துருவங்கள் – அத்தியாயம் 6 – யூனிவர்சின் நிறம்

யூனிவர்சின் நிறம்

‘டேய் நாயே, எழுந்திரிடா, சாப்பிட போகலாம், பசிக்குது’ மதன் சுரேஷை எழுப்ப ‘சண்டேடா, மதியம் வரைக்கும் தூங்கலன்னா சண்டேக்கு மரியாதையே இல்லடா’ சுரேஷ் புலம்ப ‘நைட்டெல்லாம் வாட்சப்ல மொக்க போடுறது, டே டைம்ல தூங்குறது’ மதன் கூற ‘லவ் பண்றவங்க இது கூட பண்ணலன்னா அப்றம் அந்த லவ்வுக்கு அர்த்தம் இல்லடா, அதெல்லாம் உன்ன மாதிரி சாமியாருக்கு புரியாது’ சுரேஷ் கூற ‘நான் சாமியாரவே இருந்துட்டு போறேன், சாப்டவா போலாம், இப்பவே மதியம் ரெண்டு மணி, ஆந்ரா மெஸ் மூடிட போராங்க’ மதன் கூறிவிட்டு தன் பைக் நோக்கி நடந்தான். ‘டேய் இரு வறேன்’ சுரேஷும் மதன் கூடவே சென்றான்.

இருவரும் ஆந்திரா மெஸ்ஸில் சாப்பிட தொடங்கினர் ‘அப்புறம் மாப்பிள, நேத்து நைட் எதுக்கு தேங்ஸ் சொன்ன’ சுரேஷ் கேட்க ‘அது, சும்மா, சொல்லனும்னு தோனுச்சு, சொன்னேன்’ மதன் எதையோ மறைக்க ‘நானே ஒரு டாகாட்டி, எனக்கே டகால்டியா?’ சுரேஷ் மிரட்ட மதன் எதுவும் பேசாமல் சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு தொடர்ந்தான் ‘கார்த்திகா நேத்து மீட்டிங் வந்திருந்தாங்க’ மதன் கூறியவுடன் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த சுரேஷுக்கு புரை ஏற இருந்தது, எப்படியோ அதை சமாளித்து விட்டு பேச ஆரம்பித்தான் ‘நேத்து அந்த பொண்ணு உன்ன பத்தி விசாரிக்கும்போதே தோனுச்சு, அப்ப நைட் தேங்ஸ் சொன்னதுக்கும் அவங்கதான் காரணமா, ஏதோ சொன்ன இன்னொருத்தன அழ வச்சு நான் சந்தோஷப்பட மாட்டேன்னு, இப்ப என்ன?’ சுரேஷ் கோபமாக கேட்க ‘அந்த பொண்ணும் சிங்கிள் தாண்டா பசங்கல அவாய்ட் பண்றதுக்காக சும்மா பாய்ப்ரண்ட் இருக்கான்னு சொல்லியிருக்காங்க, அதுவும் இல்லாம அவங்க கூட நேத்து ஈவினிங் முழுக்க ஸ்பென்ட் பண்ணியிருக்கேன், அவங்கலோட மோபைல ஹன்ட்பேக்ல இருந்து ஒரே ஒரு டைம்தான் எடுத்தாங்க, அவங்க ரும்மெட் கிட்ட சாப்பாடு வங்கறத பத்தி பேசினாங்க, நீதான் லவ்ல எக்ஸ்பர்ட் ஆச்சே, அந்த பொண்ணுக்கு லவ்வர் இருக்கான்னே வச்சிப்போம், ஐஞ்சு மணிநேரமா ஒரு மெசேஜ் கூடவா அனுப்பாம இருப்பான்? அதுவும் சார்டடே ஈவினிங்? இதெல்லாம் விட்ரா, லவ் பண்றாங்க லவ் பண்றத விட்டுட்டு எதுக்கு லினக்ஸ் மீட்டிங் எல்லாம் வரனும்? சொல்ரா?’ மதனும் கோபத்துடன் கேள்வி கேட்க ‘கடைசியா ஒன்னு சொன்ன பாரு, ஹன்றட் பர்சென்ட் பேக்டு, லவ்வர் கூட ஊர் ஊரா சுத்தவே நேரம் சரியா இருக்கு, இதுல எங்கிருந்து லினக்ஸ் பக்கம் ஒதுங்குறது’ சுரேஷ் புலம்ப ‘சொந்தக் கதையா? நேத்து என்ன அதே ஈசியார், அதே மாயாஜல் ஈவினிங் ஷோவா?’ மதன் கேட்க ‘என் கதைய விட்ரா, ஃபர்ஸ்ட் டைம் டேட்டிங் போயிருக்க, கிப்ட் ஏதாவது வாங்கி கொடுத்தியா?’ சுரேஷ் கேட்க ‘இதுக்கு பேர்தான் டேட்டிங்காடா?’ மதன் கூற ‘வய்ல பீடிங் பாட்டில் வெக்கிறேன் குடிக்கிறியா?’ சுரேஷ் கடுப்பாக ‘ஜஸ்ட் ஒன் அவர் தான்டா பிரைவேட்டா பேசியிருப்போம் மத்தபடி மீட்டிங்ல தான் இருந்தோம்’ மதன் கூற ‘நெக்ஸ்ட் டைம் இது மாதிரி மீட் பண்ணும் போது கிப்ட் ஏதாவது வாங்கி கொடுடா லேட்டர் உதவும்’ சுரேஷின் அனுபவம் பேசியது ‘அட்வைஸ்?, கேட்டு தொலையிறேன், வா போலாம்’ மதனும் சுரேஷும் பைக்கில் அமர்ந்து ரூமை நோக்கி புறப்பட்டனர்.

‘டைம் என்னடி,’ கார்த்திகா கேட்க ‘ஏன் ஸ்டொமக்ல பெல் அடிக்குதா?’ கயல் தன் துணிகளை பால்கனியில் ஆற வைத்த வாரே கார்த்திகாவை கேட்க ‘கடுப்பேத்தாத சொல்லுடி’ கார்த்திகா கூற ‘யாரு நான் கடுப்பேத்துறனா?, எத்தன தடவ ஏழுப்புறேன் எந்திரிக்கவே மாட்டேங்கற, நைட்டெல்லாம் அந்த லேப்டாப்ல என்னடி பண்ணிட்டு இருந்த? எப்ப துங்குன, மதியம் மூணு மணிக்கு எந்திரிக்கிற, இப்படி நீ நைட்டெல்லாம் தூங்காம இருந்தது இப்பத்தான்டி பர்ஸ் டைம்’ கயல் கேட்க ‘அதுவா, அது, சொன்னா உனக்கு புரியாது’ கார்த்திகா மழுப்ப ‘அந்த பையன் கூட சேர்த்ததுல இருந்து ஒரு மார்கமாவே இருக்க, நேத்து நைட் வேற பாட்டெல்லாம் பாடிக்கிட்டு வர, என்ன செட்டாயிருச்சா?’ கயல் கேட்க ‘அப்படி எல்லாம் இல்லடி, வி ஆர் ஜஸ்ட் குட் பிரண்ஸ்’ கார்த்திகா வெட்கத்துடன் கூற ‘நேத்து பிரண்டு, இன்னைக்கு குட் பிரண்டு, நாளைக்கு பாய்பிரண்டு, அப்புறம் அஸ்பண்டு’ கயல் கிண்டலடிக்க ‘பஞ்ச் டயலாக் கேட்குற முட்ல இல்லடி, சாப்பிட போலம் பசிக்குது’ கார்த்திகா கூற ‘டேபிள்ள பீசா இருக்கு, போ’ கயல் கூற ‘எப்படி ஆர்டர் பண்ண, நீ சாப்டியா?’ கார்த்திகா கேட்க ‘என்னோட கோட்டா அப்பவே முடிஞ்சது’ கயல் கூற இருவரும் டைனிங் டேபிளுக்கு வந்தனர். ‘நேத்து என்னடி அப்படி இருந்த?’ கயல் கேட்க ‘என்னடி சொல்ற, நேத்து நான் வேற லெவல்ல இருந்ததா சொல்லிட்டிருந்தானேடி,’ கார்த்திகா பதர ‘அவனுக்கு ட்ரஸ்சிங் சொன்செல்லாம் கூட இருக்கா, நேத்து அந்த ட்ரெஸ்ல செமையா இருந்த’ கயல் கூற ‘தேங்ஸ்’ கார்த்திகா கூறிவிட்டு தன் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு துவைக்க ஆரம்பித்தாள்.

மறுநாள் மதன் வழக்கத்திற்கு மாராக சிறிது சீக்கிரமே ஆபிஸ்க்கு வந்து தன் வேலைகளில் மூழ்கியிருந்தான், அப்போது கார்த்திகா தன் லேப்டாப்புடன் வந்து ‘ஹய்’ கூற ‘வாங்க, என்ன ஏதோ அவசரமா வந்திருக்கீங்க’ மதன் கேட்க ‘அதெல்லாம் ஒன்னும் இல்ல, லாஸ்ட் டைம் பைல் சிஸ்டத்த பத்தி சொல்லும்போது mount, cd, ls, chmod பத்தி சொன்னீங்கல்ல, இந்த கமாண்ட்களோட மேனுவல் பேஜ் படிச்சு யூஸ் பண்ணி பாத்தேன், அது மட்டும் இல்லாம கூகுள் பண்ணும்போது pwd, mkdir, rmdir, cp, mv, touch, stat, rm, chown, dh, du, find கமாண்ட்களும் இம்பார்டன்ட்னு சொல்லுச்சு. அதுங்களோட மேனுவல் பேஜ் படிச்சேன், எனக்கு புரிஞ்சது சொல்றேன் கரைக்கடான்னு சொல்லுங்க’ கார்த்திகா கூற மதனும் தலை அசைத்தான்.

‘பர்ஸ்ட் ஒரு டேர்மினல் ஓப்பன் பண்ணா முதல்ல நாம பாக்குறது கமாண்ட் ப்ராம்ப்ட், உதாரணத்துக்கு

[karthika@karthikalaptop0 ~] $

போல இருக்கும், @ சிம்பலுக்கு முன்னாடி இருக்கிறது இப்ப லாகின் ஆகி இருக்கும் யூசரோட யூசர் நேம், @ சிம்பலுக்கு அடுத்து இருக்குறது இப்ப யூஸ் பண்ணிட்டு இருக்குற கம்ப்யூட்டரோட நேம். ஸ்பேஸ் கேரக்டருக்கு அடுத்து இருக்கும் ~ சிம்பல் டெர்மினலோட கரண்ட் போஸ்டர் ஓம் போல்டர்னு குறிப்பிடுது, அதாவது /home/karthika போல்டரை குறிக்குது’ கார்த்திகா விலக்கினாள். ‘கரெக்ட், அதுமட்டுமில்லாம யுனிக்ஸ்ல ஒவ்வொரு ப்ராசஸ் சுக்கும் கரண்ட் போல்டர்னு ஒன்னு இருக்கு, டெர்மினலும் ஒரு ப்ராசஸ், ஆரமிபிக்குறப்போ அதோட கரண்ட் போல்டர் கரண்ட் யூசரோட ஓம் போட்டருக்கு செட் பண்ணிக்கும்.’ மதன் மேலும் விலக்கினான்.

‘அடுத்து pwd, இது பைல் சிஸ்டத்துல நாம இப்ப எந்த போல்டரில் இருக்கோம்னு சொல்லும். அந்த போல்டரோட முழு பாத் (full path) செல்லும். கரக்டா?’ கார்த்திகா கேட்க ‘இத இன்னொரு விதமாகவும் செல்லலாம், pwd கமாண்ட், டெர்மினல் ப்ராசஸ்சோட கரண்ட் போல்டரோட முழு பாத்தையும் காட்டும்’ மதன் வேறொரு விதமாக கூறினான்.

$ pwd
/home/karthika
$

‘அடுத்து cd, இது ஒரு போல்டரில் இருந்து இன்னொரு போல்டருக்கு மாற உதவும்’ கார்த்திகா கூற ‘இப்படியும் சொல்லலாம், டெர்மினல் ப்ராசஸ் சோட கரண்ட் போல்டர சேஞ்ச் பண்ண யூஸ் பண்ற கமாண்டு அப்படின்னும் சொல்லலாம்’ மதன் விலக்க ‘என்ன குழப்பாதீங்க, சிம்பிளா சொல்லனும்னா, cd /home/karthika/Downloads கமாண்ட் Downloads போல்டருக்குல்ல போக உதவும்’ கார்த்திகா கூற ‘அதைத்தான் நானும் சொல்றேன், cd /home/karthika/Downloads கமாண்ட், கரண்ட் டெர்மினல் ப்ராசஸ்சோட கரண்ட் போல்டரை /home/karthika/Downloads போல்டருக்கு மாத்தும்’ மதன் கூறிவிட்டு புன்னகைத்தான். கார்த்திகா ஏன் மதன் ஒவ்வொருமுறையும் ப்ராஸஸ் பற்றி குறிப்பிட்டு அதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றான் என்று புறியாதவலைப்போல் யோசித்தவாறே இருந்தாள்.

‘அது மட்டும் இல்லைங்க யுனிக்ஸ்ல ஒரு பைல் அல்லது போட்டரோட இடத்த இரண்டு வகையா குறிப்பிடலாம், ஒன்னு அப்சல்யூட் பாத் (absolute path), ஆடுத்தது ரிலேட்டிவ் பாத் (relative path), உங்க ஹோம் போல்டரில் இருக்குற Downloads போல்டருக்கு போகனும்னா cd /home/karthika/Downloads அப்படின்னு கொடுக்கலாம், இல்லாட்டி உங்க ஹோம் போல்டரில் இருந்துகிட்டு வெறும் cd Downloads அப்படின்னு கெடுக்கலாம். வெறும் Downloads அப்படின்னு குறிப்பிடுவதற்கு பேரு ரிலேட்டிவ் பாத், /home/karthika/Downloads அப்படின்னு குறிப்பிடுவது அப்சல்யூட் பாத். ரிலேட்டிவ் பாத் கொடுக்கும்போது ஆட்டோமேட்டிக்கா cd கமாண்ட் கரண்ட் போல்டர கணக்குல எடுத்துக்கும். இன்னும் சிம்பிளா cd ~/Downloads கமாண்டும் Downloads போல்டருக்குள்ள போக உதவும், இங்க ~ சிம்பிள் உங்க ஹோம் போல்டரை குறிக்குது, அதனால இங்க நீங்க யூஸ் பண்றது ரிலேட்டிவ் பாத் இல்ல, அப்சல்யூட் பாத்.’ மதன் விலக்கினான்.

$ cd /home/karthika/Downloads
$ pwd
/home/karthika/Downloads
$ cd ~
$ pwd
/home/karthika
$ cd Downloads
$ pwd
/home/karthika/Downloads
$ cd
$ pwd
/home/karthika
$ cd ~/Downloads
$ pwd
/home/karthika/Downloads
$ cd
$

‘cd கமாண்டோட இன்னொரு விஷயம், நீங்க எந்த போல்டருக்குல்ல இருந்தாலும் வெறும் cd டைப் பண்ணிட்டு என்டர் அழுத்தினீங்கன்னா உடனே நீங்க உங்க ஓம் போல்டரில் இருப்பீங்க, அதேபோல் மறுபடியும் லாஸ்டா இருந்த போல்டருக்கு போகனும்னா cd – கமாண்ட் கொடுத்தா போதும், ஆட்டோமேட்டிக்கா நீங்க லாஸ்டா இருந்த போல்டருக்கு மாறிடுவீங்க’ மதன் கூற ‘இன்ட்ரஸ்டிங், cd கமாண்ட்ல இவ்வளவு இருக்கா?’ கார்த்திகா வியந்தாள்.

$ pwd
/home/karthika/Downloads
$ cd
$ pwd
/home/karthika
$ cd -
$ pwd
/home/karthika/Downloads
$ cd
$ pwd
/home/karthika
$

‘அடுத்து ls, இந்த கமாண்ட டெர்மினல் ஓப்பன் பண்ணிட்டு ஒரு முறையாவது யூஸ் பண்ணாம இருக்க மாட்டீங்க. வெறும் ls கமாண்ட் கரண்ட் போல்டரில் இருக்கும் பைல் மற்றும் போல்டர்களை லிஸ்ட் பண்ணும். அதுவே ls -R கமாண்ட், உள்ளுக்குள்ள எத்தன போஸ்டர் இருந்தாலும் அத்தனை போல்டரில் இருக்கும் பைல் மற்றும் போல்டர்களையும் லிஸ்ட் பண்ணும். அப்புறம் ls -l கமாண்ட் டீட்டேயில்டு லிஸ்ட் பண்ணும், இந்த ls கமாண்டுக்கு ஒரு போல்டரோட பாத் கொடுத்தா, அது கரண்ட் போட்லர விட்டுட்டு கொடுத்த போல்டரில் இருக்கும் பைல் மற்றும் போல்டர்களை லிஸ்ட் பண்ணும். உதாரணத்துக்கு ls -l ~/Downloads கமாண்ட் கரண்ட் போல்டரை விட்டுட்டு, ஹோம் போல்டரில், அதாவது /home/karthika போல்டருக்குல்ல இருக்குற Downloads போல்டர லிஸ்ட் பண்ணும்.’ கார்த்திகா விலக்கினாள். ‘கரெக்ட், அது மட்டும் இல்லாம -l ஆப்ஷன் கொடுக்கும் போது அவுட்புட்ல ஒவ்வொரு லைனில் முதல்ல இருக்கிற பத்து கேரக்டர்கள் தான் அந்த என்றிக்கு சொந்தமான பைல் அல்லது போல்டருக்கான பர்மிஷன் பிட்ஸ், இத நான் முன்னாடியே உங்ககிட்ட சொல்லியிருக்கேன்’ மதன் கூற ‘நியாபகம் இருக்கு’ கார்த்திகாவும் தலையசைத்தாள்.

$ ls
Videos Documents Downloads
$ ls -R
Videos Documents Downloads
./Downloads:
test.txt
$ ls -l
drwxr-xr-x 2 karthika karthika 6 Sep 23 09:38 Videos
drwxr-xr-x 3 karthika karthika 21 Jul 10 12:06 Documents
drwxr-xr-x 3 karthika karthika 21 Jul 10 12:06 Downloads
$ ls -l Downloads
-rw-r--r-- 1 karthika karthika 11 Jul 17 01:25 test.txt
$

‘அடுத்து mkdir, இது மூலமா ஒரு போல்டர் கிரியேட் பண்ணலாம். அது மட்டும் இல்லாம mkdir -p one/two/three கமாண்ட் மூனு போல்டர்களை ஒன்னுக்குள்ள ஒன்னா கிரியேட் பண்ணும். கரக்டா?’ கார்த்திகா கேட்க மதனும் ஆமாம் என்று தலை அசைத்தான்.

$ mkdir -p one/two/three
$ ls -R one
one:
two

one/two:
three

one/two/three:
$

‘அடுத்து rmdir, இது ஒரு போல்டர் ரிமூவ் பண்ண யூஸ் பண்றது. அது மட்டும் இல்லாம rmdir -p one/two/three கமாண்ட் முதல்ல three போல்டரை டெலிட் பண்ணும் அப்புறம் two போல்டரை டெலிட் பண்ணும் கடைசியா one போல்டரை டெலிட் பண்ணும். முக்கியமா rmdir கமாண்ட் போல்டருக்குள்ள ஏதாவது கன்டென்ட் இருந்தா அந்த போல்டரை டெலிட் பண்ணாது’ கார்த்திகா கூற ‘க்ரேட்’ மதன் பாராட்டினான்.

$ rmdir -p one/two/three
$ ls -R one
ls: cannot access 'one': No such file or directory
$

‘அடுத்து cp, இது ஒரு பைல் அல்லது போல்டர காப்பி பண்ண உதவுது. பார் எக்ஸாம்பிள்

$ cp /etc/fstab /home/karthika/fstab
$

கமாண்ட் /etc க்குள்ள இருக்குற fstab பைல என்னோட /home/karthika போல்டருக்கு காப்பி செய்யும் அது மட்டும் இல்லாம

$ cp -r /etc /home/karthika/etc
$

கமாண்ட் /etc போல்டர் மட்டும் இல்லாம அதுக்குள்ள இருக்கிற அத்தனை பைல் மற்றும் போல்டர்களையும் /home/karthika போல்டருக்குள்ள காப்பி செய்யும்’ கார்த்திகா கூற மதன் கரெக்ட் என தலை அசைத்தான்.

‘அடுத்து mv, இது ஒரு பைல் அல்லது போல்டரோட நேம் சேஞ்ச் அல்லது வேற ஒரு போல்டருக்கு மூவ் பண்ண யூஸ் பண்ற கமாண்ட். பார் எக்ஸாம்பிள்,

$ mv /home/karthika/one.txt /home/karthika/two.txt
$

கமாண்ட் என்னோட ஓம் போல்டரில் இருக்குற one.txt பைல் நேமை two.txt அப்படின்னு மாத்திடும், அதே

$ mv /home/karthika/two.txt /home/karthika/Downloads/
$

கமாண்ட் நேம் சேஞ்ச் பண்ண two.txt பைல என்னோட ஹோம் போல்டரில் இருக்குற Downloads போல்டருக்கு மூவ் பண்ணிடும்’ கார்த்திகா கூற மதன் கார்த்திகாவை வியப்புடன் பார்த்து ஆமாம் என்று தலை அசைத்தான்.

‘அடுத்து touch, இது ஒரு பைல் அல்லது போல்டரோட லாஸ்ட் ஆக்ஸஸ் டைம், லாஸ்ட் மோடிபைட் டைம் சேஞ்ச் பண்ண உதவும்.

$ touch -d 1900-01-01 /home/karthika/emptyfile.txt
$

கமாண்ட் என்னோட ஓம் போல்டரில் emptyfile.txt பைல் ஆல்ரெடி இருந்தா அதோட லாஸ்ட் ஆக்ஸஸ் டைம் அண்ட் லாஸ்ட் மோடிபைட் டைம 1900-01-01 டேட்கு மாத்திடும், பைல் ஆல்ரெடி இல்லைன்னா கிரியேட் பண்ணிட்டு அப்புறமா டைம்ஸ்டாம்புகல மாத்திடும்’ கார்த்திகா கூற மதனும் ‘கரெக்ட்’ என்று கூறி தலை அசைத்தான்.

‘அடுத்து stat, இந்த கமாண்ட் ஒரு பைல் அல்லது போல்டரோட டீட்டெயில்ஸ் பாக்க யூஸ் பண்ணலாம்.

$ stat /home/karthika
  File: /home/karthika
  Size: 4096 Blocks: 8 IO Block: 4096 directory
Device: 254,0 Inode: 269123004 Links: 21
Access: (0710/drwx--x---) Uid: ( 1000/ karthika) Gid: ( 1000/ karthika)
Access: 2021-11-05 04:48:07.031256486 +0530
Modify: 2021-11-05 18:18:12.595115460 +0530
Change: 2021-11-05 18:18:12.595115460 +0530
 Birth: 2021-09-23 09:06:54.099246949 +0530
$

கமாண்ட் என்னோட ஹோம் போல்டரோட சைஸ், செக்யூரிட்டி பிட்ஸ், கடைசியாக ஆக்சிஸ் பண்ண டைம், கடைசியாக சேஞ்ச் ஆன டைம், லாஸ்ட் கிரியேஷன் டைம், ஓனர் யார், எந்த எந்த குரூப் ஆக்ஸஸ் பண்ணலாம் போன்ற நிறைய டீடெயில்ஸ் பாக்கலாம்’ கார்த்திகா கூற மதன் ஆமாம் என்று தலை அசைத்தான்.

‘அடுத்து rm, வெரி டேஞ்சரஸ் கமாண்ட், ஒரு பைல் அல்லது போல்டர ரிமூவ் பண்ண யூஸ் பண்ற கமாண்ட்.

$ rm /home/karthika/emptyfile.txt
$

கமாண்ட் என்னோட ஹோம் போல்டர்ல இருக்கும் emptyfile.txt பைல தூக்கிடும்.

$ rm -fr /home/karthika
$

கமாண்ட் கேல்வியே கேட்காம என்னோட ஹோம் போல்டரையே தூக்கிடும்’ கார்த்திகா கூற ‘முக்கியமா

$ rm -fr /
$

கமாண்ட் பாரபட்சம் பாக்காம என்டையர் பைல் சிஸ்டத்தையே தூக்கிடும்’ மதன் கூற ‘இல்லையே rm மேன் பேஜ்ல –no-preserve-root அப்ஷன கொடுத்தாத்தான் ரூட் போல்டரை தூக்கும் இல்லனா ரூட் போல்டரை தூக்காதுன்னு போட்டிருக்கே?’ கார்த்திகா கூற ‘மேன் பேஜ் படிச்சிருக்கீங்களா இல்லையான்னு டெஸ்ட் பண்ணேன்’ என்று கூறி மதன் சமாளித்தான்.

‘அடுத்து chmod, இது நீங்க ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரு பைல் அல்லது போல்டரோட பர்மிஷன் பிட்கல மாத்த உதவும். பார் எக்ஸாம்பிள்

$ chmod u+rwx,g+rx,o+rx /home/karthika/emptyfile.txt
$

கமாண்ட், emptyfile.txt பைலோட யூசர் (u) பர்மிஷன படிக்க (r), எழுத (w) மற்றும் செயல்படுத்த (x) அனுமதிக்கும் (+), அப்புறம் emptyfile.txt பைலோட குரூப் பர்மிஷன படிக்க (r) மற்றும் செயல்படுத்த (x) அனுமதிக்கும் (+), அதே போல மற்றவர்களுக்கு (o) படிக்க (r) மற்றும் செயல்படுத்த (x) அனுமதிக்கும். இங்க (+) சிம்பலுக்கு பதில் (-) சிம்பல் போட்டா அனுமதி மறுக்கப்படும். இப்படி ugo+-rwx கேரக்டர்ஸ் பயன்படுத்துவதற்கு பதிலா அதே பர்மிஷன் கல

$ chmod 755 /home/karthika/emptyfile.txt
$

கமாண்ட் யூஸ் பண்ணியும் செட் பண்ணலாம், இங்க முதல்ல இருக்கிற 7, யூசர் பர்மிஷன் பிட் செட் பண்ணும், 7=4+2+1, அதாவது படிக்க (4), எழுத (2) மற்றும் செயல்படுத்த (1) அனுமதிக்கும், அடுத்து இருக்கும் 5, குரூப் பர்மிஷன் பிட் செட் பண்ணும், 5=4+1, அதாவது படிக்க (r) மற்றும் செயல்படுத்த (x) மட்டும் அனுமதி அளிக்கும். அடுத்து இருக்கும் 5, அதர்ஸ் பர்மிஷன் செட் பண்ணும். கரைக்டா?’ கார்த்திகா கேட்க ‘அமேசிங், சூப்பரா எக்ஸ்ப்லெயின் பண்றீங்க, சீக்கிரம் ilugc ல கிளாஸ் எடுங்க’ மதன் பாராட்டினான்.

‘அடுத்து chown, இது ஒரு பைல் அல்லது போல்டரோட ஓனர் அண்டு குரூப் சேஞ்ச் பண்ண யூஸ் பண்றது, பார் எக்ஸாம்பிள்

$ chown karthika:karthika /tmp/rootfile.txt
$

கமாண்ட் /tmp/rootfile.txt பைலோட ஓனர் karthika அன்ட் குரூப் karthika அப்படின்னு மாத்திடும். கரெக்டா?’ கார்த்திகா கேட்க ‘கரெக்ட், அது மட்டும் இல்லாம

$ chmod -R karthika:karthika /home/karthika
$

கமாண்ட் /home/karthika போல்டர் மட்டும் இல்லாம அதுக்கு உள்ள இருக்குற எல்லா பைல் அண்ட் போல்டரோட யூசர் மற்றும் குருப்ப karthika யூசருக்கும் karthika குரூப்பிற்கும் மாத்திடும்’ மதன் விலக்கி சொன்னான்.

‘அடுத்து dh, இந்த கமாண்ட் பைல் சிஸ்டத்தோட மேப் ஆயிருக்குற ஒவ்வொரு பார்டிஷனோட யூசேஜ் செல்லும்’ கார்த்திகா கூற ‘முக்கியமா df -h கமாண்ட் பார்டிஷனோட சைஸ் கிகாபைட்(G)/மொகாபைட்(M)/கிலோபைட்(K) கணக்கில் காட்டும்’ என்று மதன் விளக்கினான்.

$ df -h
Filesystem Size Used Avail Use% Mounted on
dev 3.9G 0 3.9G 0% /dev
run 3.9G 1.4M 3.9G 1% /run
/dev/sda2 239G 171G 68G 72% /
tmpfs 3.9G 728K 3.9G 1% /dev/shm
tmpfs 3.9G 16K 3.9G 1% /tmp
/dev/sda1 250M 73M 178M 30% /boot
tmpfs 784M 88K 784M 1% /run/user/1000
$

‘அடுத்து du, இந்த கமாண்ட் கரண்ட் போல்டரில் இருக்கும் ஒவ்வொரு பைல்லோட சைஸ் காட்டும், அது மட்டும் இல்லாம

$ du -sh .
637M .
$

கரண்ட் போல்டரோட சைஸ் காட்டும்’ கார்த்திகா கூற மதன் ஆமாம் என்று தலை அசைத்தான்.

‘அடுத்து mount கமாண்ட், இது சிஸ்டத்துல எந்தெந்த டிவைஸ் எந்தெந்த போல்டர்ல மேப் ஆகி இருக்குன்னு காட்டும்’ கார்த்திகா கூறினாள்.

$ mount
proc on /proc type proc (rw,relatime)
sysfs on /sys type sysfs (rw,relatime)
dev on /dev type devtmpfs (rw,relatime,size=500092k,nr_inodes=125023,mode=755)
/dev/sda1 on / type ext4 (rw,relatime)
tmpfs on /rwroot type tmpfs (rw,relatime,size=10088960k)
tmpfs on /dev/shm type tmpfs (rw,nosuid,nodev)
devpts on /dev/pts type devpts (rw,nosuid,noexec,relatime,gid=5,mode=620,ptmxmode=000)
tmpfs on /run type tmpfs (rw,nosuid,nodev,mode=755)
tmpfs on /sys/fs/cgroup type tmpfs (ro,nosuid,nodev,noexec,mode=755)
cgroup on /sys/fs/cgroup/systemd type cgroup (rw,nosuid,nodev,noexec,relatime,xattr,name=systemd)
cgroup on /sys/fs/cgroup/net_cls,net_prio type cgroup (rw,nosuid,nodev,noexec,relatime,net_cls,net_prio)
tmpfs on /tmp type tmpfs (rw,nosuid,nodev)
$

‘லாஸ்டா find, இது கரண்ட் போல்டரில் இருக்கும் எல்லா பைல் அண்ட் போஸ்டர் நேம்கல காட்டும், அப்புறம் கரண்ட் போல்டருக்கு உள்ள இருக்குற ஒவ்வொரு எல்லோருக்குள்ளயும் போய் அதுக்குள்ள இருக்கிற பைல் அண்ட் போல்டர காட்டும் இப்படியே எல்லா பைல் நேம் அண்ட் போல்டர் நேம்கல காட்டும்’ கார்த்திகா கூற ‘அது மட்டும் இல்லைங்க, find வச்சி பல விஷயங்களை பண்ணலாம், உதாரணத்துக்கு

$ find . -mtime +730
/home/karthika/emptyfile.txt
$

கமாண்ட் உங்க கரண்ட் போல்டகுள்ள ஏதாவது ஒரு சப்போல்டர்குள்ள ஒரு பைல் அல்லது போல்டர் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி மாடிஃபை ஆகியிருந்தா அந்த பைல் அல்லது போல்டர் நேம் மட்டும் காட்டும். நாம touch கமாண்ட் வெச்சு emptyfile.txt பைல் மோடிபைட் டைம்ஸ்டாம்ப 1900-01-01 டேட்டுக்கு மாத்தினோம்ல, அத இந்த find கமாண்ட் தேடி கண்டுபிடிச்சு காட்டினும்’ மதன் விலக்கினான்.

‘இன்னும் கொஞ்ச நாள்ல எனக்கே வாத்தியாராம்மாவா வருவீங்க போல’ மதன் கூற ‘மிசோஜினிஸ்ட்’ கார்த்திகா கடுப்புடன் கூற ‘சும்மா சொன்னேன்’ மதன் கூற ‘பொழச்சு போங்க, மன்னிச்சிட்டேன், ஆமா உங்க டெஸ்க் பக்கத்துல ஒரு அண்ணா இருப்பாரே எங்க?’ கார்த்திகா கேட்க ‘உதய் அண்ணாவா, அவருக்கு ஈவினிங் ஸ்டேட்டஸ் கால் இருக்கு, ஈவினிங் ஆறு மணிக்கு தான் வருவாரு’ மதன் கூற ‘டீ’ கார்த்திகா கேட்க ‘லெட்ஸ் கோ’ மதனும் சம்மதித்து இருவரும் பேன்டிரிக்கு சென்றனர்.

‘சோ, மதனுக்கு மியூசிக் ரொம்ப பிடிக்குமோ?’ கார்த்திகா கேட்க ‘உங்களுக்கு பிடிக்காதா? விஜய் பிரகாஷ் எல்லாம் தெரிஞ்சிருக்கு?’ மதன் பதில் கேள்வி கேட்க ‘எனக்கும்தான், யார் பேவரெட் கம்போசர்?’ கார்த்திகா கேட்க ‘நீங்க சொல்லுங்க’ மதன் கேட்க ‘பர்டிகுலர் இல்ல, பட் ஏஆர்ஆர், ஹரிஸ், அனி இவங்க சாங்ஸ் மிஸ் பண்ண மாட்டேன். நீங்க?’ கார்த்திகா கூற ‘இசைஞானி அப்படின்னு ஒருத்தர் இருக்காரே அவர பிடிக்காதா?’ மதன் கேட்க ‘புடிக்காதுன்னு சொல்லமுடியாது, பட் ஐ லைக் ஏஆர்ஆர் மோர் தன் எனிவொன், அதுவும் இல்லாம நாம வலரும்போது இளையராஜா சாங்ஸ் அவ்வளவா வந்தது இல்லையே? நீங்க சொல்லுங்க, யார் பேவரெட் கம்போசர்?’ கார்த்திகா மடக்க ‘பெரிய லிஸ்டுங்க, போயிட்டே இருக்கும், எல்லா கம்போசர்ட இருந்தும் ஏதாவது ஒரு நல்ல மெலோடி அல்லது பெப்பியா ஒரு சாங் வரும் அந்த சாங்ஸ்தான் எனக்கு புடிச்சது’ மதன் சமாளிக்க ‘எனக்கென்னமோ அன்னைக்கு நைட் சாப்பிட்டு கெலம்பும் போது நீங்க போட்ட சிச்சுவேஷன் சாங்க வெச்சு பாத்தா என்ன மாதிரி ஏஆர்ஆர் ரசிகன் தான்னு தோணுது’ கார்த்திகா மதனை மீண்டும் மடக்க மதன் புன்னகைத்தான், ‘அப்படி வாங்க வழிக்கு, ஏஆர்ஆர் ரசிகன நான் ஈஸியா கண்டுபிடிச்சிடுவேன்’ கார்த்திகா கூற ‘நீங்க இளையராஜா ரசிகையா இருப்பீங்களோன்னு ஒரு முன்னெச்சரிக்கை தான்’ மதன் சிரித்தபடியே கூறினான்.

‘சரி இப்ப கலர், எந்த கலர் ரொம்ப பிடிக்கும்’ கார்த்திகா கேட்க ‘என்னங்க இன்டர்வியூல கேக்குற மாதிரி கேக்கறீங்க’ மதன் வியக்க ‘அப்படித்தான் வச்சுக்கோங்க, பதில் சொல்லுங்க’ கார்த்திகா மிரட்ட ‘பிளாக், பியூர் பிளாக்’ மதன் கூற ‘நெனச்சேன் இதத்தான் சொல்லுவீங்கன்னு, அது ஏன் எல்லா பசங்களும் ஒரே ஆன்சர் சொல்றீங்க, என்னோட கஸின்சும் எப்ப கேட்டாலும் இதே ஆன்ஸர்தான், எதுக்குடா புடிச்சிருக்குன்னு கேட்டா பிளாக்னாலே கெத்துதான்பானுங்க, அப்படி என்ன இருக்கு அந்த பிளாக்ல?’ கார்த்திகா கேட்க ‘ரொம்ப சிம்பிள், மத்த எந்த கலர் பாக்கனும்னாலும் உங்களுக்கு லைட் சோர்ஸ் தேவ, ஆனா பிளாக்கிற்கு தேவையில்லை, இந்த யூனிவர்சே பிளாக்குக்குள்ளதாங்க இருக்கு’ மதன் கூற கார்த்திகா தலையை ஒருபுறம் சாய்த்தபடி சிறிது முறைப்பும் புன்னகையும் கலந்து ‘பஞ்ச் டைலாக்கு?’ என்று கேட்க ‘இல்லைங்க, பேக்ட்’ மதனும் அசராமல் பதில் அளித்தான். ‘உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்னு சொல்லவே இல்லையே?’ மதன் கார்த்திகாவிடம் கேட்க ‘வைட், மில்கி வைட்’ கார்த்திகா கூற ‘லைட் சோர்ஸ்?’ மதன் கார்த்திகாவை பார்த்து கேட்க ‘லைட் சோர்சாவே இருந்தாலும் பிளாக்குக்கு உள்ளத்தானே இருக்கேன்’ கார்த்திகா சிரித்துக்கொண்டே தலை குனிந்தபடி தன் வாயில் டீ கோப்பையை வைத்துக்கொண்டு மதனின் ரியேக்‌ஷன் என்னவென்று புருவத்தை உயர்த்தி பார்த்தாள். மதனும் புன்னகையுடன் கார்த்திகா பார்ப்பதை பார்த்தான். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொள்ளவில்லை ஆனால் அவர்கள் கண்கள் பேசாமல் இருக்கவில்லை.

தொடரும்..

நக்கீரன்.ந [n.keeran.kpm at gmail dot com]

%d bloggers like this: