ஃபயர்ஃபாக்ஸில் புதிய வசதி!

 

ஏறக்குறைய இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலவி வழக்கொழிந்து போய் வருகிறது. கூகுளின் க்ரோமும், மொஸில்லாவின் ஃபயர்ஃபாக்ஸ் உலவியும் அனைவரின் கணினிகளையும் அலங்கரித்து வருவது கண்கூடு.

ஆயிரம் காரணம் சொன்னாலும், க்ரோமின் வேகத்திற்கு ஃபயர்ஃபாக்ஸ் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே! சிறிது சிறிதாக ஃபயர்ஃபாக்ஸ் தனது வசதிகளை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

உலவிகளில் Private Browsing எனும் வசதி பற்றி எல்லோரும் அறிந்ததே. க்ரோம் உலவியைப் பொறுத்தவரை சாதாரணமாகவும், Private Browsing-கிலும் ஒரே நேரத்தில் பணியாற்ற வசதி உள்ளது.

ஃபயர்ஃபாக்ஸில் Private Browsing Tab-ஐ தேர்வு செய்தால் (Ctrl+Shift+P) உடனடியாக அப்போதைய Session மூடப்பட்டு விடும். இதனால் இரண்டிலும் ஒரே நேரத்தில் பணியாற்ற இயலாமல் போய்விடுகிறது.

 இந்தக் குறைபாடு தற்போது ஓரளவு தவிர்க்கப்பட்டுள்ளது. ஃபயர்ஃபாக்ஸ் புதிதாக Nightly என்கிற பெயரில் உலவியை அறிமுகம் செய்துள்ளது. இதில் ‘New Private Window’-ஐ தேர்வு செய்யும் போது, Private Window மற்றும் சாதாரண window என இரண்டிலும் ஒரே நேரத்தில் பணியாற்ற முடிகிறது.

இது ஓர் ஆரம்பம்தான். இன்னும் பல புதிய மாற்றங்கள் நிகழும் என நம்புவோம். Nightly பதிவிறக்க உரலி: nightly.mozilla.org/

தமிழ்  நல்ல வாசிப்பாளன். தமிழ் விரும்பி. வலைப்பதிவுகளில் எழுத முயற்சிக்கிறவன்.

எனது தளம்: thamizhg.wordpress.com/ Thamizh G <iamthamizh@gmail.com>

%d bloggers like this: