சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay)
ஃபோட்டோலித்தோகிராபி (photolithography) செயல்முறையில் ஒளி மறைப்பியைக் கையால் வரைந்து வெட்டுதல்
0:00 ஃபோட்டோலித்தோகிராபிக்கான ஒளி மறைப்பியை சிவப்பு வண்ண ரூபிலித் (Rubylith) தாளில் வரைந்து வெட்டுவோம் என்றும், பின்னர் அதை குறும்படிவாக்கி (miniaturized) அச்சிடுவோம் என்றும் பார்த்தோம்.
ஒரு புதிய பொருளைக் கண்டுபிடிப்பதுடன் அதை நம்பகத்தன்மையுடன் உற்பத்தி செய்வதும் மிக முக்கியம்
0:10 மோரிஸ் சாங் (Morris Chang) எம்ஐடியில் (MIT) இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர் 1958 இல் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (Texas Instruments) நிறுவனத்தில் சேர்ந்தார். ஜாக் கில்பி (Jack Kilby) கண்டுபிடித்த ஒருங்கிணைந்த மின்சுற்று தயாரிப்பின் விளைவை (yield) அதிகரிப்பதே அவரது வேலை. அதிகபட்ச விளைவைப் பெறுவதற்கான சரியான அமைப்பைக் கண்டறிய அவர் அழுத்தம், வெப்பநிலை மற்றும் பிற மாறிகளை மாற்றியமைப்பார். அவர் முறைப்படி செயல்படுபவர். இந்தக் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் நாம் அதிகபட்ச விளைவைப் பெறுகிறோம் என்று அவர் கணக்கிடுவார்.
ஒரு புதிய பொருளைக் கண்டுபிடிப்பது ஒரு பகுதிதான். அதை நம்பகத்தன்மையுடன் உற்பத்தி செய்வது என்பது மற்றொரு முக்கியமான பகுதியல்லவா?
குறைக்கடத்தி மூலப்பொருளிலும் ஒருங்கிணைந்த மின்சுற்று வடிவமைப்பிலும் இருவேறு வழிகள்
2:40 போரின் போது ஆண்டி குரோவ் ஹங்கேரியில் இருந்தார். அவர் வேதியியல் பொறியியலில் முனைவர் பட்டம் படிக்க பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கு வந்தார். அவரை ஃபேர்சைல்ட் செமிகண்டக்டர்ஸில் கோர்டன் மூர் நேர்காணல் செய்து வேலைக்கு எடுத்தார்.
4:49 டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸில் இருந்த ஜாக் கில்பி ஜெர்மானியத்தைக் குறைக்கடத்தியாகப் பயன்படுத்தினார் மற்றும் ஒரு அடி மூலக்கூறில் கூறுகளைத் திட்டு திட்டாக வைத்து அவற்றைக் கம்பிகளால் இணைக்கும் வடிவமைப்பை உருவாக்கியிருந்தார்.
4:58 ஃபேர்சைல்ட் நிறுவனம் சிலிக்கானை குறைக்கடத்தியாகப் பயன்படுத்தியது மற்றும் கம்பிகளைப் பயன்படுத்தாமல் ஒரு தட்டையான அடி மூலக்கூறில் கம்பிப் பாதையில் உலோகத்தைப் படிய வைக்கும் வடிவமைப்பைக் கொண்டிருந்தது.
5:05 சிப் தொழில்துறையின் மூன்று முக்கியமானவர்களான ஆண்டி குரோவ், பாப் நொய்ஸ் மற்றும் கார்டன் மூர் ஆகியோரை ஃபேர்சைல்ட் செமிகண்டக்டர்ஸில் காட்டும் படம்.
இத்தொடரில் அடுத்த கட்டுரை: ஒரு டாலருக்கு 50 மில்லியன் டிரான்சிஸ்டர்கள்
பேரளவு உற்பத்தி (mass production) மூலம் செலவைப் பலமடங்கு குறைத்து விலையை வீழ்த்தல். மூரின் விதி (Moore’s Law) – சில்லுவின் டிரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை இரண்டாண்டுகளில் இரட்டிப்பாகும். 2024 ஆம் ஆண்டில் ஒரு என்வீடியா (Nvidia) சில்லு 208 பில்லியன் டிரான்சிஸ்டர்களுடன் வெளிவந்தது. கையடக்கமான மிகச் சிறிய டிரான்சிஸ்டர் வானொலியை சோனி நிறுவனம் உருவாக்கியது.
தமிழாக்கம்: இரா. அசோகன்