பைதான் கற்பதற்கு மிகவும் எளிமையான ஒரு programming language. மிகவும் ஆற்றல் வாய்ந்த ஒரு மொழி. சிறந்த data structure களை கொண்டது. Object oriented தன்மையும் கொண்டது. இதன் எளிய syntax, dynamic typing தன்மை, interpreted தன்மை ஆகியவற்றால் scripting ற்கு தகுந்த மொழியாக விளங்குகிறது. RAD எனப்படும் RAPID APPLICATION DEVELOPMENT அதாவது அதிவேக மென்பொருள் தயாரிப்பிற்கு பயன்படுகிறது.
பைதான் மொழியும், அதன் வளம் மிக்க துணை மென்பொருட்களான் standard library யும் இலவசமாக கிடைக்கிறது. www.python.org என்ற தளத்தில் source ஆகவும் binary ஆகவும் எல்லா ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு தகுந்த வகையிலும் கிடைக்கிறது. இதே தளத்தில் பல்வேறு வகையான பைதான் module கள் பற்றிய தகவல்கள், பல்வேறு மென்பொருள்கள், உதவிக் குறிப்புகள், பைதான் பற்றிய நூல்கள், வீடியோக்கள், ஆவணங்கள் போன்றவை கிடைக்கின்றன.
C மற்றும் C++ மூலம் பைதானின் பல புதிய function மற்றும் data type களை எளிதாக சேர்க்கலாம். பல்வேறு மென்பொருட்களுக்கு பைதானை ஒரு extension மொழியாகவும் பயன்படுத்தலாம்.
இந்த தொடர் உங்களுக்கு பைதான் மொழியின் அடிப்படை கருத்துகளையும் பண்புகளையும் அறிமுகம் செய்கிறது. இதில் கூறப்பட்டுள்ள உதாரணங்களை நீங்கள் உங்கள் கணிப்போறியில் பைதான் interpreter ல் டைப் செய்து படிக வேண்டும். விரைவாக கற்றுக் கொள்ள உதவும் கணிப்பொறி இல்லை என்றாலும் பரவயில்லை. வாசிப்பு மட்டுமே போதும். பைதான் program கள் படித்தாலே புரியும் வகையில் எளிமையாய் இருக்கும்.
இந்த நூல் பைதான் பற்றிய ஒரு முழுமையான விளக்க கையேடு அல்ல. மாறாக பைதான் பற்றிய அறிமுகத்தையும், அதன் பண்புகளுக்கு ஒரு அலசலையும் தருகிறது. இதை படித்தபின் நீங்கள் எந்த ஒரு பைதான் program யும் படித்து புரிந்துகொள்ள முடியும். நீங்களாகவே பைதான் program களையும் module களையும் எழுத முடியும். மேலும் பைதான் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.
பைதான் – சிறப்புகள்
கணிப்பொறியை வாழ்வில் அதிகமாக பயன்படுத்தும் போது, பல நேரங்களில் ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்ய நேரிடும். அதை தவிர்க்க, அந்த வேலைகளை Automate (தானியங்கி)யாக செய்து விட்டால், நன்றாக இருக்கும் என்று பல முறை நினைத்திருப்போம். உதாரணமாக, ஒரு பெரிய text பைலில் ஏதேனும் ஒரு சொல்லை தேடி, வேறு சொல்லாக மாற்றுவது. Search and Replace. எ.கா. Suresh என்ற சொல்லை Ramesh என்று நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மற்றுவது.
டிஜிட்டல் கேமரா அல்லது மொபைல் போனில் அடிக்கடி எடுக்கும் படங்களை கணிப்பொறியில் பெயர் மாற்றி, ஒழுங்காக folder கள் உருவாக்கி அவற்றில் போட்டோக்களை வகைப்படுத்தி வைப்பது. போட்டோக்களுக்கு பெயர் மாற்றுவது. அவற்றை resize செய்வது.
இது போன்ற பல வேலைகளை ஆடோமேட் செய்து விட்டால், நமக்கு நிறைய நேரம் மிச்சமாகும். சில நேரங்களில் நமக்கு தேவையான புதிய மென்பொருள்களை உருவாக்க நினைப்போம். ஒரு புதிய விளையாட்டு அல்லது database சார்ந்த மென்பொருள் பற்றி யோசித்துக் கொண்டு இருப்போம்.
நீங்கள் இவற்றை எப்படி செய்வீர்கள்? நீங்கள் ஒரு மென்பொருள் வல்லுனர் என்றால், C/C++/Java போன்ற ஒரு மொழியை தேர்வு
செய்வீர்கள். ஆனால் write/compile/test/re-compile என்ற முடிவில்லாத ஒரு சூழலில் மாட்டிக் கொள்வீர்கள். மேலும் பிறர் எழுதிய ஒரு மென்பொருளை சோதனை செய்வதற்கு, பல நேரங்களில் நீஙகள் பக்கம் பக்கமாக code எழுதிக் கொண்டிருப்பீர்கள்.
பைதான் – உங்கள் தேவைகளை நிறைவெற்றும், எளிய மொழி அதன் நிறம் மிக்க, சீரான தன்மை விரைவில் , குறந்த நேரத்தில், தரமான program களை எழுத உதவுகிறது.
மேற்கொண்ட சில செயல்களை நீங்கள் லினக்ஸ் Shell Script அல்லது விண்டோஸ் batch file மூலமாக செய்துவிட முடியும். ஆனால், Shell Script ல் text file களை மட்டுமே திறம்பட கையாள முடியும். GUI, database அல்லது விளையாட்டுகளை எழுத முடியாது. C/C++/Java ல் இவற்றை செய்யலாம். ஆனால், நீண்ட நேரம் தேவைப்படும்.
பைதான் மிகவும் எளிமையானது. லினக்ஸ், Mac OS, விண்டோஸ் என அனைத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டம்களிலும் இயங்கக் கூடியது. மிக மிக குறந்த நேரத்தில் பெரிய மென்பொருள்களை எழுத உதவுகிறது.
பைதான் எளிய மொழி என்றாலும் ஒரு முழுமையான, சக்தி வாய்ந்த மொழி. Shell Script, batch file களை விட அதிக அளவிலான data structure களை கொண்டது. C ஐ விட அதிகமான error checking ம், awk, perl போன்ற மொழிகள் தராத high level data type களான array, dictionary களையும் கொண்டு ஒரு high level programing language ஆக உள்ளது. வேறு எந்த ஒரு மொழியை விடவும் பைதான் கற்பது எளிமையானது.
ஒரு பைதான் புரோகிராமை பல்வேறு module களாக பிரிக்கலாம். இந்த மாடியூல்களை அப்படியே பிற பைதான் புரோகிராம்களிலும் பயன் படுத்திக் கொள்ளலாம். பைதான் பல Standard Module களை கொண்டுள்ளது. அவை பைதான் கற்பதை எளிமையாக்குகின்றன. அவை File I/O, system calls, socket, networking, string, date, time, maths, tk போன்ற GUI என பல்வேறு வகையான் வேலைகளை செய்ய உதவுகின்றன.
பைதான் ஒரு interpreted மொழி. இதில் compilation, linking போன்ற வேலைகள் இல்லை. இதனால் மிக விரைவக புரோகிராம்களை எழுத இயலும். இந்த வகை மொழியில், புரோகிராமை இயக்கும் போது ஒவ்வோரு வரியாக படித்து, அது இயக்கப்பட்டு, பின்பு அடுத்த வரி படிக்கப்பட்டு இயக்கப்படும். இதனால், முழு புரோகிராம் எப்போதும் தேவை. Binary exe file கிடையாது.
பைதான் interpreter இயக்குவதற்கு எளிதானது. இதில் சிறு சிறு புரோகிராம் வரிகளை உடனே இயக்கி பார்க்கலாம். இதில் பல புதிய புரோகிராம் வரிகளை சோதனை செய்த பின்பு, அவற்றை நாம் உருவாக்கும் மென்பொருள்களில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த interpreter ஐ ஒரு calculater போலவும் பயன்படும்.
பைதான், புரோகிராம்களை சுருக்கமாகவும், படிப்பதற்கு புரியும் வகையிலும் எழுத வைக்கிறது. C/C++/Java என பிற எந்த மொழியில் எழுதும் புரோகிராம்களை விடவும் பைதான் புரோகிராம்கள் எளிமையாவும் சிறியதாகவும் இருக்கும். ஏனென்றால்,
- பைதானில் உள்ள high level data type கள் சிக்கலான செயல்களை கூட ஒரு வரியில் சொல்ல உதவுகின்றன.
- பல statement களை ஒன்றாக Group செய்ய ஆரம்ப மற்றும் முடிவு இடங்களில் bracket அதாவது { } க்கு பதிலாக indentation பயன் படுத்தப் படுகிறது. Tab அல்லது space மூலம் indent செய்ய வேண்டும்.
- Variable மற்றும் argument களை declare செய்ய தேவை இல்லை
பைதான் மொழி வளரும் தன்மை கொண்டது (extensible). C மொழி தெரிந்தால் போதும். சிக்கலான பல பெரிய வேலைகளை C மூலமாக ஒரு extension எழுதி, பைதானை மேலும் எளிமையாகவும் விரைவாகவும் செயல் பட வைக்கலாம்.1991 ல் Guido Van Rossum என்ற அறிஞர் இந்த மொழியை open source ஆக வெளியிட்டார். புதிய மொழிக்கு பெயர் யோசித்துக் கொண்டிருந்த போது, BBC தொலைக்காட்சியில் அவர் விரும்பிப் பார்த்த’Monty Python’s Flying Circus’ என்ற தொடர் நினைவுக்கு வந்தது. அதிலிருந்து Python என்ற சொல்லை எடுத்து தனது புதிய மொழிக்கு பெயராக வைத்தார். இந்த பெயருக்கும் பாம்புகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
பைதான் மொழி பற்றி இவ்வளவு தெரிந்து கொள்ளும் போது, அதை மேலும் கற்றுக் கொள்ள ஆவல் ஏற்படுகிறதா? இதோ இப்போதே களத்தில் குதிக்கலாம். உங்கள் python interpreter ஐ தயார் படுத்துங்கள்.
அடுத்த பிரிவில் பைதான் interpreter பற்றி சற்றே விரிவாக காணலாம். போரடித்தாலும் படித்து வையுங்கள். அடுத்தடுத்த பகுதிகளில் கூறப்படும் பைதான் புரோகிராம்களை இயக்கி மகிழ, இந்த விவரங்கள் தேவை.
மேலும் இந்த தொடர், பைதான் மொழியின் பல்வேறு சிறப்புகளையும் பயன்களையும் விளக்குகிறது. எளிய expression, statement ல் தொடங்கி data type, function மற்றும் module வழியாக, சென்று exception, user defined class களை எளிமையான வழியில்
விவரிக்கிறது.
— தொடரும்
ஸ்ரீனி
CollabNet எனும் நிறுவனத்தில் பணி புரிகிறார். இந்திய லினக்ஸ் பயனர் குழு – சென்னை ilugc.in இன் தற்போதைய தலைவர்.
மின்னஞ்சல் : tshrinivasan AT gmail.com
வலை : goinggnu.wordpress.com