GNS3 ஒரு அறிமுகம்

மெய்நிகரானதும் உண்மையானதுமான வலைபின்னல்களை கட்டமைக்கவும், பரிசோதிக்கவும் சரிசெய்யவும் உலகளவில் ஆயிரக்கணக்கான பிணைய பொறியாளர்களால் இந்த GNS3 ஆனது பயன்படுத்தப் பட்டு வருகின்றது. நம்முடைய மடிக்கணினியில் ஒரு சில சாதனங்களை மட்டுமே கொண்ட ஒரு சிறிய இடவியலை இயக்க இந்த GNS3 ஆனது நம்மை அனுமதிக்கிறது, அதாவது பல சேவையகங்களில் விருந்தோம்புதல் செய்யப்பட்ட அல்லது மேககணினியில் விருந்தோம்புதல் செய்யப்பட்ட பல சாதனங்களைக் கொண்டவர்களுக்கு இந்த GNS3 ஆனது மிகபயனுள்ளதாக அமைகின்றது இந்த GNS3 என்பது ஒரு கட்டற்ற பயன்பாடாகும், இது gns3.com எனும் இணையதளமுகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்யக்கூடிய கட்டணமற்ற பயன்பாட்டுமென்பொருளாகும்.இது 800,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சமூக குழுவினரால் விரைவாகவும் செயலூக்கத்துடன் மேம்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டுவளர்ந்து வருகின்றது. GNS3 சமூககுழுவில் சேருவதன் மூலம், GNS3 ஐ இன்றுவரை 10 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்த மாணவர்கள், பிணைய பொறியாளர்கள், கட்டிட வடிவமைப்பாளர்கள் மேலும் பிறருடன் நாமும் ஒரு உறுப்பினராக சேரமுடியும். பார்ச்சூன் 500 நிறுவனங்கள் உட்பட உலகம் முழுவதும் ஏராளமான நிறுவனங்களில் இந்த GNS3 ஐ பயன்படுத்திகொள்கின்றன.Cisco CCNA போன்ற சான்றிதழ் தேர்வுகளுக்கு தயாராவதற்கு GNS3 நமக்கு உதவக்கூடும், ஆனால் உண்மையான உலக வரிசைப்படுத்தல்களை பரிசோதிக்கவும் சரிபார்க்கவும் உதவும். GNS3 இன் அசல் மேம்படுத்துனரான Jeremy Gross manஎன்பவர் முதலில் தனது CCNP எனும் சான்றிதழ் கல்வியை பயில்வதற்கு உதவும் மென்பொருளை உருவாக்கினார். அந்த அசல் படைப்பின் காரணமாக, விலையுயர்ந்த வன்பொருளுக்கு பணம் எதையும்செலுத்தாமல் இன்றே இதை நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.இந்த GNS3 ஆனது வலைபின்னல் பொறியாளர்களை 10 ஆண்டுகளுக்கும் மேலாக உண்மையான வன்பொருள் சாதனங்களை மெய்நிகராக்க அனுமதித்துள்ளது. முதலில் Dyna mips, எனப்படும் மென்பொருளைப் பயன்படுத்தி Cisco சாதனங்களை மட்டுமே பின்பற்றுகிறது, பின்னர் தற்போதுGNS3 பல்வேறு வலைபின்னல் விற்பனையாளர்களிடமிருந்து Cisco மெய்நிகர் switches , Cisco ASAs , Brocade வழிசெலுத்திகள்,Cumulus லினக்ஸ் switches, Docker நிகழ்வுகள், HPE VSRs, மேலும் பல்வேறு லினக்ஸ் உபகரணங்கள் போன்ற பல்வேறு சாதனங்களை ஆதரிக்கின்றது.இதுஆதரிக்கின்ற பல்வேறு உபகரணங் களின் பட்டியலைக் காண gns3.com/marketplace/appliancesஎனும் இணையதளமுகவரிக்கு செல்க:
உதவிக்குறிப்பு.1: ஜிஎன்எஸ் 3 ஆனது சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளது. இணையத்தில் நாம் காணும் ஒரு சில தகவல்கள் காலாவதியானவை அல்லது துரதிர்ஷ்டவசமாக முற்றிலும் தவறானவை. இந்த ஆவணமானது ஒரு சில கேள்விகளுக்கு பதிலளிக்க உதவும் மேலும் GNS3 உடன் நம்முடைய பயணத்தைத் துவங்கிட உதவும்.
உதவிக்குறிப்பு.2: GNS3 ஆனது Cisco சாதனங்களை மட்டும் ஆதரிக்காது. ஆயினும் இதுகுறித்தான விவாதத்தின்போது Cisco பற்றி பெரும்பாலும் விவாதிக்கப்படுகிறது, ஏனென்றால் பெரும்பாலான வலைபின்னல் பொறியாளர்கள் அதைப் பற்றி அறிய ஆர்வமாக உள்ளனர். இருப்பினும், பல வணிக , திற மூல விற்பனையாளர்கள் இன்று GNS3 இல் ஆதரிக்கின்றார்கள். நாம் இப்போது பல்வேறு விற்பனையாளர் களிடையே இயங்கக்கூடிய தன்மையை பரிசோதிக்க முடிகிறது, மேலும் SDN, NFV, Linux ,Docker உடன் பிணைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி esoteric அமைப்புகளையும் முயற்சி செய்யலாம்.
குறிப்பு: நாம் GNS3 இன் பழைய பதிப்பைப் பயன்படுத்துகின்றோம் எனில், GNS3 இன் தற்போதைய நிலையான வெளியீட்டிற்கு (v2.1.21)மேம்படுத்திகொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது .இந்நிலையில்
அதெல்லாம் சரிதான் GNS3 என்றால் என்ன? என்ற கேள்வி நம் மனதில் எழும் நிற்க.
GNS3 என்பது ஒரு திறமூல பயன்பாட்டுமென்பொருளாகும், இதனை நாம் கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இதனுடைய மூலக்குறிமுறைவரிகளை பார்க்க நாம் ஆர்வமாக இருந்தால் GitHub இலிருந்து பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். மேலும் இந்த GNS3 ஆனது 1. அனைத்தும் சேர்ந்த ஒரே (all-in-one ) பயன்பாட்டுமென்பொருள் , 2. மெய்நிகர் இயந்திரம் (VM ) ஆகிய இரண்டு மென்பொருட்களின் கூறுகளைக் கொண்ட ஒரு திறமூலபயன்பாட்டுமென்பொருளாகும் இவற்றுள் அனைத்தும் சேர்ந்த ஒரே (all-in-one )பயன்பாட்டுமென்பொருள் என்பது GNS3 இன் வாடிக்கையாளர் பகுதியாகும் மேலும் இது வரைகலை பயனர் இடைமுகம் (GUI) கொண்டதாகும். நம்முடைய வளாக கணினியில் (விண்டோ, மேக், லினக்ஸ்) இந்த மென்பொருளை நிறுவுகைசெய்தபின்னர், இந்த மென்பொருளைப் பயன்படுத்தி நம்முடைய இடவியலை உருவாக்கமுடியும்.
சேவையக விருப்பங்கள்:
அனைத்தும் சேர்ந்த ஒரே (all-in-one )பயன்பாட்டுமென்பொருளின் வரைகலைபயனாளார்இடைமுக(GUI) வாடிக்கையளரைப் பயன்படுத்தி நாம் GNS3 இல் இடவியல்களை உருவாக்கிடும்போது, உருவாக்கப்பட்ட சாதனங்கள் ஒரு சேவையக செயல்முறையால் விருந்தோம்பதல் செய்யப்பட்டு இயக்கப்பட வேண்டும். பயன்பாட்டுமென்பொருளின் சேவையக பகுதியில் 1. வளாக GNS3 சேவையகம், 2. வளாக GNS3 மெய்நிகர்கணினி ,3. தொலைதூர(Remote) GNS3 மெய்நிகர்கணினி( VM) ஆகிய பல்வேறு வாய்ப்புகள் நாம் பயன்படுத்தி கொள்வதற்காக தயாராக உள்ளன:
வளாக GNS3 சேவையகமானது வளாகத்தில் இயங்கும் அதே கணினியில் நாம் GNS3 அனைத்தும் சேர்ந்த ஒரே மென்பொருளை நிறுவுகைசெய்யவிருக்கின்றோம். உதாரணமாக நாம் விண்டோ இயக்கமுறைமை செயல்படும் கணினியைப் பயன்படுத்துகின்றோம் எனில், GNS3இன் வரைகலைபயனாளர் இடைமுகப்பு(GUI) , வளாக GNS3 சேவையகம் ஆகியவை விண்டோவில் செயல்முறைகளாக இயங்குகின்றன. Dynamipsபோன்ற கூடுதல் செயல்முறைகளும் நம்முடைய கணினியில் இயங்கும்:நாம் GNS3 இன் மெய்நிகர்கணினியை(VM) ப் பயன்படுத்த முடிவு செய்தால் (இதையே பயன்படுத்தி கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது), VMware பணிநிலையம், மெய்நிகர் பெட்டி அல்லது Hyper-V; போன்ற மெய்நிகராக்க மென்பொருளைப் பயன்படுத்தி நம்முடைய கணினியில் GNS3 இன்மெய்நிகர்கணினியை(VM) வளாகத்தில் இயக்கலாம்; அல்லது VMware ESXi ஐப் பயன்படுத்தி ஒரு சேவையகத்தில் அல்லது மேககணினியில் கூட GNS3 இன்மெய்நிகர்கணினியை(VM) தொலைவிலிருந்து இயக்கலாம்.
உதவிக்குறிப்பு.3: . நாம் GNS3 இன்மெய்நிகர்கணினியை(VM) பயன்படுத்தாமல் GNS3 ஐப் பயன்படுத்த முடியும். ஆரம்பத்தில் பணியை துவங்க இது ஒரு சிறந்த வழியாகும், ஆனால் இந்த அமைப்பு குறைவாகவே உள்ளது மேலும் இடவியல் அளவு ஆதரிக்கப்படும் சாதனங்கள் குறித்து பல தேர்வுகளை வழங்காது. நாம் இன்னும் மேம்பட்ட GNS3 இடவியல்களை உருவாக்க விரும்பினால், அல்லது Cisco VIRL சாதனங்கள் (IOSvL2, IOSvL3, ASAv) அல்லது Qemu தேவைப்படும் பிற சாதனங்களை சேர்க்க விரும்பினால், GNS3 இன்மெய்நிகர்கணினியை(VM) பயன்படுத்தி கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது (இது பெரும்பாலும் தேவைப்படுகிறது).
உதவிக்குறிப்பு .4:அனைத்துசேர்ந்தஒன்று(all-in-one ) எனும் பயன்பாட்டு மென்பொருளை மட்டுமே பயன்படுத்தி ஒரு அடிப்படை GNS3 இடவியலைத் துவங்குக, அந்த பணிகிடைத்ததும்,வளாக GNS3 இன்மெய்நிகர்கணினியில்(VM) .இயல்பான போட்டி(Emulation), போலியாகசெய்தல்(Simulation) ஆகியவற்றை அமைத்திடுக தேவையெனில் இதற்கான கூடுதல் ஆவணங்களைப் பார்க்கவும்:
GNS3 3 ஆனது முன்மாதிரியாக உருவகப்படுத்தப்பட்ட சாதனங்களை ஆதரிக்கிறது.இயல்பான போட்டியில் GNS3 ஆனது ஒரு சாதனத்தின் வன்பொருளைப் பிரதிபலிக்கிறது அல்லது பின்பற்றுகிறது மேலும் நாம்மெய்நிகர் சாதனத்தில் உண்மையான உருவப்படங்களை இயக்கஉதவுகின்றது. எடுத்துக்காட்டாக, நாம் Cisco IOS உண்மையான, இயற்பியல் Cisco திசைவியிலிருந்து நகலெடுத்து GNS3 இல் மெய்நிகர், முன்மாதிரியான Cisco திசைவியில் இயக்கலாம்.
உருவகப்படுத்துதல்: GNS3 ஒரு நிலைமாற்றியைப்(switch) போன்ற சாதனத்தின் வசதிகளையும் செயல்பாட்டையும் உருவகப்படுத்துகிறது. நாம் உண்மையான இயக்க முறைமைகளை ( Cisco IOS போன்றவை) இயக்கவில்லை, மாறாக, உள்ளமைக்கப்பட்ட அடுக்கு 2 நிலைமாற்றியைப்(switch) போல GNS3 உருவாக்கிய உருவகப்படுத்தப்பட்ட சாதனமாகும்
உதவிக்குறிப்பு 5:இந் நாட்களில் உருவகப்படுத்துதலுக்கும் சமன்பாட்டிற்கும் இடையிலான கோடுகள் கொஞ்சம் மங்கலாகின்றன. தரப்படுத்தப்பட்ட மெய்நிகர் வன்பொருளில் இயங்கும் உண்மையான Cisco இயக்க முறைமை உருவப்படங்களின் படங்களான Cisco VIRL போன்ற உருவப்படங்களை நாம் இப்போது இயக்க முடியும். VIRLஉருவப் படங்கள் இயங்க வேண்டிய வன்பொருளை GNS3ஆனது பின்பற்றுகிறது.
நினைவில் கொள்க: பின்வரும் செய்திகளைத் தவிர்த்து உருவகப்படுத்துதலுக்கும் இயல்புநிலைபோட்டிக்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம்:
1. Dynamips என்பது Cisco வன்பொருளைப் பின்பற்றும் பழைய தொழில்நுட்பமாகும். இது உண்மையான Cisco IOS உருவப்படங்களை பயன்படுத்துகிறது. அடிப்படை CCNA வகை இடவியல்களுக்கு இது நல்லது, ஆனால் பழைய Cisco IOS பதிப்புகளை (12. X) மட்டுமே ஆதரிப்பது போன்ற பல வரம்புகளைக் கொண்டுள்ளது, அவை Ciscoஆல் ஆதரிக்கப்படவில்லை அல்லது தீவிரமாக புதுப்பிக்கப்படவில்லை.
2. GNS3 உடன் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டCiscoஉருவப்படங்கள் Cisco VIRL (IOSv, IOSvL2, IOS-XRv, ASAv). இவைகளால் ஆதரிக்கப்படுகின்றன மேலும்Ciscoஆல் தீவிரமாக புதுப்பிக்கப்படுகின்றன. உருவப்படங்கள் Cisco IOS (15. X) இன் தற்போதைய வெளியீடுகளை ஆதரிக்கின்றன மேலும் சிறந்த அளவையும் பயனாளர் அனுபவத்தையும் வழங்குகின்றன.
இதனுடைய நன்மைகள்: இது ஒரு கட்டற்ற கட்டணமற்ற பயன்பாட்டு மென்பொருளாகும். இதனை பயன்படுத்தி கொள்வதற்காகவென மாதாந்திர அல்லது வருடாந்திர உரிம கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை ஆதரிக்கப்படும் சாதனங்களின் எண்ணிக்கையில் வரம்புஎதுவும் இல்லை (ஒரே வரம்பு நம்முடைய கணினியின்ள் வன்பொருள்: CPU ,நினைவகம் ஆகியவை மட்டுமேயாகும்)
இது பல்வேறு மாறுதல் வாய்ப்புங்களை ஆதரிக்கிறது (NM-ESW16 Etherswitch module, IOU/IOL Layer 2 images, VIRL IOSvL2): அனைத்து VIRL உருவப்படங்களையும் ஆதரிக்கிறது (IOSv, IOSvL2, IOS-XRv, CSR1000v, NX-OSv, ASAv) , பல விற்பனையாளர் சூழல்களை ஆதரிக்கிறது. hypervisors உடன் அல்லது hypervisors இல்லாமல் இதனை இயக்கி பயன்பெற முடியும்.இது எளிதாக பதிவிறக்கம் செய்யக்கூடிய, கட்டணமற்ற, முன் கட்டமைக்கப்பட்ட, மேம்படுத்தப்பட்ட உபகரணங்கள் வரிசைப்படுத்தலை எளிதாக்குகின்றது கூடுதலான மெய்நிகராக்க மென்பொருட்களின் தேவை இல்லாமல் லினக்ஸிற்கான பூர்வீக ஆதரவினை இது வழங்குகின்றது
இதில் நாம் பயன்படுத்தக்கூடிய பிற வாய்புகளும் உள்ளன. அவற்றுள் ஒரு சில கட்டணமில்லாதவை, வேறு சில கட்டணத்துடன் கூடியவை. என ஏராளமான தேர்வுகள் கிடைக்கின்றன அவற்றுள் நமக்கு எது சிறந்தது என்பதை கண்டுபிடித்து பயன்படுத்திகொள்க. நாம் விரும்பினால் இதிலுள்ள பல்வேறு வாய்ப்புகளைப் பயன்படுத்தி கொள்க. இது வலைபின்னல் பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் மேம்படுத்தவும் நம் அனைவருக்கும் இது உதவுகிறது.
இதனுடைய குறைபாடுகள்: Cisco உருவப்படங்களை பயனாளரால் வழங்க வேண்டும் (Cisco .Comஇலிருந்து பதிவிறக்குக, அல்லது VIRL உரிமத்தை வாங்கலாம் அல்லது கைமுறையான சாதனத்திலிருந்து நகலெடுக்கலாம்).
இது ஒரு தன்னியக்க தொகுப்பு அன்று, ஆனால்வளாக மென்பொருளை நிறுவுதல் (GUI) தேவைப்படுகிறது.
வளாக நிறுவல் (Firewall, பாதுகாப்பு அமைப்புகள், நிறுவனத்தின் மடிக்கணினி கொள்கைகள் போன்றவை) காரணமாக நம்முடைய கணினியின் அமைப்பு , வரம்பு ஆகியவற்றால் GNS3 பாதிக்கப்படலாம்.

%d bloggers like this: