இணைய வழி GNU/Linux அறிமுக வகுப்பு

வணக்கம்,

கணியம் அறக்கட்டளை சார்பாக இணைய வழியில் GNU/Linux அறிமுகம் தொடர் வகுப்பு நடத்த உள்ளோம்.

கால அளவு – 1 மாதம் ( வார நாட்கள் மட்டும். தேவையெனில் வார இறுதியிலும்.)

நேரம் – தினமும் காலை 6.30 – 7.30 இந்திய நேரம் (IST) .
இரவு 8.00 – 9.00 கிழக்கு நேர வலயம் (EST)

நன்கொடை – உங்கள் விருப்பம்

வகுப்பு தொடங்கும் நாள் – பிப்ரவரி 1 2023

தொடர்புக்கு – KaniyamFoundation@gmail.com

ஏதேனும் ஐயங்களுக்கு –

சீனிவாசன் +91984179546 EIGHT ( வாட்சப் அழைப்பு மட்டும் )
தனசேகர் +91995252198 ZERO ( நேரடி அழைப்புகளுக்கு )

வகுப்பின் காணொளி பதிவுகளை தினமும் www.youtube.com/@kaniyamfoundation யுடியூப் சேனலில் பதிவேற்றுவோம்.

இவ்வகுப்புகள் GNU/Linux க்கான அறிமுகம் மட்டுமே . இவை எந்த வித certification தேர்வுகளுக்கும் அல்ல.

GNU/Linux என்பது கணினியில் பயன்படுத்தக் கூடிய ஒரு இலவச, கட்டற்ற, இயக்குதளம் ஆகும். இதில் நமது கணினி தேவைகளுக்கான பல்லாயிரம் மென்பொருட்கள் இலவசமாகவும், மூல நிரலுடன் (Open Source) ஆக கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம், கணினியை மிகவும் ஆற்றலுடன் பயன்படுத்தலாம். GNU/Linux ஆனது மாணவர்களுக்கும், கணினித் துறையில் உள்ளோருக்கும், கணினித் துறையில் நுழைய விரும்புவோருக்கும் பல வழிகளில் பயன்படும்.

பாடத்திட்டம்
– கட்டற்ற மென்பொருள் – அறிமுகம்
– GNU/Linux – அறிமுகம்
– GNU/Linux – நிறுவுதல்
– File System Hierarchy
– Command Line
– File/Folder Management
– User Management
– Permissions
– Process Management
– Text Editors
– Text Processing
– Installing Applications
– Introduction to networking
– Apache webserver introduction
– MySQL introduction
– Installing WordPress

வகுப்புக்கு சில நிபந்தனைகள் உள்ளன.

  1. வகுப்பில் பங்கு பெறுவோர், தமது கணினியில் ஏதேனும் ஒரு GNU/Linux ( LinuxMint அல்லது Ubuntu ) கட்டாயம் நிறுவ வேண்டும். நிறுவ உதவி செய்வோம்.
    நாம் கற்றுக் கொள்ளப் போவது, லினக்ஸ் பயன்படுத்துவது எப்படி என்று. அதற்கு லினக்ஸ் நிறுவி இருத்தல் மிக அவசியம்.
  2. இணைய வசதி இருக்க வேண்டும்
  3. கற்றவற்றை தினமும் செய்து பார்த்து பழக வேண்டும். அவற்றை தினமும் ஒரு வலைப்பதிவாக எழுதி வெளியிட வேண்டும். வகுப்புக்கு ஒரு மணி நேரம். அவற்றை செய்து பார்த்து, வலைப்பதிவு எழுத ஒரு மணி நேரம் தினமும் தேவைப்படும்.

கலந்து கொள்ள விரும்புவோர், கீழே உள்ள படிவத்தை நிரப்ப வேண்டுகிறோம்.
அல்லது KaniyamFoundation@gmail.com க்கு உங்களைப் பற்றிய அறிமுகத்துடன் ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டுகிறோம்.

%d bloggers like this: