getting-started-with-ubuntu12.04 – கையேடு

Getting Started with Ubuntu 12.04

Getting Started with Ubuntu 12.04 புதிய பயனர்களுக்கான, விரிவான, உபுண்டு இயக்குதளத்தைப் பற்றிய கையேடாகும். திறவூற்று உரிமத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இதை, நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்ய, வாசிக்க, மாற்றங்கள் செய்ய மற்றும் பகிர்ந்து கொள்ள உரிமை உண்டு.


இந்தக் கையேடு இணையத்தில் உலாவுவது, பாடல்கள் கேட்பது மற்றும் ஆவணங்களை வருடுவது போன்ற அன்றாட பணிகளை நீங்கள் பழக்கப்படுத்திக் கொள்ள உதவும். எளிதில் பின்பற்றக் கூடிய அறிவுரைகளைக் கொண்டிருப்பதால், இது எல்லா நிலையில் உள்ள பயனர்களுக்கும் ஏற்றதொரு ஏடாகும்.

சிறப்பியல்புகள்:

இந்தக் கையேடு படிப்படியான அறிவுரைகளைக் கொண்டிருப்பதாலும், குழுமொழிகள்(jargon) இல்லாததாலும், எளிதில் புரிந்து கொள்ளக்கூடியது.

ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் – உங்களது செயல்களை எப்படி செய்வது என்று காட்டுவதற்காக நிறைய திரைப்பிடிப்புகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

எல்லாம் ஓரிடத்தில் – உங்களுக்கு வசதியாக எல்லா செய்திகளும் ஒரே கோப்பில் இருப்பதால், உதவிக்கு இணையத்தை நாட வேண்டிய அவசியமில்லை.

படிமுறை கற்றல் வளைவு – அடிப்படைகளிலிருந்து ஆரம்பித்து, ஒவ்வொரு அத்தியாயமாகப் படித்து செய்து பார்த்து, மேலும் மேலும் கற்றுக் கொள்ளலாம்.

மொழிபெயர்ப்புகள் – 52-க்கும் மேற்பட்ட மொழிகளில், அந்தந்த மொழித் திரைப்பிடிப்புகளுடன் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

CC-BY-SA உரிமம் – பதிவிறக்கம் செய்ய, மாற்றங்கள் செய்ய மற்றும் பகிர்ந்து கொள்ள உரிமை உண்டு.

இலவசம் – உபுண்டு குழும உறுப்பினர்களால் எழுதப்பட்ட இந்தக் கையேடு, முற்றிலும் இலவசம்.

அச்சுக்குகந்த பதிப்பு – மரங்களைக் காக்க, அச்சுக்காக உகப்பாக்கப்பட்ட பதிப்பு உள்ளது.

பொதுவான உபுண்டு பிரச்சனைகளுக்கு நீங்கள் விரைவில் தீர்வு காண பழுது இடமறியும் பிரிவு.

 


புத்தகத்தைப் பெற: ubuntu-manual.org/
ஆங்கில மூலம்: ubuntu-manual.org/

 

இரா.சுப்ரமணி. மூத்த மென்பொருள் வல்லுனராக ASM Technologies நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன்.மதுரை க்னு/லினக்ஸ் பயனர் குழுவின் உறுப்பினர்.

[ glug-madurai.org ]


மின்னஞ்சல் : subramani95@gmail.com
வலைப்பதிவு : rsubramani.wordpress.com

%d bloggers like this: