வணக்கம்.
‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
ஃபெடொரா 17 மற்றும் உபுண்டு 12.04 போன்ற க்னு/லினக்ஸ் வெளியீடுகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அவற்றை மேலும் பரப்ப உங்கள் ஊரில் பொது நிகழ்ச்சிகளை நடத்தலாமே.
வீட்டில் இருந்தபடியே, அவற்றை கற்க, வீடியோ பாடங்கள் spoken-tutorial.org தளத்தில் பல்வேறு மொழிகளில் கிடைக்கின்றன.
நீங்களும் உருவாக்கி பங்கேற்கலாம்.
கணியம் இதழ் வெளியீடை தொடர்ந்து நடத்தி வரும் எழுத்தாளர்களுக்கும், உற்சாகப்படுத்தி வரும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
‘கணியம்’ தொடர்ந்து வளர, கட்டுரைகள், படங்கள், ஓவியங்கள், புத்தக அறிமுகம், துணுக்குகள், நகைச்சுவைகள் என உங்களது படைப்புகளையும் editor@kaniyam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
இந்த இதழின் கட்டுரைகள் :
- டெபியன் நிர்வாகிக்கான கையேடு
- பெடோரா 17 – ஒரு அறிமுகம்
- சுதந்திர மென்பொருள் மற்றும் திறந்த மூல மென்பொருள் – வித்தியாசம்
- IRC என்றால் என்ன? – ஒரு அறிமுகம்
- கைலோ Kylo – தொலைக்காட்சிக்கான இணைய உலாவி பொதுச் சொத்தாகிறது
- LESS – CSS – விழுதொடர் நடைதாள் மொழி
- பிடிஎஃப் கோப்புகள் பிரிக்க/இணைக்க – பிடிஎஃப் ஷஃப்லெர்(PDF Shuffler)
- க்னு/லினக்ஸ் கற்போம் – 4
- டெர்மினலில் கட்டளைகளை வேகமாக இயக்க மறுபெயர்களை(alias) உருவாக்குதல்
- PPA வழியாக Android SDK நிறுவுதல்
- Hybrid PDF என்றால் என்ன?
- சிறந்த 10 பாதுகாப்பு மதிப்பீட்டுக் கருவிகள்
- சுகோபனோ(SOKOBANO):ஒரு அருமையான முப்பரிமான புதிர் விளையாட்டு
- find கட்டளை
- இதுவரை வெளிவந்த அனைத்து கணியம் இதழ்களையும் தரவிறக்க ஒரு சிறிய நிரல்
- M.Sc FOSS – அறிவிப்பு
- கணியம் பற்றி
நன்றி.
ஸ்ரீனி
ஆசிரியர்,
கணியம்
[wpfilebase tag=file id=10 /]