூற ‘இட்ஸ் ஓகே, பொண்ணுங்களுக்கு இந்த சமூகத்துல எவ்வலவோ பிரச்சனைங்க இருக்கு, நான் இல்லைன்னு சொல்லல, அதுக்காக ஒரு ஆண அசிங்கப்படுத்தி கேவலப்படுத்தி அவன் வாழ்க்கைய சீரழிச்சுத்தான் பெண் விடுதலைக்கு போராடனும்னு ஏதாவது ஏழுதி வச்சிருக்கா?’. ‘நீங்க உங்க மேனேஜர் மேல வெச்சிருக்குற மதிப்பால பாயாஸ்டா பேசுரீங்க, உங்க மேனேஜர் உண்மையிலேயே தப்பு செஞ்சிருப்பாரு, அதனாலத்தான் கம்பனி வெளிய அனுப்பி இருக்கும்’ கார்த்திகா கூற ‘டிபிக்கல் femimist மைண்ட், அப்படித்தான் யோசிக்கும், என் மேனேஜரோட பாஸ் அவர் கிட்ட வந்து உன் மேல எந்த தப்பும் இல்ல, இருந்தாலும் வெளிய கம்பனி ரெப்யூட்டேஷன் போகுது அதனால நீயே ரிசைன் பண்ணிடுன்னு கால்ல விழுந்தானாம், போய் தொலைங்கடான்னு ரிசைன் பண்ணிட்டு பொண்டாட்டி புள்ளைங்களோட அவரோட கிராமத்துக்கு போனார், இதுக்கு மேலயும் அவர் தப்பு பண்ணலைன்னு ப்ரூவ் பண்ணனுமா?’ மதன் கேட்க ‘சரிங்க misogynist, இன்னைக்கு இந்த சண்டை போதும். லேட் ஆகுது நான் கிளம்புறேன்’, என்றாள், ‘சரிங்க feminist, அடுத்து எப்போ?’, என்றான். ‘வழக்கம் போலத்தான், நானே வரேன், மோகினி பிசாசுங்கள கேட்டதா சொல்லுங்க’ என்று சொல்லிவிட்டு சொன்றாள் கார்த்திகா.

‘மவனே, இவள கல்யாணம் பண்ண, செத்தடீ’ மதனின் மனசாட்சி எச்சரித்தது, ‘எவ்வளவு தைரியமா பேசுரா, பாராட்டுடா’ மதன் தன் மனசாட்சியை நினைந்து கூறினான்.

தொடரும்..

நக்கீரன்.ந [n.keeran.kpm at gmail dot com]

%d bloggers like this: