சென்ற மாதம், நாம் ஒரு புதிய ஆவணத்தை உருவாக்குவது, உரை நிரப்பி சேர்ப்பது, பிறகு நெடுவரிசைகளை சேர்த்து, நம்முடைய உரையை ஒரு நெடுவரிசையிலிருந்து அடுத்ததற்கு தானாக ஓடச்செய்ய, எல்லா நெடுவரிசைகளையும் ஒன்றிணைத்து தொடர்புபடுத்தினோம். இந்த மாதம், நம்முடைய ஆவணத்திற்கு உருவப்படத்தை சேர்ப்பது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் ஒரு technical துணுக்கு : JPG உருவங்கள் கோப்பின் அளவை சிறியதாக வைப்பதற்கு compression-ஐ பயன்படுத்துகிறது. முதலில் இது ஒரு நல்ல கருத்தாக தோன்றினாலும், இது வேலையின் அளவை அதிகமாக்குகிறது. உங்கள் உருவப்படங்கள் “artifacts” போல காட்சியளிக்கும். Artifacts என்பது நீங்கள் சில சமயங்களில் உருவப்படங்களில் பார்க்கிற சிறிய சதுரங்களாகும் — முக்கியமாக அதிகமாக நெருக்கப்பட்ட உருவப்படங்களை(highly compressed image) அடிக்கடி பயன்படுத்துகிற வலைப்பக்கங்களில் காணலாம் – மற்றும் இது வலைப்பக்கத்தில் நன்றாக தோன்றினாலும், ஒரு ஆவணத்தில் இது மோசமானதாக காட்சியளிக்கும், குறிப்பாக தொழில் முறையில் அச்சிடக்கூடியதாக இருந்ததெனில். மற்றொரு முறையில், GIF உருவப்படங்கள் அளவான நிறப்பெட்டகத்தை(limited color palette) பெற்றிருக்கின்றன.
இது இருநிறமுடைய குழுமத்தின உருவப்படத்திற்கு(logo) நன்றாக இருந்தாலும், முழுநிற உருவப்படத்தை 256 நிறங்களுக்கு மாற்றிவிடும் போது இது அவ்வளவு நன்றானதாக இருக்காது. ஆதலால், PNG உருவப்படத்தை பயன்படுத்து நன்றாக இருக்கும். தரம் குறைந்த JPG/GIF-ஐ PNG-க்கு மாற்றும் வேலையில் இறங்கிவிடாதீர்கள்; இந்த முறையில் மாற்றப்பட்ட உருவபடத்தை சரிசெய்ய இது உதவாது.
நீங்கள் எப்பொழுதும் கண்டறிகின்ற சிறந்த தரம் வாய்ந்த உருவப்படத்துடன் தொடங்குங்கள்.
இப்போது சென்ற மாதத்திலிருந்த நம்முடைய உரை ஆவணத்தை எடுப்போம். உருவப்படத்தை ஆவணத்திற்குள் கொண்டுவர,
Insert Image Frame பொத்தானை சொடுக்கவும் : மற்றும் ஏற்கனவே உரைப்பெட்டியை வரைந்தது போல ஒரு பெட்டியை வரையவும்.
உருவப்படத்தை தேர்வு செய்ய, உருவப்பட சட்டத்தின் மீது வலதுபக்கம் சொடுக்கி(right click) Get Image விருப்பத்தினை தேர்வு செய்யவும்.
இப்போது கோப்பிற்கான உரையாடல் பெட்டி தோன்றும். அதிலிருந்து உங்களுக்கு வேண்டிய உருவப்படத்தை சட்டத்தினுள் நுழைக்க அதனை தேர்ந்தெடுத்து Open பொத்தானை சொடுக்கவும்.
சரி, இப்போது ஒரு பிரச்சினை இருக்கிறது. உருவப்படத்தின் ஒரு
சிறிய பகுதியை பார்க்க முடிகிற அளவிற்கு உருவப்பட சட்டத்தினுள்
மோசமாக வெட்டப்பட்டிருப்பதை மேலே உள்ள திரையில் காணலாம்.
நாம் இங்கு ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் : அதாவது உண்மையான உருவப்படத்தின் அளவிற்கு உருவப்படத்தின் சட்டத்தை மாற்ற வேண்டுமா? அல்லது உருவப்படத்தின் சட்டத்திற்கு, உருவப்படத்தின் அளவை மாற்ற வேண்டுமா? என்று.
முதலில், உண்மையான உருவப்படத்தின் அளவிற்கு உருவப்படத்தின் சட்டத்தை மாற்ற, நாம் சட்டத்தின் ஒரு மூலையை இழுத்து அளவினை பெரிதுபடுத்தலாம். இன்னும் எளிதாக, உருவப்பட சட்டத்தின் மீது வலது சொடுக்கு செய்து Adjust Frame to Image விருப்பத்தினை தேர்வு செய்யவும்.
ஆனால், இப்போது உருவப்படம் பெரிதாக
இருக்கிறது. அதை குறைப்போம். Properties சன்னல் திரையில்
Image தட்டையை(tab) சொடுக்கவும். இது உருவத்தின்
நிலைமையிடம் (position) மற்றும் அளவை காட்டுகிறது,
ஆனால் அளவினை மாற்றம் செய்யும் விருப்பத்தினை
இதில் கொடுக்கவில்லை. அதனால், ஆவணத்திலேயே
அளவினை மாற்றம் செய்வோம்.
Scale to Frame Size விருப்பத்தினை தேர்வு செய்யவும். இது உருவப்பட சட்டத்தின் அளவை மாற்றுவதுடன் உருவப்படத்தின் அளவையும் மாற்றம் செய்கிறது.
விகித அளவிற்கு வெளியே உருவப்படத்தை நீட்டிப்பதிலிருந்து நம்மை தடுத்து நிறுத்துகிற Proportional விருப்பத்தேர்வினை குறியிடப்பட்டு(tick) இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.
இப்போது உருவப்பட சட்டத்தினை சொடுக்கி அதன் அளவை மாற்றவும். நீங்கள் வேண்டுகிற நிலைமையிடத்திற்கு உருவப்படத்தின் சட்டத்தினை நகர்த்திக்கொள்ளலாம். இப்போது நமக்குள்ள ஒரே பிரச்சினை, உருவப்படம் அதற்கு பின்னால் உள்ள உரைக்கு இடைஞ்சலாக இருக்கிறது. தீர்வு : உருவப்படத்தைச் சுற்றி உரை ஓட்டத்தைப் பெறுவது.
இதை செய்வதற்கு, உருவப்பட சட்டத்தினை தேர்ந்தெடுத்து Properties சன்னல் திரையில் Shape தட்டையை(tab) தேர்ந்தெடுக்கவும். Shape தட்டை நமக்கு புதிது. ஆனால் நாம் இப்போது செய்ய வேண்டியது Text Flow Around Frame விருப்பப் பிரிவின கீழ் கொடுக்கப்பட்டுள்ள விருப்பத்தில் Use Contour Line என்ற விருப்பத்தை தேர்ந்தெடுப்பது. இதனைச் செய்தால் உருவப்படம் அதன் விளிம்பைச் சுற்றியுள்ள உரையை நகர்த்தி வைக்கிறது. உருவப்பட சட்டத்தை நகர்த்தினால் உரையும் தானாக நகர்வதை நீங்கள் பார்க்கலாம். நமக்கு இருக்கிற ஒரே பிரச்சினை உரையானது உருவப்படத்தின் வலதுபுறத்திற்கு மிக நெருக்கமாக இருப்பதாகும்.
அடுத்து Edit Shape-ஐ சொடுக்கினால் ஒரு புதிய
சன்னல் திரை தோன்றும். கவனிக்கவும் :
உருவப்படச்சட்டம் இப்போது நீலநிற
வெளிப்புறக்கோட்டினை பெற்றிருக்கும். இப்புதிய சன்னல்
திரையில், Edit Contour Line விருப்பத்தினை
தேர்ந்தெடுக்கவும். உருவப்பட சட்டத்தின் ஒவ்வொரு
மூலையிலும் தடித்த நீலநிறப்புள்ளிகளைக் காணலாம்.
இதனைத் தேவையானபடி இழுத்தால் இணைக்கப்பட்ட
வரிகள் நகர்வதோடு, அதனோடு சேர்ந்து உரையும்
நகர்வதைப் பார்க்கலாம். இதன்மூலம் உரையின் ஓட்டத்தைஉங்களுக்கு தேவையானபடி மாற்றிக்கொள்ளலாம்.
இதனைச் செய்த பிறகு Edit Contour Line-ஐ மறுபடியும் சொடுக்கி
அதைநிறுத்தவும். மற்றும் இந்த சன்னல் திரையினை மூட End Editing பொத்தானைசொடுக்கவும் .இதுவே உருவப்படத்தினைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு போதுமானதாகும்!
இதுவே உருவப்படத்தினைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு போதுமானதாகும்!
செல்வமணி சம்பத், இணைய தள வல்லுநர், காஞ்சி லினக்ஸ் பயனர் குழுவின் உறுப்பினர்.
மின்னஞ்சல் : selva.infobees@gmail.com
வலை : infobees.wordpress.com