எளிய ரூபி எடுத்துக்காட்டுகள்:
ரூபி ஒரு எளிமையான scripting language ஆகும். இதன் syntax-ம் மிகவும் எளிமையானது. அழகானது. Programming உலகில் பாரம்பரியமாக முதல் எடுத்துக்காட்டாக பயன்படுத்துவது “hello world” ஐ print செய்வதாகும். ஆனால் இதி சிறு மாற்றமாக “Hello Ruby” என print செய்யலாம்.
GNU/Linux ல்,
print “Hello Ruby!\n”
windows-ல்
print “Hello Ruby!”
சில வார்த்தைகளை output ஆக பெற ஒரு வரி ரூபி code-டே போதுமானது. நாம் முந்தைய அத்தியாயத்தில் பார்த்தப்படி, ரூபியின் பலம், அதனின் வேகமும், எளிமையான முறையில் கற்கவல்லதும்தான். இந்த எடுத்துக்காட்டுக்கு சமமான java code-டை ஒப்பிடலாம்.
import java.io.*;
public class Hello {
public static void main ( String[] args)
{
System.out.println (“Hello Ruby!\n”);
}
}
Java போன்ற programming language-ல் எளிய பணியை செய்யக்கூட நிறைய நிரல் எழுத வேண்டும். ஆனால் ரூபியில் print-டை தொடர்ந்து output string-ஐக் கொடுத்தால் போதுமானது.
ரூபி நிரலை execute செய்ய பல வழிகள் உள்ளன. அவற்றைப் பின்வருமாறு காணலாம்.
Command line-ல் ரூபியை execute செய்தல்:
ruby -e ‘print “Hello Ruby!\n”‘ -e ‘print “Goodbye Ruby!\n”‘
Hello Ruby!
Goodbye Ruby!
நமது “Hello Ruby” எடுத்துக்காட்டை இயக்க,
ruby -e ‘print “Hello Ruby!\n”‘
Hello Ruby!
e-flag ஆனது ஒரு வரி code-டை தான் execute செய்ய அனுமதிக்கும். ஆனால் பல ‘-e’-யை கொண்டு பல line-களை ஒரு command line-லேயே execute செய்யலாம்.
Interactiveவாக ரூபியை இயக்குதல்:
ரூபி ஒரு interpreted language. அப்படியென்றால் ரூபி source code ஆனது runtime-ல் compile மற்றும் execute செய்யப்படும். Interpreted language ஆக இருப்பதில் உள்ள ஒரு சிறப்பு என்னவென்றால், ரூபி code-டை interpreterரில் நேரடியாக எழுதி realtime-ல் execute செய்ய முடியும். இது ஒரு ரூபி கற்றுக்கொள்ள சிறந்த வழியாகும்.
Interactive ruby code க்கு irb என்ற மெனபொருளைப் பயன்படுத்தி enter செய்ய வேண்டும். Windows-ல் one-click installer-ரை கொண்டு ரூபியை install செய்திருந்தால், irb அதுவே install ஆகியிருக்கும். Linux-ல் irb install ஆகியுள்ளதா என்பதை பின்வருமாறு சரி பார்க்கலாம்.
irb -v
irb 0.9(02/07/03)
அதற்கான version விவரத்தை பெற இல்லையெனில் irb-யை install செய்வது அவசியம். Red Hat or Fedora linux-ல் பின்வருமாறு install செய்யலாம்.
su
yum install irb
Debian,Ubuntu அல்லது மற்ற debian derived linux distributions-ல் apt-get tool-லை கொண்டு install செய்ய வேண்டும்.
sudo apt-get install irb
irb install ஆனதும் பின்வருமாறு launch செய்யவும்.
$ irb
irb(main):001:0>
இப்போது ரூபி code-டை execute செய்ய தொடங்கலாம்.
இதில் கணக்குகள் (calculation) செய்ய முடியும்.
Irb prompt-ல் எதை type செய்தாலும் enter key press செய்த உடனே execute ஆகுகிறது.
ரூபியை file-லிருந்து execute செய்தல்:
Command line-ல் சில வரி ரூபி script-யே execute செய்ய முடியும். இதற்கு பொதுவான அணுகுமுறை, ruby script-டை file-லில் வைத்து அந்த file-லை ரூபி interpreter ல் run செய்ய வேண்டும். இதை செய்ய, hello.rb என்று file-லை உருவாக்கி, நீங்கள் விரும்பிய editor-ல் பின்வரும் code-டை தட்டச்சு செய்யவும்.
print “Hello Ruby!\n”
print “Goodbye Ruby!\n”
இந்த script-டை run செய்ய command line-ல் பின்வருமாறு கொடுக்கவும்.
ruby hello.rb
Hello Ruby!
Goodbye Ruby!
GNU/Linuxல் self contained ரூபி executable-லை உருவாக்குதல்:
பல்வேறு -e command line options விட ரூபி code-டை file-லில் வைத்து run செய்வது மிகவும் எளிமையானது. எனினும்,மேலும் ஒரு படி முன்னே சென்று, ரூபி code உள்ள ரூபி file-லை ruby என்கிற prefix இல்லாமல் run செய்யலாம்.
இதற்கு GNU/linux -ல் ஒரு சிறப்பு line-னை script file-லின் முதல் வரியாக கொடுக்க வேண்டும். இது ரூபி program execute ஆக ரூபி interpreter எங்கு உள்ளது என்பதை environmentக்கு தெரிவிக்கும். இந்த சிறப்பு line ஆனது ‘#’, ‘!’ மற்றும் ரூபி executable path-யும் கொண்டது. இதை “Shebang” எண்று சொல்வர்.
முதலாதவதாக, system-ல் ரூபி எங்கே உள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டும். இதை ‘which’ command-டை கொண்டு கண்டுபிடிக்கலாம்.
which ruby
/usr/bin/ruby
மேலே உள்ள எடுத்துக்காட்டில் ரூபி /usr/bin/ -னில் உள்ளது. அதனால் நமது நிரலில் பின்வருமாறு மாற்றி எழுதலாம்.
#!/usr/bin/ruby
print “Hello Ruby!\n”
print “Goodbye Ruby!\n”
hello.rb script-டை run செய்தால்,
./hello.rb
-bash: ./hello.rb: Permission denied
மேலே காணும் output வந்தால், script-டை execute செய்ய permission இல்லை என்பதாகும். இதை chmod கொண்டு execute permission script-க்கு வழங்கலாம்.
chmod 755 hello.rb
இப்பொழுது run செய்தால்,
./hello.rb
Hello Ruby!
Goodbye Ruby!
Windows-ல் ரூபி file-லை Associate செய்தல்:
முந்தைய அத்தியாயத்தில் பார்த்த shebang approach windows-ல் வேலை செய்யாது. .rb file extension-னை window system-வுடன் configure செய்ய window file type association-னை பயன்படுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டிற்கு windows-ல், .doc file-லை double click செய்தால் அது தானாக Microsoft word-ல் open ஆகும். ஏனென்றால் .doc files ஆனது word-வுடன் associate செய்வது system-ல் configure செய்யப்பட்டுருக்கும். அதேப்போல, .rb file ruby-வுடன் associate செய்ய வேண்டும்.
Windows-ல் ruby one-click installer-ரை கொண்டு install ஆகியிருந்தால், .rb files தானாகவே ruby-வுடன் associate ஆகியிருக்கும். ஆதலால் வெறொன்றும் தனியாக செய்ய வேண்டியதில்லை. Command Prompt-ல் hello.rb என்று type செய்தால் போதும், நமது எடுத்துக்காட்டு run ஆகும்.
இதே one-click installer இல்லாது source code-லிருந்து ரூபியை install செய்திருந்தால் .rb file-லை ரூபிவுடன் associate செய்ய வேண்டும்.
Association ஏற்கனவே configure செய்யப்பட்டுள்ளது என்று பார்க்க வேண்டும்.
C:\MyRuby>assoc .rb
File association not found for extension .rb
Association configure ஆகவில்லையென்றால்,configuration பின்வருமாறு செய்ய வேண்டும்.
C:\MyRuby>assoc .rb=rbFile
Rbfile type ஏற்கனவே உள்ளதா என்பதை சரிபார்க்கலாம்,
C:\MyRuby>ftype rbfile
File type ‘rbfile’ not found or no open command associated with it.
ஏற்கனவே இல்லையெனில்,
C:\MyRuby>ftype rbfile=”D:\Ruby\bin\ruby.exe” “%1” %*
Setting-யை பின்வருமாறு சரிபார்க்கலாம்,
C:\MyRuby>ftype rbfile
rbfile=”D:\ruby\bin\ruby.exe” “%1” %*
PATHEXT environment variable-லில் .rb-யை பின்வருமாறு சேர்க்க வேண்டும்
C:\MyRuby>set PATHEXT=.rb;%PATHEXT%
Settings-யெல்லாம் configure செய்தபின், Command Prompt-ல் file name-யை type செய்து program-யை run செய்யலாம்.(.rb file extension தேவையில்லை).
C:\MyRuby> hello
Hello Ruby
மேலே உள்ள steps-களை Autoexec.bat-ல் வைக்க வேண்டும். உங்கள் system reboot செய்யும் ஒவ்வொரு முறையும் associate செய்ய வேண்டும்.
— தொடரும்
பிரியா – priya.budsp@gmail.com – ஐக்கிய அரபு அமீரகம்