கல்வி, உள்கட்டுமானம் மற்றும் ஊடக சுதந்திரம் ஆகிய மூன்று பிரிவுகளை தான் சமுதாய முன்னேற்றம் சார்ந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில், சமூக வளர்ச்சி என்பது கல்வித்துறையில் அதிகப்படியான முதலீடுகள் செய்த பிறகே தோன்றியது. அதன் விளைவாக புதுமையான கல்வி முறை தோன்றி சமூகம் சார்ந்த ஆய்வுகள் மற்றும் மேம்பாடுகள் உருவாயின. அந்த புது கல்வி முறையில், ஹாவேர்ட் பல்கலைக்கழகம் (Harvard University) மற்றும் எம்.ஐ.டி.(MIT) போன்ற பல்கலைக்கழகங்கள், தேசிய அளவிலான் கட்டமைப்பை உருவாக்கின, அதன் மேல் தான் கல்வி கோட்பாடுகள் மற்றும் புது சிந்தனைகள் அமைக்கப் பட்டுள்ளன. அதற்கும் மேலாக, பல தொழில்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழக ஆராச்சி நிறுவனங்களையே மூலமாக கொண்டுள்ளன.
இது போன்ற ஒரு புரட்சி தான் (சிறு அளவானதாகவும், குறைந்த வேகமுடையதாகவும் இருந்தாலும்) இந்தியாவில் உருவெடுத்துள்ளது. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (Indian Insttitute of Technology) மாற்றும் இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸினஸ் (Indian School of Business) போன்ற கல்விக் குழுமங்கள் உலகத் தரம் வாய்ந்ததாக உள்ளன. அங்கு கல்வி பயின்ற மாணவர்களை உலகின் பல்வேறு நிறுவனங்களில், உலகளவில் உயர் பதவிகளில் காணலாம். இன்று இந்தியாவிலிருந்து தான் அதிக அளவிலான மென்போருள் தொழில்நுட்பங்கள் மற்றும் மென்பொருள் வல்லுனர்கள் ஏற்றுமதி ஆகின்றனர். ஆனால் இதன் பெரும்பாலான வெற்றி, இந்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு பயிற்சியில் அழுத்தம் கொடுக்கின்றன. எனினும் இது சிறு அளவிலான வளர்ச்சியையே கொடுக்கிறது.
உலகம் வேகமாக மாறிக்கோண்டு செல்லச் செல்ல, குறிப்பாக பன்நாட்டு தொழில் நிறுவனங்களை சார்ந்தவர்கள், தங்கள் நிறுவனங்களை நடத்திச் செல்வதற்கான வழிமுறைகளை மறு ஆய்வு செய்து வருகின்றனர். பெரும்பாலும் போட்டி சார்ந்த முறையை கைவிட்டு, கூட்டுறவு சார்ந்த முறைகளையே முடிவுகள் எடுக்க பின்பற்றுகின்றனர். இது பணியாளர்களை அனத்து நிலைகளிலும் ஈடுபட ஊக்குவிக்கிறது.
இது போன்ற அதிக அளவிலான முயற்சிகள், கல்வித்துறை சார்ந்தவற்றில் பெருகி வருவதை நான் சமீப காலமாக பார்த்திருக்கிறேன். எடுத்துக் காட்டாக, ஹாவேர்ட் பல்கலைக்கழகம் மற்றும் எம்.ஐ.டி. கான கூட்டு முயற்சியான (joint venture) ஆன edX. ட்வீபர்(Dweeber) மற்றும் ஈபால்ஸ்(ePals) போன்ற மற்றவை புதுமையாக துவங்கப்பட்ட, கூட்டு முறைக்கான நிறுவனங்களாகும். பெரிய நிறுவனமான ஹெச்.சி.எல். டெக்னாலொஜீஸ் (HCL Technologies) போன்றவை, தங்கள் மேலாண்மையை பற்றி மறு பரிசீலனை செய்து வருகின்றன. தொழிலாக இருந்தாலும் சரி, கல்வி துறையாக இருந்தாலும் சரி மாற்றம் தான் பெரிதாக தேவைப்படுகிறது. இது நம் கல்வி முறையில் பெரிய தாக்கத்தையும், சார்பு நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இப்போதிருக்கும் இந்திய கல்வி முறை, உலக மற்றங்களுக்கு ஏற்ற வகையில், தன் மக்களை பங்களிப்பாளர்களாக உருவாக்குகிறதா? நம் கல்வி முறை அனைத்தையும் உள்ளடக்குவதாய் உள்ளதா? மாணவர்களை பொறுப்புள்ள உலக குடிமக்களாக மாற்றுகிறதா? இந்திய கல்வி முறை, உலக தொழில் நிறுவனங்களுக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொள்கிறதா? பள்ளி, கல்லூரி கல்வி பயிற்சி முறையில் மாற்றம் ஏற்பட்டால், அது உலகை வாழ தகுந்த இடமாக ஆக்குமா? நடைமுறைக்கு ஏற்றவாறு சிந்தித்தால், இறுதி கேள்வி நீங்கலாக மற்ற அனைத்திற்கும் எனது பதில் “இல்லை” என்பது தான். நம்பிக்கை உடையவனாக சிந்தித்தால், அனைத்து கேள்விகளுக்கும் என் பதில் “ஆம்” என்பதாகும்.
மாற்றங்களை ஏற்படுத்த, பின்வரும் வழிமுறைகளை கடை பிடிக்கலாம்:
- தினமும் வகுப்பில் கலந்துரையாடவும்.
பெரும்பாலான பள்ளிகள், மாணவர்களை கடுமையான் போட்டி உலகிற்கே தயார் செய்கின்றன. இந்த வளரும் பிள்ளைகளில் நாம் கலந்துரையாடும் சிந்தனையை தூண்ட வேண்டும். இந்த செயல் அவர்களை சிறந்த தொழில்துறை வல்லுனர்களாக மட்டும் அல்லாது, சமூகத்தில் நல்ல செயல்கள் செய்யவும் தூண்டும். “கற்றும் பகிர்ந்தும் வளர்தல்” தனி மற்றும் உலகளாவிய துறைக்கு ஒரு நல்ல கோட்பாடு ஆகும்.
-
கட்டாயமாக கட்டற்ற மென்பொருள் துறையில் ஈடுபடவும்
கட்டற்ற மென்பொருள் துறையில் ஈடுபடுதல் ஒரு கூடுதல் சிறப்பை தரும். இப்படியாய் பட்ட செயல் பாடுகள், தன்னை போன்ற ஈடுபாடு கொண்ட மற்ற மாணவர்களோடு பழக ஒரு நல்ல வாய்ப்பாக மட்டும் அல்லாது அவர்களது தற்குறிப்பிற்கு (resume) நல்ல மதிப்பை தரும். மாணவர்கள் மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும், சிறு குழுக்களாக இணைந்து எவ்வாறு பணியாற்ற வேண்டும், கூட்டாக இணையும் உலகத்தை எவ்வாறு புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும் என் பலவற்றை கற்றுக் கொள்வார்கள்.
opensource.com/education/12/7/does-indian-education-system-teach-students-how-collaborate
நான் ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி. CollabNet மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனது சொந்த ஊர் நாகர்கோவில். கடந்த 2011 -ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன்.
வலை பதிவு : jophinepranjal.blogspot.in/