கணியம் – இதழ் 12

வணக்கம்.

‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

2012 ஆண்டில் கட்டற்ற மென்பொருட்கள் கணிப்பொறியை தாண்டி மொபைல் சாதனங்களை  பெரிய அளவில் சென்றடைந்தன. ஆண்ட்ராயிடு இயங்குதளம் முன்னிலையில் இருந்தாலும், அதில் உள்ள பெரும்பான்மையான மென்பொருட்கள் தனியுரிம மென்பொருட்களே. ஆண்ட்ராயிடு இயங்குதளத்திலும் அதிக அளவில் கட்டற்ற மென்பொருள்களை உருவாக்கவும் பயன் படுத்தவும் வேண்டும். Firefox OS மற்றும் ubuntu போன்றவை மொபைல் சாதனங்களில் முழுதும் கட்டற்ற மென்பொருள்களை கொண்டு வரும் என தெரிவிக்கின்றன.

கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும் இணைய தளத்திலும் வெளியிடப்படுகின்றன. தளத்தை கண்டு உங்கள் கருத்துகளை பகிரவும். ஓபன் சோர்ஸ் தொடர்பான பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம். உங்களுக்கு தெரிந்த தகவல்களை விக்கியில் பகிரவும்

உங்கள் அனைவரின் பேராதரவோடு கணியம், தனது முதல் ஆண்டை நெருங்க உள்ளது. அடுத்த ஆண்டில் பல்வேறு புதிய முயற்சிகளும் படைப்புகளும் நிகழ உள்ளன. இதற்கு மேலும் பல உதவிக்கரங்கள் தேவை. தமிழும் கட்டற்ற மென்பொருளிலும் ஆர்வம் உள்ள அனைவரது உதவியும் தேவை. வீடியோ பாடங்கள், கேள்வி பதில் தளம், நேரடி பயிற்சி பட்டறைகள், இணைய வழி பயிற்சிகள், அச்சு ஊடக கட்டுரைகள் என பல பணிகள் காத்துள்ளன. வாசகர் அனைவரையும்பங்களிக்க அழைக்கிறோம்.

கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும், கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள் o~யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.  ~o~ திருத்தி எழுதி வெளியிடலாம். ~o~ வணிக ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால்,  மூல கட்டுரை, ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.

நன்றி.
ஸ்ரீனி
ஆசிரியர்,
கணியம்
editor@kaniyam.com

பொருளடக்கம்:

  • ஃபயர்ஃபாக்ஸில் புதிய வசதி!
  • எளிய செய்முறையில் C/C++
  • லைஃபோகிராஃப் (Lifeograph) தனிப்பட்ட மின்னணு நாட்குறிப்பேடு
  • Wallpaper சுழற்சிகள்
  • உபுண்டு முனையச் சிறுகுறிப்பு
  • CSS கற்றுக் கொள்ளுங்கள்!
  • பைதான்  பாகம்:- 5
  • 2012 : லினக்ஸுக்கு என்னே ஒரு வருடம்!
  • MySQL- பாகம்: 4 – தகவல்களை சேமித்தல்
  • தேவாலயமும் சந்தையும்
  • ஓபன் சோர்ஸ் தொடர்பான பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள்
  • கணியம் வெளியீட்டு விவரம்
  • கணியம் பற்றி…