முதற்கட்டமாக, உபுண்டு 12.04 நிறுவுவதற்கான கோப்பை, இங்கிருந்து பதிவிறக்கிக் கொள்ளுங்கள். உங்கள் தேவைக்கேற்றார் போல 32-பிட் அல்லது 64-பிட் பதிப்பை பதிவிறக்குங்கள். இந்த பயிற்சியில் உள்ள படங்கள், மெய் மற்றும் மெய்நிகர் கணினிகளில்(Real And Virtual Box) 32-பிட் பதிப்பை, சோதனைக்காக நிறுவும்போது எடுக்கப்பட்டவை.
பிறர் தெரிவித்ததை போல, நிறுவும் போது எந்த ஒரு பிழையும் எனக்கு ஏற்படவில்லை. எனவே, இந்த பயிற்சியை நீங்கள் பின்பற்றினால், உபுண்டு 12.04 மற்றும் விண்டோஸ் 7 ஒரு சேர வாய்க்கப் பெற்ற கணினி உங்களுடையதாய் இருக்கும்.
அதன் பிறகு கணினியை, எப்போது துவக்கினாலும், விண்டோஸ் துவக்க மேலாளர்(Windows Boot Manager) உங்களுக்கு இரண்டு தேர்வுகளை தரும்:
- விண்டோஸ் 7
- உபுண்டு 12.04
நம் இலக்கு இப்போது தெளிவாய் உள்ளது. ஆனால் அதை எப்படி எட்டுவது? உங்கள் கணினியில் விண்டோஸ் 7 நிறுவப்பட்டிருந்தால், விண்டோஸ் துவக்க மேலாளர்(Windows Boot Manager) தான் கணினி துவங்குகிறதா என கண்காணிக்கும், என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே நீங்கள் எடுக்க வேண்டிய மிக முக்கிய முடிவு, உங்கள் துவக்க மேலாளர்(Boot Manager) விண்டோஸுடையதா அல்லது உபுண்டுவுடையதா என்பது தான்.
வின்டோஸ் 7 மற்றும் லினக்ஸ் பகிர்வுகள் கணினியின் ஒரே வன்தட்டில்(Hard Disk) செயல்பட விண்டோஸ் துவக்க மேலாளரை(Windows Boot Manager), முதன்மை துவக்க மேலாளராக(Primary Boot Manager) பயன்படுத்துவது நல்லது. ஏன் அப்படி? காரணம், விண்டோஸ் 7-ழை நீங்கள் எப்போதெல்லாம் மறுநிறுவுதல்(Reinstall) அல்லது புதுப்பித்தல்(Update) செய்கிறீர்களோ, அப்போதெல்லாம் அதன் நிறுவி(Installer), வன்தகட்டின்(Hard Disk) பகுதியில் உள்ள அனைத்தையும் மேலெழுதிவிடும்(Overwrite). அதில் துவங்குதல்(Boot) தொடர்பான, முக்கிய பிரோகிராம்கள்(Programs) நிறுவப் பட்டிருக்கும். வன்தட்டின்(Hard Disk) இத்தகைய முக்கிய பகுதி Master Boot Record(MBR) எனப்படும். மேலும், சில வைரஸ் கோப்புகள், MBR-ல் உள்ள கோப்புகளுடன் முரண்டு பிடிக்கும். எனவே GRUB-ஐ வேறு பகுதியில் நிறுவினால், உங்களுக்கு தலைவலி மிச்சம். இக்கணம் தான் GRUB எங்கே நிறுவப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பதாகும்.
நீங்கள் (லினக்ஸ்) வன்தட்டு வகிர்வில்(Disk Partition) அனுபவம் அற்றவராக இருந்தால், நீங்கள் கட்டாயமாக வன்தட்டுமற்றும்வன்தட்டுவகிர்வு, விண்டோஸ்மற்றும்லினக்ஸ், இரட்டைத்துவக்கத்திற்குசிலகுறிப்புகள் ஆகிய பயிற்சிகளை பார்த்தாக வேண்டும்.
இயல்பாக உபுண்டு 12.04 இரண்டு வகிர்வுகளுடன்(Partitions) நிறுவப்படும் – முதன்மை வகிர்வு மற்றும் சுவாப்(Swap). முக்கிய வகிர்வு, பொதுவாக முதன்மை வகிர்வாகவும்(Primary Partition), சுவாப்(Swap) ஒரு லாஜிகல் வகிர்வாகவும்(Logical Partition) இருக்கும்.
கணினியில் உபுண்டு மட்டுமே இடம் பெற்றிருக்குமானால், இரண்டு வகிர்வுகளும்(Partitions) /dev/sda1 மற்றும் /dev/sda5 என குறிக்கப் பட்டிருக்கும். இபோதோ, வேறு இயங்கு தளத்துடன்(OS) உபுண்டுவை நிறுவப் போவதால், வகிர்வு முறை(Partition Schema) மாறுபட்டிருக்கும்.
கணினியில் மென்பொருள்கள் சிறப்பாக இயங்க, நமக்கு குறைந்தது மூன்று வகிர்வுகள்(Partitions) பரிந்துரைக்கப் படுகின்றன. அவை:
- Boot Partition – இங்குதான் MBR-ருக்கு பதிலாக GRUB நிறுவப்படும். இப்பகுதியில் தான் பல பயனர்களுக்கு பிழை ஏற்பட்டிருக்கிறது. எனவே, இதை கவனமாக கையாளவும்
- Root Partition – இங்குதான் அனைத்து மென்பொருள்களும் நிறுவப்படும்
- Home Partition – இது கட்டயம் அன்று என்றாலும், கோப்புகளையும், அடவைகளையும் தனி வகிர்வுகளாக வைக்க இது உதவும்
- Swap Space
நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்று தெளிவாய் இருப்பீர்கள் என நம்புகிறேன். செயல்பாடுகள் தொடங்குவதற்கான நேரம் இது! இதை முன்பு நீங்கள் செய்திருக்கவில்லை என்றால், பதிவிறக்கம் செய்த iso கோப்பை(உபுண்டு 12.04), குறுந்தகடு அல்லது பென் டிரைவிற்கு(Pen Drive) மாற்றி, அதிலிருந்து கணினியை துவக்கவும். குறுந்தகட்டிலிருந்து கணினியை துவக்க்கினால், லைவ் டெஸ்க்டாப்பை(Live Desktop) தேர்ந்தெடுக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் நேரடியாக நிறுவவும் தொடங்கலாம். ஆனால், லைவ் டெஸ்டாப்பை(Live Desktop) துவக்கி, பின் நிறுவத் தொடங்குவது சிறந்ததாக இருக்கும்.
மேல் குறிப்பிட்ட எந்த வகையில் நிறுவினாலும், நிறுவி(Installer) கீழே உள்ள படத்தில் உள்ள நிலைக்கு எடுத்துச் செல்லும். உபுண்டு 12.04 வெற்றிகரமாக நிறுவ, குறைந்தபட்ச வன்தகட்டு இடம்(Disk Space) 4.4GB பரிந்துரைக்கப் பட்டிருக்கும். இந்த தகவல், Root Partition-ல் எவ்வளவு வன்தகட்டு இடம் தேவைப்படும் என்பதை கணிக்க பயன்படும்.
Continue கிளிக் செய்தால், கீழே உள்ள படத்தில் காணும் நிலை தோன்றும். எடுத்துக் காட்டாக, ஏற்கனவே விண்டோஸ் 7 நிறுவப்பட்டிருந்தால், கீழே உள்ளது போல மூன்று தேர்வுகள் தோன்றும். நீங்கள் வகிர்வை, உங்கள் விருப்பம் போல உருவாக்கவிருப்பதால், “Something Else” தேர்வு செய்யவும்.
அது உங்களை, “Advanced Disk Partition Tool”-லிற்கு இட்டுச் செல்லும். கணினியில் விண்டோஸ் 7 நிறுவப் பட்டிருந்தால், இரண்டு NTFS வகிர்வுகள் தோன்றும்(/dev/sda1 மற்றும் /dev/sda2). விண்டோஸ் 7 வகிர்வு அல்லது C டிரைவ், sda2 ஆகும். உபுண்டுவை நிறுவ நீங்கள் மறு அளவீடு(Resize) செய்ய வேண்டும்.
குறிப்பு:
வன்தகட்டில், ஒதுக்கீடு செய்யப்படாத இடம் இருந்தால், வகிர்வை மறு அளவீடு செய்ய வேண்டியது இல்லை.
வகிர்வை மறு அளவீடு செய்ய, Change பொத்தானை அழுத்தவும்.
இப்போது கீழே உள்ள சாளரம் தோன்றும். இனி நாம் செய்ய வேண்டியது எல்லாம், விண்டோஸ் 7-ழிற்கு எவ்வளவு வன்தகட்டு இடம் வைத்திருக்க வேண்டும் என நிறுவிக்கு(Installer) சொல்வது தான். மற்றவை உபுண்டுவிற்கு பயன்படுத்தப் படும். இந்த பயிற்சியில் 324GB வன்தகட்டு இடம் பயன்படுத்தப் பட்டுள்ளது. நான் 100GB விண்டோஸிற்கு பயன்படுத்த விரும்புகிறேன்.
சாளரம் கீழே உள்ளவாறு தோன்றும். OK கிளிக் செய்யவும்
வகிர்வு வெற்றிகரமாக மறு அளவீடு செய்யப்பட்ட பிறகு, வன்தகட்டில் காலி இடம் அதிகரித்திருக்கும். அந்த காலி இடத்தை தேர்ந்தெடுத்து, Add பொத்தானை அழுத்தவும். இது உபுண்டு 12.04-குக்கு, வகிர்வை உருவாக்கும்.
உபுண்டுவை நிறுவ மூன்று வகிர்வுகள் போதும் என்றாலும், முகப்பு அடைவை(Home Directory) தனி வகிர்வில் பிரித்து வைக்க, மற்றொரு வகிர்வு பயன்படும். முதலாவதாக உருவாக்க வேண்டியது, Boot Partition தான். இதற்கு பொதுவாக 500MB பரிந்துரைக்கப்படுகிறது. இந்த அளவு அதிகம் தான். ஆனால், அதிக புதுப்பித்தல்(Update) செய்யும் போது இது பயன்படும். மைய்யப் புள்ளி(Mount Point), /boot ஆக இருக வேண்டும். இயல்பாக, “Ext4 File System” இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இது மிக முக்கியம். ஏனென்றால், ext2 பயன்படுத்தி பல பிழைகள் எழுந்ததாக கூறப்படுகிறது.
இரண்டாவது வகிர்வு, Root Partition ஆக இருக்கும். நான் இதற்கு, 20GB ஒதுக்கியிருக்கிறேன். பரிந்துரைக்கப்பட்ட 4.4GB அளவை விட 75% அதிகமாக இருந்தால் போதுமானது. மைய்யப் புள்ளி(Mount Point) / ஆக இருக்க வேண்டும். இயல்பான் File System வைத்துக் கொள்ளுங்கள்.
மூன்றாவது வகிர்வு, Home Partition ஆகும். நம் அனைத்து கோப்புகளும் இங்கே தான் சேமிக்கப்படும் என்பதால், இதற்கு மிக அதிகமாக இடம் ஒதுக்க வேண்டும். இதற்கு /home மைய்யப் புள்ளியாகவும்(Mount Point), இயல்பான File System இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
நான்காவது மற்றும் இறுதி வகிர்வு, Swap Partition ஆகும். மெய்நிகர் நினைவு(Virtual Memory) தேவைப்படும் போது பயன்படுத்தப் படுவதற்காக, இந்த Swap Partition உருவாக்கப் படுகிறது. இதற்கு தேவையான நினைவு அளவை(Memory Size) 4GB அல்லது 4000MB (போதுமானது), ஒதுக்குங்கள். “Use As” பட்டியலில் Swap Area-வை தேர்ந்தெடுக்கவும்.
இப்போது நீங்கள் உருவாக்கிய வகிர்வு, NTFS(விண்டோஸ் 7) வகிர்வுளுடன் தோன்றும். முதல் உபுண்டு வகிர்வு, Logical Partition ஆக (இதை நிறுவி தானாக செய்யும்) உருவாக்கப் பட்டுள்ளதால் அது sda5 ஆக காணப்படும். இந்த Boot Partition–ல் தான் உபுண்டுவிற்கான Boot File நிறுவப்படும், MBR–ல் அன்று. MBR–ல் GRUB நிறுவுவதும், sda–வில் நிறுவுவதும் ஒன்றே என்பதை நினைவில் கொள்க. இதைத் தான் நீங்கள், “Device For Boot Loader Installation” பட்டியலில் காண்பீர்கள். எனவே பட்டியலில் sda5-வை தேர்ந்தெடுங்கள்
தேர்ந்தெடுத்தவுடன் சாளரம் பின்வருமாறு தோன்றும். “Install Now” கிளிக் செய்யுங்கள்.
“User Account Setup” நிலையில், உங்கள் முகப்பு அடைவிற்கு(Home Directory), மறையீடு(Encryption) செயல்படுத்த, “Encrypt My Home Folder”–ஐ தேர்வு செய்யவும். இது முழு வன்தகட்டிற்கும் பாதுகாப்பு தராது என்றாலும், ஒன்றும் இல்லாததற்கு இது பரவாயில்லை.
உங்கள் செட்டிங்களை(Settings) விண்டோஸிலிருந்து, உபுண்டுவிற்கு எடுத்துச் செல்ல வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
நிறுவுதல் வெற்றிகரமாக முடிந்தவுடன், கணினியை மறுதுவக்கம் செய்யவும். இப்போது, அது விண்டோஸிற்குள் நுழையும். இது எதிர்பார்த்ததே. தான் இன்னொரு இயங்கு தளத்திற்கு(OS) கணினியை பகிர்ந்துள்ளோம் என்பது, இப்போது விண்டோஸிற்கு தெரியாது. இதை அதற்கு தெரிவித்து, Boot Menu-வில் மாற்றம் செய்வதே நம் அடுத்த பொறுப்பு.
இந்த செயலிற்கு EasyBCD பயன்படுத்துவதே சிறந்தது. இதை நியோ ஸ்மார்ட் டெக்னாலஜீஸ்(Neo Smart Technologies) உருவாக்கினர். இது தனிப்பட்ட பயன்பாட்டிற்கும், வியாபார நோக்கு இல்லதவர்களுக்கும் மட்டுமே இலவசமாக தரப்படுகிறது. அதை இங்கிருந்து neosmart.net/EasyBCD/ பதிவிறக்கிக் கொள்ளலாம். விண்டோஸ் 7-ல் மற்ற செயலிகளை(Applications) நிறுவுவது போல இதனை நிறுவலாம். இப்போது EasyBCD–யை துவக்குங்கள். அதன் முதல் பக்கம், கீழே காண்பிக்கப் பட்டுள்ளது. விண்டோஸ் 7 Boot Menu–வில் உபுண்டு 12.04-ருக்கான தேர்வை, சேர்ப்பதற்கு, “Add New Entry” tab–பை அழுத்தவும்.
“Type” பட்டியலில் உள்ள LINUX/BSD tab–ல், உபுண்டுவில் பயன்படுத்தப்படும் GRUB பதிப்பான, GRUB 2–டை தேர்வு செய்யவும். “Add Entry” பொத்தானை அழுத்தவும். “Edit Boot Menu” tab-பை அழுத்தினால், புதிய Configuration–களை பார்க்கலாம்.
கணினியை நீங்கள் (மறு)துவக்கம் செய்யும் போதெல்லாம், இந்த இரண்டு தேர்வுகளையும் காண முடியும். விண்டோஸ் 7 தான் இயல்பான தேர்வு(Default Option). ஆனால், அதை உபுண்டுவாகவும் மாற்றிக் கொள்ளலாம். EasyBCD–யை விட்டு வெளியேறி, கணினியை மறுதுவக்கம் செய்யவும்.
அவ்வளவு தான். நான் முன்பே குறிப்பிட்டது போல. இந்த பயிற்சி மெய் மற்றும் மெய்நிகர் கணினிகளில்(Real And Virtual Box) முயன்று சோதிக்கப் பட்டது. எனவே இந்த பயிற்சியை படிப்படியாக பின்பற்றினால், எந்த பிழையும் நேர வாய்ப்பில்லை.
ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி
ஆங்கில மூலம் :- www.linuxbsdos.com/2012/05/17/how-to-dual-boot-ubuntu-12-04-and-windows-7/