கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு – மாநாட்டுக் குறிப்புகள்
இரண்டு நாட்களாக இயங்கலையில் நேரலையில் களை கட்டியிருந்த கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு இன்று மாலையுடன் இனிதே நிறைவு பெற்றது. மாநாட்டுக் குறிப்புகள்: 1) திறமூலத் தமிழ் நிரல் தொகுப்பில் தொடங்கிய அமர்வுகள், தமிழ் இணையக் கல்விக் கழக அமர்வில் நிறைவடைந்தன. மொத்தம் பதினோரு அமர்வுகள். 2) ஒவ்வோர் அமர்வும் தித்திக்கும் தேனாக இருந்தது. நேரலையில் கவனித்த தமிழ் மக்களுக்குத் திகட்டத் திகட்ட தொழில்நுட்பப் பகிர்வுகள் இருந்தன. 3) தமிழிலேயே நிரல் எழுதும் எழில் பற்றிய அமர்வு,… Read More »