PSCP உடன் விண்டோஇயக்கமுறைமையிலிருந்து லினக்ஸுக்கு கோப்புகளையம் கோப்புரைகளையும் எளிதாகபரிமாற்றம் செய்திடுக

Windows இயக்கமுறைமை செயல்படுகின்ற கணினியிலிருந்து Linux இயக்கமுறைமைசெயல்படுகின்ற கணினிக்கு கோப்புகளை விரைவாக பரிமாற்றம் செய்வதற்கான வழியைத் தேடுகிறீர்களா? ஆமெனில் PSCP எனும் கட்டற்ற பயன்பாடானது விண்டோ, லினக்ஸ் ஆகிய இயக்கமுறைமைகள் செயல்படுகின்ற கணினிகளுக்கு இடையே கோப்புகளையும் கோப்புறைகளையும் பரிமாற்றம் செய்வதை எளிதாக்குகிறது,
விண்டோவில் PATH ஐஅமைத்தல்
விண்டோவில் கட்டளைவரிக்கான PATH ஐ எவ்வாறு அமைப்பது என்பதை PSCP போன்ற எளிமையான பயன்பாடு எளிதாக்குகிறது.
PSCP ஐப் பயன்படுத்துதல் PSCP (PuTTY இன் பாதுகாப்பான நகலெடுத்திடும் மரபொழுங்கு) என்பது விண்டோ இயக்கமுறைமை செயல்படுகின்ற கணினியிலிருந்து லினக்ஸ் இயக்கமுறைமை செயல்படுகின்ற கணினிக்கு கோப்புகளையும் கோப்புறைகளையும் எளிதாக மாற்றுவதற்கான கட்டளை வரி கருவியாகும்.
1. முதலில் www.chiark.greenend.org.uk/~sgtatham/putty/latest.html எனும் அதனுடைய இணையதளத்தில் இருந்து pscp.exe எனும் கோப்பினைப் பதிவிறக்கம்செய்திடுக.
2. பின்னர்PATHல் உள்ள ஒரு கோப்புறைக்கு pscp.exe ஐ நகர்த்திடுக, நமக்காக PATH எனும் மாறியை அமைக்கவில்லை எனில், நாம் மாற்றவிரும்பிடுகின்ற கோப்புகளை வைத்திருக்கின்ற கோப்புறைக்கு pscp.exeஐ மாற்றிடுக.
3.Windowஇன் பணிப்பட்டியில் உள்ள search barஎனும் தேடுதல் பட்டியைப் பயன்படுத்தி Windows கணினியில் Powershell ஐத் திறந்திடுக (தேடுதல் பட்டியில் ‘powershell’ என தட்டச்சு செய்திடுக.)
4.கணினியின் கட்டளையை கண்டுபிடிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த pscp –version என தட்டச்சு செய்க.
IP முகவரி
பரிமாற்றம் செய்வதற்கு முன், இலக்கு கணினியின் IP முகவரி அல்லது முழுமையான களப்பெயரை (domain name) அறிந்திருக்க வேண்டும். இது நம்முடைய அதே வலைபின்னலில் உள்ள கணினி என்றும், கணினி பெயர்களைத் தீர்வுசெய்தற்கு DNS சேவையகத்தை இயக்கவில்லை என்றும் கருதினால், Linux கணினியில் உள்ள ip கட்டளையைப் பயன்படுத்தி இலக்கு IP முகவரியைக் கண்டறியலாம்:
[linux]$ ip addr show | grep ‘inet ‘
inet 127.0.0.1/8 scope host lo
inet 192.168.1.23/24 brd 10.0.1.255 scope global noprefixroute eth0

எல்லா சூழல்களிலும், 127.0.0.1 என்பது loopback முகவரியாகும், இது கணினி தன்னுடன் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்துகிறது, எனவே இந்த எடுத்துக்காட்டில் சரியான முகவரி 192.168.1.23 ஆகும். நம்முடைய கணினியில், IP முகவரி வேறுபட்டிருக்கலாம். எது என்று நமக்குத் தெரியாவிட்டால், சரியானதைப் பெறும் வரை ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து முயற்சி செய்திடுக (பின்னர் அதை எங்காவது எழுதுவைத்துகொள்க!) மாற்றாக, திசைவியின் அமைப்புகளில்கூட இதனை காணலாம், இது DHCP மூலம் ஒதுக்கப்பட்ட அனைத்து முகவரிகளையும் பட்டியலிடுகிறது.
Firewalls and servers
pscp கட்டளைவரியானது OpenSSH நெறிமுறையைப் பயன்படுத்துகிறது, எனவே Linux கணினியில் OpenSSH எனும்சேவையக மென்பொருளை இயக்க வேண்டும், மேலும் அதன் ஃபயர்வால் SSH போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும். லினக்ஸ் கணினியில் SSH இயங்குகிறதா என்பது நமக்குத் தெரியாவிட்டால், Linux கணினியில் பின்வருமாறானக் கட்டளை வரியை இயக்கிடுக:
[linux]$ sudo systemctl enable –now sshd
ஃபயர்வால் ஆனது SSH இன் தரவுகளின்போக்குவரத்தினை அனுமதிக்கிறது என்பதை உறுதிப்படுத்த, பின்வருமாறானக் கட்டளை வரியை இயக்கிடுக:
[linux]$ sudo firewall-cmd –add-service ssh –permanent
கோப்பை மாற்றுதல்
இந்த எடுத்துக்காட்டில், Window இயக்கமுறைமைசெயல்படுகின்ற கணினியில் உள்ள C:\Users\sk\Documents இலிருந்து இலக்குகணினியான Linux கணினியின் /_home_/skக்கு pscp-test.txt என்றகோப்பினை மாற்ற விரும்புவதாக கொள்க
இப்போது நம்மிடம் pscp கட்டளையும் இலக்கு கணினியின் முகவரியும் உள்ளன, pscp-test.txt என்ற கோப்பை மாற்ற தயாராக உள்ளோம். ‘powershellஎன்பதைத் திறந்து, மாதிரி கோப்பு அமைந்துள்ள ஆவணங்களின் கோப்புறைக்கு மாற்ற dir எனும் கட்டளையைப் பயன்படுத்திடுக:
PS> dir %USERPROFILE%\Documents\
இப்போது பரிமாற்றத்தை இயக்கிடுக
PS> pscp pscp-test.txt sk@192.168.1.23:/home/sk
| Password:
End of keyboard-interactive prompts from server
pscp-test.txt | 0 kb | 0.0 kB/s | ETA: 00:00:00 | 100%
இதற்கான விளக்கம்:
: • pscp: கோப்பை மாற்றப் பயன்படும் கட்டளை.
• pscp-test.txt என்பது Windows இலிருந்து மாற்ற விரும்பும் கோப்பின் பெயர்.
sk@192.168.1.23 என்பது லினக்ஸ் கணினியில் பயனர்பெயரும் , லினக்ஸ் கணினியின் ஐபி முகவரியும்
. இதை நம்முடைய சொந்த பயனர், சேருமிடத் தகவலுடன் மாற்ற வேண்டும். இலக்கு கணினியில் pscp க்கு ஒரு இலக்கு பாதை தேவை என்பதைக் கவனித்திடுக, மேலும் IP முகவரியின் முடிவில் உள்ள :/home/sk எனும்கோப்பு முகப்பு கோப்புறையில் நகலெடுக்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது. லினக்ஸ் கணினிக்கு நாம் அங்கீகரித்த பிறகு, pscp-test.txt எனும் கோப்பானது லினக்ஸ் கணினிக்கு மாற்றப்படும்.
மாற்றப்பட்டதை சரிபார்த்தல்
லினக்ஸ் கணினியில், முனைமத்தை திறந்து, home இயக்ககத்தில் pscp-test.txt எனும் கோப்பு தோன்றுகிறதா என்பதைச் சரிபார்க்க ls எனும் கட்டளையைப் பயன்படுத்திடுக.
[linux]$ ls
Documents
Downloads
Music
Pictures
pscp-test.txt
லினக்ஸ் கணினியிலிருந்து ஒரு கோப்பை நகலெடுத்தல்
லினக்ஸ் கணினியில் கோப்புகளை நகலெடுப்பதற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. pscp உடன், Linux இலிருந்து Windows இல் ஒரு கோப்பை நகலெடுக்கலாம். இலக்கணம் ஒன்றுதான், முந்தையதற்கு தலைகீழானது:
PS> pscp sk@192.168.1.23:/home/sk/pscp-test.txt %USERPROFILE%\Documents\pscp-win.txt
இதற்கான விளக்கம்:
• pscp: என்பது கோப்பை மாற்றப் பயன்படும் கட்டளையாகும்.
sk@192.168.1.23:/home/sk/pscp-test.txt என்பது லினக்ஸ் கணினியில் பயனர்பெயர், லினக்ஸ் கணினியின் ஐபி முகவரி நகலெடுக்க விரும்பும் கோப்பிற்கான பாதை.
• %USERPROFILE%\Documents என்பது Windows கணினியில் கோப்பைச் சேமிக்க விரும்பும் இடம். Windows கணினியில் கோப்பை மீண்டும் நகலெடுக்கும்போது, உண்மைகோப்பிலிருந்து வேறுபடுத்த pscp-win.txt போன்ற புதிய பெயரை கொடுக்க முடியும் என்பதைக் கவனித்திடுக. கோப்பை மறுபெயரிட வேண்டியதில்லை, ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இது ஒரு பயனுள்ள குறுக்குவழியாகும்
. Linux கணினியிலிருந்து Windows C:\Users\sk\Documents பாதைக்கு pscp-win.txt கோப்பு நகலெடுக்கப்பட்டதா என்பதைச் சரிபார்க்க கோப்பு மேலாளரைத்(file manager) திறந்திடுக.

தொலை நகல் திறமூல pscp கட்டளையின் சக்தியுடன், வீட்டில் உள்ள எந்த கணினியையும், கணக்கு வைத்திருக்கும் சேவையாளர் கணினிகளையும், கைபேசி எட்ஜ் சாதனங்களையும் அணுகலாம்.

%d bloggers like this: