லிப்ரெஆபிஸ் இணையவழி டெஸ்டிங் ஹேக்கத்தான்

கட்டற்ற அலுவலகத் தொகுப்பாகிய லிப்ரெஆபிஸ்,தி டாக்குமென்ட் பவுண்டேஷன் அறக்கட்டளையின் ஒரு செயல்திட்டம்.
“லிப்ரெஓபிஸ் ஒரு மென்பொருள் மட்டுமல்ல. அது மக்களைப் பற்றியது; பண்பாட்டைப் பற்றியது; உருவாக்கத்தை, பகிர்ந்துகொள்வதை, உடன் உழைப்பைப் பற்றியது” என்பதைத் தன்னுடைய மந்திரமாகக் கொண்டிருக்கும் லிப்ரெஆபிஸ் மென்பொருளைச் சோதிக்கும் (டெஸ்டிங்) ஹேக்கத்தான் இணையவழி நடக்க இருக்கிறது.

நிகழ்வைப் பயிலகம் கி. முத்துராமலிங்கம் ஒருங்கிணைக்கிறார். நிகழ்வில் பின்லாந்தைச் சேர்ந்த லிப்ரேஆபிஸ் பொறுப்பாளர் திரு இல்மாரி(Ilmari) கலந்து கொண்டு டெஸ்டிங் பற்றிய அறிமுகத்தைக் கொடுக்கிறார். அவருடைய அறிமுகத்தைத் தொடர்ந்து, பங்கேற்பாளர்கள் லிப்ரெஆபிஸ் மென்பொருளைத் தங்கள் கணினியில் நிறுவி நான்கு மணி நேரம் சோதிக்கவிருக்கிறார்கள்.

அறிமுக உரை: திரு. இல்மாரி, பின்லாந்து
நேரம்: இந்திய நேரம் முற்பகல் 11.30 – 12.30 , மே 21, 2022
இணைப்பு: jitsi.documentfoundation.org/ilugc
அறிமுக உரையைத் தொடர்ந்து லிப்ரெஆபிஸ் சோதனையில் பங்கேற்பாளர்கள் ஈடுபடுவார்கள்.
மறு கூடுகை: இந்திய நேரம் மாலை 4.30 – 5.15 மணி வரை
இணைப்பு: meet.jit.si/LibreOffice_testing_hackathon
மறு கூடுகையின் போது பங்கேற்பாளர்கள் தாங்கள் செய்த சோதனைகளின் முடிவுகளைத் தெரிவிக்க வேண்டும்.

குறிப்பு:
1. அறிமுக உரை உரையாளருக்குத் தமிழ் தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் இருக்கும்.
2. உங்கள் ஐயங்களை ஆங்கிலத்தில் / தமிழில் கேட்கலாம்.
3. நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள், wiki.documentfoundation.org/QA/GetInvolved தளத்தைப் படித்து வருவது இன்றியமையாதது. அக்கருத்துகளில் கேள்விகள், ஐயங்கள் இருந்தால் நிகழ்வில் எழுப்பலாம்.

3 thoughts on “லிப்ரெஆபிஸ் இணையவழி டெஸ்டிங் ஹேக்கத்தான்

  1. Pingback: LibreOffice Testing Hackathon – Online | Going GNU

  2. Pingback: லிப்ரெஆபிஸ் டெஸ்டிங் ஹேக்கத்தான் – சாதித்துக் காட்டிய நம்மவர்கள்! – கணியம்

  3. Pingback: Community Member Monday: Muthuramalingam Krishnan (Tamil project) - The Document Foundation Blog

Leave a Reply