கட்டற்ற மென்பொருளும் அறிவியலும் – பகுதி II

லினக்ஸில் கட்ட வரைபடங்கள் (Graph Plotting Tools in Linux)

Graph என்று சொல்லப்படும் வரைபடங்களை பள்ளி வகுப்புகளிலிருந்து அனைவரும் அறிந்திருப்பர். பெறப்பட்ட தரவுகளை (Data) வரைபடத்திற்கு மாற்றுவதன் மூலம் எளிதாக தரவுகளை ஆராயவும் மேலும் பல தகவல்களையும் பெறவும் முடியும். இது புள்ளியியல் (Statistics) துறையிலிருந்து அறிவியல் சார்ந்த பல துறைகள் வரை பயன்படுகிறது. மிக அதிகப்படியான தரவுகளை (Very large data analysis) வரைபடத்திற்கு மாற்றவும், ஒப்பு செயலாக்கத்திற்கும் (Simulation) மீகணினிகள் (Super Computer) பயன்படுத்தப்படுகின்றன. இது போன்று வரைபடங்கள் வரைவதற்கு Origin வர்த்தக மென்பொருளையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். பொறியியல் மாணவர்கள் Matlab யை பயன்படுத்தி வருகின்றனர்.

லினக்ஸில் பல கட்டற்ற மென்பொருள்கள் Origin மற்றும் Matlab க்கு மாற்றாக உள்ளன. லினக்ஸில் கிடைக்கும் libreoffice calc, gnumeric போன்றவற்றின் மூலம் வரைபடங்களை உருவாக்க இயலும். இவை தவிர வரைபடத்திற்கென்றே பல மென்பொருள்கள் கிடைக்கின்றன.

GNUplot

இது கட்டளை வரி இடைமுகப்பு (CLI) கொண்ட பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு கட்டற்ற மென்பொருளாகும். இதில் 2D, 3D வரைபடங்களை உருவாக்க இயலும்.

இதனை உபுண்டு லினக்சில் நிறுவ முனையத்தில்

 

sudo apt-get install gnuplot

என்று செயல்படுத்துவதன் மூலம் நிறுவலாம். முனையத்தில்(terminal) gnuplot என்று உள்ளீடு செய்வதன் மூலம் இயக்கலாம்.

எ.கா. plot sin(x)/x

என்று உள்ளீடு செய்தால் தோன்றும் திரையில் sin function plot செய்யப்படும். இதனை பட கோப்பாக சேமித்துக் கொள்ளலாம்.

மேலும் அறிய : www.gnuplot.info/

 

 

 

GNU octave

GNU octave ஒரு கட்டளை வரி இடைமுகப்பு கொண்ட கட்டற்ற மென்பொருள். இது எண்சார் கணிப்பு என்றழைக்கப்படும் numerical computations சார்ந்த பணிகளுக்குகென்று உருவாக்கப்பட்டது. இது மேசைக் கணினிகள் மட்டுமின்றி மீகணினிகளிலும் (Supercomputer) இயங்க வல்லது.

மேலும் அறிய : www.gnu.org/software/octave/

 

Matplotlib

இது ஒரு python library ஆகும். இதுவும் கட்டளை வரி இடை முகப்பு கொண்டது. இதில் GNUplot போலவே 2D, 3D வரைபடங்களை உருவாக்க இயலும். இவை தவிர அசைந்தாடும் வரைபடங்களையும் (animated graphs) உருவாக்கலாம். வர்த்தக மென்பொருளான Matlab, Mathematicaபோன்று இயங்கக்கூடியது. இதில் வரைபடத்தை உருவாக்க தேவையான தரவுகளை ஒரு எழுத்து கோப்பில் *.py நீட்சியுடன் சேமித்து ( text file), அதனை python நிரலாக்க மொழியின் மூலம் வரைபடத்தை உருவாக்கலாம். Matplotlib க்கான நிரலாக்க அமைப்பை (programing structure) matplotlib.org/ இணையதளத்திலும் மேலும் பல இணையதளங்களின் மூலமும் அறியலாம்.

 

Scidavis

கட்டற்ற மென்பொருளான scidavis, origin மென்பொருளைப் போன்று வரைகலை இடைமுகப்பு (GUI) கொண்டது. எனவே அனைவராலும் எளிதாக பயன்படுத்த ஏதுவானது. இதன் மூலம் 2D, 3D வரைபடங்களை உருவக்கலாம். மேலும் வரைபடத்தை ஆராய உதவும் பல வகை வளைவரை பொருத்துதலுக்கு (Curve fitting) ஆதரவு தருகிறது. ASCII கோப்புகளிலிருந்து தரவுகளை இறக்குமதி செய்யும் வசதியும் உள்ளது. உதாரணத்திற்கு plain text file, excel file. இதனை எளிதாக apt-get install scidavis மூலம் நிறுவலாம். உருவாக்கப்படும் வரைபடத்தை பல கோப்பு வகைகளில் சேமிக்கலாம் (jpg, png, tiff, eps, pdf, svg மேலும் பல ).

 

மேலும் அறிய : scidavis.sourceforge.net/

labplot

இதுவும் scidavis போலவே origin மென்பொருளுக்கு மாற்றாக KDE சூழலில் கிடைக்கும் ஒரு கட்டற்ற மென்பொருளாகும். இதில் origin கோப்புகளை இறக்குமதி செய்யும் வசதி உள்ளது.

மேலும் அறிய : labplot.sourceforge.net/

 

இவை தவிர வரைபடங்களை வரைவதற்கு maxima, plplot, qtiplot, scilab போன்ற பல கட்டற்ற மென்பொருள்கள் கிடைகின்றன. பார்க்கவும் en.wikipedia.org/wiki/List_of_graphing_software. இதில் பல மென்பொருள்கள் விண்டோஸிலும் இயங்கக் கூடியது.

லெனின் குருசாமி  guruleninn@gmail.com

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: