படக்கதைகளை உருவாக்கலாம்

 

இருபரிமானஅசைவூட்டு படக்கதைகளை நாமே உருவாக்கிட உதவும் ஸ்கிராச் எனும் திறமூல பயன்பாடு

 

ஸ்கிராச் என்பது இருபரிமான அசைவூட்டு படங்களையும் விளையாட்டுகளையும் படக்கதைகளையும் தொடக்கநிலையார்களும் உருவாக்கிட உதவிடும் நிரல்தொடர் எழுதவதற்கானசூழலை கொண்ட தொரு திறமூல மொழியாகும்.இதனை scratch.mit.edu/ என்ற தளத்திலிருந்து இதனுடைய சமீபத்திய பதிப்பை பதிவிறக்கம் செய்துகொள்க இதனை நிறுவி பயன்படுத்திட 800 X 480 துல்லியம் கொண்ட 16 பிட்டிற்கு மேற்பட்ட திரை, விண்டோ 2000இற்கு பிந்தைய பதிப்புடைய இயக்கமுறைமை, 120 மெகாபைட் காலி நினைவகம், ஒலி,ஒளிஒலி அமைப்பு ஆகியவை தேவையானவையாகும் இந்த ஸ்கிராச்சின் ஒரு செயல்திட்டத்தை sprites என அழைப்பார்கள். இதில் பயன்படுத்திடும் கட்டளைகள் scripts என அழைப்பார்கள். Sprites என்பது வரைபட பதிப்பானால்(paint editor) உருவாக்கபட்ட அல்லது நினைவகத்திலிருந்து பதிவிறக்கம் செய்யபட்ட ஒருகுழுவான உருவபடங்களின் தொகுப்பாகும் இந்த தொகுதியின் ஒவ்வொருஉருவப் படமும் ஒருcostume என அழைக்கபடும். இந்த ஸ்கிராச்சினுடைய முதன்மை பக்கத்திரையானது block palette ,scripts area, stage ஆகிய மூன்று முக்கிய பகுதிகளை கொண்டதாகும் .

ஸ்கிராச்சினுடைய முதன்மை பக்கத்திரையின் block palette ஆனது Movement, Looks, Sound, Pen, Control, Sensing, Operators, Variables ஆகிய எட்டு துனைப்பகுதிகளை கொண்டது. அதற்கடுத்தாகவுள்ள scripts area ஆனது ஸ்கிராச்சின் கட்டளை தொகுதிகளை அவ்வப்போது இயந்திர மொழிக்கு மொழிமாற்றும் பணியை செய்கின்றது. block palette இலிருந்து scripts area இக்கு கட்டளைகளானது கொண்டுவரபட்டு விட்டவுடன் வரிசைகிரமமாக தருக்கமுறையில் செயல்படசெய்கின்றது இந்தspritesஐ தெரிவுசெய்து சொடுக்கியவுடன் மேலிருந்து கீழாக செயல்படுத்துகின்றது மூன்றாவதாகவுள்ள stageஎன்பது இறுதிய நிலையாகும் அசைவூட்டு படங்களை உருவாக்கிய பின் அதனை இயந்திர மொழியாக மாற்றி செயல்படுத்திட கட்டளை பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் உருவாக்கிய அசைவூட்டு படங்கள் இயந்திரமொழிக்கு குறிமுறைகளாக மொழிமாற்றிடும் செயல் ஆரம்பித்து வெளியீடு stageஎன்ற பகுதிக்கு வந்து சேர்ந்து திரையில் பிரதிபலிக்க செய்கின்றது.

(இதழ் 23 நவம்பர் 2013 )

ச.குப்பன் kuppansarkarai641@gmail.com

[wpfilebase tag=file id=43/]

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: