‘KDE Burn Baby Burn’ என்பதன் சுருக்கமே K3b என்பதாகும். விண்டோஸ் இயங்குதளங்களில் CD/DVD யில் தகவல்களை எழுதுவதற்கு அல்லது பதிவதற்கு Nero மென்பொருள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல லினக்ஸ் இயங்குதளங்களில் K3b மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. விண்டோஸ் இயங்குதளங்களில் பயன்படுத்தப்படும் Nero ஒரு வணிக மென்பொருள் ஆகும். ஆனால் K3b ஒரு ஓப்பன் சோர்ஸ்(அகம் திறந்த) மென்பொருள் ஆகும். K3b யானது வரைகலை இடைமுகப்புடன் மிகவும் அழகாக உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுவாக நாம் CD/DVD யில் எந்தெந்த பயன்பாட்டுக்களை மேற்கொள்ளவோமோ அத்தனை வகையான பயன்பாடுகளும் K3b யில் கிடைக்கிறது. மேலும் Disc Cloning என்று சொல்லக்கூடிய Disc to Disc Copying வேலையையும் K3b யில் நாம் மேற்கொள்ள முடியும்.
சாதரணமாக விண்டோஸ் பயனாளர்கள் Nero வில் மேற்கொள்ளக்கூடிய
-
Data CD/DVD உருவாக்குதல்
-
Audio CD/DVD உரு
வாக்குதல்
-
Video CD/DVD உருவாக்குதல்
-
ISO Image களை எழுதுதல்
-
CD/DVD Copying (பிரதியெடுத்தல்)
போன்ற அனைத்து வகையான அடிப்படை பயன்பாட்டையும் நாம் K3b யில் மேற்கொள்ளலாம்.
K3b யின் முக்கிய அம்சங்கள்:
-
Audio CD burning
-
Data Cd/DVD burning
-
CD Text support
-
Blu-ray [9]/DVD-R/DVD+R/DVD-RW/DVD+RW support
-
CD-R/CD-RW support
-
Mixed Mode CD (Audio and Data on one disk)
-
Multisession CD
-
Video CD/Video DVD authoring
-
eMovix CD/eMovix DVD
-
Disk-to-disk CD and DVD copying
-
Erasing CD-RW/DVD-RW/DVD+RW
-
ISO image support
உபுண்டு 12.04/12.10/13/04 பதிப்புகளில் K3b மென்பொருளை நிறுவுதல்:
படி 1:
முனையத்தை(Terminal) திறந்து கீழ்காணும் கட்டளைகளை ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக கொடுக்கவும்
sudo apt-get update
sudo apt-get install k3b
(இந்த கட்டளைகளை இயக்கும் போது கடவுச்சொல் கேட்கும் அப்போது தங்களுடைய கடவுச்சொல்லை கொடுக்கவும்)
படி 2:
K3b யை வெற்றிகரமாக நிறுவிய பின் Dash Home க்குச் சென்று K3b என தட்டச்சு செய்தால் உங்களுக்கு K3b கிடைக்கும்.(படத்தைப் பார்க்கவும்)
– இரா.கதிர்வேல்
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர்