உள்கூடான (hollow) பாகங்கள் உற்பத்திக்குத் தாங்கும் பொருட்கள் (Support Substances) இன்றியமையாதவை
சிலநேரங்களில் நாம் உள்கூடான பாகங்களை உற்பத்தி செய்ய வேண்டி வரலாம். உருவாக்கும் பாகம் நன்கு இறுகியபின் வலிமையாக இருக்கும். ஆனால் உருக்கிப் புனையும்போது கீழே தாங்கும் பொருட்கள் இல்லையென்றால் வளைந்து உருக்குலைந்து விடும் அல்லவா? இம்மாதிரி பாகங்களை அச்சிடுகையில் தாங்கும் பொருட்கள் அவசியம் தேவை.
3D அச்சிடும் விளிம்புகள் (brims)
3D அச்சிடும் விளிம்பு என்பது பாகத்தின் அடி விளிம்புகளிலிருந்து அச்சுப் படுக்கையில் விரிவடையும் பொருளின் ஒரு அடுக்கு ஆகும். இந்த அச்சிடும் விளிம்பு படுக்கையுடன் ஒட்டி நிலையாக இருக்கவும், வளைந்து கோணலாவதைத் தடுக்கவும் உதவுகிறது. இதை அகற்றுவது எளிது, குறைவான பொருள் வீணாகும் மற்றும் அச்சின் கீழ் அடுக்கு வடிவத்தை பாதிக்காது.
சிக்கலான வடிவவியலுக்கும் (complex geometries) தாங்கும் பொருட்கள் தேவைப்படலாம்
சில பாகங்களில் தொங்கும் பகுதிகள் (overhangs) இருக்கலாம். சூடு ஆறியபின் இப்பகுதிகள் இறுகி விறைப்பாகிவிடும். ஆனால் உருக்கிப் புனைந்தவுடன் தாங்கும் பொருட்கள் இல்லாவிட்டால் இவை வளைந்து வீணாகிவிடும். இதுபோன்ற மற்ற சில சிக்கலான வடிவங்களுக்கும் தாங்கும் பொருட்கள் தேவைப்படலாம்.
தாங்கும் பொருள் வகைகள்
ஒரு குறிப்பிட்ட வேதிப்பொருள் தொட்டியில் வைத்தால் கரையும் தாங்கும் பொருட்களை சில 3D தொழில்நுட்பங்கள் பயன்படுத்துகின்றன. மற்ற சில தொழில்நுட்பங்கள் சுற்றியுள்ள துகள்களையே தாங்கும் பொருட்களாகப் பயன்படுத்துகின்றன. களி (gel) போன்ற பொருட்களைப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களும் உள்ளன.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: அச்சடித்த பின் வரும் வேலைகள் (Post-processing)
தாங்கும் பொருட்களை நீக்குதல் (Support Removal). தூய்மை செய்தல். முடிவில் மேற்பரப்பு சீரமைப்பு (Finishing). அச்சடித்த பின் வரும் வேலைகள் பெரும்பாலும் கைமுறையாக செய்யவேண்டியிருக்கிறது.