ரூபியின் வரலாறு:
ரூபி ஒரு எளிமையாக புரிந்துகொள்ளக்கூடிய object oriented programming language. 1993, ஜப்பானில் , Yukihiro Matsumoto என்பவரால் ரூபி உருவாக்கப்பட்டது. அவரை அன்பாக Matz என்றும் அழைப்பர்.1995-ல் ரூபி matz-ஆல் தனது நாடான ஜப்பானின் அறிமுகப்படுத்தப்பட்டது. 2000 ஆண்டு தொடக்கத்தில் அனைத்து நாடுகளில் உள்ள programming உலகத்தவரால் சிறந்த object oriented programming language ஆக அங்கீகரிக்கப்பட்டது.
ரூபி என்றால் என்ன?
ரூபி ஒரு object oriented interpreted scripting language. Interpreted என்றால், ரூபி source code ஆனது execution போது மட்டுமே interpreter ஆல் compile செய்யப்படும்.
Interpreted language-இல் நன்மைகள் மற்றும் தீமைகள் கலந்தே உள்ளது. இதனுடைய முதன்மையான தீமை என்னவென்றால் இதனுடைய வேகம். ஏனென்றால் source code ஆனது runtime யில் interpret செய்யப்படுகிறது. Compiled application ஒப்பிடுகையில் இது மெதுவாகவே run ஆகும். அடுத்தப்படியாக, interpreted language-யில் உருவான application னை உபயோகிப்பவரால் source code-டை காண இயலும்.
Interpreted language யின் முதன்மையான சிறப்பு என்னவென்றால் interpreted language ஆனது multiple operating system platform மற்றும் hardware architectures-ல் முழுவதுமாக run செய்யவல்லது. அதேநேரத்தில் compiled application ஆனது எந்த operating system மற்றும் hardware-ல் compile செய்யப்பட்டதோ அதிலேதான் இயக்க இயலும். மற்றுமொரு சிறப்பு என்னவென்ரால் ரூபி interpreter ல், real time ல் ரூபி code-டை எழுதி இயக்க முடியும்.
ரூபி நிறுவுதல்:
ரூபி c மொழியால் எழுதப்பட்டது. எனவே அது operating system மற்றும் hardware platform க்குப் பொருத்தமானbinary distribution-னை தேர்வு செய்து நிறுவ வேண்டும், அல்லது ruby மூலநிரலை பதிவிறக்கி, compile செய்து நிறுவ வேண்டும்.
Red Hat Enterprise மற்றும் Fedora Linux-ல் ரூபி நிறுவுதல்:
Red Hat Enterprise மற்றும் Fedora Linux இரண்டும் YUM installation Manager மற்றும் rpm-யை பயன்படுத்துகின்றன. முதலவதாக ரூபி ஏற்கனவே install ஆகி உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். இதற்கு rpm command-டை பயன்படுத்தலாம். பின்வரும் எடுத்துக்காட்டில் ruby இன்னும் install செய்யப்படவில்லை.
rpm -q ruby
package ruby is not installed
ரூபி நிறுவப்பட படவில்லையெனில், yum update manager-ரை உபயோகப்படுத்தி நிறுவ முடியும். இதை root-டை கொண்டு செய்ய வேண்டும். ஆதலால் இதற்கு super user password தேவை.
su –
yum install ruby
yum tool ஆனது, ruby package மற்றும் இதர packages-களையும் நிறுவி விடும்.
Downloading Packages:
(1/2): ruby-1.8.1-7.EL4.8 100% | | 156 kB 00:10
(2/2): ruby-libs-1.8.1-7. 100% | | 1.5 MB 01:23
Running Transaction Test
Finished Transaction Test
Transaction Test Succeeded
Running Transaction
Installing: ruby-libs ######################### [1/2]
Installing: ruby ######################### [2/2]Installed: ruby.i386 0:1.8.1-7.EL4.8
Dependency Installed: ruby-libs.i386 0:1.8.1-7.EL4.8
Complete!
ரூபி install செய்யப்பட்டதும், rpm command-டை run செய்து package install ஆனதை சரிப்பார்க்கலாம்.
rpm -q ruby
ruby-1.8.1-7.EL4.8
மாறாக, ரூபி install ஆனதை command line option-னில் run செய்து version விவரங்களை பெறலாம்.
ruby -v
ruby 1.8.1 (2003-12-25) [i386-linux-gnu]
ubuntu மற்றும் debian linux-ல் ரூபி installation:
apt-get tool-லை உபயோகத்தி debian,Ubuntu மற்றும் மற்ற debian derived linux distrubutions-ல் install செய்ய முடியும். நீங்கள் Ubuntu linux பயன்படுத்தினால், பின்வருமாறான output ruby command மூலம் பெறலாம்.
$ ruby
The program ‘ruby’ is currently not installed. You can install it by typing:
sudo apt-get install ruby
-bash: ruby: command not found
ரூபி install செய்ய, apt-get command-டை run செய்யலாம்.
sudo apt-get install ruby
apt-get tool ஆனது ரூபி சார்ந்த மற்ற package-களையும் நிறுவி விடும்.
Reading package lists… Done
Building dependency tree
Reading state information… Done
The following extra packages will be installed:
libruby1.8 ruby1.8
Suggested packages:
ruby1.8-examples rdoc1.8 ri1.8
The following NEW packages will be installed:
libruby1.8 ruby ruby1.8
0 upgraded, 3 newly installed, 0 to remove and 135 not upgraded.
Need to get 1769kB of archives.
After unpacking 6267kB of additional disk space will be used.
Do you want to continue [Y/n]?
Installation முடிவடைந்ததும், ரூபி install-ஆகி உள்ளதா என்பதை command line option மூலம் ரூபி version உடன் அறிந்து கொள்ளலாம்.
ruby -v
ruby 1.8.1 (2003-12-25) [i386-linux-gnu]
Microsoft Windows-ல் ரூபி installation:
ரூபியை windows-இல் install செய்யும் எளிமையான வழியை one-click ruby installer எனலாம். இது ஒரு executable. இது ரூபியை எளிமையாக remove செய்யும் mechanism கொண்டது.
One-click ruby Installer-ரை உபயோகிக்க rubyforge.org சென்று one-click Installer-ரை click செய்யவும். இரண்டாவது பக்கத்தில், பல்வேறு one-click Installer release-களை list செய்யும். Executable download ஆனபிறகு அதை மற்ற windows application போல launch செய்யலாம்.
ரூபி install செய்ய நிறைய வழிகள் உண்டு. அதில் மிகவும் அடிப்படையான அணுகுமுறை, windows command prompt-ல் ரூபியை run செய்யலாம்.
Install ஆன ரூபியின் version-னை பின்வருமாறு system-ல் காணலாம்.
மற்றொன்று,fxri tool-லை windows start menu-விலிருந்து launch செய்யலாம். இது ஒரு interactive tool, இது ruby documentation-க்கும் மற்றும் ruby console-க்கும் access-ஐ வழங்கும்.
— தொடரும்
பிரியா – priya.budsp@gmail.com – ஐக்கிய அரபு அமீரகம்