கணியம் அறக்கட்டளை பெப்ரவரி 2019 மாத அறிக்கை
தொலை நோக்கு – Vision
தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல்
பணி இலக்கு – Mission
அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.
நிகழ்ச்சிகள்
- NLP பயிற்சிப் பட்டறை – SRM வள்ளியம்மை பொறியியற் கல்லூரி, சென்னை *சங்க இலக்கியம் – நூல்களுக்கான அட்டைப்படம் உருவாக்கம்
1000 மின்னூல்கள்
1000 மின்னூல்களை ஒருங்குறி வடிவில் வாங்குவதற்கான நன்கொடை வேண்டுகோள் இங்கே – www.kaniyam.com/call-for-donation-to-buy-1000-books-in-unicode-format/ இத்திட்டத்திற்கு தொடர்ந்து நன்கொடை அளித்து வரும் அனைவருக்கும் நன்றிகள்.
செயல்கள்
எண் | செயல்கள் | இந்த மாதம் | மொத்தம் | பங்களித்தோர் |
---|---|---|---|---|
1 | FreeTamikEbooks.com வெளியீடுகள் | 0 | 506 | |
2 | கணியம் கட்டுரைகள் | 14 | 709 | நு.நித்யா, இரா. அசோகன் – கலாராணி – ச.குப்பன் |
3 | கணியம் ஒலியோடை | 1 | 10 | கமல்,ராகுல் |
4 | அரசியல் உரைகள் ஒலியோடை | 1 | 17 | ஆழி செந்தில்நாதன் |
5 | வாசகசாலை ஒலியோடை | 16 | 16 | வாசகசாலை குழு |
விக்கிமூலம்
விக்கிமூலத்தில் கணியம் திட்டத்துக்கென ஒரு பக்கம் உருவாக்கப்பட்டது. அதில் திட்டத்தின் குறிக்கோள்கள், பங்களிப்போருக்கான வழிகாட்டுதல்கள் எழுதப்பட்டன. இது வரை 8 பேர் இணைந்துள்ளனர். ஒரு மின்னூல் முழுமையாக மெய்ப்பு பார்க்கப்பட்டு, சரி பார்க்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 4 மின்னூல்கள் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளன. விரைவில் அவை சரி பார்க்கப்படும். மின்னூல்களின் பட்டியல் இங்கே எழுதப்படுகிறது.
காண்க ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:கணியம்_திட்டம்
கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியீடுகள்
- சௌமியா – குழந்தைக் கதைகள் www.youtube.com/user/angel1992sowme is released
- சந்தோஷ் குமார் – முகநூல் பதிவுகள் – github.com/KaniyamFoundation/CreativeCommonsAnnouncements/issues/3
- குவைத் தமிழோசை கவிஞர் மன்றம் – github.com/KaniyamFoundation/CreativeCommonsAnnouncements/issues/4
- பெ. மணியரசன் – github.com/KaniyamFoundation/CreativeCommonsAnnouncements/issues/1
- கவிஞர் வித்யாசாகர் – github.com/KaniyamFoundation/CreativeCommonsAnnouncements/issues/2
கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் பலரும் தமது படைப்புகளை வெளியிடக் கோரி, உதவி வரும் அன்வர், கலீல் ஜாகீர் இருவருக்கும் நன்றி
மென்பொருட்கள்
- Youtube அல்லது நம்மிடம் உள்ள ஒலிக்கோப்பை ஒலியோடையாக எளிதில் வெளியிடும் மென்பொருள் உருவாக்கப்பட்டது. மூலநிரல் – github.com/KaniyamFoundation/YouTube2Podcast இதன் மூலம் விரைந்து பல ஒலியோடைகளை வெளியிடலாம். உருவாக்கிய கலீல் ஜாகீருக்கு நன்றி. CommandLine ல் இயங்கும் இதை இணைய வழி மென்பொருளாக, அனிதா மேம்படுத்தி வெளியிட்டுள்ளார். மூலநிரல் – github.com/KaniyamFoundation/YouTube2Podcast-web
- விக்கிசனரியில் உள்ள வார்த்தைகளை ஒலியாகப் பதிவு செய்ய ஆன்டிராய்டு செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் சில பிழைகள் களையப்பட்டன. தொடர்ந்து மேம்படுத்தப் பட்டு வருகிறது.
- தமிழ் எழுத்துப்பிழைத்திருத்தி உருவாக்குவதற்கான ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. மொழியியல் அறிஞர் திரு. பழனி அவர்கள் பெயர்ச்சொற்களுக்கான விதிகளை அனுப்பியுள்ளார். அவற்றை நிரலாக்கம் செய்ய திட்டமிடுகிறோம். பாண்டிச்சேரியிலிருந்து நண்பர்கள் கமல், பிரசன்னா இது பற்றிய ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.
புதிய திட்டங்கள்
பல்வேறு புதிய திட்டங்களுக்கான உரையாடல்களை இங்கே பதிந்து வருகிறோம்.
- ஈழம் தமிழப்பனாரின் மின்னூல்களை வெளியிடுதல்
- மிர், ராதுகா, முன்னேற்றப் பதிப்பக நூல்களை மின்னூலாக்கம் செய்தல்
- DIY Scaner
- PDF கோப்புகளுக்கென ஒரு ஆவணகம்
- ஆளுமைகளின் உரைகளை ஆவணப்படுத்துதல்
- புதுக்கோட்டை ஞானாலயா நூல்களை scan செய்தல்
- தமிழ் நிரலாக்கத்துக்கான முழு நேரப் பணியாளர்
- புத்தகங்கள் அனுமதி பெற பயணம்
போதுமான நன்கொடைகள், சரியான திட்டமிடல்கள், தகுந்த பங்களிப்பாளர்களைப் பெற்ற பின் இத்திட்டங்கள் செயல் வடிவம் பெறும்.
இம்மாத நன்கொடையாளர்கள்
எண் | பெயர் | தொகை |
---|---|---|
1 | பழனி ராஜா | 250 |
2 | சுவாமிநாதன் சேது | 1000 |
3 | வை. ராஜசேகர் | 1000 |
4 | கலீல் ஜாகீர் | 100 |
5 | ஜெயகிருஷ்ணன் | 200 |
6 | பெயரிலி | 100 |
7 | மணி வெங்கட்ராமன் | 1000 |
8 | வாரண்ட் பாலா | 1000 |
9 | மணிவண்ணன் சண்முகம் | 1000 |
10 | ராமதாஸ் வீரப்பா | 500 |
11 | தினேஷ் கார்த்திக் | 5000 |
12 | கே சி ரகுநாதன் | 2000 |
மொத்தம் – ரூ 13,500
இணைய வளங்கள் நன்கொடைகள்
- நூலகம் அறக்கட்டளை – சர்வர் (ரூ 350/மாதம்)
- E2E Networks – சர்வர் ( ரூ 730/மாதம்)
சென்ற மாத இருப்பு – ரூ 1,12,848
செலவுகள்
- லெனின் குருசாமி – ரூ 1650 – கணியம் அறக்கட்டளை ரசீது புத்தகங்கள்
மொத்த செலவுகள் – ரூ 1650
மொத்தம் கையிருப்பு – ரூ 1,12,848 + ரூ 13,500 – ரூ 1650 = ரூ 1,24,698
இந்த இணைப்பில் அனைத்து வரவு, செலவு விவரங்கள் பகிரப்படுகின்றன. docs.google.com/spreadsheets/d/1zBXZzjYP_WKfm4y3EpTYw5yOTOeA-sSp8mcNjjNAUe0/edit?usp=sharing
வங்கிக் கணக்கு விவரங்கள்
Kaniyam Foundation
Account Number : 606 1010 100 502 79
Union Bank Of India
West Tambaram, Chennai
IFSC - UBIN0560618
- உங்கள் நன்கொடைகளை இந்தக் கணக்குக்கு அனுப்பி, கணியம் அறக்கட்டளை செயல்களை ஆதரிக்க வேண்டுகிறோம்.
- நன்கொடைகளை அனுப்பியபின், உங்கள் பெயர்,நன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு அனுப்ப வேண்டுகிறோம்.
மேலும் விவரங்களுக்கு எழுதுக – kaniyamfoundation@gmail.com