லைஃபோகிராஃப் என்பது சுய குறிப்பெடுக்க உதவும் செயலி ஆகும். குறிப்பேடு செயலியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் அனைத்தையும் நமக்கு இது திருப்திகரமாக வழங்குவதோடு, சில சிறப்பம்சங்களையும், குறைந்த அளவே உள்ள நிறுவும் தொகுப்பாக (installable package) தருகிறது.
சிறப்பம்சங்கள்:
-
மறையாக்கம்(encryption) செய்த மற்றும் செய்யாத நாட்குறிப்பேடுகளுக்கு ஆதரவு அளிக்கிறது
-
சிறிது நேரத்திற்கு மேல் பயன்படுத்தப்படாமல் இருந்தால் தானாகவே வெளியேற்றி (logs out automatically) விடும் (ஒரு வேளை நீங்கள் வெளியேற மறந்துவிட்டால், உங்கள் நாட்குறிப்பேட்டை பாதுகாக்கவே இந்த ஏற்பாடு) (எனினும் இது கட்டாய தேர்வு இல்லை).
-
தலைப்புகள் மற்றும் உட் தலைப்புகளை தானாகவே வடிவமைக்கும் (இந்த யோசனையை வழங்கியதற்காக டாம்பாய்க்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும்)
-
பொதுவான தேடல் / வடிகட்டி
-
வார்ப்புருகள் (editor themes)
-
விரும்பிய இடுக்கைகள் (favorite entries)
-
குறியிடுதல் (entry tagging)
-
பிழை சரிபார்த்தல் (spell checking)
-
விக்கி போன்ற மேம்பட்ட எழுத்து வடிவமைத்தல் (bold, italic, strikeout, மேலும் பல)
-
இடுக்கைகளுக்குள் இணைப்பு – URI போன்ற இணைப்புகள் (http://, file://, mailto://, மேலும் பல)
-
தானியங்கி நகலாக்கம் (automatic backup)
-
தனி இடுக்கைகள் அல்லது குறிப்பேடு முழுவதும் உள்ள இடுக்கைகளை மாற்றலாம்
-
ஒரு தனிப்பட்ட குறிப்பேடு அல்லது அனைத்து குறிப்பேடுகளையும் அச்சிடலாம்
-
பொதுவான புள்ளியியல் அட்டவணை (basic statistical chart)
பின்வரும் வெளியீடுகளில் நாம் எதிர்பார்ப்பவை:
-
இடுக்கைகளில் புகைப்பட இணைப்பு
-
உட்பொருத்திகள் (plug-ins)
லைஃபோகிராஃப்-ஐ உபுண்டு 12.04 ல் நிறுவ, முனையத்தில் பின்வரும் கட்டளைகளை தட்டச்சு செய்யவும்:
sudo add-apt-repository ppa:dmxe/ppa
sudo apt-get update
sudo apt-get install lifeograph
நான் ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி. நான் ஒரு CollabNet மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனது சொந்த ஊர் நாகர்கோவில். கடந்த 2011 -ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன். கணியம் மூலமாக உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை கொடுத்த கணியம் ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
வலை பதிவு : jophinepranjal.blogspot.in/