விழுப்புரத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா (IT Park) அமைக்க கோரி VGLUG-ன் சார்பாக மனு வழங்கப்பட்டுள்ளது

VGLUG-என் சார்பாக 20-01-2021 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் “விழுப்புரத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா வேண்டும்” என்ற கோரிக்கை மனு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. முன்பு, விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் முனைவர்.துரை.ரவிக்குமார் அவர்கள் மூலம் 2019-2020 நடைபெற்ற குளிர்கால கூட்ட தொடரில் இக்கோரிக்கை எழுத்து பூர்வமாக எழுப்பப்பட்ட்து. அதற்கு மத்திய அரசு அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ச்சியாக நாம் அனைத்து மட்டங்களிலும் வலியுறுத்துவோம்.

விழுப்புரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வோம்.

#VillupuramITPark #VillupuramNeedITPark
%d bloggers like this: