GIMP-எனும்உருவப்படங்களுக்கான பதிப்பாளரை வித்தியாசமாக பயன்படுத்திடுவோமா

GIMP என்பது ஒரு சிறந்த திறமூல உருவப்படங்களுக்கான பதிப்பாளர்ஆகும். நாமனைவரும் இதனை உருவப்படங்களில் திருத்தம் செய்வதற்காக மட்டுமே இதுவரையில் பயன்படுத்திவருகின்றோம் இருந்தபோதிலும் , அதன் தொகுப்பு செயலாக்க திறன்களையோ அல்லது அதன் Script-Fu எனும் பட்டியையோ ஒருபோதும் பயன்படுத்தி கொள்ளாமல் இருந்துவருகின்றோம் . இந்த கட்டுரையில் அவற்றைபற்றி ஆராய்ந்திடுவோமா.
Script-Fu என்றால் என்ன? Script-Fu என்பது GIMP இற்குள் கட்டமைக்கப்பட்ட உரைநிரலாக்க மொழியாகும். இது திட்ட( Scheme) நிரலாக்க மொழியின் செயலியாகும். ஏற்கனவே நாம் ஒருபோதும் இந்த திட்டநிரலாக்கத்தைப் பயன்படுத்தவதில்லை எனில், இப்போது முயற்சித்துதான் பார்ப்போமே, ஏனெனில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Script-Fu ஐ இயக்க துவங்குவது மிகஎளிதாகும், ஏனெனில் இது உருவப்படத்தின் செயலாக்கத்தில் உடனடி விளைவைக் கொண்டிருக்கிறது, எனவே நாம் மிக விரைவாக உருவப்படத்தின் உருவாக்கத்தை உணர முடியும். நாம் இதன்வாயிலாக பைத்தான் எனும் கணினிமொழியில் நிரலாக்கங்களையும் எழுதலாம், ஆனால் Script-Fu என்பது இதனுடைய இயல்புநிலை வாய்ப்பாகும். இந்ததிட்டத்துடன் நாம் பழகுவதற்காக நமக்கு உதவுவதற்காகவென்றே, GIMP இன் ஆவணங்கள் ஒரு ஆழமான பயிற்சியை வழங்குகிறது. இந்த திட்டம் ஆனது Lisp போன்றதொரு கணினிமொழியாக அமைந்துள்ளது, எனவே இதனுடைய ஒரு முக்கிய பண்பு என்னவெனில், அது முன்னொட்டு குறியீட்டையும் நிறைய அடைப்புக்குறிப்புகளையும் பயன்படுத்துகிறது. இதில்செயலிகளும் இயக்கிகளும் முன்னொட்டுகளின் மூலம் இயக்கப்படும் எண்களின் பட்டியலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன:
(function-name operand operand…)
(+23)
↳Returns5
(list1235)
↳Returnsalistcontaining1,2,3,and5

GIMP இன் செயலிகளின் முழு பட்டியலுக்கான ஆவணங்களைக் கண்டுபிடிக்க சிறிது நேரம் ஆகும், ஆனால் அது உண்மையில் நேரடியானது. உதவிப்பட்டியில், சாத்தியமான அனைத்து செயலிகளையும் பற்றி அதிக விரிவாக்கங்களும் விரிவான ஆவணங்களுடனும் ஒரு செயல்முறை உலாவி இதில் உள்ளது.
procedure_browser.png

படம்-1

GIMP இன் தொகுப்பு பயன்முறையை அணுகுதல்
இதிலுள்ள-b எனும் வாய்ப்பினைப் பயன்படுத்தி இயக்கப்பட்ட தொகுப்பான பயன்முறையுடன் GIMP ஐ இயக்கலாம். நாம் இயக்க விரும்பும் உரைநிரலாக்கம் அல்லது கட்டளை வரிக்கு பதிலாக ஒரு ஊடாடும் பயன்முறையில் GIMP ஐ துவக்கும் ஒரு கோடாக (-) இருக்கலாம். பொதுவாக நாம் GIMP ஐ செயல்படுத்திடத் துவங்கிடும் போது, இந்த பயன்பாடானது அதன் வரைகலை பயனாளர் இடைமுகத்தை (GUI) நினைவக்ததில் ஏற்றும், ஆனால் நாம் அதை -i எனும் வாய்ப்பின் மூலம் முடக்கலாம்.
நம்முடைய முதன் முதலான உரைநிரலாக்கத்தை எழுதுதல்
Chalk.scm எனஅழைக்கப்படும் ஒரு கோப்பை உருவாக்கி, Folders → Scripts. என்பதன்கீழ் Preferences எனும் சாளரத்தில் காணப்படும் scripts எனும் கோப்புறையில் அதனை சேமித்திடுக. இங்கு எடுத்துகாட்டில், இது ஒரு t $ HOME / .config / GIMP / 2.10 / scripts. Chalk.scm என்றவாறு உள்ளது இந்த chalk.scm எனும் கோப்பில், நம்முடையமுதன் முதலான உரைநிரலாக்கத்தை இதனுடன் எழுதத்துவங்கிடுக:

(define(chalk filename grow-pixels spread-amount percentage)
(let*((image(car(gimp-file-loadRUN-NONINTERACTIVEfilename filename)))
(drawable(car(gimp-image-get-active-layer image)))
(new-filename(string-append”modified_”filename)))
(gimp-image-select-color imageCHANNEL-OP-REPLACEdrawable'(0 0 0))
(gimp-selection-grow image grow-pixels)
(gimp-context-set-foreground ‘(000))
(gimp-edit-bucket-fill drawableBUCKET-FILL-FGLAYER-MODE-NORMAL100255TRUE00)
(gimp-selection-none image)
(plug-in-spreadRUN-NONINTERACTIVEimage drawable spread-amount spread-amount)
(gimp-drawable-invert drawableTRUE)
(plug-in-randomize-hurlRUN-NONINTERACTIVEimage drawable percentage1TRUE0)
(gimp-file-saveRUN-NONINTERACTIVEimage drawable new-filename new-filename)
(gimp-image-delete image)))

உரைநிரலாக்க மாறிகளை வரையறுத்தல்
உரைநிரலாக்கத்தில், இந்த (define (chalk filename grow-pixels spread-amound percentage) …) எனும் செயலியானது chalk எனப்படும் புதிய செயலியை வரையறுக்கிறது, இது filename,grow-pixels,spread-amound, percentage. ஆகிய அளவுருக்களை ஏற்றுக்கொள்கிறது: வரையறுக்கப்பட்ட செயலியின் உள்ளே உள்ள அனைத்தும் chalk செயலியின் உடல்பகுதியாகும். நீண்ட பெயர்களைக் கொண்ட மாறிகள் சொற்களுக்கு இடையில் கோடுகளுடன் உச்சரிக்கப்படுவதை கவனித்திருக்கலாம்; இது Lisp போன்ற கணினிமொழிகளின் அடையாள பாணியாகும்.
இந்த (let* …) எனும்செயலியானது ஒரு சிறப்பு செயல்முறையாகும், இது உட்பகுதிக்குள் மட்டுமே செல்லுபடியாகும் ஒருசில தற்காலிக மாறிகள் வரையறுப்பதற்காக நம்மை அனுமதிக்கிறது. இங்கு, image,drawable, new-filename ஆகியவை மாறிகள்ஆகும். இது உருவப்படத்தை gimp-file-load என்பதன் வாயிலாகநினைவகத்தில் ஏற்றுகிறது, தொடர்ந்துஇது உருவப்படத்தை உள்ளடக்கிய ஒரு பட்டியலைத் தருகிறது, பின்னர் அது car எனும் செயலியுடன் முதல் நுழைவைத் தேர்ந்தெடுக்கிறது. அதன்பின்னர், இது முதல் செயலில் உள்ள அடுக்கைத் தேர்ந்தெடுத்து அதன் குறிப்பை வரையக்கூடிய மாறியில் சேமிக்கிறது. இறுதியாக, இதில் உருவான உருவப் படத்தின் புதிய கோப்பின் பெயரைக் கொண்ட சரத்தை இது வரையறுக் கின்றது.
இதனுடைய நடைமுறையை நன்கு புரிந்துகொள்வதற்காக நமக்கு உதவ, அதை உடைத்துபார்த்திடுவோமா. முதலில், Filters → Script-Fu → Console என்பதில் காணப்படும் வரைகலை பயனாளர் இடைமுகத்தை(GUI ) இயக்கப் பட்டதும் Script-Fu என்பதன் பணியகத்துடனும் GIMP ஐத் துவங்கிடுக. இங்கு, நாம் let* என்பதைப் பயன்படுத்த முடியாது, ஏனெனில் மாறிகள் தொடர்ந்து இருக்க வேண்டும். வரையறுக்கும் செயலியைப் பயன் படுத்தி உருவப்படத்தின்(image) மாறியை வரையறுத்த(define)பின்னர்,உருவப் படத்தைக் கண்டுபிடிக்க சரியான பாதையை வழங்கிடுக:
(defineimage(car(gimp-file-loadRUN-NONINTERACTIVE”Fourier.png””Fourier.png”)))
வரைகலை பயனாளர் இடைமுகத்தில்(GUI ) எதுவும் நடக்கவில்லை என்று தோன்றுகிறது, ஆனால் உருவப்படம் மட்டும் ஏற்றப்பட்டுள்ளது. அதனால் உருவப்படக் காட்சியை இதனுடன்பிரதிபலிக்குமாறு இயலுமை செய்ய வேண்டும்: அதற்காக பின்வரும் கட்டளைவரியை உள்ளிடுக
(gimp-display-new image)
gui01_image.png

 

 

 

 

 

படம்-2

இப்போது, செயலில் உள்ள அடுக்கைப் பெற்று அதை drawable மாறியில் சேமித்திடுக:
(definedrawable(car(gimp-image-get-active-layer image)))
இறுதியாக, உருவப்படத்தின் புதிய கோப்பின் பெயரை வரையறுத்திடுக:
(define new-filename”modified_Fourier.png”)

இந்த கட்டளைவரியை இயக்கிய பின் Script-Fu பணியகத்தில் பார்க்க வேண்டியது பின்வருமாறு:
Script-Fu console

படம்-3
உருவப்படமானது செயல்படுவதற்கு முன், உரைநிரலாக்கத்தில் செயலியின் வாதங்களாக வரையறுக்கப்படும் மாறிகளை நாம் வரையறுக்க வேண்டும்:
(define grow-pixels2)
(define spread-amount4)
(define percentage3)
உருவப் படத்தினை செயல்படுத்துதல்
இப்போது தொடர்புடைய அனைத்து மாறிகளும் வரையறுக்கப்பட்டுள்ளன, அதனால் நாம் இந்த உருவப் படத்தினை செயல்படுத்திடலாம். உரைநிரலாக்கத்தின் செயலிகளை பணியகத்தில் நேரடியாக இயக்க முடியும். முதல் படிமுறை செயலில் உள்ள அடுக்கில் கருப்பு வண்ணத்தைத் தேர்ந்தெடுப்பது. இவ்வண்ணம்ஆனது மூன்று எண்களான – (list 0 0 0)or'(0 0 0) ஆகியவற்றில்ஏதேனும் ஒன்றாகபட்டியலாக எழுதப்படுகின்றது:
(gimp-image-select-color imageCHANNEL-OP-REPLACEdrawable'(0 0 0))

படம்-4
பின்னர் தெரிவுசெய்தலை இரண்டு படத்துகள்கள் மூலம் மேம்படுத்திடுக:
(gimp-selection-grow image grow-pixels)

அதன்பின்னர்முன்புற வண்ணத்தை கருப்பு வண்ணமாமாக அமைத்து, அதனுடன் தெரிவுசெய்தலை நிரப்பிடுக:

(gimp-context-set-foreground'(0 0 0))
(gimp-edit-bucket-fill drawable BUCKET-FILL-FG LAYER-MODE-NORMAL 100 255 TRUE 0 0)

தொடர்ந்துதெரிவுசெய்தலை நீக்கிடுக:
(gimp-selection-none image)

பிறகுதோராயமாக படத்துகள்களை நகர்த்திடுக:
(plug-in-spreadRUN-NONINTERACTIVEimage drawable spread-amount spread-amount)

பின்னர் உருவப்படத்தின் வண்ணங்களை மாற்றிடுக:
(gimp-drawable-invert drawableTRUE)

அதன்பின்னர்படத்துகள்களை சீரற்றதாக்கிடுக:
(plug-in-randomize-hurlRUN-NONINTERACTIVEimage drawable percentage1TRUE0)

இறுதியாக உருவப்படத்தை புதிய கோப்பில் சேமித்திடுக:
(gimp-file-saveRUN-NONINTERACTIVEimage drawable new-filename new-filename)

உரைநிரலாக்கத்தினை தொகுப்புமுறையில் இயக்குதல்
உரைநிரலாக்கம் என்ன செய்கிறது என்பதை இப்போதுநாம் அறிந்துகொண்டோம், அதை தொகுப்பு முறையில் கூட இதனை இயக்கமுடியும்:
gimp-i-b'(chalk “Fourier.png” 2 4 3)’-b'(gimp-quit 0)’
chalk எனும் செயலி இயங்கிய பிறகு, GIMPஐ விட்டுவெளியேறும்படி கட்டளையிடுவதற்காக, இது -bஎனும் வாய்ப்புடன் இரண்டாவது செயலியை அழைக்கிறது: gimp-quit என்ற தகவலை மட்டும் தெரிந்து கொள்க.
இந்த Script-Fu பற்றி மேலும்விவரங்களை அறிந்து கொள்ள docs.gimp.org/en/gimp-concepts-script-fu.html எனும் இணையதளமுகவரிக்கு செல்க

%d bloggers like this: