ஜேம்ஸ் வாட் : விஞ்ஞானியை காட்டிலும் ஒரு தனியுரிமைவாதி !

1764இன் பிற்பகுதியில், நியூகோமேன் நீராவி எந்திரத்தை சீர் செய்துகொண்டுஇருந்த ஜேம்ஸ் வாட்’இன் மனதில் “நீராவியை விரிவடைய செய்து பின் தனி தனி கொள்கலன்களில் குளிர செய்யலாம்” என்ற எண்ணம் உதித்தது. அடுத்த சில மாதங்களில் இடைவிடாது புதிய எந்திரத்தின் மாதிரியை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டார். 1768இல் தொடர் முன்னேற்றங்கள் மூலமும் கணிசமான கடன்கள் மூலமும், ஆகஸ்ட் மாதம் லண்டன் செல்ல ஏதுவாகவும், தன்னுடைய சிந்தனைக்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்தார். அடுத்த ஆறு மாதங்கள் இந்த காப்புரிமையை பெற கடுமையாக பாடுபட்டார். இறுதியாக அடுத்த வருடம் ஜனவரி மாதம் அவருக்கு காப்புரிமை வழங்கபட்டது. 1775 வரை பெரிய அளவில் உற்பத்தியில் முன்னேற்றம் காணப்படவில்லை. பின் தன் தொழில் கூட்டாளியான பணக்கார தொழிலதிபர், மேத்திவ் பௌல்டனின் கடுமையான முயற்சியின் மூலம்,  பாராளுமன்ற சட்டதின் மூலம் தனது காப்புரிமையை 1800ஆம் ஆண்டு வரை நீட்டித்துகொண்டார். சிறந்த ராஜதந்திரியான எட்மன்ட் புர்கே பாராளுமன்றத்தில் பொருளாதார சுதந்திரம் என்னும் தலைப்பில் தேவையற்ற தனியுரிமை உருவாக்கத்திற்கு எதிராக திறம்பட பேசினார், ஆனால் பலனற்று போனது. வாட்’டின் கூட்டாளியான பௌல்டனின் தொடர்புகள் சிறு கொள்கையினால் தோற்கடிக்க முடியாததாய் இருந்தது.

வாட்’டிற்கு காப்புரிமை கிடைத்து உற்பத்தியை தொடங்கும் வேளையில், ஒரு கணிசமான அளவு சக்தியை போட்டி கண்டுபிடிப்பாளர்களை கவனிப்பதிலேயே செலவிட வேண்டியிருந்தது. 1782 இல் வாட் ஒரு கூடுதல் காப்புரிமையை பெற்றார், அதில் “பின்விளைவுகளின் தேவையால் …தேவையில்லாமல் முந்திக்கொண்டு, [மேத்திவ்] வாஸ்பர்ரோ’வால் மாற்றி வாங்கினார்”. 1790களில், ஒரு மேன்மையான ஹார்ன்ப்ளோவர் எந்திரம் தயாரிக்கப்பட்டபோது, பௌல்டன் மற்றும் வாட் முழு சட்டபூர்வமான அதிகாரத்துடன் அவரை அணுகினர்.

வாட்’டின் காப்புரிமை இருந்த காலத்தில், ஐக்கிய இராச்சியதில் ஒரு வருடத்திற்கு 750 குதிரைத்திறன் கொண்ட நீராவி எந்திரத்தையே தயாரித்தது. வாட்’டின் காப்புரிமைக்கு அடுத்த முப்பதாண்டு காலத்தில், குதிரைத்திறன் ஒரு வருடத்திற்கு 4,000 என்ற அளவில் அதிகரித்தது. மேலும், நீராவி எந்திரத்தின் எரிபொருள் திறன் வாட்’டின் காப்புரிமை காலத்தில் சிறிய அளவே முன்னேறியது; ஆனால் 1810 மற்றும் 1835 ஆகிய வருடங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் அது ஐந்து மடங்கு அதிகரித்தது என அனுமானிக்கப்படுகிறது.

வாட்’டின் காப்புரிமை முடிந்த பிறகு, உற்பத்தி மற்றும் செயல்திறனில் மற்றும் மாற்றம் வெடிக்கவில்லை, மேலும் நீராவி சக்தி தானாகவே தொழில் புரட்சிக்கு ஒரு உந்து சக்தியாகியது. முப்பது ஆண்டுகளுக்கு மேலான காலத்தில் நீராவி எந்திரம் இன்றியமையாத கண்டுபிடிப்புகளின் மூலம் மாற்றம் மற்றும் முன்னேற்றம் அடைந்து, நீராவி ரயில், நீராவி படகு மற்றும் நீராவி ஜென்னியாக பரவலான பயன்பாட்டிற்கு வந்தது. முக்கிய கண்டுபிடிப்பான அதிக அழுத்த நீராவி எந்திரத்தின் உருவாக்கத்தை வாட் தனது காப்புரிமை கொண்டு நிறுத்தினார். வில்லியம் புல், ரிச்சர்ட் ட்ரவிடிக் மற்றும் அர்தூர் வூல்ப் ஆகியோரது நீராவி எந்திரத்தின் நிறைய புது முன்னேற்றங்கள் 1804 களில் கிடைத்தது: இந்த முன்னேற்றங்கள் முன்னதே கண்டுபிடிக்கப்பட்டாலும் பௌல்டன் மற்றும் வாட்’டின் காப்பிரிமை முடியும் வரை சோம்பல் நிலையில் இருந்தது. எந்த கண்டுபிடிப்பாளரும் ஜோனாதன் ஹார்ன்ப்ளோவர்’க்கு நிகழ்த்த விதி தமக்கு நிகழ்வதை விரும்பவில்லை.

வாட் காப்புரிமை திட்டத்தை முரண்பாடாக சட்ட தடியை பயன்படுத்தி போட்டியை முறியடித்தார், ஆனால் ஒரு மேன்மையான நீராவி எந்திரத்தை தயாரிக்கும் தனது முயற்சி, எந்த காப்பிரிமை திட்டத்தால் அவர் தன் போட்டியாளகளை தடுத்தாரோ அதே காப்புரிமை திட்டத்தால் தனக்கே இடையுறானது. நியூகோமேன் எந்திரத்தின் முக்கியமான குறைபாடு என்னவென்றால், அதனால் தொடர்ந்த நிலையான சுழற்சியை தர இயலாது. இதற்க்கு ஒரு வசதியான வழி, சுழற்சி மற்றும் விசையாள்சில்லு ஆகியவற்றை சேர்த்து பயன்படுத்துவதே ஆகும், ஆனால் அந்த முறை ஜேம்ஸ் பிக்கர்டு’ஆல் காப்புரிமை பெறப்பட்டது, அதனால் அதை வாட் பயன்படுத்த முடியவில்லை. வாட் பல முயற்சிகளை மேற்கொண்டு சிறந்த முறையில் சுழற்சி முறைக்கு மாற்றை கண்டுபிடிக்க முயன்றார், ஆனால் அவர் பிக்கர்டின் அதே தீர்வுக்கு வந்தார். ஆனால் காப்புரிமை இருந்ததால் குறைந்த திறன் படைத்த ஒரு மாற்று எந்திரக் கருவியான “சன் மற்றும் ப்லநெட்” பற்சக்கரத்தை பயன்படுத்தினார். 1794 இல் பிக்கர்டு’இன் காப்புரிமை காலம் முடிந்தபிறகே, பௌல்டன் மற்றும் வாட் ஒரு மேன்மையான தொழில்நுட்பத்தாலும் பொருளாதாரத்தாலும் சிறந்த சுழற்சி முறையை பயன்படுத்த முடிந்தது.

வாட் பேரரசுசில் காப்புரிமையின் காலாவிதியின் விளைவுகள் வியப்பளிக்கும். எதிர்பார்க்கப்பட்டது போல, காப்புரிமை காலாவிதியான பின்பு நிறைய தொழிலகங்கள் வாட் முறையை பயன்படுத்தி நீராவி எந்திரத்தை தயாரிக்க தொடங்கினர். எனினும், வாட்’டின் போட்டியாளர்கள் “கொள்கையால் சிறந்த தரத்தைவிட மலிந்த விலையை முதன்மைபடுத்தினர்”. இதன் விளைவால், தொழிலில் இருந்து துரத்தபடாமல் “பௌல்டன் மற்றும் வாட் பல ஆண்டுகளாக கூடுதல் விலைக்கே விற்று அதிக வியாபாரத்தை பெற்றனர்”.

இதில் ஒரு உண்மை என்னவென்றால், பௌல்டன் மற்றும் வாட் தங்களுடைய காப்புரிமை காலாவதியான பின்பே தங்களுடைய நீராவி எந்திரத்தின் உற்பத்தியை தொடங்கினர். அதற்கு முன்பு அவர்களுடைய முதன்மை பணி உரிமத்தின் வாயிலாக நிறைய தனியுரிம ஆதாய தொகை பெறுவதாகவே இருந்தது. சார்பற்ற ஒப்பந்ததாரர்கள் அனேக பாகங்களை உற்பத்தி செய்தனர், பௌல்டன் மற்றும் வாட் அதனை விலைக்கு வாங்கியவர்கள் அதனை பொருத்துவதை வெறும் மேற்பார்வை செய்தனர்.

அனேக வரலாறுகளில், ஜேம்ஸ் வாட் ஒரு ஆற்றல் படைத்த தொழில் புரட்சியை ஆரம்பித்த கண்டுபிடிப்பாளராக அறியப்படுகிறார். ஆனால் உண்மை வேறு பொருள் விளக்கத்தை அறிவுறுத்துகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் பின் பாதியில் நீராவி சக்தியை முன்னேற்ற பாடுபட்ட ஒரு அறிவார்ந்த விஞ்ஞானி வாட் ஆவார். ஒரு படி முன்னோக்கிய பின்பு, அவர் மேன்மையான கண்டுபிடிப்புக்காக முன்னோக்கப்படாமல், சட்டத்தை தன்னலப் படுத்தியதற்காக முன்னிலைப்படுத்த படுகிறார். அவருடைய தொழில் கூட்டாளியும் திறமான நாடாளுமன்ற தொடர்புகளை கொண்ட பணக்கார மனிதர், செய்த உதவி சிறிதானதல்ல.

வாட்டின் காப்புரிமை அவருடைய கண்டுபிடிப்பு திறமைக்கு, வரலாறு கூறுவது போல இன்றியமையாததாக இருந்ததா? அல்லது அவர் சட்ட அமைப்பை கொண்டு போட்டியை தடுத்து தொழில் புரட்சியை பத்து அல்லது இருபது ஆண்டுகள் தள்ளி வைத்தாரா? விரிவாக பார்ப்போமேயானால், தற்போதுள்ள அறிவுசார் சொத்து அமைப்பில் இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன – காப்புரிமை மற்றும் பதிப்புரிமை – அதில் உள்ள பிழைகளோடு ஒரு முக்கிய அம்சமாக வைத்து கொண்டுதான் புதுமைகளையும் கண்டுபிடிப்புகளையும் கொண்டாட வேண்டுமா? அல்லது இவையெல்லாம் தேவையற்ற கொடுமையாக, பழைய கால அரசு தன் அரசவையினருக்கு வழக்கமாக வழங்கிய ஏகபோக உரிமையின் எச்சமா? இந்த கேள்விக்கு தான் நாம் விடை தேடவேண்டும்.

வாட்டின் வழக்கை குறிப்பாக பார்த்தால், 1769இல் வழங்கப்பட்ட அதிலும் குறிப்பாக 1775இல் வழங்கப்பட்ட காப்புரிமை நீராவி எந்திரத்தின் மொத்த உற்பத்தியை தாமதபடுத்தியது: புதிய கண்டுபிடிப்புகள் காப்புரிமை முடியும்வரை நிறுத்தப்பட்டது; வாட்டின் ஏகபோக காலத்தின் போது வெகு சில எந்திரங்களே உற்பத்தி செய்யப்பட்டன. காப்புரிமை முடிந்த பின் உடனடியாக நிகழ்ந்த கண்டுபிடிப்பின் எண்ணிக்கையை பார்க்கும்போது, வாட்டின் போட்டியாளர்கள் தங்கள் கண்டுபிடிப்பை வெளியிடும் முன் காப்புரிமை முடியும்வரை காத்திருந்ததாக தெரிகிறது. இது நமக்கு வியப்பை தராது: புதிய நீராவி எந்திரம் வாட்டின் எந்திரத்தை காட்டிலும் எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும் அது தனி குளிர்வி யோசனையை செயல்படுத்த வேண்டும்.  1775இல் பௌல்டன் மற்றும் வாட்டிற்கு கொடுக்கப்பட்ட ஏகபோக காப்புரிமையால், மிக பெரிய சமுதாய மற்றும் பொருளாதார மதிப்பைக் கொண்ட நிறைய முன்னேற்றங்களை செயல்படுத்த முடியாமல் போனது.  அதே வேளையில், சுழற்றி மற்றும் விசையாள்சில்லுவை சேர்க்க முடியாதபடி பிக்கர்ட்டின் காப்புரிமை தடுத்ததால், 1794 வரை பௌல்டன் மற்றும் வாட்டின் எந்திரம் குறைந்த செயல்திறன் கொண்டதாக இருந்தது.

அதே வேளையில், வாட்டின் ஆபாரமான கண்டுபிடிப்பு திறமை தவருதாலாக பயன்படுத்தப்பட்டுள்ளது: அவர் தன் உற்பத்தியிலும் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தாமல், சட்ட அமைப்பை கொண்டு தன் ஏகபோகத்தை நிலைநாட்டவே பாடுபட்டதாக காண்கிறோம். ஒரு கண்டிப்பான பொருளாதார பார்வையில் பார்போமேயானால் வாட்டிற்கு இந்த நெடுநாள் காப்புரிமை தேவைபட்டிருக்கவில்லை – காப்புரிமை முடிவதிற்கு பதினேழு ஆண்டிற்கு முன்பே, அதாவது 1783லேயே அவருடைய நிறுவனம் உடைந்து விட்டது. உண்மையாகவே பௌல்டன் மற்றும் வாட் சந்தையில் முதலாவதாக இருந்ததால் அவர்களால் ஒரு கணிசமான தவணையை பெற முடிந்தது, அவர்களுடைய போட்டியாளர்களுக்கு நீராவி எந்திரத்தை உருவாக்கத்தை கற்றுக்கொள்ளவே முப்பது ஆண்டுகள் ஆனது என்பது ஒருபுறம்.

போட்டியாளர்களை ஒடுக்கவும் சிறப்பு சலுகைகளை பெறவும் மேற்கொள்ளப்பட்ட தேவையற்ற முயற்சியை பொருளாதார வல்லுனர்கள் கட்டண வசூலிப்பு முறையாக சித்தரிக்கின்றனர். வரலாறு மற்றும் போது உணர்வு இதை சட்டதின் ஏகபோகத்தினால் விஷமாக்கப்பட்ட பழமாக காட்டுகிறது. 1769இல் வாட் காப்புரிமையை நீட்டிக்க மேற்கொண்ட முயற்சிகள், படுமட்டமான கட்டண வசூலிப்பு முறையின் உதாரணம் ஆகும்: ஏற்கனவே மேற்கொண்ட கண்டுபிடிப்புக்கு இந்த காப்புரிமை நீட்டிப்பு தேவையற்றதாகும். இதன்மூலம் வாட் காப்புரிமையை தன் போட்டியாளர்களாகிய ஹோர்ன்ப்ளோவர், வாஸ்பாரோ ஆகியோரை ஒடுக்க பயன்படுத்தினார் என்பது தெளிவாக தெரிகிறது. ஹோர்ன்ப்ளோவர் எந்திரம் வாட் எந்திரத்தின் முன்னேற்றமாக ஒன்றுக்கும் மேற்ப்பட்ட உருளைகளை உள்ளடக்கிய கூட்டு எந்திரமாக சிறந்த ஒன்றாக இருந்தது. பௌல்டன் மற்றும் வாட்டின் வடிவமைப்பு அல்ல, ஹோர்ன்ப்ளோவர் வடிவமைப்பே காப்புரிமை முடிந்த பின்னர் நடந்த முன்னேற்றங்களுக்கு அடித்தளமாக அமைந்தது. ஹோர்ன்ப்ளோவர் வாட்டின் முந்தைய கண்டுபிடிப்பான “தனி குளிர்வி”யை பயன்படுத்தியதால், பௌல்டன் மற்றும் வாட் அவரை நீதிமன்றத்தால் தடுத்து நீராவி எந்திரத்தின் முன்னேற்றத்தை தடுத்தனர். தனி குளிர்வி என்ற பயனுள்ள கண்டுபிடிப்பின் மேலிருந்த ஏகபோகம், அதனை ஒத்த பயனுள்ள கண்டுபிடிப்பான கூட்டு எந்திரத்தை தடை செய்து பொருளாதார வளர்ச்சியை தடை செய்தது. புதிய கண்டுபிடிப்பை தடை செய்யும் இந்த நிலையை அறிவுசார் சொத்துரிமையின் போதாமை என்று கூறலாம்.

இறுதியாக, வாட்டின் காப்புரிமை முடியும் முன் நீராவி எந்திரம் வெகு மெதுவாகவே வளர்ந்தது. விலையை அதிகமாக வைத்தும், மற்றவர்களை குறைந்த விலையில் அல்லது சிறந்த நீராவி எந்திரத்தை தயாரிக்கவிடாமல் செய்தும், வாட் மற்றும் பௌல்டன் நிறைய  செல்வத்தை சேர்த்ததொடு, பொருளாதார வளர்ச்சியையும் குறைய செய்தனர்.

காப்புரிமையின் பயன்களை சிதைக்ககூடிய வழக்காக ஜெம்ஸ் வாட்டின் கதை உள்ளது, ஆனால் இது ஒரு அசாதாரமான ஒரு நிகழ்வு அல்ல. புதிய யோசனை புதிய பரிமானத்தில் ஒரு வாய்ப்பாக கண்டுபிடிப்பாளருக்கு கிடைக்கிறது. பல வருடங்களுக்குப் பின் சட்டதின் கூர்மையுடன் அதிகமான வளத்துடனும் வேறு எதையும் தவிர சொத்தை அதிக பலப்படுத்துத்த காப்புரிமை கிடைக்கிறது. காப்புரிமை கிடைத்தப்பின், பொருளாதார முன்னேற்றத்தை தடுக்கவும் போட்டியாளர்களை துன்புறுத்தவும் அதை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர்.

இந்த பார்வையில் பார்த்தால் வாட் தொழில் புரட்சியை தகர்க்க முனைந்தவராக தெரியலாம், இது புதிதல்ல இது இவரால் உருவாக்கப்பட்டதும் அல்ல. பெர்டிக் ச்கேரேர் என்னும் காப்புரிமையை ஆதரிக்கும் மிக சிறந்த கல்வியாளர், பௌல்டன் மற்றும் வாட் ஆகியோரின் கதையை ஆராய்ந்தப் பின், 1986இல் தனது முடிவை பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

காப்புரிமை பாதுகாப்பு என்னும் ஒன்று இல்லையென்றால் .. பௌல்டன் மற்றும் வாட் தாங்கள் கையாண்ட தொழில் யுக்தி அல்லாத வேறு ஒரு முற்றிலும் மாறுபட்ட தொழில் யுக்தியை கையாளுமாறு தள்ளப்பட்டு இருப்பர். நிறுவனத்தின் அனேக லாபம் எந்திரத்தை தயாரித்ததால் வராமல் எந்திரத்தை பயன்படுத்தியதற்காக கொடுக்கப்பட்ட உரிமத் தொகையாலேயே வந்தது, காப்புரிமை பாதுகாப்பு இல்லாமல் இப்படி உரிமத் தொகை வாங்குவது சாத்தியம் இல்லை.  இதற்கு மாற்று என்னவென்றால் உற்பத்தி மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை லாபத்தின் முதல் வழியாக ஆக்குவதே ஆகும், 1790களில் தனி குளிர்யூட்டியின் காப்புரிமை முடிந்தப்பின் இதுதான் நடந்தது. இதன் மூலம் பௌல்டன் மற்றும் வாட் ஆகியோரின் காப்புரிமை வழக்கு 1790களில் நேரடியான தொழில்நுட்ப வளர்ச்சியை துண்டவில்லை என்று உறுதியான முடிவாக கூறமுடியும். பௌல்டன் மற்றும் வாட் பிற எந்திர உற்பத்தியாளர் தனி குளுர்யூட்டியை தயாரிப்பதற்கான உரிமத்தை தர மறுத்ததன் மூலம் வளர்ச்சியையும் முன்னேற்றங்கள் புகுத்துவதையும் தடுத்தனர்.

அடிகுறிப்புகளுக்கு fsftn.org/content/james-watt-monopolist-more-inventor என்ற தளத்தை பார்க்க.

நன்றி,
அருண் பிரகாஷ்
செயற்குழு உறுப்பினர்,
கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ் நாடு

%d bloggers like this: