Fediverse-உடன் ஒருஐந்து நிமிட சுற்றுப்பயணம்

பொதுமக்கள் வழக்கமான பொதுவாழ்க்கையைப் போன்றே அதே பாதுகாப்பு களுடன் ஆனால், சாத்தியமான, தொலைதூரத்தில் உள்ளவர்களுடன் கூட இணையத்தின் வாயிலாக எளிதாக தொடர்புகொள்ளவிரும்கின்றனர். வேறு சொற்களில் கூறுவதானால், ஒரே இடத்தில் இருந்தவாறு உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள பிற நபர்களுடன் பாதுகாப்பாகஅரட்டையடிக்க பொதுமக்கள் விரும்புகிறார்கள். இன்றைய உலகில், நிச்சயமாக, உலகளாவிய வலை பின்னலில் அனுப்பபடுகின்ற தரவு யாருடையது என்பதைப் பற்றி மிகச்சரியாக கூற நிறைய நிறுவனங்கள் தயாரக உள்ளன. நாம் தொடர்பு கொள்ளும் விதம், நம்முடைய செய்தி எத்தனை பேருக்குச் சென்றடைகிறது போன்ற பலவற்றை நிர்வகிக்க தங்களுக்கு உரிமை இருப்பதாக பெரும்பாலான நிறுவனங்கள் கருதுகின்றன., அதிர்ஷ்டவசமாக திறமூலபயன்பாட்டின் துனையுடன், இவ்வாறான தற்போதைய சூழலில் சமூக வாழ்க்கையை யாரும் பின்தொடர்ந்து கண்டுபிடித்திடுமாறு வைத்திருக்க வேண்டியதில்லை, அவ்வாறே நமக்கான பாதுகாப்பான சமூக வலைப் பின்னலை திறமூல மேம்படுத்துநர்கள் சரியான முறையில் நமக்கு வழங்கதயாராக இருக்கின்றார்கள். அதில்Fediverse போன்று பொருத்தமான ஒன்றினை பயன்படுத்திகொள்க

“Fediverse” (“federated” ,”universe”ஃ” ஆகியஇரண்டும்இணைந்த ஒரு இணையவாயில்) என்பது நெறிமுறைகள், சேவையகங்கள் பயனர்களின் தொகுப்பாகும். இவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளக்கூடிய வலைபின்னல்களை உருவாக்குகின்றன. இந்த வலைபின்னல்கள் மூலம் பயனர்கள் குறுஞ்செய்திகள், வலைப்பதிவு பாணியிலான இடுகைகள், இசை, கானொளி ஆகியவற்றினை எளிதாக பரிமாறிக்கொள்ளலாம். நம்முடைய இடுகையிடும் உள்ளடக்கம் ஒருங்கிணைக்கப்பட்டது, அதாவது ஒரு வலைபின்னல் நம்முடைய உள்ளடக்கத்தை அறிந்தவுடன், அந்த உள்ளடக்கத்தை மற்றொரு வலைபின்னலிற்கு அனுப்புகின்றது, உடன்அது மற்றொரு வலைபின்னலிற்கு அனுப்புகிறது. பெரும்பாலான இயங்குதளங்கள் ஏதேனும் ஒரு நிறுவனத்தால் இயக்கப்படுகின்றன, தரவு சிக்கியிருக்கும் ஒரு silo. ஆனது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான ஒரே வழி, அவர்களை அந்த சேவையில் சேர வைப்பது ஆகும். கூட்டமைப்பின் வெவ்வேறு சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் பகிர்ந்துகொள்ளப்பட்ட ஒவ்வொருவளத்திற்கும் ஒரு கணக்கை உருவாக்காமல் ஒருவரோடு ஒருவர் செயல்பட அனுமதிக்கிறது. ஒவ்வொரு சேவையின் நிகழ்விற்கும் மோசமான சிக்கல்கள் ஏற்பட்டால் நிர்வாகிகள் மற்ற நிகழ்வுகளைத் தடுத்திடுவார்கள். அதனோடு பயனர்களும் தங்கள் சொந்த அனுபவத்தை மேம்படுத்த பயனர்களையோ அல்லது முழு நிகழ்வுகளையோ தடுக்கலாம்.
Mastodon ஆனது Fediverseதளங்களுக்கான எடுத்துக்காட்டாகும்
மாஸ்டோடன் ஒரு Fediverse தளமாகும், இது சமீபத்தில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது, மேலும் இது மீச்சிறுவலைபூவில் (ட்விட்டரைப் போன்றது) கவனம் செலுத்துகிறது. மாஸ்டோடன் ஆனது ஃபெடிவர்ஸின் ஒரு கூறு மட்டுமே. இன்னும் ஏராளமான கூறுகள் இதில்உள்ளன அவற்றுள் சில.
மீச்சிறுவலைபூ: Mastodon, Pleroma, Misskey
வலைபூ: Write.as, Read.as
கானொளி புரவலர்: Peertube
இசைப்புரவலர்: Funkwhale
உருவப்பட புரவலர்: Pixelfed
இணைப்பு திரட்டி: Lemmy
நிகழ்வு திட்டமிடல்: mobilizon, gettogether.community
ஃபெடிவர்ஸ் உருவான வரலாறு
2008 இல், Evan Prodromou Ostatus நெறிமுறை , status.net எனும் சேவையாளர் மென்பொருளைப் பயன்படுத்தி identi.ca என்ற மீச்சிறு வலைபூ சேவையை உருவாக்கினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, Pump.io எனப்படும் புதிய நெறிமுறையைப் பயன்படுத்திடுமாறு அவர் தனது சேவையை மாற்றினார். அவர் கட்டணமற்ற மென்பொருள் அறக்கட்டளைக்கு Ostatus நெறிமுறையை வெளியிட்டார், அங்கு அது GNU/social இல் இணைக்கப்பட்டது. இந்த வடிவத்தில், ஃபெடிவர்ஸ் பல ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டுவந்தது.
மார்ச் 2016 இல், Eugen Rochco (Gargron) Mastodon ஐ உருவாக்கினார், இது Tweetdeck எனப்படும் பிரபலமான Twitter இடைமுகத்தைப் போன்ற இடைமுகத்துடன் GNU/social ஐப் பயன்படுத்தியது. இது ஓரளவு புகழ் பெற்றது.
Fediverse ஆனது Pixelfed, Mastodon, Misskey, Plume, Nextcloud, Castopod, Bookwyrm , போன்ற பலவற்றை உள்ளடக்கியது
1
2018 ஆம் ஆண்டில், ActivityPub எனப்படும் புதிய நெறிமுறை W3C ஆல் தரப்படுத்தப்பட்ட நெறிமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெரும்பாலான Fediverse தளங்கள் அதை ஏற்றுக்கொண்டன. இது Evan Prodromou, Christine Lemmer-Weber, போன்ற பலரால் எழுதப்பட்டது, மேலும் இது ஒரு சிறந்த நெகிழ்வான நெறிமுறையை வழங்க முந்தைய சேவைகளை விரிவுபடுத்தியது.
Fediverse எப்படி இருக்கும்?
இது ActivityPub எனும்நெறிமுறையைப் பயன்படுத்தி எந்த ஒரு பயன்பாட்டிலும் உருவாக்கப்படுகிறது, தோற்றத்தில் மிகவும் மாறுபட்டது. நாம்நினைப்பது போன்று, மீச்சிறுசேவைதளம் கானொளி பகிர்வு சேவையை விட வேறுபட்ட தேவைகளைக் கொண்டுள்ளது.இருப்பினும், தெரியாத பெரிய செயல்களுக்குள் உலாவருவது அச்சுறுத்தலாக இருக்கும். :
Mastodon வலை வாடிக்கையாளர் ஒரு எளிமையான பார்வை , மேம்பட்ட பார்வை, எளிமைப்படுத்தப்பட்ட இயல்புநிலை காட்சி முகப்பு ஊட்டத்தின் ஒற்றை நெடுவரிசையைக் காட்டுகிறது, மேலும் காட்சியாக காண வலது புறத்தில் பலவாய்ப்புகள் உள்ளன. இதுஒரு நிர்வகிக்கப்பட்ட வலைபின்னலாகும்.
2
கீழே காட்டப்பட்டுள்ள மேம்பட்ட வலை இடைமுகம், முகப்பு காலவரிசை, உள்ளூர் காலவரிசை, கூட்டமைப்பு காலவரிசை , பயனரின் சுயவிவரத்தைக் கொண்டுள்ளது. பயனர்கள் முதலில் துவங்கும் போது, எளிதாக ஒரு நெடுவரிசைக் காட்சியானது இயல்புநிலையாக இருக்கும். மேம்பட்ட மாஸ்டோடன் இடைமுகம் பல நெடுவரிசைகளைக் கொண்டுள்ளது.
3
படங்கள் ,கானொளிகளைக் காண்பிப்பதில் கவனம் செலுத்தும் ஒரு இடைமுகத்தை Pixelfed கொண்டுள்ளது: Pixelfed இன் இடைமுகம் புகைப்படங்களின் சிறுபடங்களைக் கொண்டுள்ளது.
4
xPeertube என்பது கானொளிகளைப் பகிர்வதற்கானது:இதுPeertube இன் இடைமுகம் காணக்கூடிய கானொளிகளின் சிறுபடங்களைக் கொண்டுள்ளது.
5
Mobilizon ஒரு நிகழ்வு திட்டமிடல் தளம், Fediverse ஒருங்கிணைப்புக்கான செயல் திட்டங்களைக் கொண்டுள்ளது: Mobilizon இடைமுகம் நிகழ்வுகளைத் திட்டமிட உதவுகிறது.
6
திறமூல சமூககுழுவிற்கு மாறிடுக
ஒரு நல்ல கானொளிகாட்சி விளக்கம், பிற பயனர்களைக் கண்டறிய (சுயமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட) வழிக்கு fediverse.info ஐப் பார்வையிடுக.
எவ்வாறு தொடங்குவது, தரவை எவ்வாறு நகர்த்துவது என்பன போன்ற பலவற்றைப் பற்றிய விரிவான வழிகாட்டிக்கு fedi.tips க்குச் செல்க.
மாஸ்டோடன் பல சிறந்த நுழைவுபகுதிகளைக் கொண்டுள்ளது:
Joinmastodon.org: Mastodon சேவையகங்களின் மிகப்பெரிய பட்டியலைகொண்டுள்ளது
Joinfediverse.wiki: பல்வேறு வகைகளிலான சேவைகள், நிகழ்வுகள் பற்றிய சிறந்த தகவல்களை கொண்டுள்ளது
Fedi.garden: நிகழ்வுகளின் நன்கு தொகுக்கப்பட்ட பட்டியலை கொண்டுள்ளது
எந்த நிகழ்வில் சேர வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கான உதவிக்கு (இன்னும் சொந்தமாக உருவாக்க விரும்பவில்லை எனக் கருதினால்), fediverse.party/en/portal/servers ஐப் பார்வையிடுக.
தரவுகள் பற்றிய விவரங்களுக்கு புள்ளிவிவரங்கள், கண்காணிப்பு சேவை , அறியப்பட்ட Fediverse பற்றிய தரவு சார்ந்த பார்வைக்கு the-federation.info ஐப் பார்வையிடுக.
கூட்டமைப்பு பெற்றிடுக
ஃபெடிவர்ஸ் என்பது சமூக ஊடகத்தை தனிப்பட்ட முறையில் பயன்படுத்து வதற்கான ஒரு வழியாகும், தேவைகளுக்கு ஏற்ற சமூக குழுவுடன் ஒரு நிகழ்வைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அல்லது நம்முடைய சொந்த சேவையகத்தை இயக்குவதன் மூலம், அதை நாம் விரும்பும் வழியில் சரியாகச் செய்யலாம். பல சமூககுழுவின் வலைப்பின்னல்களை பாதிக்கும் விளம்பரங்கள், வழிமுறைகள், பிற விரும்பத்தகாதவற்றை இது தவிர்க்கிறது.
பெரிய silosஐ விட நம்முடைய தேவைகளுக்கு ஏற்ற சமூககுழுவினைத் தேடுகின்றோமெனில், , மாஸ்டோடன் , ஃபெடிவர்ஸ் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

%d bloggers like this: