லினக்சில் பூட் லோடார்கள் (Boot Loader) – (1)


 

லினக்சில் பொதுவாக இரண்டு boot loader – கள் பயன்படுத்தப்படுகின்றன . அவை

 

LILO -> LInux LOder

 

GRUB -> GRand Unified Bootloader

 

இதில் GRUB பூட்லோடரை கொண்டுதான் பெரும்பான்மையான லினக்ஸ் இயங்குதளங்கள் வெளியிடப்படுகின்றன.ஏனென்றால் LILO லோடருக்கும் , GRUB பூட் லோடருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அவை

LILO லோடரானது 16 வித்தியாசமான booting தேர்வினை மட்டுமே ஆதரிக்கும்.ஆனால் GRUB பூட் லோடரானது அளவில்லாத பூட்டிங் தேர்வினை ஆதரிக்கும்.

 

LILO பூட் லோடாரால் network -ல் இருந்து பூட் செய்ய முடியாது.GRUB பூட் லோடாரால் network -ல் இருந்து பூட் செய்ய முடியும்.

நீங்கள் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களை இரட்டை நிறுவலாக நிறுவியிருந்தீர்கள் என்றால், கணினியினை தொடங்கியவுடன் விண்டோஸ் இயங்குதளத்திற்குள் செல்லவா அல்லது லினக்ஸ் இயங்கு தளத்திற்குள் செல்லவா என்று உங்களினுடைய தேர்விற்காக ஒரு திரை காண்பிக்கப்படுகிறது அல்லவா அதுதான் GRUB பூட் லோடாரினுடைய திரை.

 

GRUB பூட் லோடார் எப்படி வேலை செய்கிறது:

GRUB பூட் லோடார் எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்பதற்கு முன்பு பூட் லோடார் நிரல்கள் எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம். நீங்கள் கணினியினை ON செய்து பூட் ஆகியவுடன் BIOS ஆனது கணிணியினுடைய கட்டுப்பாட்டினை முதல் பூட் device ற்கு கொடுத்து விடும்.முதல் பூட் device ஆனது வன்வட்டு,குறுவட்டு,பிளாப்பி போன்று எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

நாம் இங்கு வன்வட்டினையே கவனத்தில் எடுத்துக்கொள்வோம்.வன் வட்டினுடைய முதல் செக்டர் ஆனது Master Boot Record (MBR) என்று அழைக்கப்படும்.இந்த முதல் செக்டர் ஆனது 512 bytes அளவு மட்டுமே இருக்கும்.அதில் 446 bytes ஆனது boot loder -க்கும் 64 bytes ஆனது partition table -க்கும் , 2 bytes ஆனது Signature க்காகவும் ஒதுக்கப்பட்டிருக்கும்.அந்த 512 bytes அளவில் தான் GRUB பூட் லோடாரானது பதியப்படும்.

GRUB பூட் லோடாரானது மூன்று நிலைகளில் செயல்படுகிறது அவை:

stage 1

stage 2

stage 1.5

stage 1 :

இது பூட் லோடாரினுடைய code ஐ இயக்க தொடங்கும். பூட் லோடாரானது அடுத்த நிலைக்கு செல்லும்(நிலையின் முகவரிக்கு தாவிவிடும்)(செக்டர் எண்)). இந்த செக்டர் எண்ணை GRUB ஆனது குறிப்பிட்ட முகவரியில் GRUB ஐ நிறுவும் போதே பதிந்து வைத்திருக்கும்.வழக்கமாக stage 1.5 யினை குறிப்பிட்டு இருக்கும்.

stage 1.5:

இந்த நிலையில் வன்வட்டில் ஒரு cylinder க்கு எத்தனை செக்டர்கள் பிரிக்கப்பட்டு இருக்கிறது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளும்.அதிகபட்சமாக ஒரு cylinder க்கு 63 செக்டர்கள் இருக்கும்(பார்க்க படம்-இரண்டு). Master Boot Record(MBR) நிறுவியபிறகு 62 செக்டர்கள் free ஆக இருக்கும்.இந்த free ஆக இருக்கும் இடத்தில் ஒவ்வொரு partition னும் என்ன FileSystem களை கொண்டு உள்ளன என்ற தகவல் இருக்கும். stage 2 வினை execute செய்யும்.

stage 2:

இந்த நிலையில் GRUB னுடைய configuration கோப்புகள் point செய்யப்படும்.ஒரு சில படிகளை கடந்த பிறகு பயனாளருக்கு இயங்கு தளங்களை தேர்வு செய்யும் திரை காண்பிக்கப்படும். இறுதியாக நீங்கள் தேர்வு செய்த இயங்குதளத்திற்கு செல்லும். இதை பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட முகவரிகளுக்கு செல்லவும்:

www.dedoimedo.com/computers/grub.html#mozTocId616834
en.wikipedia.org/wiki/GNU_GRUB

இரா.கதிர்வேல்

gnutamil.blogspot.in

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர்.

%d bloggers like this: