இப்போது நாம் Mastodon எனும் புதிய சமூக ஊடகபயன்பாட்டிற்கு மாறிவிட்டோம் எனில். வாழ்த்துகள்! அதனால் முதலில் நாம் இப்போது இந்தMastodon ஐ பயனுள்ளவகையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றிதெரிந்து கொள்வது நல்லது. இதில் நாம் விரும்புவதை எவ்வாறு பார்ப்பது இதில்பின்னூட்டத்தை(feed) எவ்வாறு கட்டமைப்பது ஆகியன குறித்தும் தெரிந்து கொள்ளவதுநல்லது .எனவே இந்நிலையில் அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பது இப்போது காண்போம்
மஸ்டோடன் பின்னூட்டம்(feed) ஏன் காலியாக உள்ளது?
இது ஒரு நல்ல கேள்வி. பெரும்பாலான சமூக ஊடக தளங்கள் நமக்கு எதைக் காட்ட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கதேவையான தருக்கங்களைப் (algorithms) பயன்படுத்துகின்றன. நாம் உள்நுழைவுசெய்தவுடன், நமக்கு எதில் ஆர்வம் உள்ளன என நம்மிடம் கோரலாம், மேலும் boom என்பதன்மூலம் ஒரு பின்னூட்டத்தைப் பெறுவோம். எல்லாவற்றையும் வடிகட்டுவதை முடித்தவுடன், ஆடம்பரமான பின்-இறுதி குறிமுறைவரிகள், தொடர்புகள், பார்க்கும் நேரம் நகர்த்தல் செய்யாத அளவு ஆகியவற்றின் அடிப்படையில் அதிகமாக அல்லது குறைவாகக் காட்டுகிறது. தனிப்பட்ட முறையில், இது ஒரு வகையான பயமுறுத்தும் செயலாகும். ஆனாலும் இது செயல்படுத்தப்படுகிறது.
பொதுவாக மாஸ்டோடன்ஆனது அவ்வாறான தருக்கங்களைப் (algorithms)ப் பயன்படுத்து வதில்லை. இது வேண்டுமென்றே கொண்டுவரப்படுகின்றது. எனவே பின்னூட்டத்தை அமைப்பதற்கான இரண்டு வழிகளை இப்போது காண்போம்.
மாஸ்டோடனில் மற்றவர்களைப் பின்தொடருதல்
நம்மிடம் உள்ள பின்னூட்டத்தை நிரப்புவதற்கான தெளிவான வழி, நாம்பிறரைப் பின்தொடரத் துவங்குவதாகும், அதனால் திரையில்அவர்களின் இடுகைகள் தோன்றும். இது, நிச்சயமாக, அவ்வாறு நாம் பின்தொடரும் நபர்களைக் கண்டறிய நம்மை அனுமதிக்கிறது.
நாம்எப்பொழுதும் சில நண்பர்களையோ அல்லது Mastodon சுட்டிகளை( ID) பொதுவில் வைத்திருக்கும் சில பிரபலமான நபர்களையோ கண்டுபிடிப்பதன் மூலம் துவங்கலாம். எடுத்துக்காட்டாக, சுட்டியானது( ID) நேரடியாக நம்முடைய Opensource.com சுயவிவரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது எனக்கொள்க. இந்நிலையில் நமது சக நன்பரைப் பின்தொடர்வதன் மூலம் துவங்கிடலாம், பின்னர் நம்மை போன்ற ஆர்வலர்களைக் கொண்ட நபர்களின் விவரங்களை அவரது பின்தொடருதல் பட்டியலில் காணலாம்.
தேடல் பெட்டி(search box)ஆனது முகப்புப் பக்கத்தில் பயனரின்(avatar) என்பதற்கு சற்று மேலே உள்ளது.
அதை சொடுக்குதல் செய்யும் போது, ஒரு சிறிய மேல்மீடபு பட்டி(pop-up )தோன்றும், இதுநமக்கு சில எடுத்துக்காட்டு தேடல்களை வழங்குகிறது.
எடுத்துக்காட்டாக, “opensource” என உள்ளிடுவதாககொள்க உடன் hashtags ஆனது, நாம் பின்தொடர வேண்டிய நபர்கள் இருப்பதைக் காட்டியது. ஒரு பெரிய பட்டியலைப் பெற விரும்பினால், load more என்பதைசொடுக்குதல் செய்யலாம்.
இப்போது நம்முடையபின்னூட்டத்தில் சிலரைப் பெற்றுள்ளோம், hashtags ஐ பயன்படுத்தி மேலும் தினை தனிப்பயனாக்குவதைத் தொடங்கலாம்.
hashtags
hashtags என்பது # எனும் குறியீடடிற்கு முன்னால் உள்ள முக்கிய சொற்கள் அல்லது சொற்றொடர்களாகும். தரவுத்தளங்களைப் பயன்படுத்தினால், இது SQL போன்ற ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டளைவரியாகும்:
select * from Subjects where hashtags=’specific_thing_i_like’;
நம்மைப்போன்ற குறிப்பிடட தலைப்புகளில் ஆர்வமுள்ள பயனாளர்களைக் கண்டறிந்துஅவர்கள் பின்தொடர இந்த hashtagsஐப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, fashion என்பதில் ஆர்வமாக இருந்தால் (நம் அனைவருக்கும் இதற்கான குற்ற உணர்ச்சிகள் உள்ளன), #fashion என்ற hashtagஐ தேடலாம். அவர்களின் இடுகைகளில் அந்த hashtagஐ அடிக்கடி பயன்படுத்தும் பயனர்களை நாம் பின்தொடரலாம். பிற பயனர்களைப் பின்தொடர நாம் அதே தேடல் புலத்தைப் பயன்படுத்தலாம். அந்த hashtag பட்டியலில் கடந்த இரண்டு நாட்களில் 38 பேர் பயன்படுத்தியிருப்பதை காண முடியும். வலது பக்கத்தில், சமீபத்திய காலங்களில் அந்த hashtags பின்பற்றப்பட்ட போக்கை விளக்கும் வரைபடங்கள் இருப்பதை காணலாம்.
இந்தhashtagஐ சொடுக்குதல் செய்யும் போது, அதைப் பயன்படுத்துபவர்களின் பட்டியலைகாணலாம், பின்னர் நாம் பின்பற்ற விரும்பும் பயனர்களை சொடுக்குதல் செய்திடுக. (அவ்வாறான பயனர்களின் அனுமதியின்றி இந்தக் கட்டுரையில் தனிப்பட்ட குறிச்சொற்களை சேர்க்க விரும்பவில்லை என்பதால் அவ்வாறான திரைபடபிடிப்பை இந்த கட்டுரையில்ச் சேர்க்கவில்லை).
மாஸ்டோடன் பட்டியல்கள்
Mastodon இணைய இடைமுகத்தின் வலது பக்கத்தில், (Home, Notifications, Explore, Local,)என்பன போன்றமிகவும் அருமையான சிறிய பொத்தான்கள் பலஉள்ளன .
பட்டியல் என்பது ஒரு கட்டுபாட்டினை கொண்டுவருவதற்கான கருவியாகும். நாம் பின்பற்றும் கணக்குகளை வெவ்வேறு வகைகளாக ஒழுங்கமைக்க இந்த பட்டியல்களைப் பயன்படுத்தலாம். அதாவது குறிப்பிட்ட நபர்கள் அல்லது தலைப்புகளில் கவனம் செலுத்த இவைகளை கொண்டு நம்முடைய பின்னூட்டத்தை நிர்வகிக்கலாம் சரிசெய்யலாம். இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக உள்ளது, மேலும் நாம் என்ன விரும்புகின்றோம் என்பதை வேறு யாரேனும் தீர்மானிக்க அல்லது கண்காணிப்பதை விட இது சிறந்தது. நம்முடைய பட்டியலில் குறிப்பிட்ட நபர்களைச் சேர்க்கும் திறன் நம்மிடம் மட்டுமே உள்ளது.
பட்டியலை உருவாக்க, Lists எனும் பொத்தானை சொடுக்குதல் செய்க.
புதிய பட்டியலின் பெயரை உருவாக்கி, Add List என்பதைக் சொடுக்குதல் செய்திடுக. நிச்சயமாக, இப்போது நாம் opensource என்ற பட்டியலை உருவாக்கப் போவதாக கொள்க.
அடுத்து, அ்ந்த பட்டியலின் பெயரைக் சொடுக்குதல் செய்திடுக.
நாம் பின்தொடரும் நபர்களிடையே தேட அனுமதிக்கும் சாளரத்தைத் திறக்க, Edit list எனும் பொத்தானைக் சொடுக்குதல் செய்திடுக. இவ்வாறு நம்முடைய பட்டியலில் யாரையும் சேர்க்கலாம்.
அவ்வாறு நாம் சேர்க்க விரும்பும் நபரின் வலதுபுறத்தில் உள்ள (+)எனும் கூட்டல் குறி பொத்தானைக் சொடுக்குதல் செய்திடுக.
நாம் விசைப்பலகையில்Enter ஐ அழுத்தினால், புதிய தாரையோட்டம்(stream) கிடைக்கும்! இப்போது பட்டியலில் உள்ள ஒருவர் இடுகையை வெளியிடும் எந்த நேரத்திலும், அந்த இடுகை நம்முடைய பட்டியலில் சேர்க்கப்படும். எடுத்துக்காட்டாக இதில்லினக்ஸைச் சேர்த்து, லினக்ஸின் இதழை மேலே இழுத்திடுவதாக கொள்க, உடன்மேலும் பட்டியல் உருவாவதை காணலாம்.
இறுதியாக, இடுகைகளைப் பட்டியலிடநாம் வெளியிடும் கட்டுரைகளை யார்யார் பார்க்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இயல்பாக, பட்டியலில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் நம்முடைய பதில்செயலைப் பார்க்க முடியும். ஆனால், நம்மைப் பின்தொடர்பவர்கள் அனைவரும் நம்முடைய பதில்செயலைக் காணும் வகையில் அல்லது நம்முடைய பதில்செயலை யாரும் காண முடியாத வகையில் அமைக்கலாம்.
இதை அமைக்க, பட்டியலின் மேல் வலதுபுறத்தில் உள்ள Settings எனும் உருவப்பொத்தானைக் சொடுக்குதல் செய்திடுக.
nopeஎனும்ஒரு முழு கொத்து
இப்போது “nope buttons” என்று அழைப்பதை அடைந்துவிட்டோம். இவை mute , block ஆகிய செயல்களுக்கான பொத்தான்களாகும். நம்முடைய பின்னூட்டத்திலிருந்து அதன்உள்ளடக்கம், பின்தொடரும்நபர்கள் ஆகியவற்றை mute, block ஆகிய பணிகளை செய்ய அவை நம்மை அனுமதிக்கின்றன.
இந்நிலையில் நம்முடைய பின்னூட்டத்தைக் கட்டுப்படுத்த நாம் செய்யவேண்டிய அனைத்து பணிகளையும் செய்த mute, block ஆகிய பணிகளை செய்யவேண்டும்? என்ற கேள்வி நம்மனதில் எழும் நிற்க அதற்கு ஏராளமான காரணங்கள்உள்ளன. அவர்கள் செய்த சில வித்தியாசமான இடுகைகளின் அடிப்படையில் நாம் ஒருவரைப் பின்தொடரலாம், அவர்கள் நாம் எதிர்பார்த்த அளவுக்கு ஆர்வமாக இல்லை என பின்னர் கண்டறியலாம். ஒரு hashtagஐ நாம்பின்தொடரும் போது அது எதைக் குறிக்கிறது என்பதை விட அது வித்தியாசமான ஒன்றைக் குறிக்கும் என்பதே இதன்பொருளாகும். பொதுவாக எப்போதும் இணையுமும் செய்திகளும் விரைவாக மாறிகொண்டே இருக்கின்றன என்பதுதான் இதற்கு அடிப்படையானகாரணமாகும். இதில்கூறிய
Mute என்பதுஒரு குறிப்பிட்ட பயனரின் இடுகைகள் அல்லது ஒரு குறிப்பிட்ட hashtagஐ நம்முடைய காலவரிசைபட்டியலிலிருந்து மறைக்க அனுமதிக்கிறது. Blocking என்பது ஒரு பயனர் நம்முடன் தொடர்புகொள்வதிலிருந்து அல்லது நம்முடைய இடுகைகளைப் பார்ப்பதிலிருந்து தடுக்கிறது. இவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான எடுத்துக்காட்டு பின்வருமாறு, ஆனால் நாம் அவ்வாறு செய்ய வேண்டியதில்லை.குறிப்பிட்டகணக்கிற்கு எதிராக நாம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் பலஉள்ளன.
Mute: இந்தப் பயனரின்இடுகைகள் எதையும் நம்மால்காணமுடியாது
Block: நாம் மற்றவர்களை காண முடியாது மற்றவர்களும் நம்மை காண முடியாது.
Report: குறிப்பிட்ட பயனர் விதிகளை மீறிடும்போது அப்பயனரின் நிகழ்வின் நிர்வாகியிடம் புகாரளித்தல்.
Block the domain: அவர்களின் கணக்கு இருக்கும் முழு களப்பெயரையும் நாம இதன்மூலம் தடுக்கலாம்.
இந்தDomain blocking என்பது மிகவும் கடுமையான செயலாகும். இணையத்தில் சில பயமுறுத்தும், முரட்டுத்தனமான முற்றிலும் பயங்கரமான களங்கள் பல உள்ளன. அவர்களில் சிலர் மாஸ்டோடன் நிகழ்வை நடத்தலாம். நாம் இவ்வாறான முழு களப்பெயரையும் தடுக்கும் போது, அந்த நிகழ்வில் யாரும் நம்முடைய இடுகைகளைகாணமுடியாது, மேலும் அந்தச் சேவையகத்தைப் பயன்படுத்தும் யாருடைய இடுகைகளையும் நாமும் காணமாட்டோம். நாம் பார்க்க ஆர்வமில்லாத செய்திகளை ஒரு குழுவினர் இடுகையிடும்போது இது பயனுள்ளதாக இருக்கும். நாம் ஒவ்வொரு நபரையும் தனித்தனியாகத் தடுக்க வேண்டியதில்லை. நாம் அவர்களின் முழு சேவையகத்தையும் தடுக்கலாம். பல மாஸ்டோடான் நிகழ்வுகளில் ஒரு களப்பெயரைத் தடுக்கும் போது, அந்த நிகழ்வு நீக்கப்பட்டுவிடும். இதன் பொருள் களப்பெயரானது வேறு எந்த மாஸ்டோடானின் நிகழ்வுடனும் இணைக்கப்படவில்லை எனப்பொருளாகும், மேலும் அது பெரிய சமூககுழுவின் பகுதியாக இருக்கமுடியாது. அந்த நிகழ்வில் உள்ள பயனர்கள் இன்னும் ஒருவரோடு ஒருவர் பேச முடியும், ஆனால் அவ்வளவுதான் அவர்களால் செய்ய முடியும் அதற்குமேல் அந்த குழுவில் உள்ளவர்களால் வேறு ஒன்றும் செய்யமுடியாது.
ஒருங்கிணைந்தகூட்டமைப்பு சமூக ஊடகங்களுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க நன்மையாகும். மேலும் இது அதன் பயனர்களால் மிகவும் பாராட்டப்படுகின்ற, நாம் செய்யக்கூடிய தவிர்க்க வேண்டிய களப்பெயர்களின் பட்டியலைப் பராமரிக்கும் சில நபர்கள் உள்ளனர். களப்பெயர் பட்டியலில் இருப்பதற்கான காரணத்தையும் அந்தபட்டியல் வழங்குகிறது.
GitLab , GitHub, Fediblock விக்கி பக்கம் ஆகியவற்றிலும் இவ்வாறான தடுப்புப் பட்டியல்களைக் காணலாம். தீம்பொருள் , பொதுவாக பயங்கரமான செயல்களைத் தவிர்ப்பது எப்போதும் மதிப்புக்குரியது, எனவே விக்கி பக்கம் பயனுள்ளதாக இருக்கும்.
இறுதி குறிப்புகள்
புதியவற்றைப் போலவே, Mastodon இல் சேரும்போது, நிறைய ஆய்வுசெய்வது, வழிமுறைகளைப் படிப்பது ,புதியசெய்திகளைக் கண்டுபிடிக்க முயற்சிப்பது போன்றவை இருக்கும். இந்த நிலையில், தனிப்பயனாக்கப்பட்ட பின்னூட்டத்தை ஒழுங்கமைப்பு செய்ய வேண்டிய ஒரு பணி உள்ளது. நாம்அந்த பணியைச் செய்யத் தயாராக இருந்தால், இந்த சிறிய வழிகாட்டி பயனுள்ளதாக இருக்கும். இதனுடையFediverse என்பதில் நாம்பயனிக்கும் நேரத்தை அனுபவிப்போம் என நம்பலாம்!